இங்கே பொதுத் தேர்தல் என்றால் ஏதோ திருவிழா மாதிரி ஜனங்கள் வேடிக்கை மட்டும் பார்க்கிற சாங்கியமாக இருப்பதை, நையாண்டி செய்து எழுதுவதுபோல மேலோட்டமாகத் தெரிந்தாலும், தங்களுக்குக் கிடைக்கிற சின்னவாய்ப்பைக் கூட ஜனங்கள் சரிவரப் பயன்படுத்திக் கொள்ளாமல் இருக்கிறார்களே என்கிற கோபமும் ஆதங்கமும்தான் வெளிப்பட்டுக்கொண்டே இருக்கிறது என்பது இங்கே தொடர்ந்து வரும் நண்பர்களுக்குப் புரியும் என்றே நம்புகிறேன்!
அடுத்த வாரிசுகளின் அரசியல் ஸ்டன்ட் என்று இங்கே கொஞ்சம் குத்தலாகச் சொல்கிறார்களே, சரிதானா?அல்லது நீட்டிமுழக்காமல் நேரடியாகவே அடடே! மதி இந்த கார்டூனில் சொல்கிற மாதிரியா?
ஒருவழியாக அமமுக தினகரனுக்குத் தேர்தல் ஆணையம் ஒரு பொதுச்சின்னத்தை வழங்கிவிட்டது.
பரிசுப் பெட்டியாம்! தேர்தலில் எடுபடுமா என்பது சற்றே பொறுத்திருந்து பார்க்கவேண்டிய விஷயம். தினகரனுக்கு கையைவிட்டுப்போன அதிமுகவின் வெற்றி வாய்ப்பைக் குறைக்கவேண்டும், சட்டசபை இடைத்தேர்தல்களில் கொஞ்சமாவது ஜெயித்தாகவேண்டும் என்கிற குறைந்தபட்ச அஜெண்டா மட்டுமே பிரதானமாக இருப்பதால், சின்னம் எதுவாக இருந்தாலும் பரவாயில்லை! ரங்கராஜ் பாண்டேவின் பகிர்வும் அதைத்தான் சொல்கிறதோ?
தினகரனின் அமமுகவுக்கு பரிசு பெட்டி சின்னம் ஒதுக்கியது தான் தாமதம், அவர்களுடைய IT Wing, வேலையை காட்ட ஆரம்பித்துவிட்டது...
என்ன விசேஷமென்றால், selfie எடுத்துக்கொள்ள விருப்பப் பட்டவர்கள் அத்தனைபேரோடும் இசுடாலின் கன்னத்தில் அறையாமல் முகம் சுளிக்காமல் selfie எடுத்துக் கொண்ட வரலாற்றுச்சிறப்புமிக்கவிஷயம் பின்னுக்குத் தள்ளப்பட்டு, எடுத்துக்கொண்டவர் டீஷர்ட்டில் முக அழகிரி படமிருந்தும் கூட இசுடாலின் சிரித்தமுகத்துடன் போஸ் கொடுத்ததுதான்!அண்ணாவைப் பின்னுக்குத்தள்ளி கலீஞரை மட்டுமே முன்னிலைப் படுத்தியமாதிரி இசுடாலினால் இந்த அண்ணனை அத்தனை எளிதாகப் புறக்கணித்துவிட முடியவில்லையோ என்னவோ?
முந்தைய இரண்டு பதிவுகளின் தொடர்ச்சியாக, சமூக வலைத்தளங்களால் விழிப்புணர்வே! சீரழிவே! என்று இரண்டு அணிகளாக விவாதித்ததன் தொடர்ச்சியாக, டாக்டர் அப்துல் கலாமிடம் உதவியாளராக இருந்தவரும், பின்னால் தனிக்கட்சி ஆரம்பித்தவருமான பொன்ராஜ் பேச்சு.
