தேர்தல் நேரம்! நம்மைச் சுற்றிவரும் செய்திகள்!

விண்வெளியில் செயற்கைக்கோள்களைத் தாக்கி அழிக்கும் புதிய தொழில்நுட்பத்தை இந்தியா இன்று வெற்றிகரமாகப் பரிசோதனை செய்தது. இதுகுறித்து நாட்டு மக்களிடையே தொலைக்காட்சி வாயிலாக உரையாற்றிய பிரதமர் மோடி, `விண்ணில் செயற்கைக்கோள்களைச் சுட்டுவீழ்த்தும் `மிஷன் சக்தி’ சோதனையை வெற்றிகரமாக இந்தியா நிகழ்த்தியுள்ளது. இதன்மூலம் அமெரிக்க, ரஷ்யா, சீனாவுக்கு அடுத்தபடியாக விண்வெளியில் இந்தியா சாதனை படைத்துள்ளது. இந்தச் சோதனை, இந்தியாவின் செயற்கைக்கோள்களைப் பாதுகாக்கும் முயற்சிதானே தவிர, பிற நாடுகளுக்கு எதிரான சோதனை அல்ல. இதன்மூலம், செயற்கைக்கோளை துல்லியமாகத் தாக்கும் சக்தியை இந்தியா பெற்றுவிட்டது’ என்று பெருமிதப்பட்டதை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நாடகம் என்று குறை சொல்லியிருக்கின்றன. 




காங்கிரஸ் ஒருபடி மேலேயே போய் அவர்கள் ஆண்டகாலத்திலேயே இதற்கான வலிமை இருந்ததாக சந்தடிசாக்கில் இந்தப் பெருமிதத்தில் பங்குபோட்டுக்கொள்ள முயற்சியும் செய்தது. ஆனால் ISRO வின் முன்னாள் தலைவர் மாதவன் நாயரும் DRDO வின் சரஸ்வத்தும் காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் வெறுமனே காகிதத்தில் புலி என்று எழுதி வைத்திருந்த மாதிரி, அரசியல் முதுகெலும்பு இல்லாமலிருந்ததைப் போட்டுடைத்து விட்டார்கள்! 


“எதிர்கட்சியினருக்கு பிரதமர் மோடி பற்றி எந்த செய்தி வந்தாலும் பயம்!” - கே.டி.ராகவன், (பாஜக) என்று தலைப்பிட்டு வைகுண்டராஜன் சேனலின் இன்றைய செய்தி விவாதம் சொல்கிறது. ஒரு முக்கியமான செய்தியைக் குறித்து பிரதமர் பேசவிருக்கிறார் என்ற ஒரு அறிவிப்பே எதிர்க்கட்சிகளின் வயிற்றில் புளியைக் கரைத்தது. பதுங்குகுழிக்குப்போவேனா பேங்குக்குப் போவேனா என்ற பயம்! அக்ஷய் சந்தருடைய கார்டூன் சிரிக்கச் சிரிக்கச் சொல்கிறது!
    

K T ராகவன் சொன்னதில் என்ன தவறு? எதையெல்லாம் கேள்வி கேட்பது என்கிற வரையறையே இல்லாமல் ஊடகங்கள் குதிப்பது மிகவும் விசித்திரமாக இருக்கிறது. கொஞ்சம் கவனத்தில் எடுத்துக்கொள்ளவேண்டிய காணொளி! 


சென்ற சனிக்கிழமை வடபழனி சிம்ஸ் ஆடிட்டோரியத்தில் ரங்கராஜ் பாண்டே நடுவராக இருந்து நடத்திய விவாதத்தின் காணொளி வேந்தர் டிவியில் ஒளிபரப்பப் பட்டதாகச் சொன்னார்கள். அதில் ஒரு சிறுபகுதி இன்று behindwoods தளத்தில் கிடைத்தது. 


எந்தநாட்களிலோ வலைப்பதிவராக மட்டும் தெரிந்த ஜாக்கி சேகர்  மய்யம் புகழ் CK குமரவேல் உட்பட  நிறையப்பேர் இரு அணிகளாகப் பிரிந்து விவாதித்ததன் முழுத்தொகுப்பையும் பார்க்க ஆவலை இந்த வீடியோ தூண்டியிருக்கிறது.  


நையாண்டி சற்றே தூக்கலாக!      

மீண்டும் சந்திப்போம்!

No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!