இந்தத் தேர்தலில் வேட்பாளர்களுடைய பிரசாரங்களை நேரடியாகக் கேட்கிற வாய்ப்பு இல்லை என்ற குறையே தெரியாமல் இணையமும் யூட்யூப் தளமும் சேர்ந்து 360 டிகிரியிலிருந்தும், செய்திகளை பார்க்கிற, கேட்கமுடிகிற வாய்ப்பைத் தந்திருக்கிறது. அதில் முக்கியமான விஷயமாக, அவர்கள் சொல்வதை மட்டுமே கேட்டுவிட்டுப் போய்விடாமல் சொல்லப்பட்டது உண்மைதானா என்பதைச் சோதித்துப் பார்த்துக் கொள்வதற்கும் வாய்ப்பிருப்பது அதி முக்கியமானது.
தமிழிசையைக் கொஞ்சம் குறைத்தே மதிப்பிட்டு வருகிறோமா என்ற கேள்வி எனக்கு நீண்டநாட்களாகவே உண்டு. அவ்வப்போது அவரைக் கிண்டல் செய்து வெளிவரும் ட்ரோல் மீம்கள் வீடியோக்கள் வெட்டிச்சுருக்கப்பட்ட பேட்டிகள் என்றே பார்த்துவந்ததில் தமிழிசையைப் பற்றி அவ்வளவு உயர்வான அபிப்பிராயம் வந்ததில்லை. அவருடைய உருவம், சுருட்டை முடியைப் பற்றிய கிண்டல்களால் அல்ல, எப்போதும் மைக்கைப் பிடித்துக் கொண்டிருக்கிற மேடைப் பேச்சாளி ஆகவே இருப்பதில் ஏற்பட்ட கிண்டல்.
நீங்களும் பேச்சாளர் ஆகலாம் என்பது அந்தநாட்களில் குமரி அனந்தன் எழுதிய தொடரை அவரே மறந்துவிட்டாலும், மகள் தமிழிசை மறக்கவில்லை என்பதை வைத்து இவரைக் குறைத்து மதிப்பிட்டு விட்டேனோ என்ற சந்தேகத்தை இந்த நேர்காணல் எழுப்பியதென்னவோ உண்மை.
தூத்துக்குடி தொகுதிக்கு ஒரு நல்ல வேட்பாளராகக் களம் இறங்கியிருக்கிறார்! நல்ல வேட்பாளராக இருந்தால் மட்டும் போதுமா? தென்கோடித் தமிழகத்துக்கே உண்டான விசேஷ குணாதிசயங்கள் எப்படி முடிவெடுக்குமோ? எனக்குத் தெரியாது, ஆனால் கனிமொழியை நிராகரித்து, தமிழிசையை ஜனங்கள் தேர்ந்தெடுக்கவேண்டுமென்பதே என்னுடைய ஆசை!
தமிழிசை ஜெயிக்கவேண்டும் என்பது சரி! ஆனால் கனிமொழி நிராகரிக்கப்படவேண்டியவர் என்று சொல்வது எதனால்? மேலே உள்ள வீடியோவே பதில்! உதயநிதி வந்து சிபாரிசு பண்ணுகிற அளவுக்குத்தான் கனிமொழியின் அரசியல் செயல்பாடு என்றால், அது எதற்கு?
வாய்க்கொழுப்பு அதிகமாக இருந்தாலே பெரும் பிரச்சினை தான்! இதற்கு சரியான உதாரணம் ரெண்டுமுருகன்! சால்வை அழகர் பானாசீனா! இருவரும் தங்கள் வாயாலே கெட்டவர்கள் என்பது தெரிந்த விஷயம்தான்!
நியூஸ் 7 சேனலும் திமுகவின் பிரசன்னாவும் என்ன தான் முட்டிமோதிக் கத்திக் கொண்டிருந்தாலும், ரெண்டு முருகன் சொந்தக்கட்சியினராலேயே வச்சு செய்யப்பட்டிருக்கிறார் என்ற சந்தேகம் வலுக்கிறது.
சின்னா பின்னமான திமுக கணக்கு: ---------------------------------------------------------------
தி.மு.க.,வின் முதன்மைச் செயலராக இருந்த துரைமுருகன், கருணாநிதி மறைவுக்கு பின், பொருளாளர் பதவிக்கு குறி வைக்கிறார். ஆனால், கடும் போட்டி உருவாகிறது. கனிமொழி, எ.வ.வேலு, கே.என்.நேரு, ஐ.பெரியசாமி என்று சீனியர்கள் முட்டி மோதினர். அனைவரையும் வீழ்த்தி, பொறுப்பை கைப்பற்றினார் துரைமுருகன். ஏற்கனவே சட்டசபை கட்சி துணைத் தலைவர் பதவி அவரிடம் உள்ளது. ஸ்டாலினை சரிக்கட்டி காரியம் சாதிக்கிறார் என்று மூத்த தலைவர்கள் கோபம். இது மேல் மட்ட பகை.
மகன் கதிர்ஆனந்துக்கு, வேலுார் தொகுதியில், சீட் வாங்க வேண்டும்; அங்கு ஜெயிக்க, பா.ம.க., உதவி தேவை என்பதால், பா.ம.க.,வை கொண்டுவர ரொம்பவும் மெனக்கிட்டார். அரக்கோணம் தொகுதியை விரும்பிய ஜெகத்ரட்சகனும், இதே ரூட்டில் பயணித்தார். இருவரும் ஸ்டாலினுக்கு கடும் நெருக்கடி கொடுத்தனர். மற்றவர்கள், பா.ம.க., வருகையை விரும்பவில்லை. ஸ்டாலினை தொடர்ந்து எச்சரித்தனர்.
அவர்கள், விரும்பியபடி எதிர் முகாமுக்கு போனது, பா.ம.க., ஏமாற்றம் துரைக்கும், ஜெகத்துக்கும்தான்; மற்றவர்கள் குஷி.
