ரங்கராஜ் பாண்டே! தொடரும் விவாதங்கள்!

முந்தைய பதிவில் ரங்கராஜ் பாண்டே நடுவராக இருந்து சென்ற சனிக்கிழமை வடபழனி சிம்ஸ் மருத்துவமனை ஆடிட்டோரியத்தில் நடத்திய விவாதம் குறித்து ஒரு வீடியோவைப் பகிர்ந்திருந்தேன். சாணக்யா தளத்தில் இன்று மூன்று பகுதிகளாக அந்த நிகழ்ச்சி வெளியாகி இருக்கிறது. இதன் முதல் பகுதி நேற்றே வெளியாகி விட்டது என்பதையும் சேர்த்தால் மொத்தம் 4 பகுதியாக இங்கே.



இதில் என்னைக் கொஞ்சம் அதிர வைத்த விஷயமாக, இங்கே தொலைக்காட்சி பார்ப்பவர்களில்  90% செய்தி சேனல்களைப் பார்ப்பதில்லை என்று பாண்டே சொன்னதுதான்! டிவி சீரியல்கள், பழைய சினிமா தாண்டி நம்முடைய ரசனை வளர்ந்துவிடாதபடி அத்தனை ஊடகங்களும் ரொம்பவே கவனமாக இருக்கின்றனவோ?


ப்ரைம் பாயிண்ட் ஸ்ரீநிவாசன்! இணையம் இங்கே வந்த நாளிலிருந்தே அதில் புழங்கிக்  கொண்டிருப்பவர்! Blogger, Wordpress  என்று எழுத ஊக்குவித்த தளங்கள் என்று ஆரம்பித்து, எப்படி விகாரப்பட்டும் நிற்கின்றன என்பதைப்பற்றிக் கொஞ்சம் சொல்கிறார். வாரம் ஒரு     நாளாவது  நெட், சமூக ஊடகங்கள் பக்கம் தலைவைத்துப் படுக்காமல் கட்டுப்படுத்திக்கொள்ளலாமே என்கிறார். நல்ல யோசனையாகத்தான் இருக்கிறது!  


ஜாக்கி சேகரும் கொஞ்சம் relevant ஆகப்பேசுகிறார். அடுத்துப் பேச வந்த பொன்ராஜ் பேச்சைக்காணோம்!  நாலாவது பகுதியாக மய்யத்தில் இருந்து விலகி வந்த CK குமரவேல் பேச்சு இருக்கிறது. என்ன சொல்கிறார், வாருங்கள், பார்க்கலாம்!

    
என்னமோ பெரிதாகப் பேசப் போகிறார் என்று எதிர் பார்த்தீர்களா? எதிர்பார்ப்பு எதுவுமில்லாமல் பார்த்த எனக்கே கொஞ்சம் ஏமாற்றம்தான்!


ஆக, அரங்கத்தைக் கலகலப்பாக்கியது கஸ்தூரி ஒருவர் தான் போல! 

மீண்டும் சந்திப்போம்!
     

No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!