தூத்துக்குடி! மனமும் களமும் என்ன சொல்கிறது?

இந்தத் தேர்தலில் வேட்பாளர்களுடைய பிரசாரங்களை நேரடியாகக் கேட்கிற வாய்ப்பு இல்லை என்ற குறையே தெரியாமல் இணையமும் யூட்யூப் தளமும் சேர்ந்து  360 டிகிரியிலிருந்தும், செய்திகளை பார்க்கிற, கேட்கமுடிகிற வாய்ப்பைத் தந்திருக்கிறது. அதில் முக்கியமான விஷயமாக, அவர்கள் சொல்வதை மட்டுமே கேட்டுவிட்டுப் போய்விடாமல் சொல்லப்பட்டது உண்மைதானா என்பதைச் சோதித்துப் பார்த்துக் கொள்வதற்கும் வாய்ப்பிருப்பது அதி முக்கியமானது. 

தமிழிசையைக் கொஞ்சம் குறைத்தே மதிப்பிட்டு வருகிறோமா என்ற கேள்வி எனக்கு நீண்டநாட்களாகவே உண்டு. அவ்வப்போது அவரைக் கிண்டல் செய்து வெளிவரும் ட்ரோல் மீம்கள் வீடியோக்கள் வெட்டிச்சுருக்கப்பட்ட பேட்டிகள் என்றே பார்த்துவந்ததில் தமிழிசையைப் பற்றி அவ்வளவு உயர்வான அபிப்பிராயம் வந்ததில்லை. அவருடைய உருவம், சுருட்டை முடியைப் பற்றிய கிண்டல்களால் அல்ல, எப்போதும் மைக்கைப்  பிடித்துக் கொண்டிருக்கிற மேடைப் பேச்சாளி ஆகவே இருப்பதில் ஏற்பட்ட கிண்டல். 


நீங்களும் பேச்சாளர் ஆகலாம் என்பது அந்தநாட்களில் குமரி அனந்தன் எழுதிய தொடரை அவரே மறந்துவிட்டாலும், மகள் தமிழிசை மறக்கவில்லை என்பதை  வைத்து  இவரைக் குறைத்து மதிப்பிட்டு விட்டேனோ என்ற சந்தேகத்தை இந்த நேர்காணல் எழுப்பியதென்னவோ உண்மை. 

தூத்துக்குடி தொகுதிக்கு ஒரு நல்ல வேட்பாளராகக் களம் இறங்கியிருக்கிறார்! நல்ல வேட்பாளராக இருந்தால் மட்டும் போதுமா? தென்கோடித் தமிழகத்துக்கே உண்டான விசேஷ குணாதிசயங்கள் எப்படி முடிவெடுக்குமோ? எனக்குத் தெரியாது, ஆனால் கனிமொழியை நிராகரித்து, தமிழிசையை ஜனங்கள் தேர்ந்தெடுக்கவேண்டுமென்பதே என்னுடைய ஆசை!  


தமிழிசை ஜெயிக்கவேண்டும் என்பது சரி!  ஆனால் கனிமொழி நிராகரிக்கப்படவேண்டியவர் என்று சொல்வது எதனால்? மேலே உள்ள வீடியோவே பதில்! உதயநிதி வந்து சிபாரிசு பண்ணுகிற அளவுக்குத்தான் கனிமொழியின் அரசியல் செயல்பாடு என்றால், அது எதற்கு? 

சொல்லுங்களேன்!
   
              

No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!