கோபமான துரைமுருகன், தே.மு.தி.க.,வை கலாய்த்து, அது, தி.மு.க., கூட்டணிக்குள் வராமல் தடுத்து விட்டார். இதெல்லாம் பார்த்து ஸ்டாலினுக்கு கடுப்பு. ஆனாலும், எதிர்ப்பை கண்டு கொள்ளாமல் வேலுாரை துரை மகனுக்கு ஒதுக்கியது. காரணம், அ.தி.மு.க., சார்பில் ஏ.சி.சண்முகம் நிற்கிறார். அவரை சமாளிக்க பணத்தை வாரி இறைக்க வேண்டும். மகன் ஜெயித்தாலும் தோற்றாலும் துரையின் கஜானா கணிசமாக கரைந்திருக்கும். இது உள்குத்து அரசியல்.
அப்பா காட்பாடி, எம்.எல்.ஏ., சட்டசபை கட்சி துணை தலைவர்; கட்சியின் பொருளாளர்; மகனுக்கு வேலுார் எம்.பி., சீட். என்ன, மொத்தக் குத்தகையா என்று வேலுார் தொகுதி, தி.மு.க., நிர்வாகிகளுக்கு எரிச்சல். நாம் யார் என்பதை, துரைமுருகன் குடும்பத்தினருக்கு காட்டுவோம்; ஆனால், அமைதி வழியில் என்று தீர்மானித்தனர். துரையுடனே இருந்தனர். அவரும் நம்பி, பொறுப்பான வேலைகளை கொடுத்தார். போதாதா... கூடவே இருந்து, தேர்தலுக்காக துரை செய்யும், தில்லாலங்கடி வேலைகள் மொத்தத்தையும் மொபைல் போன் மூலம் யாருக்கெல்லாம் தெரியக்கூடாதோ அவர்களுக்கு உடனுக்குடன் போட்டுக் கொடுத்தனர். இது கீழ்மட்ட கோபம்.
'வேலுார் கலெக்டர் ராமன், அ.தி.மு.க.,காரர். அவரை வைத்துக் கொண்டு, தேர்தலை நியாயமாக நடத்த முடியாது. அவரை மாற்ற ஏற்பாடு செய்யுங்கள்' என, துரைமுருகனை உசுப்பி விட்டனர். அவர் அதை ஸ்டாலினிடம் கூற, அவர் உடனே, 'வேலுார், தர்மபுரி, சேலம், நாமக்கல் கலெக்டர்கள் ஒருதலைபட்சமாக செயல்படுகின்றனர். அவர்களை மாற்ற வேண்டும்' என, தேர்தல் கமிஷனிடம் புகார் கொடுத்தார். இதனால், வேலுார் கலெக்டர் ராமனுக்கு கோபம். பறக்கும் படை அதிகாரிகளை அழைத்தார்.
இந்நிலையில் கலெக்டர் ராமன் வருமான துறை அதிகாரிகளை கையில் எடுத்தார், அவர்களுக்கு தகவல்களை பாஸ் செய்தார்,
இதற்க்கு முக்கிய காரணம் துறை முருகனின் பேச்சித்தான் எப்போது பார்த்தாலும் நான் யார் தெரியுமா நான் MGR ரை எதிர்த்தே அரசியல் செய்தவன் இவர்கள் எல்லாம் எனக்கு ஒரு தூசி என்று பேசி அடுத்தவர்களை மடடம தட்டுவது அவரது இயல்பு
'தி.மு.க வேட்பாளர் பண பட்டுவாடா செய்ய போவதாக தகவல் வந்துள்ளது. தடுத்தாக வேண்டும். சோதனையில் கிடைக்கும் எல்லா தகவல்களையும் எனக்கு அனுப்ப வேண்டும்' என, உத்தரவிட்டார். தொகுதி முழுக்க, பறக்கும் படை உஷார் ஆனது. துரை தரப்பினர், பல இடங்களிலும் பதுக்கி வைத்திருக்கும் தகவல்கள் குறித்து வந்த தகவல்களை தேர்தல் கமிஷனுக்கு, 'பாஸ்' செய்தார் கலெக்டர். அங்கிருந்து வருமான வரி துறைக்கு திருப்பப்பட்டது. அதை தொடர்ந்து, 'ஸ்கெட்ச்' போடப்பட்டது.
அவர்கள் துரைமுருகன் நண்பர்கள் போன் உரையாடலை ஒட்டு கேக்க ஆரம்பித்தனர் ,, அவர்களும் ஏராளமான தகவல்களை சேகரித்து விட்டனர் ,,
சோதனை நடப்பதற்கு முன் தினம், ஒரு கம்பெனியில் இருந்து, இரண்டு லட்சம் கவர்களை வாங்கி ஒரு லாரியில் எடுத்துச் சென்றனர். பறக்கும் படை சோதனையில் லாரி சிக்கியது. 'மொத்தமாக கவர் வாங்கி, சில்லரை விற்பனை கடைகளுக்கு சப்ளை செய்வோம்' என கூறினர். கலெக்டருக்கு தெரிவிக்கப்பட்டது. 'வாகனத்தை பறிமுதல் செய்ய வேண்டாம். கவர்களையும் தொட வேண்டாம். போக விடுங்கள். ரகசியமாக கன்காணியுங்கள்' என்றார் கலெக்டர். லாரி துரைமுருகன் வீடு முன் நின்றது. சில நிமிடங்களில் அங்கிருந்து புறப்பட்டு, வெவ்வேறு இடங்களில் கவர் பார்சல்கள் இறக்கப்பட்டன. எல்லாம் வீடியோ பதிவாக கலெக்டருக்கு போனது. அதே நேரத்தில், துரைமுருகன் கூடவே இருந்த, அதிருப்தி கட்சியினர் அவ்வப்போது தெரிவித்த தகவல்களுடன், கலெக்டரின் தகவலும் ஒத்து போனது. மீண்டும் களத்தில் இறங்க வருமான வரி அதிகாரிகள் முடிவு எடுத்தனர்.
