தேர்தல் அலப்பறைகள்! #1

கடலூர் CK குமரவேல் கிளப்பிய சலசலப்பை கமல் காசர் கட்சி வெகு எளிதாகக்  கடந்துபோய்விட்டதென்று தான் தோன்றுகிறது. மய்யத்தில் கமலுக்கு சவால் விடக் கூடிய திறமை உள்ள நபர்கள் கட்சியில் யாருமே இல்லை போல! கோவை சரளா தன் மீது வீசப்பட்ட பந்தை வெகு லாவகமாகத் திருப்பி அடித்து விளையாடி இருக்கிறார். அம்மணி வெறும் வாயிலேயே சேவை செய்வது எப்படி என்று நன்றாகவே விளக்கிவிட்டார். சினிமாக்காரன் இல்லாமல் தமிழ்நாட்டுல ஒண்ணுமே நடக்காதுய்யா என்று சொல்கிற துணிச்சல் இந்தக் காமெடி நடிகைக்கு இருக்கிறது.


தொடர்புடைய பதிவாக இதையும் பார்த்துவிடவும்!

கடைசியில் கமலுடனும் கூட்டுச்சேர ஒரு ஆள் கிடைத்து விட்டாராம்! இப்போதுதான் நேரலையில் இந்த அதிசயத்தைப் பார்த்தேன்!  

நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சியுடன், இந்திய குடியரசு கட்சி கூட்டணி - செ.கு.தமிழரசன் அறிவிப்பு!  மக்களவை தேர்தலில் ஒரு தொகுதியிலும், இடைத்தேர்தலில் 3 தொகுதிகளிலும் மக்கள் நீதி மய்யத்தின் டார்ச் லைட் சின்னத்தில் போட்டி - செ.கு. தமிழரசன்/படம் செய்தி தந்தி TV  


இங்கே நடந்து கொண்டிருக்கும் தேர்தல் அலப்பறைகளில் அடடே ! மதியுடைய கார்டூன்கள் எவ்வளவு இதமாக இருக்கிறதென்பதை அனுபவித்துத் தான் சொல்ல வேண்டும்! ஒரு எம்பி தொகுதிக்கு முப்பதில் இருந்து நாற்பது கோடி ரூபாய்வரை ஒரு வேட்பாளர் செலவு செய்யவேண்டியிருக்கும் என்ற செய்திகளைப் பார்க்கும்போது, இப்போது நமக்கு உடனடித்தேவை புதிய அரசியல் கட்சிகளோ கூட்டணி, தேர்தல் அறிக்கைகளோ அல்ல! தேர்தல் முறைகளில்,சீர்திருத்தங்கள் என்பதைக் கூட ஏதோவொரு தேர்தல் வருகிற நேரத்தில் தான் சொல்ல முடிகிறது.


நாம் தமிழர் கட்சி சீமான் கட்சித்தொண்டர் ஒருவரை மிரட்டிய ஆடியோ ஒன்று இணையத்தில் உலவிக் கொண்டிருக்கிறது. சீமானிடம் கேட்டபோது அது கட்சி பிரச்சினை பேசுவதற்கு வேறு விஷயங்களே இல்லையா என்று எதிர்க்கேள்வி கேட்டு முடித்து விட்டாராம்! 

ரங்கராஜ் பாண்டேவின் சாணக்யா தளத்தில் இன்று வெளியாகியிருக்கிற ஜாலி சித்திரம் இது! 
            

3 comments:

  1. சீமான்....தமிழ்நாட்டு மக்களுக்கு கிடைத்த ஒரு மிகச்சிறந்த பொழுதுபோக்கு சாதனம்....

    ReplyDelete
  2. கமல், சீமான் இவர்களைத் தவிர்த்து விட்டு இந்தத் தேர்தலைப் பேச முடியாது என்பது தான் அவர்கள் சிறப்பு.

    ReplyDelete
    Replies
    1. ஜீவி சார், அப்படியா அர்த்தப்படுத்திக் கொள்கிறீர்கள்? எனக்கென்னவோ ஏற்கெனெவே இருக்கும் கட்சிகளைப் பற்றி பேசுவதற்குப் புதிதாக என்ன இருக்கிறதென்று தான் ஜனங்கள் இவர்களை பற்றியும் பேசுகிறார்கள் எனத் தோன்றுகிறது! ஆனால் ஓட்டு விழுமா? விழாது என்பதுதான் இதுவரை கண்ட அனுபவம்!

      Delete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!