இட்லி வடை பொங்கல்! #15 சனிக்கிழமை ஸ்பெஷல்

பாகிஸ்தான் தனது குள்ளநரித்தன வேலைகளோடு ஒரு வழியாக விங் கமாண்டர் அபிநந்தனை இந்தியாவிடம் ஒப்படைத்துவிட்டது. ஒருபக்கம் நேற்று மாலைமுதலே காஷ்மீர் எல்லைப்பகுதிகளில் பலத்த பீரங்கித் தாக்குதல், அபிநந்தனை வைத்து பிரசார வீடியோ ஒன்றைத் தயாரிக்க முயற்சி இப்படி சவடால் வைத்தி கேரக்டருக்கெல்லாம் நோபல் பரிசு உண்டென்றால், தயங்காமல் அதை இம்ரான் கானுக்குக் கொடுத்து விடலாம்!

பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அபிநந்தனை வாழ்த்தியிருக்கிறார். அவருடன் சேர்ந்து நாமும் அபிநந்தனுக்கு சல்யூட்  செய்வோம்!

ஒருபக்கம் பாகிஸ்தானிய அரசும் ஊடகங்களும் ஒரு மாதிரியான திருகல்வேலையைச் செய்து கொண்டு இருந்த அதே நேரத்தில் இங்கே சளைக்காமல் Paid Media வும் காங்கிரஸ், கழக அபிமானிகளும் அதே திருகல் வேலையை வெட்கமில்லாமல் செய்வதை என்னவென்று சொல்வது?தாங்கள் செய்த தவறு அம்பலமாகிவிட்டதால் உடனடியாக அந்த வீடியோக்களை சமூக வலைத்தங்களில் இருந்து பாகிஸ்தான் அகற்றிவிட்டது. அங்குள்ள மூத்த பத்திரிக்கையாளர்களும் அகற்றிவிட்டனர் என்கிறது ஒன் இந்தியா தமிழ்! ஆனால் இங்கே காசுக்குக் கூவுகிறவர்கள் இன்னமும் திருந்தியபாடில்லை 

இவர்களை அறிவுஜீவிகள் என்று சொன்னால் எத்தால் சிரிப்பது? மாயவரத்தான் கி ரமேஷ்குமார் 10 மணி நேரம்
//இத்தனை செல்வாக்குடைய அறிஞர் அண்ணா அன்றைய காலகட்டத்தில் "நமது ஆட்கள் நமது இன எதிரிகளில் ஒருவரைக் கொல்லுங்கள்" என்று ஒரே ஒரு வார்த்தை பேசி இருந்தால் என்னாகி இருந்திருக்கும்? ஒரே ஒரு நிமிடத்தில் எல்லாம் முடிந்து இருக்கும்! அனைவரும் இறந்த பிறகு இந்திய ராணுவமோ அல்லது மத்திய படையோ வந்து இருக்கும். But no use...
- எம்.எம். அப்துல்லா //
ஏதோ திமுகக்காரங்க புண்ணியத்திலேதான் எல்லாரும் உசிரோட திரிஞ்சுக்கிட்டிருக்கீங்க சாக்கிரதை. 😂😂  


கழகக்கண்மணிகள் காமெடியெல்லாம் ஒரேமாதிரி ஸ்டீரியோ டைப்! எதிர்க்கேள்வி கேட்டால் ஹிஸ்டீரியா டைப்  ஆகிவிடும்! அதனால் அந்தநாளைய ஆனந்த விகடனில் ஸ்ரீதர் கார்ட்டூனில்!   
அடைந்தால் திராவிடநாடு இல்லையேல் இடுகாடு என்று வீரவசனம் பேசிய அண்ணாதுரை, பிரிவினை பேசினால் சிறையில் போடுவேன் என்ற நேரு.. முடிந்தது இப்படித்தானாம்!     
அப்படியே திராவிடம் வளர்ந்து ஈழம் வரை பரந்து விரிந்த திராவிடமாயையை துக்ளக் அட்டைப்பட நையாண்டி சொன்னதுமாதிரி வருமா?


அது போகட்டும், வாங்க! கமல் காசர் காமெடியையும் பாத்துடலாம்!


அரசியல் பேசினதைக் கூடப் பொறுத்துக் கொண்டு விடலாம்! இந்த ஆசாமி அத்வைதம், centrism எல்லாம் பேசுகிற  கொடுமையை என்னவென்று சொல்வது?

நீங்கள் தான் சொல்லவேண்டும்! எப்படியென்று மறுபடி தனியாகச் சொல்லவும் வேண்டுமா?


