சாணக்யா ரங்கராஜ் பாண்டே! மய்யம் கமல் காசர்! அரசியல்!

தொழில் தெரிந்த ஊடகக்காரனுக்கு ஒரு செய்தியை எப்படித்தர வேண்டுமென்பதில் நல்ல தெளிவு இருக்க வேண்டும். கொடநாடு கொலைவழக்கு சம்பந்தமாக சாணக்யா தளத்தில் நேற்று வெளியிடப்பட்ட வீடியோ எடிட் செய்யப்பட்டு தமிழில் சப்டைட்டில்களுடன் இருந்ததை மேலோட்டமாகப் பார்த்துவிட்டு, இது ஒரு  doctored video  என்று சொல்லிவிட்டுக் கடந்து போய்விடமுடியாதபடி, நேற்றைக்கே ஒரு விளக்கமும் கொடுத்திருந்தார் ரங்கராஜ் பாண்டே. சொன்னபடி 19 நிமிட unedited videoவை இன்றைக்கு சாணக்யா தளத்தில் வெளியிட்டிருக்கிறார் 


கொடநாடு கொலை வழக்கில், திட்டமிட்டு சிக்க வைக்கப்பட்டாரா எடப்பாடி பழனிச்சாமி? வழக்கில் தொடர்புடைய சயான் மற்றும் மனோஜை பிரதீப் என்பவர் சந்தித்து, 'எடப்பாடி பெயரை இழுத்துவிட்டால் தான் நீங்கள் தப்பிக்க முடியும்; நாங்கள் சொல்கிறபடி சொன்னால், டில்லியில் இருக்கும் பத்திரிகையாளர் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வார்' என சொல்லிக் கொடுக்கும் அதிர்ச்சி வீடியோ...!  என்று ஒரு அறிமுகக் குறிப்புடன்! 
   
நேற்றைக்கு மய்யத்தின் கோவைக்கு கூட்டத்தின் நேரலையைப் பார்த்துவிட்டு, இன்றைய பதிவில் எழுதி விடலாமென்றுதான் நினைத்திருந்தேன்! ராதாரவி மேட்டர் மிகவும் சூடாக ஓடிக் கொண்டிருந்ததில், அவரும் திமுகவும் கவனத்தை ஈர்த்துக் கொண்டார்கள். மய்யத்தின் கோவை சரளா பரப்புஉரை கொஞ்சம் வித்தியாசமாக! தகரம் என்பதைக் கொஞ்சம் அழுத்தமாக த்த்த..க..ர்ரம் என்கிற மாதிரியான உச்சரிப்பு!    கமல் காசர் கட்சி தேறுமா என்ற கேள்விக்குக் கொஞ்சம் நம்பிக்கையூட்டுகிற மாதிரித் தான் கமல் காசர் மேடைப்பேச்சு இருந்தது.  

கமல் காசர்  ஒரு எட்டுத் தேதிகளைப் பட்டியல் போட்டு  அங்கும் இங்கும் உள்ள எதிர்ப்பு ஓட்டுக்களை மட்டுமே குறிவைத்து அரசியல் செய்கிறாரோ? மய்யம் என்பதற்கு உண்மையான அர்த்தம்  மொண்ணை என்பதுதானோ? இதை  அச்சு பிச்சு குமுதம் கூட எதிர்பார்த்திருக்க முடியாது! 

Kamal Haasan can’t be successful as a politician, and won’t become the Chief Minister. Good intentions alone don’t determine vote banks. Who you are and where you come from—does matter in politics. Though he is a self-proclaimed atheist, he comes from the Brahmin origin. People will identify him as one, and that won’t let him win the elections. There is hatred against Brahmins, which is fairly understandable. Everything boils down to Brahminical patriarchy—all that. Given that caste remains a powerful determinant of status, it is not entirely surprising. இது அண்ணன் சாரு  ஹாசனின் கணிப்பு. இது ஜெயலலிதா விஷயத்தில் மட்டும் ஏன் பலிக்கவில்லையாம்? ரஜனிக்கு இந்தத் தடை இல்லை. ஆனால் வரவிடாமல் எது அவரைப் பின்னுக்கு இழுக்கிறதாம்? 

நம்மூர் அரசியல் மாதிரிப் புதிரான விஷயம் வேறு ஏதேனும் இருக்கிறதா?     

