தலைமைப்பண்பு! செந்தில்பாலாஜி பாடம் எடுக்கிறார்!

இங்கே, இந்தியாவில் காங்கிரஸ் கட்சியில், கோஷ்டி, கோஷ்டிககுள் கோஷ்டி, அத்தனைக்கும் ஒரே பொது நோக்கம் என்ன என்றால், அடுத்த கோஷ்டியை சமயம் பார்த்துக் காலை வாருவது மட்டும் தான் என்ற கலாசாரக் கருமாந்திரத்தை ஒரு முக்கியமான பாடத்தைக் கற்றுக் கொள்வதற்காக மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்! காங்கிரஸ் கட்சியைப் பார்த்துத் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரே பாடம், ஒரு தலைமை, ஒரு பொது நோக்கத்தை முன்னெடுத்துச் செல்கிறவர்கள்  எப்படியெல்லாம் இருக்கக் கூடாது என்பதைத் தெரிந்து கொள்வது  ஒன்று மட்டும் தான்!  தலைமைப் பண்பு, மேலாண்மை, நிர்வாகம் என்று பேசுகிற இடத்தில் ஒரு கட்சியைப் பற்றி, அரசியலைப் பற்றிய  பேச்சு ஏன் வந்தது என்று கேட்டால்,  இங்கே இந்தியச் சூழ்நிலையில் அரசியல் என்பது அங்கிங்கெனாதபடி எங்கும் புகுந்து குட்டையைக் குழப்பிக் கொண்டிருப்பதால் தான்! தவிர்த்து விட்டுப் பேசுவதே கொஞ்சம் அதீதக் கற்பனையாக மட்டுமே நிற்கும்!

இது 2009 ஏப்ரலில் இந்தப்பக்கங்களில் எழுதியது. இன்று மீள்பதிவாக சுவாசிக்கப்போறேங்க தளத்தில் கொஞ்சம் திருத்தங்களுடன் பதிவிட்டுத் திரும்பிப் பார்த்தால் நேற்றைய தந்தி டிவி கேள்விக்கென்ன பதில் நிகழ்ச்சியில் கரூர் செந்தில் பாலாஜி, எடப்பாடியை விட இசுடாலினுக்குத் தலைமைப்பண்பு அதிகம் என்று சொல்கிற காமெடிக் கொடுமையைப் பார்க்க நேரிட்டது.


திருமங்கலம் ஃபார்முலாவைத் தூக்கிச் சாப்பிட்ட அரவக்குறிச்சி ஃபார்முலாவுக்குச் சொந்தக்காரர் செந்தில் பாலாஜி என்பதும், திமுகவின் கேசிபியை ஓரம்கட்டிவிட்டு, முதலில்  ரத்துசெய்யப்பட்டு அப்புறம் நடந்த தேர்தலில் ஜெயித்தார் என்பதும் வரலாறு. தினகரன் ஆதரவு நிலை எடுத்து, அங்கிருந்து திமுகவுக்குத்தாவி, கரூர் மாவட்ட திமு கழகத்தை அப்படியே ஓரம்கட்டி விட்டு இசுடாலினின் நம்பிக்கைக்குரியவராக அவதாரம் எடுத்திருப்பதில்...... வாசிக்கவே மூச்சு முட்டுகிறதா? செந்தில் பாலாஜியின் சாமர்த்தியம் அந்த அளவு பெரிது. இதற்குமேல் கேட்பதாயிருந்தால் கரூர் மாவட்ட திமு கழக செயலாளர் நன்னியூர் ராசேந்திரனிடம் தான் கேட்க வேண்டும்! 

காங்கிரசும் சரி கழகங்களும் சரி, ஒட்டுண்ணிகளின் கூடாரமாக மாறிவிட்டதன் சமீபத்தைய அடையாளம் செந்தில் பாலாஜி! இவரே விரும்பி ஏற்றுக்கொண்ட தலைமை இசுடாலின் என்றால் ........

என்ன சொல்வீர்கள்? என்ன செய்வீர்கள்? 
       
           

No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!