                

10 comments:

 1. கமலிடம் கேட்கப்பட்ட கேள்விகளையாவது ரசியுங்களேன், சார்.

  மகாபாரத யுத்தத்தில் மய்யம் என்பதனை எப்படிக் கண்டுகொள்வது?
  துரியோதனுக்கும் தருமருக்கும் இடையே மய்யமாக இருப்பேன். இருவருக்கும் இடையில் வலது கை தருமரின் தோளில் போட்டும் இடது கை துரியோதனின் தோளில் போட்டும் இடையில் நான் இருப்பேன்.

  இடைத்தரகராகவா?-- என்று அபத்தமான கேள்வி வந்த பொழுதும் கமல் அதற்கேற்பவான பதிலில் சமாளிக்கிறார்.

  கமலிடம் எப்பொழுதும் ரெடிமேட் பதில் கிடையாது. கேள்விகளுகளே அவரை வழிநடத்துகின்றன. எனக்கென்னவோ இப்படிப்பட்டவர்களும்
  இரண்டுபக்க இழுப்புக்கும் இடையே எந்த பக்கமும் சாராமல் மய்யமாக இருந்து தனது தனித்துவத்தை நிலைநாட்டினால் இந்த நேரத்துக்கு நல்லதே.

  ReplyDelete
  Replies
  1. பிரபலங்களிடம் கேள்வி கேட்பது ஒரு இளம்பருவக் கோளாறு என்றுதான் நினைக்கிறேன் ஜீவி சார்! கேள்வி கேட்ட அந்த நபரைக் கேள்விகள் கேட்டுப் பாருங்கள்! அப்போது புரியும்!

   //கமலிடம் எப்பொழுதும் ரெடிமேட் பதில் கிடையாது//

   இதை எப்படி எடுத்துக் கொள்வது ஜீவி சார்? ஸ்திரபுத்தி இல்லாத ஒரு நபர் கூட அப்படித்தான் அந்தந்த நேரத்துக்கு தகுந்தமாதிரி எதையாவது சொல்லி சமாளிப்பார்!

   Delete
  2. எப்படி எடுத்துக் கொள்றதுன்னு சொல்றேன்.

   யுத்த வியூகங்களுக்கு ஸ்திரபுத்தி கூடாது. எதிரியின் திட்டங்களுக்கு ஏற்ப வியூகங்கள் அப்பப்ப மாறும்.

   துரியோதனன் சேர அதிக வாய்ப்புள்ளவர்கள் 'மய்ய' நிலை எடுப்பது வரவேற்க்கூடியதே.

   தர்மரும் சரி, துரியோதனும் சரி, இரண்டு பக்கமும் எனக்கு ஏற்புடையதே; யார் பக்கம் வேண்டுமானாலும் என் இஷ்டப்படி நின்று யுத்த களத்தைச் சந்திப்பேன் என்று சொல்கிறவர்களுக்கு 'மய்ய' நிலைபாடுகள் எவ்வளவோ மேல்.

   Delete
  3. ஜீவி சார்! நான் நட்டநடு சென்டர் இல்லை! தமிழ் வலைப்பதிவுலகில் இந்த வார்த்தை மிகப் பிரபலமான வசவு அந்தநாட்களில் என்பதற்காக பயந்து இதைச் சொல்லவில்லை. ஒரு இடதுசாரியாக இருந்தேன் என்ற முன் அனுபவத்தில் இன்று அது எவ்வளவு சீரழிந்திருக்கிறது என்பதை firsthand அனுபவமாகவே சொல்லிவிடலாம்.

   அதற்காக, என்னுடைய அரசியல்நிலைப்பாட்டை பதிவை வாசிக்க வருகிறவர்கள் மீது திணிக்க வேண்டுமா என்ன? நான் எப்படி எல்லாப்பக்கங்களிலும் பார்த்து ஒரு முடிவுக்கு வருகிறேனோ, அதேபோல இங்கே வாசிக்க வரும் நண்பர்களும் இரண்டு பக்கமும் பார்த்து முடிவு செய்வதற்கு உதவியாக, சில குறிப்புகளைத் தருகிறேன்! அவ்வளவே! என்னுடைய குடும்பத்தினர் மீது கூட, இதுநாள்வரை நான் என் கருத்தைத் திணித்ததில்லை

   Delete
 2. இன எதிரின்னு எழுதியிருக்காரே... இவங்களுக்கும் தமிழகத்துக்கும் என்ன சம்பந்தம்? எதுக்குச் சொல்றேன்னா, தமிழக கலாச்சாரத்தைப் பின்பற்றாதவங்க, தமிழர்னு எப்படிச் சொல்லிக்க முடியும்? அண்ணா இறந்தபோது குத்துமதிப்பா அடித்துவிட்ட எண்ணிக்கை அது. அதில் எம்ஜியார் ரசிகர்கள் உண்டு.