மார்ச், 29 இரவு, 10:௦௦ மணிக்கு மேல், காட்பாடியில் துரைமுருகன் வீட்டுக்கு வருமான வரி துறையினர், பறக்கும் படையினர் சென்றனர். இதை எதிர்பார்க்காத துரைமுருகன் தடுமாறினார். உடல் நிலை சரியில்லை என்று கூறி அவர்களை, ஓரிரு மணி நேரம் காக்க வைத்தார். அந்த அவகாசத்தில் ஏராளமான மூட்டைகள் விசுவாசமான கட்சிக்காரர்கள் வீட்டுக்கும், தொழில் நடத்தும் இடங்களுக்கும் மாற்றி விடப்பட்டன. இதனால், துரை வீட்டில் எதுவும் சிக்கவில்லை.
முதல், 'ரெய்டு' முடிந்து வெறும், பத்து லட்சத்துடன் அதிகாரிகள் கிளம்பிய பின், துரை அமைதியாக இருந்திருக்கலாம். அவருக்கே உரிய பாணியில், 'கருணாநிதியிடமே அரசியல் செய்தவன் நான்; என் வீட்டுக்கு வந்து, என்னோட பணத்தை எடுத்துட்டு போய்டுவாங்களா.. எங்கே எவ்வளவு வச்சிருக்கேன்னு, அவனுகளுக்கு தெரியுமா?' என்று உடனிருந்தவர்களிடம், 'பீலா' விட்டிருக்கிறார். அதையும், 'ரெக்கார்ட்' செய்து கலெக்டருக்கு அனுப்பி வைத்தது, ஒரு உடன்பிறப்பு.
இந்த இடத்தில் தான் ஒரு, 'டுவிஸ்ட்'
ஏப்.,1ம் தேதி அதிகாலை, 4:30 மணிக்கு, மீண்டும் முழுவீச்சில் 'ஆபரேஷன் துரை' தொடங்கியது.
துரைமுருகனின் காட்பாடி வீடு, கதிர் ஆனந்தின் பள்ளிகள், கல்லூரிகள், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் முன்னாள் துணைத் தலைவர் அலங்காநல்லுார் சக்கரவர்த்தி வீடு, மாவட்ட முன்னாள் செயலர் வாணியம்பாடி தேவராஜ் வீடு, வஞ்சியூர் பெருமாள், துரைமுருகன் உதவியாளர் செங்குட்டை அஷ்ரப் அலி, துரையின் பள்ளித் தோழரும், காட்பாடி பகுதி, தி.மு.க., செயலருமான காங்குப்பம் 'பூஞ்சோலை' சீனிவாசன் வீடு, அவருக்கு சொந்தமான பள்ளிப் பாளையம் சிமென்ட் குடோன், கடைகள், சீனிவாசனின் அக்கா மகன் சுகுமாரின் வீடுகள், அவர் தொடர்புடைய இடங்கள் என, 20 இடங்களில், சோதனை நடத்தப்பட்டது.
சிமென்ட் குடோனில் மூட்டை, மூட்டையாக பல கோடிகள் சிக்கின. எல்லாம் புத்தம் புதிய, 200, 500, 2,000 ரூபாய் நோட்டுகள். தனித்தனி தொகையாக பாலிதீன் கவர்களில் போட்டு, வார்டு வாரியாக பிரித்து, பண்டல் போட்டிருந்தனர். பூத் சிலிப்களோடு, வாக்களர் பட்டியல், பணம் எங்கு செல்ல வேண்டும், யார் மூலம் பட்டுவாடா செய்ய வேண்டும் உள்ளிட்ட விபரங்களும் இருந்தன. லட்சக்கணக்கான கவர்கள், பூத் வாரியாக பிரித்து கட்டி வைக்கப்பட்டிருந்தன. அந்த பட்டுவாடா பட்டியலில், உள்ள தி.மு.க.,வினரை விசாரிக்க வரி துறை முடிவெடுத்துள்ளது தொண்டர்களை மதிப்பதில், தி.மு.க.,வின் ப.சிதம்பரம் என புகழ் பெற்றவர் துரைமுருகன்.
யாரையும் மதித்தது இல்லை. ஏராளமான எதிரிகளை உருவாக்கி விட்டு, அவர்கள் யார் என்பதே தெரியாமல், கூடவே வைத்து கொள்வது, அவர்களிடமே ரகசிய வேலைகளை ஒப்படைப்பது அவருக்கு வாடிக்கையானது. அதோடு வாய்த்துடுக்கும் நேர்ந்ததால், சிக்கல் கழுத்தை சுற்றிவிட்டது.
இந்த தேர்தலில் துரைமுருகன் குடும்பத்தில் இருந்து, ஒரு எம்.பி., உருவாகக் கூடாது என்பது மாவட்ட உடன் பிறப்புக்களின் லட்சியம். 'சக்சஸ்' என்று பாராட்டும் வகையில் அந்த வேலையை செய்து முடித்திருக்கின்றனர்.
கண்ணில் படுகிற சில செய்திகள் மேலோட்டமாகப் பார்க்கையில் வேடிக்கை என்று தோன்றினாலும் நிஜமாகவே நடந்து விடக்கூடியவைதான் என்றானால் என்ன சொல்வீர்கள்? என்ன செய்வீர்கள்?
இங்கே நாம் பார்த்துக் கொண்டிருக்கும் அரசியல் கள நிலவரங்களும், அதேபோல மாறக்கூடியவைதான்!
நான் பனங்காட்டு நரி! இந்த சலசலப்புக்கெல்லாம் அஞ்ச மாட்டேன்! என்றெல்லாம் வீர வஜனம் பேசினாலும், ஆடிப்போய் இருக்கிறமாதிரித் தான் செய்திகள் தெரிவிக்கின்றன.
சிச்சுவேஷன் சாங் மாதிரியே சிச்சுவேஷனுக்குத் தகுந்த மாதிரிப் படம்போட்டு முகநூலில் கலக்கல்!
ப.சிதம்பரம்! பெயர் சொல்லி முடிப்பதற்கு முன்னாலேயே அப்பச்சியின் வாய்க்கொழுப்பு முன்னால் வந்து நிற்கும் என்பது ஊரறிந்த ரகசியம்!
