குடும்ப வாரிசா? கொள்கை வாரிசா? இதென்ன கலாட்டா?

முரசொலியில் வாரிசுகளுக்கு சீட் கொடுத்திருப்பதை நியாயப்படுத்தி ஒரு கட்டுரை சிலந்தி என்ற பெயரில் வந்திருக்கிறது. அதன் பின்னணியை மின்னம்பலம் தள வீடியோ இப்படிச் சொல்கிறது. ஸ்டாலினுக்கு கனிமொழி கடிதம் என்ற தலைப்போடு! ஸ்பெக்ட்ரம் ஊழல் கனிமொழி இல்லை! இது வேறு கனிமொழி!
 
அதிகம் கேள்வி எழுப்பினால் அழகிரி மகனுக்கு சீட் கொடுத்தோமா? தமிழரசு மகனுக்கு சீட் கொடுத்தோமா என்றெல்லாம் கூட சப்பைக்கட்டுக் கட்டி எழுதமுடியாதா என்ன? குடும்ப வாரிசுகள் மட்டும் அல்லவாம்! கொள்கை வாரிசுகளாம்! அதனால் தான் சீட்டாம்! தயாநிதி மாறன் எந்தக் கொள்கைக்கு வாரிசாம்? யாருக்காவது பதில் தெரியுமா?   
தினசரி தள ஓனர் Senkottai Sriram 21 மார்ச், 2014 அன்று முகநூலில்:

எத்தன தேர்தலு வந்தாலும், மதி கார்ட்டூனை ஸ்டாக் வெச்சிருந்து அப்பப்ப அவுத்து விடலாம்... இப்டி.!  என்று சொன்னது இப்போதும் பொருந்துகிறதே! 

பேசாப்பொருளை பேசத்துணிந்தேன் என்பது கொஞ்சம் வித்தியாசமான வாக்கியம். அதையே விவாதத் தலைப்பாக வைத்து இங்கே ஒரு தேர்தல் நேர அரசியல் விவாதம்.  

ராகுல் காண்டி மற்றும்  பிரியங்கா வாத்ராவுக்கு  தலைவர்களை மதிப்பதில் எத்தனை அலட்சியம் என்பது தொடர்ந்து வெளிப்பட்டுக் கொண்டே வருகிறது. தனக்கு அணிவிக்கப்பட்ட மாலையைக் கழற்றி லால் பகதூர் சாஸ்திரி சிலைக்கு அணிவித்த அசிங்கம் ட்வீட்டரில் வீடியோவாக 
How can any son or daughter of India, other than those born in Nehru-Gandhi family, be worthy of independent respect ? displaying all the traits of Gandhi family - the disdain they have for everyone else. || Mrs. Vadra using a discarded garland for PM Shastriji.

0:39
67.4K views
7:28 PM - 20 Mar 2019   
இங்கே  சொடுக்கி ட்வீட்டர் தளத்தில் வீடியோவைப் பாருங்கள்!


சாணக்யா தளத்தைத் தொடங்கியவுடன் ரங்கராஜ் பாண்டே விறுவிறுப்பாகச் செயல்படத்தொடங்கி விட்டார்.  சென்னை வடபழனி SIMS ஆடிட்டோரியத்தில் வருகிற சனிக்கிழமை (23/3/19) பிற்பகல் 3.45 மணிக்கு ஒரு சுவாரசியமான தலைப்பில் விவாதம். வாய்ப்புள்ளவர்கள்  பயன்படுத்திக்கொள்ளுங்கள். 

நீரவ் மோடி லண்டனில் கைது செய்யப்பட்டு ஜாமீனும் மறுக்கப்பட்டதில் காங்கிரஸ்கட்சிக்கு ஏகப்பட்ட வருத்தம்! ஏமாற்றம்! இப்போது மாற்றிப்பேச ஆரம்பம்!   




