சண்டேன்னா மூணு! அமுல்! அபிநந்தன்!அரசியல்!

அமுல் விளம்பரங்கள் கொஞ்சம் வித்தியாசமாக, அந்த அந்த நேரத்து  நடப்பு, தலைப்புச் செய்திகளை வைத்து வருவது தெரிந்த விஷயம் தான்! இந்த நேரத்தின் தலைப்புச் செய்தியான அபிநந்தனை விடுவார்களா என்ன? !!

மூச் நஹீன் தோ குச் நஹீன்! என்ற முத்தாய்ப்போடு முடிகிற இந்த விளம்பரம் அபிநந்தனுடைய மீசை வித்தியாசமாக இருப்பதை வைத்து இப்படி!
அமுல் விளம்பரம் இப்படி ரசிக்கிற மாதிரி என்றால்,  தமிழ் தொலைக்காட்சி செய்திகளில் மிக விகாரமான வடிவங்களில்! சிறைப்பிடிக்கப்பட்ட பைலட் என்பதால் இனி போர்விமானங்களை இயக்க முடியாது, blah blah! இது விமானப்படை முடிவு செய்ய வேண்டிய விஷயம்! ஊடகங்கள் விவாதிப்பதற்கானதல்ல! இப்படி வரைமுறை மீறும் ஊடகங்கள் கட்டாயம் தண்டிக்கப்பட வேண்டியவையே! 
ஊடகங்களுடைய மோடி வெறுப்பு திசை மாறி, தேச விரோதம் என்ற புள்ளிக்குப் போய்ச் சேருவதை, மோடி சொன்னால் ஒத்துக்கொள்ள வேண்டாம், கார்ட்டூன் சொன்னாலும் கூடவா?
ஊடகச்சாயம் வெளுத்துப்போச்சு டும் டும் டும்! மோடி எதிர்ப்பு புரிஞ்சு போச்சு டும் டும் டும்! என்றெல்லாம் கொட்டி முழக்கவேண்டியதே இல்லை! தட்டி வைக்க வேண்டிய நேரம் இது!

The offer of plebiscite in Jammu and Kashmir had been made under very different conditions, which has entirely changed since then, making it no longer relevant என்று சென்னையில் நேற்று பத்திரிகையாளர்களிடம் ப சிதம்பரம் பேசியதாக ஒரு செய்தி! பானாசீனா இதைக் கமல் காசருக்கல்லவா கூப்பிட்டுச் சொல்லி இருக்க வேண்டும்? பாகிஸ்தானுடன் பேசவேண்டுமாம்? எப்படி? 

2008 நவம்பரில் பாகிஸ்தான் தீவீரவாதிகள் கடல் வழியாக வந்து மும்பை மீது தாக்குதல் நடத்திய போது கையது கொண்டு மெய்யது பொத்தி பேசாமல் இருந்தார்களே!  சத்ரபதி சிவாஜி டெர்மினலில் ஆயுதத்துடன் அப்பாவி ஜனங்களைக் கொலை செய்த கசாபுக்கு வருடக்கணக்கில் பிரியாணி ஊட்டிப் பாதுகாத்தார்களே,  அதுமாதிரியா? 

மாயவரத்தான் கி ரமேஷ் குமார் இணையதள திமுக செயல்வீரர்களைப் பற்றி முகநூலில் இப்படி ஒரு படம் பகிர்ந்திருக்கிறார்!
அதற்குப் பதிலாக இசுடாலினே மறந்துபோன, நேற்றைய செய்தியே இன்றைய வரலாறும் ஆகும் என ஒருவர் இன்னொரு படத்தைப் பதிலாகப் போட்டு நினைவு படுத்தியிருக்கிறார்! 
இடையில் ஒரு புகுந்து எப்படி அனர்த்தமாக்கி விட்டது? இப்போதோ மநகூ  ஆசாமிகள் அப்படியே இசுடாலின் கூட்டணிக்குள்! என்னாகுமோ?

தேர்தல் நேரம் என்றால் இங்கே காமெடி டைம் தானே! enjoy!!

                 

No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!