Showing posts with label வாய்க் கொழுப்பு. Show all posts
Showing posts with label வாய்க் கொழுப்பு. Show all posts

சண்டேன்னா மூணு! ஊழலுக்கெதிரான இந்தியாவும் சால்வை அழகரும்!



சென்னையில் அண்ணா ஹசாரே கூட்டத்துக்குத் திரளாக வந்திருந்த கூட்டம் இது. புகைப்படத்துக்கு நன்றி: ஹிந்து நாளிதழ் 


உறுதியான லோக்பால் அமைப்பு இருக்குமேயானால் சிதம்பரம் ஜெயிலுக்குள் இருந்திருப்பார் என்றார் அண்ணா.

 ஊழலுக்கெதிரான இந்தியா! 

இது அண்ணா ஹசாரே, அவரைப் பின்பற்றுகிறவர்களுடைய முழக்கம்
நம்மால் என்ன செய்ய முடியும் என்று சோம்பிக் கிடக்கிறவர்கள் மத்தியில் நம்மால் முடிந்ததை செய்ய வேண்டும் என்று அண்ணா ஹசாரே போன்றவர்கள முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள்.

ஊழலுக்கு எதிரான இயக்கம் தொடங்கி போராட்டங்களை நடத்தி வரும் அன்னா ஹசாரே, சென்னைக்கு வந்த போது, பெரியார் தி.க., மே 17 இயக்கம், மக்கள் இயக்கம் உள்ளிட்டவை கருப்புக் கொடி காட்டி தங்கள் எதிர்ப்பை தெரிவித்தன. இதனால் விமான நிலையத்தில் பெரும் பரப்பரப்பு ஏற்பட்டது.
சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே இன்று காலை பெங்களுருவிலிருந்து சென்னை விமான நிலையத்தில் வந்திறங்கினார். அப்போது அவருக்கு எதிரிப்பு தெரிவித்து பெரியார் தி.க., மே 17 இயக்கம், மக்கள் இயக்கம் உள்ளிட்டவை கருப்புக் கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்தன. ஜனநாயகத்திற்கு எதிராக, சர்வாதிகாரி போல செயல்படும் அன்னாவும் ஒரு பயங்கரவாதி என்றும், இந்தி வெறியரான அவர் இட ஒதுக்கீட்டுக்கு எதிரானவர் என்று பெரியார் தி.க.வினர் குற்றம்சாட்டினர்.

அர்த்தமிழந்து போன  வார்த்தைகள் வெற்றுக் கோஷங்களிலேயே இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான் இந்த மாதிரியான அமைப்புக்கள், ஆசாமிகள்  கிளம்பிக் கொண்டிருப்பார்கள்?

எனக்கு மலையாளம் தெரியாது!இந்தப் படம் என்ன சொல்கிறது என்பதைப் புரிந்துகொள்ள மலையாளம் தெரிந்திருக்க வேண்டிய அவசியம் உண்டோ!
 
சால்வை அழகர் பானா சீனா விவகாரம் நாளொரு பூதம் பொழுதொரு வதந்திகளால் சின்னா பின்னமாகிக் கொண்டிருக்கிறது.

ஸ்பெக்ட்ரம் விவகாரம் வெடித்துக் கிளம்பியபோது,  ராசா மட்டுமே இவ்வளவு பெரிய ஊழலைத் தனியொரு ஆளாகச் செய்திருக்க முடியுமா என்று கருணாநிதி ஆரம்ப நாட்களில் ஒரு கேள்வியை எழுப்பினார். அதை இப்போது அவரே மறந்திருப்பார்!! ஆனால் டாக்டர் சுப்பிரமணியம் சுவாமி கெட்டியாகப் பிடித்துக் கொண்டு, ஆராசாவும் சிதம்பரமும் கூட்டாகத்தான் இந்த விவகாரங்களில் ஈடு பட்டிருக்கிறார்கள் என்று நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்திருக்கிறார். நிதித்துறையில் இருந்து ஒருவர், சிபிஐ அதிகாரி ஒருவர் ஆக இருவரை சாட்சிகளாக அழைக்கக் கூடும் என்று தெரிகிறது.