ராஜ கண்ணப்பனின் அரசியல் பாதை குழப்பமானது என்று 80 செகண்டுகளுக்குள் சொல்லிவிடுகிறார்கள்! குழப்பம் என்றால் இப்படி அப்படிக் கொஞ்சநஞ்சக் குழப்பமல்ல! விலைபோகத் தயாராக இப்படி ஆட்கள் இருப்பதால்தான் கழகங்களும் CONகிரசும் வாரிசுகளை வளர்த்துவிடுவது எளிதாக இருக்கிறது. 


இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியில் , சங்கடமான வீடியோக்களை டெலீட் செய்தாலும், மீட்டுக் கொண்டு வரமுடியும் என்பது, வைகோவை விடுங்கள், KDbrothers வகையறாக்களுக்குத் தெரியாதா?

கனிமொழி புராணம்! NewsJ சேனல் இரண்டு நிமிடத்தில் சுருக்கமாக நினைவுபடுத்துகிறார்கள்!

  
ஊழலில் முங்கி முத்தெடுத்த  டி ஆர் பாலு, கருணாநிதிக்கே பங்கு தராதவர் என்கிறார்கள் இங்கே! அடேங்கப்பா! சாதனையாளர்தான்!

மீண்டும் சந்திப்போம்!
             

6 comments:

  1. எதுக்கு அரசியல் அல்லக்கைகளைப் பற்றிய காணொளிகளை வெளியிடறீங்க? வைகோ எது பேசினாலும் அதற்கு அவரது 'வரவு' மட்டுமே காரணமாக இருக்கும். மோசமான, ஊழலான அரசியல்வாதிகளுள் அவரும் ஒருவர்.

    ReplyDelete
    Replies
    1. அரசியலில் பழசே தான் புதுசு! எல்லாம் கொஞ்சம் ஞாபகப்படுத்திக் கொள்வதற்குத்தான்! :))))

      Delete
  2. //Though he is a self-proclaimed atheist, he comes from the Brahmin origin.// - தமிழ்நாட்டின் முதலமைச்சராக ஒருவர் வரவேண்டும் என்றால் அவர் முதலில் மைனாரிட்டி ஜாதியைச் சேர்ந்தவராகத்தான் இருக்கமுடியும். அதனால், 20% இருக்கு என்று சொல்லும் எந்த சாதியைச் சேர்ந்தவரும் முதலமைச்சராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட மாட்டார்கள் என்று நினைக்கிறேன். (அதுக்காக கமல் வருவார்னு அர்த்தமில்லை. அவர் மக்களின் ஆதரவைப் பெறும் நிலைக்கு வருவது சாத்தியமில்லை. 20 வருடத்துக்கு முந்தைய ரஜினியோ அல்லது தற்போதைய அஜித்தோ மக்களால் ஏற்றுக்கொள்ளப்படும் சாத்தியம் மிக அதிகம்)

    ReplyDelete
    Replies
    1. எனக்கென்னவோ கமல் கொஞ்சம் வாக்குகளை கண்ணியமான 4 அல்லது 5% இற்கு குறையாமல் வாங்குவாரோ என்றொரு சந்தேகம் வலுத்து வருகிறது.

      Delete
  3. டி ஆர் பாலு போன்றவர்கள் இந்திய நாட்டு அரசியலின் கழிசடைகள். தன் மகன் நிறுவனத்துக்கு இன்னொரு மந்திரிக்கு சிபாரிசு கடிதம் எழுதிய விஷயம் நாடாளுமன்றத்தில் வெளிப்பட்ட போது , கொஞ்சமும் கூச்சம் இல்லாமல், "ஆமாம். எழுதினேன். இல்லையென்றால் அந்த நிறுவனத்தில் பணிபுரிபவர்கள் வேலை இழப்பார்கள்." என்றார். இது போன்ற மனிதர்கள் எதற்கும் துணிந்தவர்கள். இவர்கள் கட்டாயம் தோற்கடிக்கப்பட வேண்டியவர்கள்.

    ReplyDelete
    Replies
    1. டி ஆர் பாலு, ஆ.ராசா, எ வ வேலு,ஜெகத்ரட்சகன் இவர்களெல்லாம் தான் திமுகவின் முகங்கள்!
      தோற்கடிக்கப்பட வேண்டியவர்கள் என்பதில் சந்தேகமே இல்லை!

      Delete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!