தன்னுடைய கணக்கையே ஒழுங்காகப் போடத் துப்பில்லாத பானாசீனா அதிமுகவின் கூட்டணிக் கணக்கைப் பேசுவானேன்? அமைச்சர் ஜெயக்குமார் சரியாகத்தான் பதிலடி கொடுத்திருக்கிறார்!
வயநாட்டில் ராகுல் போட்டியிடுவதைப் பற்றித் தமிழ் சேனல்களில் கூட விவாதிக்கிறார்களே! #வியப்பு#மகிழ்ச்சி
ஸ்டாலினின் ஹிந்துக்களின் ஆதரவு வேண்டிய நவீன பராசக்தி 2019 -------------------------------------------------------- இந்த நீதிமன்றம் விசித்திரம் நிறைந்த பல வழக்குகளைச் சந்தித்து இருக்கிறது. புதுமையான பல மனிதர்களைக் கண்டிருக்கிறது.
ஆக... நான் ஹிந்துக்கடவுள்களுக்கு எதிரி என்ற இவ்வழக்கு விசித்திரமல்ல, வழக்காடும் நான் யோக்கியனுமல்ல. வாழ்க்கைப் பாதையிலே சர்வ சாதாரணமாகக் காணக்கூடிய ஒரு பாவப்பட்ட துண்டுச்சீட்டு ஜீவன் நான்.
நெற்றியில் வைத்த குங்குமத்தை அழித்தேன், ஹிந்துக்களின் திருமண மந்திரங்களை அசிங்கமாகப் பேசினேன், என் மனைவியை கோவில் கோவிலாக அனுப்புகிறேன்... குற்றம் சாட்டப்பட்டிருக்கிறேன் இப்படியெல்லாம்.
நீங்கள் எதிர்பார்ப்பீர்கள், நான் இதையெல்லாம் மறுக்கப்போகிறேன் என்று. இல்லை நிச்சயமாக இல்லை.
குங்குமத்தை அழித்தேன். குங்குமம் கூடாது என்பதற்காக அல்ல. அதற்கு என் நெற்றிக்கு தகுதி இல்லை என்பதற்காக.
திருமண மந்திரங்களை பழித்தேன், எனக்கு புரியும் படி சொரியான் தமிழில் விளக்கமளிக்கப்படவில்லை என்பதை கண்டிப்பதற்காக.
என் மனைவியை கோவில் கோவிலாக அனுப்பினேன், நான் செய்த பாவங்களுக்கு பிராச்சித்தம் தேடுவதற்காக.
உனக்கேன் இவ்வளவு அக்கறை, உலகத்தில் யாருக்கும் இல்லாத அக்கறை, என்று கேட்பீர்கள். நானே பாதிக்கப்பட்டேன். சுயநிலம் என்பீர்கள். என் சுயநலத்தில் பொதுநலம் கலந்திருக்கிறது. ஆகாரத்திற்காக அழுக்கைச் சாப்பிட்டு தடாகத்தைச் சுத்தப்படுத்துகிறதே மீன்...அதைப் போல.
என்னைக் குற்றவாளி, குற்றவாளி என்கிறார்களே, இந்தக் குற்றவாளியின் வாழ்க்கைப் பாதையிலே கொஞ்ச தூரம் பின்னோக்கி நடந்து பார்த்தால் அவன் படிக்கத் திணறிய துண்டுச் சீட்டுக்கள் எவ்வளவு என்று கணக்கு பார்க்க முடியும்.
அண்ணன் அழகிரியின் மிரட்டல் உங்களுக்குப் புரியும்.
பாட்டொலிக்கும் குயில்கள் இல்லை என் பாதையில், படமெடுத்தாடும் வைகோ போல பாம்புகள் நெளிந்திருக்கின்றன.
தென்றலைத் தீண்டியதில்லை நான். ஆனால் தீ போல துரைமுருகனை அருகிலேயே வைத்துள்ளேன்.
கேளுங்கள் என் கதையை! நீதிபதி அவர்களே! தீர்ப்பு எழுதுவதற்கு முன் தயவு செய்து கேளுங்கள்.
62 வயதுவரை இளைஞர் அணித் தலைவனாக இருந்தேன். கடைசி வரை என் தகப்பன் என்னை ஆட்சி கட்டிலில் அமர்த்த விருப்பப்படாமல் காலம் தாழ்த்தினார்.
அண்ணன் அழகிரி மிரட்டினான். ஓடினேன்.
தங்கை கனிமொழி காயப்படுத்தினாள். ஓடினேன்.
வைகோ மறுபடியும் வந்து சேந்தான். ஓடினேன்.
வீரமணி எச்ச பிரியாணி கேட்டு நச்சரித்தான். ஓடினேன் ஓடினேன் வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடினேன்.
அவன் ஓட்டத்தை நிறுத்தி இருக்க வேண்டும். வைகோவால் நிகழ்ந்த வாட்டத்தை போக்கி இருக்க வேண்டும் இன்று சட்டத்தை நீட்டுவோர்.
இதுதான் எங்கள் வாழ்க்கை ஏட்டில் எந்தப் பக்கம் புரட்டினாலும் காணப்படும் பாடம், பகுத்தறிவு, பயனுள்ள அரசியல் தத்துவம்.
இதன் மூலம் இந்த நீதிமன்றத்திற்கு நீங்கள் சொல்லவரும் கருத்து...?
உங்களுக்குமா புரியவில்லை...8 வருடங்களாக காய்ந்து கிடக்கிறது கழக கஜானா. அதனால் தேவை ஹிந்துக்களின் ஓட்டு.
அதுவே கழகத்திற்கு டெவெலப்மெண்ட்...டெவெலப்மெண்ட்...டெவெலப்மெண்ட்.
இசுடாலின் தடுமாறாமல் பேசுகிற மாதிரி கற்பனைபண்ணக்கூட விடமாட்டேனென்கிறார்கள்!