இந்த நிலையில், வழக்கறிஞராக தன்னுடைய கட்சிக்காரர் ஒருவர் மீது உள்துறை மந்திரியாகவும் இருந்து அதீதக் கரிசனம் காட்டியதாக ஒரு தகவல் கசிந்து நாடாளுமன்றத்தில் ஏகத்துக்கும் அமளி. வேடிக்கை என்னவென்றால், இந்த விவகாரத்தில், இதைக் கசிய விட்டதே சிதம்பரத்தின் மீது அதீதமான அன்பு கொண்ட இன்னொரு அமைச்சர் சகா தான் என்றும் தகவல்கள் சொல்கின்றன.


தேக்குமரம் வளர்ப்பு, பாக்குமரம் வளர்ப்பு என்று அனுபவம் மிக்க நடேசன்கள் ஜனங்களிடமிருந்து பணத்தை சுருட்டி, சவுக்கு குச்சி மாதிரி இருந்த மீனாள் உண்டியலில் கொட்டிய தருணத்திலும்  கூட, அனுபவத்தை பானா சீனா தான் காப்பாற்றியதாக ஒரு தகவல், நினைவு!

தன்னுடைய செல்வாக்கு குறைந்துவிடவில்லை என்று காட்டிக் கொள்வதற்காக, வருகிற 26 ஆம் தேதி சென்னைவருகிற பிரதமரை, அன்று மாலையே காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழக நிகழ்ச்சி ஒன்றிலும் கலந்து கொள்ள ஏற்பாடும் செய்திருக்கிறார்.

ஸ்பெக்ட்ரம் ஊழலைத் தொட்டவர்கள் ஒவ்வொருவரையும் படா
பாடு படுத்திக் கொண்டிருக்கிறது.அவ்வளவு ராசியான ஊழல்!

கேடி பிரதர்ஸ் மட்டும் தான் இது வரை திருட்டுப் பூனைகள் மாதிரி, எந்த செய்தியும் வெளிவராதபடி, கமுக்கமாகக் காரியங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அதுவும் கூட ரொம்ப நாளைக்கு நீடிக்காது என்றே தோன்றுகிறது.பானா சீனா உள்ளே போக வேண்டுமென்றால் முதலில் போகவேண்டியது தயாநிதி! 


போகிற போக்கைப் பார்த்தால், அப்படி ஒன்றும் அவசியமில்லாத படிக்கு, சால்வை அழகர் தானே முந்திக் கொள்வார் போல இருக்கிறதே!


 

சண்டேன்னா மூணு! இன்னும் சொல்ல வேண்டுமா......!


சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்த ஆண்டி கதையாக, சோனி(யா) காங்கிரஸ் தொட்டதெல்லாம் கெட்டுக் குட்டிச்சுவரான கதையாக ஆகிக் கொண்டிருக்கிறது! 2009 இல் தியாக சிகரம் அந்தோனியோ மைனோவின் பிறந்த நாள் பரிசாக தெலங்கானா மாநிலம் தனியாகப் பிரிக்கப்படும் என்று கண்டனூர் பானா சீனா அறிவித்தாலும் அறிவித்தார்! அதுவரை வெறும் தேர்தல் முழக்கமாகவும், தெலங்கானா ராஷ்டிரா சமிதி கட்சியின் தலைவர் சந்திரசேகர ராவின் அரசியல் சந்தர்ப்பவாதமாகவும் இருந்த ஒன்று தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது.

ந்திராவின் இதரபகுதிகளில் இருந்து எழுந்த கடும் எதிர்ப்பை சமாளிக்க முடியாமல், பானா சீனா தான் வாந்தி எடுத்ததைத் திரும்ப விழுங்க வேண்டியதாயிற்று! அதுவரை தேசீய பாதுகாப்பு ஆலோசகராகத் தனிக் கோலோச்சி வந்த எம்கே நாராயணன் தலையில் பழியைத் தூக்கிப் போட்டு விட்டு, பானா சீனா தப்பித்துக் கொண்டார். எம்கே நாராயணன், சர்வ வல்லமை இருந்த ஆலோசகர் பதவியில் இருந்து கழற்றிவிடப் பட்டதோடு, ரிடையர் ஆனா கிழடு கட்டைகளுக்கு ஒதுக்கப்படுகிற கவர்னர் பதவிக்குக் கீழிறக்கப்பட்டு மேற்கு வங்கத்துக்கு அனுப்பப்பட்டார்!

ரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக தெலங்கானா பிரச்சினை ஒரு மாதிரியாக தள்ளிப்போடப்பார்த்தும், ஸ்ரீ கிருஷ்ணா கமிஷன் என்று ஒரு கமிஷன் அமைத்து ஊற்றி மூடிவிட முயற்சி செய்தும், அடங்க மாட்டேன் என்று இப்போது பற்றி எரிகிறது. ஒருமாதமாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப் பட்டிருக்கிறது., 


சிங்கரேணி நிலக்கரி சுரங்கத்தில் இருந்து நிலக்கரி நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்புவது தடைப்பட்டதில், தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் மின்சார உற்பத்தி செய்வது குறைந்திருக்கிறது.சுமார் ஐயாயிரம் கோடி ரூபாய்களுக்கும் மேலாக இழப்பு ஏற்பட்டிருப்பதாக செய்திகள் சொல்கின்றன.

டந்த வாரம் வெள்ளிக் கிழமை முதல் ஆந்திர கவர்னர், முதல்வர்,
சிரஞ்சீவி மாதிரி கற்றுக் குட்டி அரசியல்வாதிகள் உள்ளிட்ட பலரையும் காங்கிரஸ் கட்சியின் கோர் க்ரூப்பும், பிரதமர், அமைச்சர்கள், என்று வரிசையாகப் பேசிப்பார்த்தும் இன்னும் ஒரு முடிவுக்கும் வர முடியவில்லை!

முடிவு என்றால், காங்கிரசுக்கு சாதகமாக இருக்கும் நிலை என்ற அர்த்தத்தில் மட்டுமே!முடிவெடுக்கத் தெரியாத துப்புக் கெட்டவர்கள் கையில் ஆட்சியைக் கொடுத்துவிட்டு, இந்த தேசம் பிரச்சனைகளை சந்தித்துக் கொண்டிருக்கும் கொடுமையை ஹிந்து நாளிதழில் திரு சுரேந்தர் வரைந்திருக்கும் இந்த கார்டூன் கொஞ்சம் நாசூக்காகவே சொல்கிறது!


****** 
பூனைக்கு ஒன்பது ஆயுசு என்று சொல்வார்களே! அது மாதிரி, நம்மூர் சால்வை அழகர் கண்டனூர்ப் பானா சீனாவும், இதுவரை சொதப்பிய போதெல்லாம் தப்பித்துக் கொண்டே வந்தார்!

ம்மிப் பீஸ் எத்தனை நாளைக்குத்தான் முட்டுக் கொடுத்துக் கொண்டிருக்க முடியும்?


தற்கும் ஒரு முடிவு காலம் என்று உண்டல்லவா? வாய்க் கொழுப்பிற்கும் ஒரு முடிவு காலம் நெருங்கி வந்து விட்டதாகவே தோன்றுகிறது! துக்ளக் இதழின் இந்த அட்டைப்படக் கார்ட்டூன் சொல்கிற சேதி அதுவே!

******
 இதற்கு மேலும் சொல்ல வேண்டுமா என்ன!!

உப்புக் கருவாடு! ஊற வச்ச சோறு! அப்புறம் பானா சீனா........!


எல்லோருக்குமே வெட்ட வெளிச்சமாகத் தெரிந்தது தான்!கண்டனூர் பானாசீனா சீக்கிரமே சரிவை சந்திக்கப் போகிறார்! 

ஊழல் எல்லாம் இரண்டாம் பட்சம் தான்! 

பரமசிவன் கழுத்துப் பாம்பாக இருப்பதால் எவரும் தன்னை ஒன்றும் செய்ய முடியாதென்ற அவருடைய திமிர், வாய்க் கொழுப்பு, சொந்தக் கட்சிக்கு உள்ளேயே நிறைய எதிரிகளை சம்பாதித்துக் கொடுத்திருக்கிறது. அதுதான் அவரைக் கவிழ்ப்பதில் முக்கிய பங்கு வகிக்கப் போகிறது!

