கூட்டணி முடிவுகள்! மாறும் கணக்குகள்!


விங் கமாண்டர் அபிநந்தன் தாயகம் திரும்பி வந்து  கொண்டிருக்கிறார். வாழ்த்துவோம்!

பிரதமர் நரேந்திர மோடி அபிநந்தன் பற்றி எதுவுமே சொல்லவில்லையே என்று குறைப்பட்டுக் கொள்கிற அரைகுறைகளுக்காக, சொல்லவேண்டிய நேரத்தில் சொல்லிவிட்டார்!


த.நாவில் கூட்டணிகள் ஒருவழியாக முடிவாகி தேர்தல் களம் இறுதிக்கட்டத்துக்குத் தயாராகிக் கொண்டு வருகிறது. அங்கும் இங்கும் ஊசலாடிக் கொண்டிருந்த
தேதிமுக கூட இன்றைக்கு அதிமுக கூட்டணிக்கு வந்து விட்டதாக, 5 ப்ளஸ் 1 (ராஜ்யசபா)  என்று செய்திகள் சொல்கின்றன.

தே.மு.தி.க.வுக்கு ஓட்டு கேட்க ரெடி… அன்புமணி அதிரடி…
எங்கள் கூட்டணிக்கு தே.மு.தி.க. வந்தால் நாங்கள் ஆதரிப்போம் என்று அன்புமணி ராமதாஸ் கூறினார்.சேலம் விமான நிலையத்தில் பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில் வருமாறு:

கேள்வி: நாடாளுமன்ற தேர்தலில் நீங்கள் போட்டியிடுவீர்களா?
பதில்: முதலில் எந்தெந்த தொகுதி பா.ம.க.வுக்கு ஒதுக்கப்படுகிறது என்று பார்ப்போம் பிறகு இதுபற்றி முடிவு செய்வோம்.
கே: அதிமுக கட்சியில் வேறு கட்சிகள் கூட்டணி அமைக்க வாய்ப்பு உள்ளதா?
ப: வாய்ப்புகள் உள்ளன. இதுதொடர்பாக அ.தி.மு.க. பேசி வருகிறது.
கே: அதிமுக கூட்டணியில் தே.மு.தி.க. வந்தால் அவர்களுடன் இணைந்து பணியாற்றுவீர்களா?
ப: அதில் எங்களுக்கு எந்தவித ஆட்சேபனையும் கிடையாது. தமிழக நலனை கருத்தில் கொண்டு எங்கள் கூட்டணிக்கு வரும் கட்சியை ஆதரிப்போம் என்றார்.
மேலும் அவர் கூறுகையில், வருகிற 6ம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வருகிறார். அவர் கலந்துகொள்ளும் கூட்டத்தில் நானும் எங்கள் நிறுவனர் மற்றும் முக்கிய தலைவர்கள் கலந்துகொள்கிறார்கள். 40 தொகுதிகளிலும் நாங்கள் வெற்றிபெறுவோம். எதிர்க்கட்சிகள் பரப்பும் அவதூறுகளை எதிர்கொள்வோம் என்றார்.

ஒருவிரல் புரட்சி பட நாயகன் பற்றி எந்த செய்தியும் இல்லையா என்ன?! இருக்கிறது! 

   
அணில்களுக்கு நாடாளும் ஆசை இருப்பது தெரிந்த கதைதான்! அடுத்தவீடு ஆந்திராவில், சினிமாவை வைத்து அரசியல் இனிவரும் நாட்களில் எடுபடாது என்பதை வரிசையாக மூன்று படங்கள், யாத்ரா, NTR கதாநாயகுடு, NTR மகாநாயகுடு ஊற்றிக் கொண்டதில் பாடம் எதையும் நம்மூர் சினிமா நட்சத்திரங்கள் எவரும் பாடம் கற்றுக்கொண்டதாகவோ, கற்றுக்கொள்ளப் போவதாகவோ தெரியவில்லை! #தமிழேண்டா 

  

No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!