Ramakrishnan Mahadevanகற்பனைக்கு ஒரு அளவேயில்லையா? துண்டுச் சீட்டைப் பார்த்தும் தப்பும் தவறுமாக தினசரி உளறுபவருக்கு இவ்வளவு பெரிய வசனமா?
பொதுத் தேர்தல் வந்தால் கூடவே புறக்கணிப்பு செய்யப் போவதாக சிலபல இடங்களில் போராட்ட அறிவிப்புக்களும் வருவது நம்மூர் ஜனநாயகத்தின் தனிச்சிறப்பு, வாடிக்கை! இப்போது தங்களுடைய அபிமான வேட்பாளரை நிறுத்தாததால் தீக்குளிப்பு அறிவிப்பு வரைபோனது சோனியா காங்கிரசில் என்பது இன்னொரு புதுவித வேடிக்கை!
9 வங்கிக் கணக்கு; ஆனால் வைத்திருப்பது டிவிஎஸ் எக்ஸ்எல் என்றுதிமுகவின் அழகான வேட்பாளரின் பின்னணிபற்றி தினமணி செய்தி சொல்கிறது ப்ப்பூ! இதெல்லாம் ஒரு மேட்டரா?
பானாசீனா விவசாயியாம்! கோடிக்கணக்கில் விவசாய வருமானம் வருகிறதாம்! வருமானவரித்துறையும் ஆமாம்! பண்ணையாரே களத்தில் இறங்கி விவசாயம் செய்து சம்பாதித்ததாக ஒத்துக் கொண்ட கூத்தை விடவா தமிழச்சி மேட்டர் பெரிது?
இன்னொரு கூத்தையும் பார்த்துவிடலாம்!
கார்த்தி சிதம்பரம் குழம்புகிறாராம்! அவ்வப்போது மேடைகளில் நாத்திகம் பேசும் செட்டிகளுக்கு வேண்டுமானால் குழப்பமாக இருக்கலாம்! ஆனால் நம்பிக்கையுள்ள இந்துவுக்கு அது கர்மா, கர்மவினை என்பது நன்றாகவே தெரியும். அப்பச்சிகள் ஆரம்பநாட்களில் வாக்குறுதி அளித்த கிராபைட் தொழிற்சாலை முதற்கொண்டு எந்த தேர்தல் வாக்குறுதியைத்தான் நிறைவேற்றியிருக்கிறார்கள்? வேட்பு மனுதாக்கல் செய்யும்போதே அராஜகத்தில் இறங்கிய கார்த்தி சுயேட்சை வேட்பாளரை வெளியே தள்ளிவிட்டு நல்லநேரம் முடிவதற்குள் தன்னுடைய வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருக்கிறார் என்கிறது செய்தி.
மக்கள் நீதி மய்ய வேட்பாளர்களை ஆரம்பநிலையிலேயே கழித்துக் கட்ட இங்குள்ள அதிகாரிகள் முனைகிறார்களா என்ன? இங்கே பெரம்பலூரில் வேட்புமனுவை ஏற்க மறுப்பு! திருப்பூரில் டார்ச்லைட் சின்னத்தோடு இருந்த சட்டையைக் கழற்றிவிட்டு வரச்சொல்லிக் குடைச்சல்! வேட்புமனு பரிசீலனை முடிவில் இன்னும் என்னென்ன கூத்துக்கள் நடக்குமோ? உங்களால் ஊகிக்க முடிகிறதா? TTV தினகரன் விஷயத்திலாவது அதிமுக தலையீடு இருப்பதாகக் குற்றம் சாட்டினால் இருக்கலாமோ என்று நம்ப முடிகிறது. ஆனால் கமல் காசர் கட்சி விவகாரத்தில் சிலபல அதிகாரிகளே ஓவராகப் போகிற மாதிரித்தான் தெரிகிறது.
எத்தனையோ பிரச்சினைகள் இருக்க நேற்று முழுதும் திமுகவின் பெண்ணுரிமை முன்னிறுத்தலில் ராதாரவி கட்சியிலிருந்து தற்காலிக நீக்கம் செய்யப்பட்ட ஒரே விஷயம் தான் தீப்பற்றி எரிந்த பரபரப்புச் செய்தியாக இருந்ததோ? என்ன மாதிரியான ஊடகங்களுடன், என்னமாதிரியான சமூகத்தில் வாழ்கிறோம் நாம் என்று எவரும் கவலைப்பட்ட மாதிரித் தெரியவில்லை. முகநூலில் இன்று காலை பார்த்த ஓர் பகிர்வு தொடர் கேள்விகளாக சிந்தனையில் பழைய நினைவுகளைத் தூண்டிவிட்டது என்றே சொல்ல வேண்டும்.
பெண்ணுரிமை முன்னிறுத்தும் திமுகவாம்! இது எப்போதிலிருந்து என்று யாருக்காவது தெரியுமா?
பாத்திமாபாபுவுக்கு கிடைக்காத…
சொந்த கட்சி பெண்ணின் இடுப்பை கிள்ளிய பொழுது கிடைக்காத……
#பெண்ணியம் நியாயம் தற்பொழுது நயன்தாராவுக்கு மட்டும் கிடைக்கிறதே என்று முகநூலில் ஆச்சரியம் கொள்கிறார் ஒரத்தி அன்பரசு! இதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை! தங்கள் மீது திரும்பும் கேள்விகளை திசைதிருப்ப, தங்கள்பக்க ஓட்டைகளை மறைக்கக் கிடைத்த வாய்ப்பைத் திமுகழகம் சரியாகவே பயன் படுத்திக் கொண்டிருக்கிறது என்பதை சமூகம் இப்போதாவது புரிந்துகொண்டால் சரி!