நிதியமைச்சராக இருந்தபோதும் சரி, இப்போது உள்துறை அமைச்சராக இருக்கும்போதும் சரி, பானாசீனாவால், ஐமு கூட்டணிக் குழப்பத்துக்கு அடிமேல் அடி விழுவதில் ஸ்பெக்ட்ரம் விவகாரம் முதலாவது அல்ல! நக்சலைட் பிரச்சினைகளைத் தொட்டு, மேற்கு வங்க முதல்வர் புத்ததேவ் பட்டாசார்யாவிடம் திமிராகப் பேசியதாகட்டும், தியாகசிகரத்தின் பிறந்த நாள் பரிசாக அறிவித்துக் குளிர்விக்கலாம் என்று தெலங்கானா தனி மாநிலமாகப் பிரிக்கப்படும் என்று இரண்டாண்டுகளுக்கு முன்னால் அறிவித்து விட்டு, பலத்த எதிர்ப்புக் கிளம்பியவுடன், சோனியாவின் சேலைக்குப் பின்னால் ஒளிந்து கொண்ட கதை அவ்வளவு சீக்கிரமாக மறந்துவிடக் கூடியதா என்ன? 

அசைக்க முடியாதவராக இருந்த எம் கே நாயர், மேற்கு வங்க கவர்னராகப் பதவி இறக்கம் செய்யப்பட, சிதம்பரத்தின் அரசியல் முதிர்ச்சியின்மை மறக்கடிக்கப்பட்டது.ஆனாலும், சிதம்பரம் கொளுத்திப் போட்ட நெருப்பு தெலங்கானா போராட்டமாக இன்னமும் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது!

ஆளும் ஐமு கூட்டணி, குழப்பமாக இருக்கிறதே தவிர, பொறுப்புள்ள ஒரு அரசை, நிர்வாகத்தைத் தர முடியாத, கையாலாகாத ஒன்றாகத் தான் இருக்கிறது என்பது வெட்ட வெளிச்சமாகத் தெரியத்தான் செய்கிறது.தேர்தல் வந்து, ஓட்டுப் போட்டுத்தான் இவர்களைக் களை எடுக்கவேண்டும் என்பது ஒருபக்கம்! ஜனநாயகம், அதில் வாக்காளர்களுடைய பொறுப்பு என்னவாக இருக்கவேண்டும் என்பதில் தெளிவில்லாத, இலவசங்களில் மயங்கிப் பின்னால் போகிற சமூகமாக இருப்பது இன்னொரு பக்கம்!

இந்த தேசத்தின் தலையெழுத்து இப்படியா இருக்க வேண்டும்?  இன்றைய ஜூனியர் விகடனில் வந்திருக்கும் ஒரு கட்டுரை இதோ! விகடனுக்கு நன்றியுடன்!

சுவாமி சொல்லும் 2ஜி மர்மங்கள்!


'2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தை சி.பி.ஐ. விசாரிக்கவேண்டும்' என்று விடாப்பிடியாகப் போர்க் குரல் கொடுத்துவரும் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரணியன் சுவாமி, சென்னையில் முகாமிட்டிருந்தார். 


அவரை சந்தித்தபோது, ''2008-ம் வருடம் ஏப்ரல் 21-ம் தேதியன்று, நிதித் துறை அமைச்சராக இருந்த ப.சிதம்பரம், அப்போதைய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் பொறுப்பில் இருந்த ஆ.ராசாவுக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். அதில், 'நாம் இருவரும் விலை நிர்ணயம் தொடர்பாக ஆய்வு நடத்தி சில முடிவுகளை எடுத்துவிட்டுப் பிறகு அதை பிரதமரிடம் சமர்ப்பிக்கலாம்' என்று குறிப்பிட்டு இருக்கிறார். இதையே, பிரதமரும் கூட ஒரு பிரஸ் மீட்டில், 'இரண்டு அமைச்சர்களும் கூட்டாக வந்து சொன்னார்கள்என்று பேசி இருக்கிறார்.
 

அப்படியென்றால், இருவரும் கூட்டாக உட்கார்ந்து பேசித்தான் விலை நிர்ணயம் செய்திருக்கிறார்கள். ஸ்பெக்ட்ரம் ஊழலில் ஒரே குற்றத்தை செய்த இருவரில் ஆ.ராசா ஜெயிலில் இருக்க... ப.சிதம்பரம் மட்டும் அமைச்சர் பதவியில் நீடிப்பது எப்படி? இவரையும் சி.பி.ஐ. விசாரித்தால் கண்டிப்பாகப் பல உண்மைகள் வெளிவரும்...'' என்றவரிடம்,


''சிறப்பு நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்ட ஸ்பெக்ட்ரம் ஃபைலில் சில பக்கங்கள் மிஸ்ஸிங் என்று புகார் கிளம்பி யுள்ளதே?''


