அக்கம் பக்கம்! என்ன சேதி!

இன்றைக்கு எகனாமிக் டைம்ஸ் நாளிதழில் பிரணாப் தல் சமந்தா என்பவர் எழுதியிருக்கிற ஒரு செய்திக் கட்டுரை நிறைய if's and but's உடன் இருந்தாலுமே கூட கொஞ்சம் சுவாரசியமான சாத்தியக்கூறுகளை சுட்டிக் காட்டுகிறது என்றுதான் எனக்குத் தோன்றுகிறது, செய்தித் தலைப்பு View: India has a sudden chance to change China's Pakistan math forever

இந்த செய்திக்கட்டுரையைப் படித்ததும் Pgurus தளத்தில் வெளியாகியிருந்த இந்த கார்ட்டூன் தான் உடனடியாக நினைவுக்கு வந்தது. தெற்காசியாவின் முள்ளம்பன்றி என்று சரியாகத்தான் சொல்கிறார்கள்! 

பயங்கரவாதத்தைப் பயிற்சி கொடுத்து ஏற்றுமதி செய்கிற ஒரேநாடு பாகிஸ்தான் தான்! ஜெயிஷ் ஏ முகமது போல 48க்கும் மேலான    
தீவீரவாத இயக்கங்களை பாகிஸ்தானிய ராணுவத்தின் ISI ஆயுதங்கள், பயிற்சி கொடுத்து அண்டைநாடுகளில் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுத்துகிறது. இங்கே இந்தியாவில் பிப்ரவரி 14 அன்று புல்வாமாவில் CRPF வீரர்கள் சென்ற வாகனவரிசை மீது தற்கொலைத் தாக்குதல் நடத்தி 41 வீரர்கள் உயிரைக் காவு கொண்டது போலவே, ஈரானிலும் ஆப்கானிஸ்தானிலும் தாக்குதல்களைத் தூண்டி விட்ட செய்திகளும் வந்த பின்னணியில் பாகிஸ்தானை ஆதரிக்க சீனா, சவூதி அரேபியா உள்ளிட்ட அதன் நட்பு நாடுகள் எதுவும் முன்வரவில்லை. சென்ற 26 ஆம் தேதி பாலாகோட்  ஜெயிஷ் ஏ முகமது பயிற்சிக் கூடத்தின் மீது இந்திய விமானப்படை நடத்திய தாக்குதல், அதன்தொடர்ச்சியாக பாகிஸ்தான் விமானங்கள் இந்திய ராணுவ நிலைகளின் மீது நடத்திய misadventure அதில் இந்தியவிமானி அபிநந்தன் ஒரு F 16 விமானத்தைச் சுட்டு வீழ்த்தி, பிறகு சிறைபிடிக்கப்பட்டதில் சர்வதேச அழுத்தம் காரணமாக மூன்றே நாட்களில் விடுவிக்கப்பட்டதும் நிகழ்ந்தது. 

CPEC என்று பாகிஸ்தானுடன் ஒரு வர்த்தக காரிடாரில் சீனா ஒரு கூட்டாளியாக இருந்தாலும் கூட, பாகிஸ்தான் செய்கிற அத்தனை அழும்புகளுக்கும் துணைநிற்க சீனா தயாராக இல்லை.

அதேபோல சவூதி அரேபியாவின் அரச குடும்பத்தின் பாதுகாவலர்களாகவும், சவூதிகளின் விமானப்படையிலும் பாகிஸ்தானிகளே இருக்கிற போதிலும் பாகிஸ்தானின் ரவுடித்தனத்தை சவூதிகள் வெளிப்படையாக ஆதரிக்கத் தயாராக இல்லை.

தாலிபான்களிடமே ஆப்கானிஸ்தானை ஒப்புக்கொடுத்துவிட்டு  ஆப்கானிஸ்தானில் இருந்து உருவிக்கொள்ளத் தயாராகி வரும் அமெரிக்காவும் கூட பாகிஸ்தானை ஆதரிக்கிற மூடில் இல்லை என்ற பின்னணியில் The Balakot air strikes have provided a big opening for India, which, if exploited effectively, have the potential to fundamentally alter the rules of play that have disadvantaged India in negotiations not just with Pakistan, but also China என்று ஆரம்பிக்கிற செய்திக் கட்டுரையை ஒருமுறை வாசித்து விடுங்கள்! நான் வாசித்தபோது 58 பின்னூட்டத் தாளிப்புகள் இருந்தன! 
 
Modi’s strong response to the terror strikes in Pulwama at the very end of his first term in office has made it clear that despite his critics, he has managed to change the fundamentals of Indian foreign and security policy in his five years in office. The use of air power to target terror camps deep inside Pakistani territory last week was the first such act after the 1971 war. It shattered the myth of Pakistan’s nuclear capability and has thrown open the possibility of India fighting a limited conventional war if need be. It has put the onus back on Pakistan for escalation. Modi’s message to Pakistan has been heard around the world and will have serious ramifications for India’s global engagement. India has not only defined these air strikes as “non-military pre-emptive” action, but has also taken Pakistan to the ICJ and worked with the Financial Action Task Force to turn the screws on Pakistan, thereby underlining the central difference between a “responsible” India and a “rogue” Pakistan. India’s Pakistan policy has been altered, perhaps unequivocally. என்று சிலாகிக்கிறது டிப்ளோமாட் தளத்தில் மார்ச் 2 ஆம் தேதி ஹர்ஷ் வி பந்த் என்பவரெழுதிய செய்திக் கட்டுரை. 

அதேநாளில் அதேதளத்தில் வெளியான இன்னொரு செய்திக் கட்டுரை Indian Air Strategy After Balakot: The China Factor
How is India’s air force placed to handle a potential war with Pakistan and a two-front war with Pakistan and China? என்ற கேள்வியை எடுத்துக் கொண்டு, பதிலை அலசுகிறது. இந்தியா, பாகிஸ்தான், சீனா மூன்று நாடுகளின் விமானப்படை வலிமை எத்தகையது? இரண்டுமுனைப்போருக்கு இந்தியா தயாராக இருக்கிறதா என்றெல்லாம் அலசியிருக்கிறார்கள்.     
ஒரு போர் வருமா? வாய்ப்பே இல்லை என்பதுதான் கள யதார்த்தம்! தவிர ஒரு போரின் முடிவை வெறும் எண்ணிக்கை மட்டுமே தீர்மானிப்பதில்லை. முதலில்  பாகிஸ்தானுக்கு ஆதரவாக, சீனா களமிறங்குமா என்பதே 9 ரூபாய் நோட்டு மாதிரியான கேள்விதான்!
அப்படி இறங்குமானால் ......
சீனாவுடன் தங்கள் ஸ்கோரை செட்டில் செய்ய, அமெரிக்கா, ஜப்பான் முதலான நாடுகளும் களத்தில் இறங்கலாம்! வேறுபல நாடுகளும் இந்திய ஆதரவு நிலை எடுக்கலாம்!
போர் என்பது தமிழக அரசியல் வாதிகள் செய்வது போல வெறுமனே வாயால் சுடுகிற வடையல்ல!
          
இது அக்கம் பக்கம்! என்ன சேதி! பக்கங்களில் இன்றைக்கு எழுதியது. திரட்டிகளில் இன்னமும் திரட்டப் படவில்லை. நண்பர்கள் பிடித்திருந்தால் இந்த வலைப்பக்கங்களை bookmark செய்துகொள்ளும்படி வேண்டிக் கொள்கிறேன்     

No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!