தொடர்புடைய முந்தைய பதிவு ராதாரவி நீக்கம்! திமுக தூய்மையாகிவிட்டதா என்ன? நடிகவேள் எம் ஆர் ராதா அந்தநாட்களில் எழுப்பிய கலகக்குரல் இன்றைக்கும் கொண்டாடப்படுவதற்கு தனித்த காரணங்கள் சில உண்டு. சினிமாவில் இருந்து கொண்டே சினிமாக்காரனை நம்பி மயங்காதே என்று சொல்கிற துணிச்சல் அவருக்கு இருந்தது. நடப்பு நிலவரங்களை, அரசியல் விஷயங்களைப் போகிறபோக்கில் ஒரு கோடிகாட்டிவிட்டு பகடி செய்வதில் அவருக்கிருந்த திறமையில், வக்கீலுக்குப் படித்த மகன் (ராதா)ரவியிடத்தில் நூற்றில் ஒரு பங்குகூட இல்லை. ஆனாலும் ஏட்டிக்குப் போட்டியாக, இரட்டை அர்த்தம் தொனிக்கிற சங்கதிகளாகப் பொதுவெளியில் தொடர்ந்து பேசியே தன்னை லைம் லைட்டில் தக்கவைத்துக் கொண்டார் என்பதில் அவர் சாமர்த்தியம் ஒன்றுமில்லை. திராவிட இயக்கத்தின் வளர்ச்சியே அப்படி அப்பட்டமான ஆபாசப்பேச்சில் தான் இருந்தது என்பதும் அதற்கிடம் கொடுத்து ஆரவாரம் செய்து ஆதரிக்கவும் ஜனங்களில் ஒருபகுதியினர் தயாராக இருந்ததும்தான் காரணம்! இதை இப்போதாவது புரிந்துகொள்ள முடிந்தால், சமூகத்துக்கு இனி விடிவுகாலம்தான்! ராதாரவியைக் கழற்றி விட்டதும் கூட நயன்தாராவுக்காக மட்டுமே இல்லை, வேறு சில அரசியல் காரணங்களும் இருக்கின்றன என்ற தகவலும் உண்டு.
வலையெழுத்து, பத்தி எழுத்து இவைகளில் என்னை மிகவும் கவர்ந்தவர் திரு R P ராஜநாயஹம். முகநூலில் தான் முன்பு ஆபாசப்பேச்சின் வெற்றிகொண்டான் குறித்து எழுதிய வலைப்பதிவு ஒன்றைச் சுட்டிக் காட்டியிருக்கிறார். அவரிடம் அனுமதி பெறவில்லை என்றாலும், சொன்னால் ஏற்றுக்கொள்வார் என்கிற நம்பிக்கையில், அவருக்கு நன்றி தெரிவித்து இங்கே பகிர்கிறேன். இது அவருடைய வலைப்பதிவில் 2009 டிசம்பரில் எழுதியது.
வெற்றி கொண்டான்
“LIVE IN SECLUSION. SHOW NO INTEREST IN POLITICS AND THE COMMUNITY.”
- EPICURUS
திருநாவுக்கரசரின் குற்ற உணர்வு இன்னும் தீர்ந்து தெளிந்த பாடில்லை . தவிக்கிறார்...
தத்தளிக்கிறார் ..தக்காளி விக்கிறார்... அவருடைய குலதெய்வம் எம்ஜியார் ஆதியில் இருந்த
கட்சி காங்கிரஸ் என்று கண்டுபிடித்து,அதில் இணைந்ததில் மிகவும் சந்தோசப் படுவதாக,
என்று இருந்தவர் தான் .ஆனால் அவருக்கு பெரிதாய் அரசியல் ஆர்வம் ,ஈடுபாடு,நோக்கம் ஏதும்
கிடையாது என எம் .ஆர் .ராதா சொல்வார் . அவருக்கு சினிமாவில் எப்படியாவது முன்னுக்கு வர
ஆர்வம் இருந்தது .உடம்பை மிகவும் கவனமாக பேணுவதில் அக்கறை இருந்தது . மது,சிகரட்
கிடையாது .அப்போது மராட்டிய சிவாஜியாக எம்ஜியாரை நாடகத்தில் நடிக்க வைக்க வேண்டி
பெரியார் விரும்பி சொல்லி விட்டாராம் . எம்ஜியாருக்கு அரசியல் சாயம் பூசிக்கொள்ள
விருப்பமில்லாததால் மறுத்து விட்டார் . பின்னர் ஈ.வி . கே சம்பத் தான் சிவாஜியாக
நாடகத்தில் நடித்தாராம்.அதன் பின்னர் வி .சி .கணேசன் அந்த நாடகத்தில் சிவாஜியாக நடித்து
பெரியார் வாயால் சிவாஜி கணேசன் என அழைக்கப்பட்டு பிரபலமாகி திரையுலகிலும் சிவாஜி
கணேசன் ஆனார்.
எம்ஜியார் முதல் முறையாக முதல்வர் ஆனபோது நடந்த விஷயம் நினைவிற்கு வந்தது.
எம்ஜியார் தன் அரசியல் பிரக்ஞை ரொம்ப பழைமையானது என வலியுறுத்த வேண்டி ' அன்றைய
தினம் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது, மகாத்மா காந்தி அவர்கள்
உண்ணாவிரதம் இருந்த போது, நானும் உண்ணாவிரதம் இருந்தேன் ' என என்னத்தையோ
உளறினார். உடனே வெற்றிகொண்டான் இதை தன் பாணி தாக்குதலுக்கு பயன்படுத்திக்
கொண்டது இப்படி ! " குல்லாக்காரப்பய வாயத்தொறந்தாலே புழுகித்தள்ளுறான்! காந்தியும்
நானும் ஒண்ணா ஒரே மேடையிலே உண்ணாவிரதம் இருந்தேன்னு சொல்லுறாய்யா! இவன்
பொய்யுக்கு அளவே இல்லாம போயிடிச்சே! நான் கூட நம்ம கோடம்பாக்கம் காந்தி கிட்டே
" ஏலே ! நீயாடா? உன்னோட குல்லாக்காரன் சேர்ந்து ஏதும் உண்ணாவிரதம் இருந்தானாடா?"ன்னு
கேட்கிறேன் .அவன் பதறிப் போய் " சத்தியமா நான் இல்லே அண்ணே ..." ன்னு புலம்புறான் .