''அதற்கு முழுப் பொறுப்பையும் சிதம்பரம் சார்ந்த துறையினர்தான் ஏற்க வேண்டும். ஏதோ சந்தேகத்தின் பேரில் நீதிமன்றம் அந்த ஃபைல்களைக் கேட்டு வாங்கிப் பார்த்தபோது, சில பக்கங்கள் மிஸ்ஸிங். ஆ.ராசாவும், ப.சிதம்பரமும் விலை நிர்ணயம் தொடர்பாக நான்கு முறை மீட்டிங் நடத்தி இருக்கிறார்கள். அந்த மீட்டிங்குகளின் பேச்சுகள் அனைத்தும் மினிட்ஸ் எடுக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், மூன்று மீட்டிங்கின் விவரங்கள் மாயமாக மறைந்துவிட்டன. ஒரே ஒரு மீட்டிங் தொடர்பான மினிட்ஸ் மட்டும் எனக்குக் கிடைத்தது. அதைத்தான் கோர்ட்டில் நான் சமர்ப்பித்து இருக்கிறேன். ஆ.ராசாவும், ப.சிதம்பரமும் கூட்டாக விலை நிர்ணயம் செய்தார்கள் என்பதை உறுதி செய்யும் முக்கிய ஆவணம் அது!''


''நிதித் துறையின் துணை செயலாளர் ராவ், 'ஸ்பெக்ட்ரம் ஊழலை சிதம்பரம் நினைத்திருந்தால், அப்போதே தடுத்திருக் கலாம்' என்று எழுதியிருக்கிறாரே? நிதித் துறை அமைச்சர் பிரணாப்புக்கு இதில் எந்த பொறுப்பும் இல்லையா?''


''ராவ் பெயரில் வெளியான ஆதாரத்தைக் குறிப்பு, கருத்து, கடிதம், ஆவணம் என்றெல்லாம் குறிப்பிடக் கூடாது. அது, பக்காவான ஆபீஸ் மெமோரண்டம். பிரதமர் செயலர், கேபினெட் செயலர், தொலைத் தொடர்புத் துறை செயலர், நிதி செயலர் என்று பலரும் உட்கார்ந்து தயார் செய்து, கீழ் நிலை அதிகாரியான ராவ் பெயரில் அப்படிப் பதிவாகி இருக்கிறது. இப்படித்தான் அரசு ஃபைல்களில் வழக்க மாகப் பதிவாகும். அதுதான் இந்த விவகாரத்திலும் நடந்திருக்கிறது. பிரணாப் முகர்ஜி தரப்பில்கூட, 'அந்தக் கருத்து என்னுடையது அல்ல. ஆனால், ஆதாரங்கள் என்னுடையது' என்றுதான் சொல்லப்படுகிறது. சிதம்பரம் தடுத்திருக்கலாம் என்பது பல துறைத் தலைவர்களின் கருத்து, அது ராவின் தனிப்பட்ட கருத்து அல்ல.''


''சிதம்பரம் விவகாரத்தில் நீங்கள் மிகவும் தீவிரமாக இருப்பதற்குக் குறிப்பிட்ட, தனிப்பட்ட காரணங்கள் ஏதாவது உண்டா?''


''இதில் என்ன தனிப்பட்ட காரணம் இருந்துவிட முடியும்? ஸ்பெக்ட்ரம் வழக்கில் ஆ.ராசா குற்றவாளி என்றால், சிதம்பரமும் குற்றவாளி என்கிறேன் நான். உச்ச நீதிமன்றத்தில் சிதம்பரத்தை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று நான் ஒரு மணி நேரம் வாதம் பண்ணினேன். ஆனால், சிதம்பரம் தரப்பில் 16 மணி நேரம் வாதம் செய்து, மேலும் அவகாசம் கேட் டார்கள். அக்டோபர் 10-ம் தேதியுடன் வாதத்தை முடித்துக்கொள்ளச் சொல்லிவிட்டார்கள். அடுத்து, நான் பதில் கொடுப்பேன். எனக்கு அப்போதும் அரை மணி நேரம் போதும். இதேபோல், பாட்டியாலா சிறப்பு கோர்ட்டில், ஸ்பெக்ட்ரம் வழக்கில் சக குற்றவாளியாக ப.சிதம்பரத்தைச் சேர்க்கச் சொல்லி நான் கோரிக்கை வைத்திருக்கிறேன். உச்ச நீதிமன்ற வழக்கு முடிவைப் பொறுத்துஇந்த வழக்கு விசாரணை நடக்கும்.


