மொட்டைத்தலைக்கும் வால்பையனுக்கும் என்ன முடிச்சு?

ஒரு திரைப்படம் காங்கிரஸ் கட்சியை என்ன பாடு படுத்தி இருக்கிறது என்பதை இந்த ட்ரெயிலர் பார்த்த பிறகுதான் புரிந்தது. இந்திராவைப் பற்றிப் படம் எடுத்தாலும் மிரள்கிறார்கள். நரேந்திரமோடி குறித்து படமெடுத்தாலும் பொருமித் தடை கேட்கிறார்கள்! படிப்பு வாசனையற்ற சோனியா G பிரதாபங்களைப் பற்றி முன்னே இந்தப் பக்கங்களில் எழுதியது இது!   காங்கிரசை இப்போது ஒரு சிவப்புச் சேலையும் சேர்ந்து மிரட்டிக் கொண்டிருக்கிறது!   நட்வர் சிங் சுயசரிதை எழுதப்போகிறார் என்றவுடனே, அவரை சமாதானம் செய்ய சோனியாவும் பிரியங்காவும் அவரது வீட்டுக்கே போய் சமாதானம் பேசிய கதையும் இந்தப்பக்கங்களில் ஏற்கெனெவே பேசப்பட்ட விஷயம்தான்!


இந்த ட்ரெய்லரிலோ அல்லது முழுப்படத்திலோ அப்படி காங்கிரஸ் அஞ்சுகிற அளவுக்கு என்ன இருக்கிறது? இதே கேள்வியைத்தான் அடுத்தவீடு! கேரளா தெலங்கானா ஆந்திரா! பதிவிலும் கூட லட்சுமியின் NTR திரைப்படத்தை ஆந்திராவில் திரையிட விடாமல் உள்ளடி வேலைகள் செய்ததைத் தொட்டு நேற்று எழுதி இருந்தேன்! இந்தப் புள்ளிகள்தான் நேற்றைய நாட்களில் கருத்துசுதந்திரம் பறிபோச்சு,  விருதுகளைத் திருப்பிக்  கொடுப்பது என்றெல்லாம் முழங்கினார்கள் என்பதும் ஞாபகம் வருதே! ஞாபகம் வருதே!

லயோலான்னு தானே சொன்னான்! லோலாயி ஆக்கிப்புட்டாங்களே! இப்படிப் பதிவெழுதிய நேரமோ? லயோலா கல்லூரி கருத்துக் கணிப்புக்கும் கல்லூரிக்கும் தொடர்பில்லை என்று மறுப்பறிக்கை வெளியிட்டிருக்கிறது. மாட்டிக்கொண்டால் மறுப்பு வெளியிடுவதை வாடிக்கையாக வைத்திருக்கிற லயோலா மெய்யாலுமே லோலாயி தான்!

     


இப்போதெல்லாம் ஒரு இருபது வருடம் பிராக்டிஸ் செய்யும் எந்த டாக்டரும் (அதுவும் கணவன் மனைவி இருவருமே டாக்டர்களாக..) குறைந்தது நான்கு கார், மூன்று வீடுகள், பெரும் பந்தா இல்லாமல் பார்க்க முடியுமா..?
ஆனால், டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன், மிகச் சாதாரணமாக வாழ்பவர் என்றும், எல்லோருடனும் சகஜமாக பழுகுவதாகவும், யார் வேண்டுமானாலும் அவர் வீடடிற்குச் சென்று எப்போது வேண்டுமானாலும் பார்த்துப் பேசலாம் எனும் அளவிற்கு சிம்பிளானவர் என்றும் கேள்விப்பட்டேன்.
நியூஸில் ஒரு வீடியோ பார்த்தேன் :
தூத்துக்குடியின் ஒரு மார்க்கெட்டில், டாக்டர் தமிழிசை எந்த ஒரு பந்தாவும் இல்லாமல் காய்கறிகள் வாங்கி, கவனமாக தான் சுருட்டி வைத்திருந்த 100 ரூபாய் நோட்டைத் தருகிறார்..!
ஏனோ அந்தக் காட்சி, நான் டாக்டர் தமிழிசையைப் பற்றிக் கேள்விப்பட்டது உண்மைதான் என்று நினைக்க வைத்தது..!
^^^^^
நிற்க,
மேல் சொன்ன அந்த வீடியோவை ஒளிபரப்பி, சன் டிவி செய்தி சொன்னது என்ன தெரியுமா..? 
"தூத்துக்குடி மார்க்கெட் ஏரியாவில் தேர்தல் பிரச்சாரம் செய்ய வந்த டாக்டர்.தமிழிசை, அங்கே கட்சிக் காரர்களே யாரும் வரவில்லை என்பதால், மனம் நொந்து போய், மார்க்கெட்டில் காய்கறிகள் வாங்கி, பொழுதைப் போக்கினார்!"
30000 கோடி மதிப்பான சன் டிவி கார்ப்பரேட் ஓனர் தயாநிதி மாறனை கட்சிக்காரனே சுலபத்தில் பார்த்து விட முடியாது.! ஆகாய பந்தா..! தமிழ்நாட்டை உருப்படாமல் அடித்ததில் முக்கால்வாசி சன் டிவி செய்தது.