குல்லாக்காரப்பய மகாத்மா காந்தியாத்தான்யா சொல்றான் !"
(காந்தியார் உண்ணாவிரதம் இருக்கிறபோதெல்லாம் நாடெங்கும் பலரும் அப்போது
உண்ணாவிரதம் இருப்பார்கள் தான்.)
குல்லாக்காரப்பய.... குல்லாக்காரப்பய என்று எம்ஜியாரை கோமாளியாக சித்தரித்து
வெற்றி கொண்டான் அப்போது கூட்டத்தை சிரிக்கவைத்து பலருக்கு வயிறே புண்ணாகி விடும் .
எம்ஜியார் திடீரென்று " நான் மன்றாடியார் பரம்பரை " என்றார் .கருணாநிதி தன் பதிலாக " ஆம் .
டெல்லியில் மன்றாடிய பரம்பரை !"என்றார் . அப்போது திமுக மேடைகளில் வெற்றி கொண்டான் செய்த கலாட்டா -" நான் பக்தவத்சலத்தை
பார்க்கப் போயிருந்தேன். அவர் அழுது கொண்டே சொன்னார் . " இந்த குல்லாக்காரப்பய என்ன நிம்மதியா சாக விடமாட்டான் போல இருக்குப்பா.'' " ஏன்யா இப்படி கவலைப்படுகிறீர்கள் ?" என்று நான் கேட்டேன் . பெரியவர் பக்தவத்சலம் விம்மிக்கொண்டே சொன்னார் " திடீர்னு குல்லாக்காரன் 'நான்
முதலியார் . பக்தவத்சலம் தான் எங்க அப்பா' ன்னு சொல்லிட்டா என்ன செய்யறது ?" தமிழக முதல்வர் ஆக இருந்த காலத்தில் பத்திரிகைகளில் கார்ட்டூனில் பக்தவத்சலத்தை
குரங்கு போலவே வரைவார்கள் .ஜெயந்தி நடராஜனின் தாத்தா.
மோகன் குமாரமங்கலம் விமான விபத்தில் மறைந்த மறு நாள் மதுரை ஆரப்பாளயத்தில் நடந்த
திமுக கூட்டத்தில் வெற்றி கொண்டான் பேசியது : கடவுள் மோகன் குமாரமங்கலத்திடம் கேட்டார் " மோகன்! நீ கலைஞரை ரொம்ப திட்டுற . மோகன் குமாரமங்கலம் பதில் : ஆமா கடவுளே . அது தான என் வேலை . திமுக வை எம்ஜியாரை
வைத்து உடைத்ததே என் வேலை தான் . இந்திராகாந்தி இந்த மாதிரி வேலை செய்யறதுக்காகவே
என்ன மத்திய மந்திரியாக்கி வச்சிருக்கு கடவுளே !
கடவுள் : மோகன் !நீ இந்த மாதிரி வேலையை நிறுத்து . கலைஞரை திட்டாதே . மோகன் : முடியாது கடவுளே ! கடவுள் : அப்ப நீ கலைஞரை திட்டுவே ? மோகன் : ஆமா கடவுளே ! கடவுள் : திட்டுவ நீ ?
மோகன் : ஆமா திட்டுவேன் . கடவுள் : சரிநீஏறுப்ளேன்னுலே !!
எம்ஜியார் ஆட்சியில் முதல் முறையாக கருணாநிதி கைது செய்யப்பட்ட நிகழ்வைப் பற்றி
வெற்றி கொண்டான் : மாஜிஸ்ட்ரேட் சொன்னார் ' கருணாநிதியை கைது செய்ய
உத்தரவிடுகிறேன் '. அப்படி சொன்னது தான் தாமதம் . அந்த கோர்ட்டுக்கு எதிரே
ஒரு ஓட்டல் .நல்ல பெரிய ஓட்டல் . நீங்க ஓட்டல்காரன் கிட்டே இப்ப கேளுங்க . இன்னைக்குப்
போயி கேளுங்களேன் . அவன் சொல்வான் ." இந்த இடத்திலே தான் என் ஓட்டல் இருந்துச்சி "
ஓட்டல் இருந்த இடத்த கை நீட்டி காட்டி இன்னைக்கும் சொல்றான் .
" இந்த இடத்திலே தான் என் ஓட்டல் இருந்துச்சி "
( கருணாநிதி கைது உத்தரவைக் கேட்டவுடன் கொதித்துப்போய் ஆவேசத்தில், உடனே ,உடனே
உடன் பிறப்புகள் ஓட்டலை அடித்து நொறுக்கி விட்டார்களாம்..இப்போ வெறும் பொட்டல் தான்.
ஓட்டல் கட்டிடம் தூள் தூளாகி விட்டது என்று அர்த்தம் !)
நாவலர் நெடுஞ்செழியன் பற்றி வெற்றி கொண்டான் : அது ஒன்னு இருந்துச்சுய்யா எங்க கிட்டே .
திருச்சி திமுக கூட்டமொன்றில் சில வருடங்களுக்கு முன் ஜெயலலிதாவின் வீடு பற்றி வெற்றி கொண்டான் : டே! உன் தலைவி ஜெயலலிதா வீட்டுக்கு வேதா நிலையம்னு பேர் எப்படி வந்துச்சி தெரியுமா. வேதாசலம் முதலியார்னு மதுராந்தகத்துலே ஒர்த்தன். அவன் தான் ஜெயலலிதா அம்மா சந்தியாவை கொஞ்ச நாள் அந்த காலத்திலே ஓட்டிக்கிட்டு இருந்தான். அவன் கிட்ட இருந்து புடுங்குன வீடு தான் உன் தலைவியோட ' வேதா நிலையம் '!
எழுத்தில் கொண்டுவர முடிந்த ஆபாசப்பேச்சு கொஞ்சம் தான்! மேடையில் வெற்றிகொண்டானும் தீப்பொறி ஆறுமுகமும் செய்கிற கொனஷ்டைகளோடு சேர்த்துக் கேட்டால் ஆபாசம் உச்சத்தைத் தொடும்.
