ராதாரவி நீக்கம்! திமுக தூய்மையாகிவிட்டதா என்ன?

மனதில் பட்டதைப் பேசுகிறேன் என்ற சாக்கில் வாய்க்கு வந்ததை, டபுள் மீனிங்காகப் பேசுகிற நபர் நடிகர் ராதாரவி என்பது ஊரறிந்த விஷயம். ஒரு  படத்தின் ட்ரெயிலர் அறிமுகவிழா நிகழ்ச்சியில் அவர் வழக்கம் போல நடிகை நயன்தாராவைப் பற்றி வாய்க்குவந்ததைப் பேசப்போக  வினையாக முடிந்திருக்கிறது. கண்டனங்கள் வலுத்த நிலையில் திமுக அவரை அடிப்படை உறுப்பினர் என்பதை சஸ்பெண்ட் செய்து வைத்திருக்கிறது. முதலில் ராதாரவி அப்படி என்ன பேசினார் என்பதைப் பார்த்து விடலாம்.


Finally some action has been taken against .. After being temporarily suspended from ! Now he shud be removed from the post of President, TN Dubbing Union and justice shud prevail...

10:46 AM - 25 Mar 2019

ஸ்டார் பேச்சாளராக கழகப்பணி ஆற்றிவந்த ராதாரவிக்கு, முரசொலியில் இப்படிச் சின்னதாக கட்டம் கட்டி தற்காலிக நீக்கம் செய்து எதிர்மரியாதை செய்திருக்கிறது.
   
ஏற்கெனெவே #MeToo விவகாரத்தில் ராதாரவியுடன் வாய்க்கா வரப்புத்தகராறில் இருந்த பாடகி சின்மயிக்கு ராதாரவியுடனான கணக்கை செட்டில் செய்ய இன்னொரு வாய்ப்பும் கிடைத்து விட்டது! ராதாரவி இதற்கெல்லாம் அசருகிற ஆளா என்ன?

திமுக என்ன தற்காலிகமாக நீக்குவது? நிரந்தரமாக நானே விலகிக்கொள்கிறேன் என்கிறார் ராதாரவி.


இப்போது பதிவின் தலைப்புக்கு வருவோம்! நயன்தாரா பற்றி பேசினால் ரசிகர்களுடைய வாக்குகள் விழாமல் போய்விடுமோ என்ற கவலையில் திமுக ராதாரவியை சஸ்பெண்ட் செய்ததா?  அல்லது கட்டம் கட்டிச் சொன்ன மாதிரி கட்டுப்பாட்டை மீறியும் கழகத்துக்கு அவப்பெயர் ஏற்படுகிறமாதிரியும் செயல்பட்டதாலா?
என்னாது? திமுக பெண்ணுரிமையை முன்னிறுத்துதா?
  
கழகமும் கழகப்பேச்சாளர்களும் ஆபாசப் பேச்சிலேயே ஊறி வளர்ந்தவர்கள், பெண்கள் என்றால் இளப்பமாக, ஆபாசமாக, அவதூறு பேசியே வளர்ந்தவர்கள் என்பது மறந்துவிடக்கூடிய வரலாறா? இந்திரா காண்டி மீது கல்லெறிந்து காயம்பட்டு ரத்தம் வந்ததை, மாதவிலக்கு ரத்தம் என்று பேசிய விதம்  அவ்வளவு எளிதில் மறந்து விடக்கூடியது தானா? யாருக்கையா இந்தப் பழங்கதை எல்லாம் ஞாபகம் இருக்கும் என்று கேட்கிறீர்களா?



இது சமீப காலத்தைய பேச்சுதான், ஒரு சாம்பிளாக!

ராதாரவியைக் கட்டம்கட்டி சஸ்பெண்ட் செய்த ஒரு விஷயத்தினாலேயே திமுக சுத்தமான கட்சி என்றாகி விடாது!

மாதர் தம்மை இழிவு செய்யும் திமுகவைப் புறக்கணிப்பது ஒன்றுதான் சரியான பாடமாக இருக்கும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய தருணம் இது!   
         
     

3 comments:

  1. 1. ராதாரவி அவரது மச்சினனுடன் சேர்ந்து அதிமுக லிங்க் நடப்பதால் ஸ்டாலின் முந்திக்கொண்டு கழட்டிவிட்டார் என்று படிக்கிறேன்.
    2. நயனதாரா, உதயநிதியுடன் ஜோடிபோட்டவர். அதனால் உதயநிதியின் சப்போர்ட் அவருக்கு இருந்திருக்கலாம். (எப்படீல்லாம் யோசிக்கவேண்டியிருக்கு)

    ReplyDelete
    Replies
    1. எப்படிப் படிச்சாலும் திமுக தூய்மையாகிவிட்டதுன்னு மட்டும் சொல்ல முடியலியே! :)))

      Delete
  2. யார் என்ன உயர்த்தினாலும் ராமனைப் பழித்தவர்களுக்கு
    சிம்மாசனம் ஏறத் தகுதி இல்லை.

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!