திமுக, ஏழைகளுக்கான கட்சி என்று நம்புபவன், ஏழையல்ல, முட்டாள்! என்று முகநூலில் ஆணித்தரமாகச் சொல்கிறார் சங்கர் ராஜரத்தினம். 


சற்றுமுன் இந்த வீடியோவைப் பார்த்தேன்! ஒன்றிணைந்த Bank of  Baroda  ஸ்டேட் வங்கி, HDFC வங்கி இவைகளுக்கு அடுத்து நாட்டின் மூன்றாவது பெரிய வங்கியாக உருவெடுத்திருக்கிறது.    

 


பேங்க் ஆப் பரோடாவுடன் விஜயா வங்கியும் தேனா வங்கியும் ஏப்ரல் முதல் தேதிமுதல்  இணைந்து ஒரே வங்கியாக, Bank of  Baroda என்றபெயரில் இயங்க ஆரம்பித்திருப்பதை வங்கி ஊழியர்கள் கூட, கடமைக்கு எதிர்ப்புக்குரல் எழுப்பிவிட்டு ஓய்ந்து விட்டார்கள். ஆனால் வால்பையன் அருண் மட்டும் இதை  என்னவோ 2014 இன் பொருளாதார சீரழிவுக்கு முன்னோட்டம் என்று, சம்பந்தமே இல்லாத BSNL layoff proposal உடன் முடிச்சுப்போட்டு எழுதிக் கொண்டிருக்கிறார். யாராவது அவரிடம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அதன் ஊழியர்களாலேயே, தொழிற்சங்கத்தினராலேயே சீரழிக்கப்பட்ட கதையைச் சொல்லி, அதே கதை தொடர வேண்டுமென்கிறாரா என்று கேளுங்களேன்!


       

8 comments:

  1. பேங்க் ஆஃப் பரோடா விளம்பரம் - நன்றாக இருக்கிறது.

    ReplyDelete
  2. சுயசரிதை எழுதுவதில் இப்படி மறைமுக மிரட்டலும், வியாபாரமும் இருக்கிறதோ?!!! போட்டுக்கொடுக்கதான் சுயசரிதை எழுத்துவார்களோ!!

    ReplyDelete
    Replies
    1. oil for food திட்டத்தின் கீழ் ஈராக்கிலிருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்ததில் காங்கிரஸ் கட்சித்தலைமை நிறையக் கமிஷன் பார்த்தது. ஆனால் பழிசுமத்தப்பட்டு பலிகடா ஆக்கப்பட்டவர் கே நட்வர் சிங்கும் அவர் மகனும்! என்னென்ன சங்கடமான விவரங்களை எழுதி வைக்கப்போகிறாரோ என்று சோனியாவும் மகளும் பயந்தது அந்த நேரத்து நிஜம். இதை மிரட்டல் என்று சொல்ல முடியாது!

      Delete
  3. வெங்கட் சிலாகிப்பால் விளம்பர வீடியோ பார்த்தேன். அந்த சிவப்பு கவுன் போட்ட சிறுமி குட்டி பத்மினி சாயலில் இருக்கிறாளோ?!!! அவர் பேத்தியோ!

    ReplyDelete
    Replies
    1. ஸ்ரீராம்! உங்களை வீடியோ பார்க்க வைப்பதற்கு வெங்கட் மாதிரி யாரோ ஒருவர் சிபாரிசு வேண்டியிருக்கிறது!.குட்டி பத்மினிக்கு இந்த வீடியோவில் சம்பந்தமிருப்பதாகத் தெரியவில்லை.

      Delete
  4. தேங்காய் உடைக்கிற மாதிரி சொன்னால் இப்படிச் சொல்ல வேண்டும்.. என்னமாய் சொல்லி விட்டார் சங்கர் ராஜரத்தினம்... வெல்டன், எஸ்.ஆர்!

    ReplyDelete
    Replies
    1. எல்லா நேரங்களிலும்/இடங்களிலும் தேங்காய் உடைக்கிற மாதிரிச் சொல்லிவிட முடியுமா ஜீவி சார்? !!

      Delete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!