கடனை திருப்பி செலுத்தாமல் வெளிநாட்டிற்கு தப்பி சென்ற வைர வியாபாரி நிரவ் மோடி..லண்டனில் கைது செய்யப்பட்டிருக்கிறார். காவல் மார்ச் 29 வரை நீடிக்கிறது.
மல்லையா வை இந்தியாவிற்கு திருப்பி அனுப்பும் நடவடிக்கைகள் தொடங்கிவிட்டதை போல..நீரவ் மோடியும் இந்தியாவிற்கு திருப்பி அனுப்பப் பட இருக்கிறார்.
இது telegraph-க்கு கிடைத்த வெற்றி அல்ல  
இது.. மோடி அரசுக்கு மட்டுமே கிடைத்த வெற்றி!
UPA ஆட்சியில் ..பெரு முதலாளிகளுக்கு கோடிக்கணக்கில் அள்ளி அள்ளி கடனை கொடுத்துவிட்டு..வாராக் கடன்களாகி ..பொதுத்துறை வங்கிகள் திவாலாகும் நிலைக்கு செல்லும்வரை கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாக நிர்வாகத்தையும், அரசியலையும் செய்துவிட்டு..
மோடி அரசு வந்த பிறகு..வாராக்கடன்களை வசூலிக்கவில்லை. வெளிநாட்டிற்கு தப்பிவிட்டனர் என்றெல்லாம் அரசியல் செய்துகொண்டிருந்த எதிர் கூட்டணியின் மல்லையா , நிரவ் மோடி பேச்சுகளும்..காற்றில் பறக்கவிடப் பட்ட வெற்று கருப்பு பலூன்களாக ஆகி விட்டிருக்கின்றன 
இனி..மல்லையா என்றோ நீரவ் மோடி என்கிற பேச்சுகளோ கமுக்கமாக மறைக்கப் பட்டு..'மதசார்பற்ற' என்று கிளம்பிவிடுவார்கள்.
அக் கட்சிகளின் பிரத்தியேக பொருளாதார மேதைகள் ..நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறித்து ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள்.

மீண்டும் சந்திப்போம்!     

5 comments:

  1. வாரிசுகளுக்கு ஸீட் கொடுப்பதை சப்பைக்கட்டு கட்டுவதில் திமுக அதிமுக இரண்டும் ஒற்றுமை. அந்தப்பக்கம் ஓபிஎஸ் இந்தக் கடமையை ஆற்றி இருக்கிறார்!

    ப்ரியங்கா காணொளி வேலை செய்யவில்லை.

    ReplyDelete
    Replies
    1. கம்யூனிஸ்ட் கட்சியில் கூட முன்னணித் தலைவர்களுடைய வாரிசுகள் முதன்மைப்படுத்தப்படுவதுண்டு. ஆனால் காங்கிரஸ், கழகங்களில் இருப்பது போல ராஜாவுக்கு மகன் ராஜ்ஜியத்துக்கு (சொத்துக்கு ) நேர்வாரிசு என்ற கணக்கில் அல்ல.

      இங்கே சொடுக்கி என்ற வார்த்தையைக் க்ளிக் செய்து நேரடியாக ட்வீட்டரில் பார்க்கலாம் ஸ்ரீராம்!

      Delete
  2. திமுக என்விநடராசன் கனிமொழி - இந்த முறை துரைமுருகன் மகனுக்கு சீட் கொடுத்தபிறகு, திமுகவிடம் நிதி கேட்டாராம் துரைமுருகன். ஸ்டாலின் மறுத்துவிட்டாராம். துரைமுருகன் அந்த வருத்தத்தில் இருந்தபோது அவரது நண்பர்கள், இந்த வருத்தத்தை தொடர்வதால் ஒன்றும் ஆகப்போவதில்லை, தலைமையை அனுசரித்து நடந்துகொள்ளுங்கள் என்றார்களாம். இந்தக் கனிமொழிக்கும் அதே பதில்தான்.

    க்ளோசப்பில் இந்தக் கனிமொழி அழகாக இருக்கிறாரா என்று பார்த்தேன். தமிழச்சி அளவுக்கு அழகில்லை. அதனால் சீட் கொடுக்கவில்லை போலிருக்கு (உடனே என்னைச் சந்தேகப்படாதீர்கள். உதயநிதி, 'தமிழச்சி தங்கபாண்டியனை' ஆதரித்து நேற்று பேசியபோது, அழகான வேட்பாளரைத் தந்துள்ளோம். அழகான பிரதிநிதியை வெற்றிபெறச் செய்யுங்கள்" என்று வழிந்தாராம்.)

    ReplyDelete
    Replies
    1. சுவாசிக்கப்போறேங்க தளத்தில் நேற்று வீடியோவாகவே உதயநிதியின் பேச்சைப் பகிர்ந்திருந்தேனே!

      Delete
  3. இந்த கனிமொழி விசயம் இப்போது தான் தெரிந்து கொண்டேன். நன்றி.

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!