இந்துவிரோதம் கிடையாதா? ரெண்டு முருகன்! கமல் காசர்!

பன்றியோடு சேர்ந்த கன்றுக்குட்டி என்ன தின்னப்போகும் என்றொரு கேள்வியாக  ஒரு சொலவடையை நினைவு படுத்துகிற மாதிரி நியூஸ் 7 சேனலின் நேற்றைய கேள்விநேரம் விவாதம் இருந்ததோ? இந்தியாவின் திமுகவாகிறதா காங்கிரஸ்? | கேள்விநேரம் இது அவர்கள் கொடுத்திருக்கும் தலைப்பு. இந்தியாவின் திமுகவாக காங்கிரசோ, அல்லது உல்டாவாகவோ ஒப்பிடப்படுவது இருகட்சிகளுக்கும் நல்ல விஷயமில்லை! ஆனால் 2004 இல் இருந்து காங்கிரசும் திமுகவும் என்னமாதிரியான கூட்டணி தர்மத்தில் இணைந்து செயல்படுகிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள முடிந்தால் இந்த அசிங்கத்தையும் புரிந்துகொள்வது கடினமில்லை. கூடாநட்பு கேடாய் முடிந்தது என்று வெளிப்படையாகவே காங்கிரஸ் கூட்டணியைப் பற்றிக் ளருணாநிதி கசந்து சொன்னது கூட நினைவுக்கு வந்து போகிறதே!

ஆனால் திமுகவின் பாஜக எதிர்ப்பு எவ்வளவு உறுதியானது? எவ்வளவு காலம் நீடிக்கக் கூடியது? இசுடாலின் 200% உறுதி என்று சொல்வதும் பாண்டு பேப்பரில் வேண்டுமானால் எழுதித் தரட்டுமா என்று கேட்பதும் கூட்டணிதர்மம் நிலையல்ல என்ற சந்தேகத்தைக் கிளப்புகிறதே!

ஏற்கெனெவே IT ரெய்டு விவகாரத்தில் நொந்து நூடில்ஸாகிக் கிடக்கும் ரெண்டுமுருகன் முன்னெப்பவோ ராமர் பிறந்த இடம் பற்றி பேசிய காட்சியும் மேலே வீடியோவில் இருக்கிறது.  

நெற்றியில் பூசப்பட்ட திருநீறு குங்குமத்தை உடனே அழித்ததும், இஸ்லாமியத்திருமணம் ஒன்றில் தேவையில்லாமல் ஹோமம் வளர்த்துச் செய்யப்படுகிற இந்து திருமணமுறையை கேலிசெய்து பேசியதும், கனிமொழி திருப்பதி கோவில் உண்டியலுக்கு ஆயுதம் தாங்கிய காவல் எதற்கு என்று ஏளனம் செய்து பேசியதும் பாஜக எதிர்ப்புத்தான்! இந்துமத துவேஷமோ எதிர்ப்போ இல்லை! இசுடாலின் சொல்லிட்டார்! காதுல பூ சுத்திட்டு நீங்களும் நம்புங்க! அவ்ளோதான்!
சோதனைக்கு உட்படுத்தினால் இங்கே திராவிடங்கள் பேசும் பகுத்தறிவின் கதி என்னாகும்? தெரிந்ததுதான்! அடடே! மதி கார்டூனாக வரைந்து சொல்லும்போது இன்னும் தெளிவாக!

கமல் காசர் தனக்கு ஏன் கோபம் வருகிறதென்று behindwoods தளத்துக்குப் பேட்டி கொடுத்திருக்கிறார். கேபிரியல் கொஞ்சம் சொதப்பாமல் பேட்டி எடுத்திருக்கிறார் என்பது தான் விசேஷம்! ரெண்டுமுருகன் IT ரெய்டு குறித்து கமல் வெளிப்படையாகவே விமரிசித்துப் பேசுகிறார். நடிகர்கள் அதிகம் இருக்கும் கட்சி திமுகதான் என்றும் உடைத்துச் சொல்கிறார்.      


முக்கியமாக கமல் காசர் கட்சியோடு கூட்டுச் சேர இடதுசாரிகள் உட்படப் பலரும் தயங்கியது ஏனென்றும் ஒளிவு மறைவில்லாமல் பதில் சொன்னது சிறப்பு.

ஜனங்கள் இவருக்கு எந்த அளவு ஆதரவு தரப்போகிறார்கள் என்பது இன்னமும் தெளிவாகவில்லை.

மீண்டும் சந்திப்போம்!
               

No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!