இந்து தமிழ்திசை சந்தோஷமாக இப்படித் தலைப்பிட்டு விவரம் சொல்கிறது:
கமல் கட்சிக்கு வந்த சோதனை: 4 தொகுதிகளில் வெளியேறியது மக்கள் நீதி மய்யம்
வேட்பு மனு தாக்கலின் கடைசி நாளான மார்ச் 26-ல் பெரம்பலூர் மக்களவைத் தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் செந்தில்குமார் தாமதமாக வந்ததால் வேட்பு மனு தாக்கல் செய்ய முடியவில்லை.வேட்பு மனு பரிசீலனையின் போது காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கூட்டணியான இந்தியக் குடியரசுக் கட்சி வேட்பாளர் தங்கராஜ் வேட்பு மனு உரிய ஆவணம் இல்லாததால் நிராகரிக்கப்பட்டது. மானாமதுரை சட்டப் பேரவை தொகுதியில் முன்மொழிவோர் கையெழுத்து இல்லாததால் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் ராம கிருஷ்ணனின் மனு நிராகரிக்கப்பட்டது. அரூர் தொகுதியிலும் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் குப்புச்சாமியின் மனு நிராகரிக்கப்பட்டது
தேர்தல் நேரத்தில் இன்னும் நிறைய கோமாளித்தனங்களை செய்தியாகப் பார்க்கமுடியும்என்கிற ஒரே காரணத்துக்காக தேர்தலே காமெடியாகிவிடாது! தேர்தல் நேரம் காமெடி டைம் அல்ல! இதை மனதில் வைத்துக்கொள்வது நல்லது.
தேர்தல்கள் வெறுமனே வேடிக்கை பார்க்கக் கூடுகிற திருவிழாவும் அல்ல! வேட்பாளர்களாக நிற்பவர்கள் யார், கட்சி என்ன என்பதோடு அவர்கள் இதற்குமுன்னால் ஆட்சியில் இருந்திருந்தால் சாதித்ததென்ன, சம்பாதித்தது என்ன என்பதை கொஞ்சம் மதிப்பீடு செய்யவேண்டும். எதிர்த்து நிற்பவர் யார், அவருடைய கட்சி இவைகளைப் பற்றியும் மதிப்பீடு செய்யவேண்டும்.
ஒருவிரல் புரட்சி என்பது ஒருநாள் கூத்துடன் முடிவடைகிற கூத்து அல்ல! தவறானவர்கள் கையில் ஆட்சியைக் கொடுத்தால் அடுத்த ஐந்தாண்டுகளுக்கு நம்முடைய தலையை அவர்களிடம் ஒப்புக் கொடுத்துவிடுவதற்குச் சமம்.
//பரிசுப் பெட்டியாம்! // - அதனால் என்ன... கொடுக்க நினைத்ததை பரிசுப் பெட்டியில் வைத்துக் கொடுத்துவிட்டால் போகிறது. குக்கர் வாங்கியது வீணாகாதல்லவா?
ReplyDeleteபரிசுப்பெட்டி பரபரப்பில் Selfie நாயகனை மறந்துவிட்டீர்களே! :)))
Delete//கமல் கட்சிக்கு வந்த சோதனை// - விட்டதடி ஆசை வீளாம்பழத்து ஓட்டோடு
ReplyDeleteஇந்து செய்தித்தலைப்பு effect?? கட்சி வளர்ந்தபின்னால் இதுமாதிரிச் செய்ய தேர்தல் ஆணையத்துக்கு முதுகெலும்பு இருக்குமா?
Deleteசெல்ஃபி - ஏற்பாடு செய்யப்பட்டது என்றுதான் நான் நினைக்கிறேன். அழகிரி வாக்குகளைப் பிரிக்கக்கூடாது என்பதற்காகவும்.
ReplyDeleteசெய்திகளை செட்டப் செய்வதில் திமுகவினர் கில்லாடிகள்! ஆனால் அண்ணாத்தே முக அழகிரி இவர்களுக்கே தண்ணி காட்டுவதில் செம கில்லாடி! :)))))
Delete