அடங்க மறுத்து அத்து மீறிய பா.ரஞ்சித்... திடீரென தேடி வந்தார் திருமாவளவனை...இப்படி செய்தி போடுகிற அளவுக்கு முக்கியமான செய்திதானா இது? தேர்தல் அலப்பறைகளில் இதுவும் ஒன்று!
அதற்குமேல் வேறென்ன?
CK குமரவேல் மய்யத்தை விட்டு வெளியேறிய பிறகும், விவகாரத்தை ஊதிக் கொண்டே இருப்பதன் பின்னணியில் யாரோ இருக்கிறார்கள் என்பதைத் தெளிவாக்கிக் கொண்டிருக்கிறதோ? ஒரு வருடம் கழிந்தபிறகு திடீர் ஞானோதயம் வந்திருப்பது, அதுவும் தேர்தல் நேரமாகப் பார்த்து என்பது அவருடைய நம்பகத்தன்மையை நிறையவே குறைத்திருக்கிறது.
மய்யத்தின் ஓனர் விஜய் டிவி என்றால் குமரவேலுடைய ஓனர் கலீஞர் டிவியா?
தேர்தல் ஆணையம் செயல்படுகிற விதத்தை இதைவிட அழகாகப் படம்பிடித்துக் காட்ட முடியாது!
பெரியார் ஈயம் பகுத்தறிவு இதற்கெல்லாம் நாளுக்கு நாள் புதுப்புது அர்த்தங்கள் கண்டுபிடிக்கிறார்கள்!
சென்னை பெரம்பூர் தொகுதி இடைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்து நேர் காணலுக்கும் சென்ற மறைந்த முன்னாள் அமைச்சர் என்.வி.என் சோமுவின் மகள் டாக்டர் கனிமொழிக்கு வாய்ப்பு அளிக்கப்படாததால், நேராக ஸ்டாலின் அறைக்குச் சென்று இனிமேல் இந்த அறிவாலய வாசல்படி மிதிக்க மாட்டேன் என கோபமாக கூறிவிட்டு சென்றதால் அக்கட்சித் தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
Karthikeyan TheRebel 59 நிமிடங்கள்
இப்படித்தான் தொடங்கியது திமுக உதயநிதி ரசிகர்களின் வாதம்.
'அரசியல் படுகொலைகள்தான் பிரச்சினையா? '
'கட்சிக்காரன் பிரியாணி கடை, பியூட்டி பார்லர்னு போய் தகராறு பண்ணதுதான் பிரச்சினையா?'
'வாரிசு அரசியல்தான் பிரச்சினையா? '
'சாதிக் கட்சியோட கூட்டணி வைக்கிறதுதான் பிரச்சினையா? '
'நில ஆக்கிரமிப்பு, மாவட்ட செயலாளர்கள் அராஜகம்தான் பிரச்சினையா? '
'காங்கிரஸ் ரெய்டு விட்டதுக்காக மாநில சுயாட்சிய விட்டுக் கொடுத்ததுதான் பிரச்சினையா? '
'பாஜகவோட கூட்டணி வைச்சதுதான் பிரச்சினையா? '
'ஸ்டெர்லைட் விரிவாக்க, மீத்தேன் திட்டங்களுக்கு ஒப்புதல் கொடுத்ததுதான் பிரச்சினையா?'
என்று தொடர்ந்து 'மோடி திரும்ப ஆட்சிக்கு வராம இருக்க நாங்க மட்டுந்தான் வழி. ப்ளீஸ் திமுக டேமேஜ் பண்ணாதீங்க', என்று முடிகிறது உபிகளின் கொள்கை வாதங்கள்.
- ஒரு நல்ல நண்பரின் பதிவை பகிர்கிறேன்.
ஆக, தங்களுடைய பலவீனம் என்னவென்று உதயநிதி ரசிகர்களுக்கே தெரிந்திருக்கும் போது, நமக்கு என்ன செய்யவேண்டுமென்று தெரியாதா?
மீண்டும் சந்திப்போம்!