  ReplyDelete
  Replies
  1. நெல்லைத்தமிழன்! திராவிடம், திராவிடமாயை என்பதே குன்சாவாக இப்படி அடித்துவிடுவதுதானே!! அதில்போய் லாஜிக் ரீசன் எல்லாம் தேடினால் கிடைக்குமா?

   உங்கள் கேள்விக்குப் பதிலாக மூன்று கார்ட்டூன்களை பதிவில் சேர்த்துவிட்டேன்! சரிதானா? :))))

   Delete
 3. இந்த 'கழக கண்மணிகள்' எல்லோருமே ஒரே ராகம். பொய்யை திரும்ப திரும்ப சொல்லி, ஒன்றுமில்லாததை மிகையாக உயர்த்தி ('அறிஞர்' அண்ணா .. 'ரயில் தண்டவாளத்தில் தலை கொடுத்த தலைவன்'.. ') கடைசியில் அவர்களே அதை நம்பி விடுவது பெரிய பரிதாபம்!

  ReplyDelete
  Replies
  1. கழகக் கண்மணிகள் அப்படியே நம்பிவிடுகிறார்கள் என்று யார் சொன்னது? ஒரு பொய்யைத் திரும்பத்திரும்ப சொன்னால் அதுவே உண்மையாகிவிடுமென்ற கோயபல்ஸ் கூற்றை ஆரம்பகாலத்து உபிக்கள் பிடித்துக் கொண்டார்கள்! இப்போதைய உபிக்கள் உளறுவது வெறும் கிளிப்பேச்சு! There is no conviction in what they are repeating!

   Delete
 4. சிவாஜி கட்சி ஆரம்பித்து தேர்தலில் தோற்று சொத்துக்களை விற்று மிகுந்த மன உளைச்சலுடன் இருந்தார். அப்போது அவர் சொன்ன வார்த்தைகள்.... தமிழனுங்க வச்சு செஞ்சுட்டாங்க. இதே அர்த்தம் தொனிக்கும் வார்த்தைகளில் பேசினாராம். ஆனால் கமல் மகளின் சொத்து ஒரு பக்கம். தான் தெளிவாக கொண்டு போய் சேர்த்ததில் கொஞ்சூண்டு எடுத்து ஆழம் பார்க்கின்றார் என்றே நினைக்கின்றேன். அவர் உள்ளே நினைத்து வந்த எண்ணம் வேறு. நிஜத்தில் நடப்பது வேறு. ஆனாலும் அவர் மாற மாட்டார். அவரின் தனித்த குணாதிசியங்கள் அப்படி. இப்படி செலவளிக்கும் தொகையை தான் பிறகு இராமநாதபுரம் மாவட்டங்களிலும் உருப்படியாக செலவழித்து இருந்தால் கூட அவர் வாழ்நாளுக்குப் பிறகு மக்களால் போற்றப்பட்டு இருப்பார்.

  ReplyDelete
  Replies
  1. சிவாஜி கட்சி ஆரம்பித்த கொடுமையை விட என்தமிழ் என்மக்கள் என்றொரு கொள்கைவிளக்கப்படம் எடுத்தார் பாருங்கள், அங்கே தான் கையைச் சுட்டுக் கொண்டார்! குடும்பமே ஒன்று சேர்ந்து மென்னியை நெறித்து கட்சி நடத்தினதும் போதும் அரசியல் செய்ததும் போதும் என்று நிறுத்தியதாக அந்தநாளைய ஞாபகம்! பாவம் இந்த ஆசாமியை நம்பி மேஜர் சுந்தரராஜன் கேவலப்பட்டது மட்டும்தான் மிச்சம்!

   கமல் காசன் ஊரான் காசில் மஞ்சக்குளிச்சு, படங்களில் நடித்தவர்! தயாரிப்பாளருக்குச் செலவையும் BPயையும் ஏற்றுவதில் வல்லவர் என்று சொல்வார்கள். நல்லது செய்யவா இவர்களெல்லாம் அரசியலுக்கு வருகிறார்கள்? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ஜோதி ஜி?

   Delete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!