இது தவிர, இன்னொரு முக்கியமான விஷயத்தைச் சொல்லி ஆக வேண்டும். 'பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஒரு கம்பெனிக்கும்,  சீன ராணுவத்திடம் இருந்து தளவாடங்களை வாங்கும் பிசினஸில் ஈடுபட் டுள்ள இன்னொரு கம்பெனிக்கும்  லைசென்ஸ் தரக் கூடாதுஎன்று அப்போதைய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் ஒரு கடிதத்தை அப்போதைய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு அனுப்பியிருக்கிறார். ஆ.ராசாவிடமும் இந்தக் கருத்தை சொல்லியிருக்கிறார். ஆனால், இவர்கள் கேட்கவில்லை. இதையும் நான் அடித்துச் சொல்கிறேன். இது தேசத் துரோகம் அல்லவா!''


''ஸ்பெக்ட்ரம் வழக்கில் சிதம்பரத்தைத் தொடர்ந்து வேறு யார் சிக்குவார்கள்?''


''சோனியாவின் மருமகன் வதேரா சிக்கலாம்! அதற்கான ஆதாரங்களும் இருக்கின்றன. இந்த விவகாரத்தில் நான் தீவிரமாக இருப்பதால், சோனியா பொய் வழக்குகளை என் மீது ஏவப் பார்க்கிறார். கடந்த ஜூலையில் நான் ஒரு பத்திரிகையில் எழுதிய கட்டுரை, மத மோதலைத் தூண்டிவிடும் வகையில் இருப்பதாக டெல்லியில் இப்போது வழக்குப் பதிவு செய்துள்ளனர். பொறுத்திருந்து பாருங்கள்! இந்த பொய் வழக்குகளை நான் தவிடு பொடி ஆக்குவேன்!''

- ஆர்.பி.

எரிதழல் வாசனிடமிருந்து ஒரு தொடர்புடைய பதிவு இங்கே! கம்பத்து ஆமை!

வாய்க் கொழுப்பும் இந்திய அரசியலும்! அழகிரி, பானா சீனா, அமர்சிங்!


சிலநாட்களுக்கு முன்னால் தான் அழகிரி, திமுக ஆட்சிக்குத் திரும்ப வந்தால், அதிமுகவினரை இதே மாதிரிக் கேஸ் போட்டு உள்ளே தள்ளுவோம் என்று தன்னுடைய நண்பர்களைப் பார்க்க ஜெயில் ஜெயிலாக விசிட் அடித்துக் கொண்டிருந்தபோது பேட்டி கொடுத்தார். நினைவிருக்கிறதா? முக கூட, போலீஸ்காரர்களுக்கு இதே மாதிரி ஒரு மறைமுக மிரட்டல் விடுத்தார். இரண்டும், வெற்று மிரட்டல் என்பதைத் தாண்டி, நுணலும் தன்வாயால் கெடும் என்ற பழ மொழிக்கு நெருங்கிப் போனது!


துரை அருகே சிவரக்கோட்டை என்ற இடத்தில் பொறியியல் கல்லூரியை கட்டுவதற்கு, பாசனக் கால்வாய்களை சேதப்படுத்தியது தொடர்பாக நேரில் வந்து விளக்கம் அளிக்குமாறு மத்திய ரசாயனத் துறை அமைச்சர் மு.க.அழகிரி, அவரது மனைவி காந்தி மற்றும் மகன் துரை தயாநிதி ஆகியோருக்கு மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் சகாயம் சம்மன் அனுப்பியுள்ளார்.

மூவரும் வரும் 16ம் தேதி நேரில் வந்து விளக்கம் அளிக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

துரை அருகே சிவரக்கோட்டை என்ற இடத்தில் தயா பொறியியல் கல்லூரியை அழகிரி கட்டி வருகிறார். இதற்காக அப்பகுதியில் விவசாயிகளிடமிருந்து நிலத்தை வாங்கியுள்ளார் அழகிரி.