இப்படித்தான் தொடங்கியது திமுக உதயநிதி ரசிகர்களின் வாதம்.
'அரசியல் படுகொலைகள்தான் பிரச்சினையா? '
'கட்சிக்காரன் பிரியாணி கடை, பியூட்டி பார்லர்னு போய் தகராறு பண்ணதுதான் பிரச்சினையா?'
'வாரிசு அரசியல்தான் பிரச்சினையா? '
'சாதிக் கட்சியோட கூட்டணி வைக்கிறதுதான் பிரச்சினையா? '
'நில ஆக்கிரமிப்பு, மாவட்ட செயலாளர்கள் அராஜகம்தான் பிரச்சினையா? '
'காங்கிரஸ் ரெய்டு விட்டதுக்காக மாநில சுயாட்சிய விட்டுக் கொடுத்ததுதான் பிரச்சினையா? '
'பாஜகவோட கூட்டணி வைச்சதுதான் பிரச்சினையா? '
'ஸ்டெர்லைட் விரிவாக்க, மீத்தேன் திட்டங்களுக்கு ஒப்புதல் கொடுத்ததுதான் பிரச்சினையா?'
என்று தொடர்ந்து 'மோடி திரும்ப ஆட்சிக்கு வராம இருக்க நாங்க மட்டுந்தான் வழி. ப்ளீஸ் திமுக டேமேஜ் பண்ணாதீங்க', என்று முடிகிறது உபிகளின் கொள்கை வாதங்கள்.
- ஒரு நல்ல நண்பரின் பதிவை பகிர்கிறேன்.
குமரவேலின் பேட்டியை எடுப்பவர், நல்லா பண்ணத்தெரியலை. அவர் 'காஸிப்' பேட்டிகளுக்குத்தான் லாயக்கு. நேரத்தை வீணடித்த பேட்டி. இந்தப் பேட்டி எடுப்பவர், கொஞ்சம் புத்திசாலித்தனமா கேள்வி கேட்பவராகவோ அல்லது சேனலுக்குப் பெருமை சேர்ப்பவராகவோ இருந்தால்தான் பேட்டி நல்லா இருக்கும்.
ReplyDeleteநெல்லைத்தமிழன்! பேட்டியை நன்றாகக்கவனித்தீர்களா?
DeleteLead questions என்று குமரவேலுக்கு க்ளூ கொடுத்துக் கேள்விகள் கேட்டும், அதுபுரியாமல் குமரவேல் ட்யூப் லைட்டாக இருந்ததில் பேட்டி எடுத்தவர் குற்றமென்ன சொல்லுங்களேன்! பேட்டி எடுத்தவர் கமல் மீது குறைநேரடியாக சொல்ல ஏதாவது கிடைக்குமா என்று தவித்ததும், குமரவேல் கமல் மீது தவறில்லை எல்லாம் மற்றவர்கள்தான் (மகேந்திரமயம்) என்றே பம்மிக் கொண்டிருந்ததில் பேட்டியை வளர்க்காமல் முடித்தாரே, அது ஒன்றே சாட்சி! எல்லோரும் பாண்டே ஆகிவிட முடியாது, இல்லையா? :)))
அதை நான் Lead Questionsஎன்று பார்க்கலை. பேட்டி எடுப்பவர், தான் நினைப்பதை குமரவேல் சொல்லணும்னு எதிர்பார்த்தமாதிரிதான் எனக்குத் தோன்றியது. அப்போ, உண்மையை வரவழைப்பதைவிட, ஒரு சார்பா பேட்டிகாண்பவரைப் பேசச் செய்யும் மலிவான தந்திரம் மாதிரி நான் உணர்ந்தேன். என்னவோ.... என் நேரம் வீணானதுதான் மிச்சம்.
DeleteWas also surprised that Kumaravel didn't criticize Kamal too much.
Leading questions என்பதே தான் எதிர்பார்க்கிற தகவலை ஒரு சின்ன க்ளூ மாதிரிக் கொடுத்து வரவழைப்பதுதானே! :))) குமரவேல் சரியான ட்யூப் லைட்!
Delete