எஸ் எஸ் சந்திரன் என்ற நகைச்சுவை நடிகனை நினைவிருக்கிறதா?
வெற்றிகொண்டான் தீப்பொறி ஆறுமுகங்களின் கொஞ்சம் மென்மையான சினிமா வெர்ஷன் (சென்சார் இருந்ததால்!)
திராவிடமாயையில் கொள்கை கோட்பாடெல்லாம் வெறும் சொல் அலங்காரம் மட்டும் தான்! ஆபாசப் பேச்சு முழக்கத்திலேயே முன்னுக்கு வந்தவை திராவிட கழகம், திமு கழகம் எல்லாம்!
தொழில் தெரிந்த ஊடகக்காரனுக்கு ஒரு செய்தியை எப்படித்தர வேண்டுமென்பதில் நல்ல தெளிவு இருக்க வேண்டும். கொடநாடு கொலைவழக்கு சம்பந்தமாக சாணக்யா தளத்தில் நேற்று வெளியிடப்பட்ட வீடியோ எடிட் செய்யப்பட்டு தமிழில் சப்டைட்டில்களுடன் இருந்ததை மேலோட்டமாகப் பார்த்துவிட்டு, இது ஒரு doctored video என்று சொல்லிவிட்டுக் கடந்து போய்விடமுடியாதபடி, நேற்றைக்கே ஒரு விளக்கமும் கொடுத்திருந்தார் ரங்கராஜ் பாண்டே. சொன்னபடி 19 நிமிட unedited videoவை இன்றைக்கு சாணக்யா தளத்தில் வெளியிட்டிருக்கிறார்
கொடநாடு கொலை வழக்கில், திட்டமிட்டு சிக்க வைக்கப்பட்டாரா எடப்பாடி பழனிச்சாமி? வழக்கில் தொடர்புடைய சயான் மற்றும் மனோஜை பிரதீப் என்பவர் சந்தித்து, 'எடப்பாடி பெயரை இழுத்துவிட்டால் தான் நீங்கள் தப்பிக்க முடியும்; நாங்கள் சொல்கிறபடி சொன்னால், டில்லியில் இருக்கும் பத்திரிகையாளர் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வார்' என சொல்லிக் கொடுக்கும் அதிர்ச்சி வீடியோ...! என்று ஒரு அறிமுகக் குறிப்புடன்!
நேற்றைக்கு மய்யத்தின் கோவைக்கு கூட்டத்தின் நேரலையைப் பார்த்துவிட்டு, இன்றைய பதிவில் எழுதி விடலாமென்றுதான் நினைத்திருந்தேன்! ராதாரவி மேட்டர் மிகவும் சூடாக ஓடிக் கொண்டிருந்ததில், அவரும் திமுகவும் கவனத்தை ஈர்த்துக் கொண்டார்கள். மய்யத்தின் கோவை சரளா பரப்புஉரை கொஞ்சம் வித்தியாசமாக! தகரம் என்பதைக் கொஞ்சம் அழுத்தமாக த்த்த..க..ர்ரம் என்கிற மாதிரியான உச்சரிப்பு! கமல் காசர் கட்சி தேறுமா என்ற கேள்விக்குக் கொஞ்சம் நம்பிக்கையூட்டுகிற மாதிரித் தான் கமல் காசர் மேடைப்பேச்சு இருந்தது.
கமல் காசர் ஒரு எட்டுத் தேதிகளைப் பட்டியல் போட்டு அங்கும் இங்கும் உள்ள எதிர்ப்பு ஓட்டுக்களை மட்டுமே குறிவைத்து அரசியல் செய்கிறாரோ? மய்யம் என்பதற்கு உண்மையான அர்த்தம் மொண்ணை என்பதுதானோ? இதை அச்சு பிச்சு குமுதம் கூட எதிர்பார்த்திருக்க முடியாது!
Kamal Haasan can’t be successful as a politician, and won’t become the Chief Minister. Good intentions alone don’t determine vote banks. Who you are and where you come from—does matter in politics. Though he is a self-proclaimed atheist, he comes from the Brahmin origin. People will identify him as one, and that won’t let him win the elections. There is hatred against Brahmins, which is fairly understandable. Everything boils down to Brahminical patriarchy—all that. Given that caste remains a powerful determinant of status, it is not entirely surprising. இது அண்ணன் சாரு ஹாசனின் கணிப்பு. இது ஜெயலலிதா விஷயத்தில் மட்டும் ஏன் பலிக்கவில்லையாம்? ரஜனிக்கு இந்தத் தடை இல்லை. ஆனால் வரவிடாமல் எது அவரைப் பின்னுக்கு இழுக்கிறதாம்?
நம்மூர் அரசியல் மாதிரிப் புதிரான விஷயம் வேறு ஏதேனும் இருக்கிறதா?
ராஜ கண்ணப்பனின் அரசியல் பாதை குழப்பமானது என்று 80 செகண்டுகளுக்குள் சொல்லிவிடுகிறார்கள்! குழப்பம் என்றால் இப்படி அப்படிக் கொஞ்சநஞ்சக் குழப்பமல்ல! விலைபோகத் தயாராக இப்படி ஆட்கள் இருப்பதால்தான் கழகங்களும் CONகிரசும் வாரிசுகளை வளர்த்துவிடுவது எளிதாக இருக்கிறது.
இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியில் , சங்கடமான வீடியோக்களை டெலீட் செய்தாலும், மீட்டுக் கொண்டு வரமுடியும் என்பது, வைகோவை விடுங்கள், KDbrothers வகையறாக்களுக்குத் தெரியாதா?
கனிமொழி புராணம்! NewsJ சேனல் இரண்டு நிமிடத்தில் சுருக்கமாக நினைவுபடுத்துகிறார்கள்!
ஊழலில் முங்கி முத்தெடுத்த டி ஆர் பாலு, கருணாநிதிக்கே பங்கு தராதவர் என்கிறார்கள் இங்கே! அடேங்கப்பா! சாதனையாளர்தான்!