ந்நிலையில் கல்லூரிக்கு அருகில் உள்ள வயல்களுக்கு செல்லும் பாசன கால்வாய்களை சேதப்படுத்தி இந்தப் பொறியியல் கல்லூரி கட்டப்பட்டு வருவதாக புகார் கூறப்பட்டுள்ளது.

சிவரக்கோட்டையைச் சேர்ந்த விவசாயிகள் நல சங்கத்தின் தலைவர் எம்.ராமலிங்கம், இது தொடர்பாக கலெக்டர் சகாயத்திடம் புகார் ஒன்றை கொடுத்தார். அதில், தயா பொறியியல் கல்லூரி கட்டுமானப் பணிகள் காரணமாக பாசன கால்வாய்கள் சேதமடைந்திருப்பதாக அவர் கூறி உள்ளார்.

தையடுத்து கல்லூரியின் நிறுவனத் தலைவர் மு.க.அழகிரி, அறக் கட்டளையின் உறுப்பினர்கள் காந்தி, துரை தயாநிதி ஆகிய மூவருக்கும் சம்மன் அனுப்பியுள்ளார் கலெக்டர் சகாயம்.

தில், ஏழை விவசாயிகள் இந்த கால்வாய் பாசனத்தை பெரிதும் நம்பி இருக்கிறார்கள். இந்த கால்வாய் சேதப்படுத்தப்பட்டுள்ளதால் அவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மிழ்நாடு நீர்ப்பாசன பணிகள் சட்டம் 1959 பிரிவு 7ன் கீழ் இது குற்றமாகும். மேலும் இந்த பாசன கால்வாய் மேம்பாட்டுக்கு 38.87 லட்ச ரூபாயும், வேலைவாய்ப்பு திட்டத்தின் மூலம் 50.74 லட்ச ரூபாயும் செலவிடப்பட்டுள்ளது. ஏரிகள் கால்வாய்கள் தூர்வாரப் பட்டுள்ளன.

யா அறக்கட்டளை கட்டிய கல்லூரி காரணமாக அரசு செலவழித்த பணம் விரயமாகி உள்ளது. இதனால் அரசுக்கு பெரும் இழப்பு ஏற்படுத்தப் பட்டுள்ளது.

மிழ்நாடு விவசாய பணிகள் சட்டம் 1959 தமிழ்நாடு விவசாயிகள் நீர்ப்பாசன நிர்வாகச் சட்டம் 2000, தமிழ்நாடு ஏரிகள் பாதுகாப்பு மற்றும் ஆக்கிரமிப்பு அகற்றம் சட்டம் 2007 ஆகியவற்றின் கீழ் குற்றங்களை அழகிரி கல்வி அறக்கட்டளை செய்திருக்கிறது.

னவே இது குறித்து விளக்கம் அளிக்க வரும் 16ம் தேதி காலை11 மணிக்கு தன் முன் ஆஜராகவேண்டும் என்று சம்மனில் கூறப் பட்டுள்ளது. இந்த சம்மன் கடந்த 6ம் தேதியே அழகிரிக்கு அனுப்பப் பட்டுவிட்டதாக கலெக்டர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

******


என் இமேஜைக் கெடுத்த குண்டுவெடிப்புகள்: ப.சிதம்பரம்

தான் உள்துறை அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு நடந்த 3 வெடிகுண்டுத் தாக்குதல்கள் தனது  இமேஜை கெடுத்துள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.

The buck stop here! 

க்சலைட் பிரச்சினையைத் தீர்க்கத் தவறியதாக, அன்றைய மேற்கு வங்க முதலமைச்சர் புத்ததேவ் பட்டாசார்யாவிடம், பானா சீனா திமிராகப் பேசிய வார்த்தைகள் இவை!

தீவீரவாதத்துக்கு மாநில அரசுதான் பொறுப்பேற்க வேண்டும் என்பது அவருடைய கட்டளையாக அல்லது வாய்க் கொழுப்பாக வெளிப்பட்ட தருணம் அது.மாநிலக் காவல்துறையைக் கலந்துகொள்ளாமல், மத்திய ரிசர்வ் போலீசார் மாவோயிஸ்டுகளை வேட்டையாடப் போனபோது கண்ணி வெடியில் சிக்கி, எழுபத்தாறு போலீசார் மரணமடைந்த போது, பானா சீனாவுக்குத் தெரிந்ததெல்லாம் ராஜினாமா நாடகம் ஒன்றுதான்!
ன்னுடைய வாய்ச் சொல் வீரம் அம்பலப்பட்டுப் போனதை பானாசீனா இன்றுவரை உணர்ந்ததாகத் தெரியவில்லை.

