கோவை சரளாவோடு கோபித்துக் கொண்டு ....! தமிழக அரசியல்!

நிலையற்ற கோவா அரசியலில், ஒரு புதிய பரிமாணத்தை ஏற்படுத்த முடிந்த ஒரே அரசியல் தலைவர் மறைந்த முதல்வர் மனோகர் பரிக்கர் என்று தயங்காமல் சொல்லிவிடலாம். மும்பை ஐஐடியில் படித்து என்ஜினீயராக மட்டும் வெளியே வரவில்லை. RSS இயக்கத்தின் முன்னணி ஊழியராகவும்! அதைவிட பரிக்கரின் மென்மையான அணுகுமுறையில் கிறித்தவ சர்ச்சும் ஏற்றுக்கொண்ட தலைவராகவும் இருந்தார் என்பதுதான் அவருடைய தனிச்சிறப்பு.  இதைப் படிக்கிற நேரத்தில், முழு அரசு மரியாதைகளோடு அவருடைய இறுதியாத்திரை நடந்து முடிந்திருக்கும்.

   
வழக்கம்போல கோவா காங்கிரஸ் எம்எல்ஏக்கள் முதல்வர் நாற்காலியைக் குறிவைத்து நேற்றிலிருந்து காய் நகர்த்த  ஆரம்பித்துவிட்டார்கள் என்பது இந்த தேசத்தைப் பீடித்திருக்கும் அபசுரம். காங்கிரஸ் என்கிற விஷவிருட்சத்தை வேரோடு சாய்க்காமல் இங்கே எந்த ஒரு அரசியல் மாற்றமும் நிகழாது. 

உள்ளூர் அரசியலையே ஒழுங்காகத் தெரிந்து கொண்டு பேசத்தெரியாத தமிழ் சேனல்கள், கோவா நிலவரம் பற்றிப்பேசுவது உண்மையிலேயே வேடிக்கை. 

கமல் காசர் நடத்தும் மக்கள் நீதி மய்யம் ஒரு கேலிக்குரிய அறிக்கையை வெளியிட வேண்டிய நிலையை CK குமரவேல் உண்டாக்கிவிட்டாரோ?

குமரவேல் என்னவோ கோவை சரளாவை வம்புக்கிழுக்கிற மாதிரிப் பேட்டி கொடுக்கிறார்! கோவை சரளாவை வைத்து நேர்காணல் நடத்தியது தான் குத்தமாப் போச்சாம்! ஏதாவது சொல்ல வேண்டுமே!  

நம்மூரில் ஒருவிஷயம் ஏன் பிடித்திருக்கிறது, ஏன் ஆதரிக்கிறோம் என்று நேரடியாகச் சொன்னால் அது உலக அதிசயம்! அதே நேரம், நெகடிவான விஷயங்களுக்கே முக்கியத்துவம் கொடுப்பது தமிழேண்டா கலாசாரம்! இங்கே கமல் காசர் கட்சியில் இருந்து ஏன் வெளியேவந்தேன் என்று பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கிறார் CK குமரவேல். ஆனால் இந்து தமிழ் திசை பின்னணியில் திமுக அழுத்தம் இருப்பதாக செய்தி சொல்கிறதே! கொண்டையை மறைக்கத் தெரியவில்லையோ? 

  
இது ரங்கராஜ் பாண்டேவின் சாணக்யா தளத்தில் இருந்து! 

தமிழகத்தில் கல்வித்தந்தைகள் எப்படி உருவாகிறார்கள், என்ன செய்கிறார்கள்  என்பதற்கு இந்த ஒரு சாம்பிள் போதுமா? 


4 comments:

  1. கெவின்கேரில் கனிமொழி 20% பங்கு. எஸ்.ஆர்.எம்.ல் ஆக்ரமிக்கத் திட்டம்போட்ட கனிமொழி. இப்போ பச்சைமுத்து திமுக கூட்டணி. திமுகவோட யார் கூட்டணி வச்சிருந்தாலும், தொடர்பு (வியாபார, திருமண) தொடர்பு வச்சிருந்தாலும் அந்தக் கம்பெனியில் திமுக தலைமைக்கு பங்கு இருக்கும். அது இந்தியா சிமெண்ட்ஸாக இருந்தாலும் சரி, விகடன் குழுமமாக இருந்தாலும் சரி.

    ReplyDelete
    Replies
    1. நாசூக்கு திருடன். நல்ல திருடன். தடயமே இல்லாமல் திருடும் திருடன். பல வார்த்தைகள் நினைவுக்கு வந்து போகின்றது. அப்புறம் பாரிக்கர் குறித்து எனக்கும் மரியாதை உண்டு. உடல் நலம் மோசமானதும் இந்த அரசியல்வாதிகள் ஏன் ஓய்வு எடுக்க விரும்புவதில்லை என்பது தான் எனக்கு ஆச்சரியமாக உள்ளது.

      Delete
    2. ஜோதிஜி! நினைவுக்கு வருகிற தகவல்களை எழுத்திலும் கொண்டுவாருங்களேன்!

      நெல்லைத்தமிழன்! அன்பில் தர்மலிங்கம் காலத்தில் பூச்சி மருந்து ஊழலில் வெறும் 4 இல் இருந்து 5% கமிஷன் என்று ஆரம்பித்து, 10% ஆகி முரசொலி மாறன் தொழிலதிபர் ஆனதும் ஒட்டகம் முதலில் மூக்கை நுழைத்து அப்புறம் மொத்தத்தையும் ஆக்கிரமித்த கதையாக வளர்ந்தவிதம் அப்படி!

      சசிகலா பின்னாட்களில் திமுகவை மிஞ்சினது சமகால நிகழ்வுகள் தான்! தமிழேண்டா என்று கூவுவதில் புளகாங்கிதப்பட்டு நாம் தான் இன்னமும் ஏமாளிகளாக இருக்கிறோம்!

      Delete
    3. ஜோதிஜி சார்... சாதாரண மக்கள் தங்கள் ஓய்வு காலத்துக்கும், அப்போது வரும் நோய்களுக்கான மருத்துவத்துக்கும் காசு சேர்க்கணும்.

      ஆனால் அரசியல்வாதிகள் ஓய்வு பெற்றுவிட்டால், யார் அவருடைய மருத்துவத்துக்கு பணம் கொடுப்பார்கள்? ஆயிரம் கோடீஸ்வரர் மாறனுக்கும்கூட, அரசு செலவில் மருத்துவம் (இறக்கும்வரை). அவருடைய சொத்தில் 1 ரூபாய்கூட அவருடைய நலத்துக்குச் செலவுசெய்யவில்லை. விபி சிங்... என்று இந்த லிஸ்டுக்கு முடிவே இல்லை.

      Delete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!