ண்டனூர்  பானாசீனாவின் வாய்க் கொழுப்பும், திமிரும் அரசியலைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருப்பவர்களுக்கு நன்றாகவே தெரிந்தது தான்!

தான் உள்துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, ஒன்றரை ஆண்டுகளில் தலை நகரில் எந்த குண்டு வெடிப்பும் ஏற்படவில்லை என்று எந்த நேரத்தில் பெருமிதப் பட்டுக் கொண்டாரோ தெரியவில்லை   அதற்கு ஆப்பு வைக்கிற மாதிரி, குண்டு வெடிப்புகளும், அரசின் கையாலாகாத் தனமும் கைகோர்த்துக் கொண்டு உலவ ஆரம்பித்தன.

ப்போது கூட டில்லி குண்டு வெடிப்பு சம்பவத்தில், பொறுப்போடு செயல் படவேண்டும் என்று மனிதருக்குத் தோன்றவில்லை! தான் உள்துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு நடந்த மூன்று குண்டு வெடிப்பு சம்பவங்களில் தன்னுடைய இமேஜ் அடிபட்டு விட்டதாக அங்கலாய்த்துக் கொண்டிருக்கிறார்!

க்க மாட்டாதவன் இடுப்பில் அம்பத்தெட்டு கருக்கருவா என்பார்களே, அது மாதிரி ஆளத்தெரியாத காங்கிரஸ்காரனுக்கு இத்தனை வாய்க் கொழுப்பு எதற்கு?

******


காங்கிரஸ் கட்சியின் கோழைத்தனம் அம்பலப்பட்டு ஈயென்று இளித்துக் கொண்டிருப்பதனாலோ என்னவோ , வாய்க் கொழுப்புடன் காங்கிரசை மிரட்டுபவர்கள் பட்டியலும் ஆ.ஆசா, கனிமொழி,கருணாநிதி, ஸ்பெக்ட்ரம் வழக்கில் குற்றம் சாட்டப் பட்டிருக்கும் நபர்கள் என்று நீண்டு கொண்டே போய்க் கொண்டிருக்கிறது! இன்றைக்குப் புதிதாகப் பட்டியலில் சேர்ந்து கொண்டிருப்பவர், நடிகை ஜெயப்ரதா! தரகு வேலை பார்ப்பதில் கில்லாடியான அமசிங்கின் தயவினால், முலாயம் சிங் யாதவின் சமாஜ்வாடி கட்சி சார்பில் போட்டியிட்டு எம்பியாகவும் ஆனவர்.

மிதாப் பச்சனுக்கு கஷ்டக்காலத்தில் உதவிய அமர் சிங் சிறையில் உள்ளார். ஆனால் அமிதாப் கொஞ்சம் கூட நன்றி உணர்வே இல்லாமல் கண்டு கொள்ளாமல் இருக்கிறார். அவர் மட்டும் வாயைத் திறந்தால் பலர் மாட்டுவார்கள் என்று அமர்சிங்கின் தீவிர ஆதரவாளரான நடிகை ஜெயப்பிரதா தெரிவித்துள்ளார்.ஓட்டுப் போட எம்.பி.களுக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் கைதாகி முன்னாள் சமாஜ்வாடி உறுப்பினர் அமர் சிங் திஹார் சிறையில் உள்ளார். அவருக்கு இதுவரை ஜாமீன் கிடைக்கவில்லை.

ந்நிலையில் அமர்சிங்கின் தீவிர ஆதரவாளரான ஜெயப்பிரதா கூறுகையில், "அமர் சிங் மட்டும் வாயைத் திறந்தால் பெரும் புள்ளிகள் எல்லாம் சிக்குவார்கள். ஆனால் அவர் பொறுமையாகவும், அமைதியாகவும் இருக்கிறார். அது தான் அவர் குணம்!"

வாங்கின காசுக்கு நல்லாவே கூவுராங்கப்பா!