வாய்க் கொழுப்பும் இந்திய அரசியலும்! அழகிரி, பானா சீனா, அமர்சிங்!


சிலநாட்களுக்கு முன்னால் தான் அழகிரி, திமுக ஆட்சிக்குத் திரும்ப வந்தால், அதிமுகவினரை இதே மாதிரிக் கேஸ் போட்டு உள்ளே தள்ளுவோம் என்று தன்னுடைய நண்பர்களைப் பார்க்க ஜெயில் ஜெயிலாக விசிட் அடித்துக் கொண்டிருந்தபோது பேட்டி கொடுத்தார். நினைவிருக்கிறதா? முக கூட, போலீஸ்காரர்களுக்கு இதே மாதிரி ஒரு மறைமுக மிரட்டல் விடுத்தார். இரண்டும், வெற்று மிரட்டல் என்பதைத் தாண்டி, நுணலும் தன்வாயால் கெடும் என்ற பழ மொழிக்கு நெருங்கிப் போனது!


துரை அருகே சிவரக்கோட்டை என்ற இடத்தில் பொறியியல் கல்லூரியை கட்டுவதற்கு, பாசனக் கால்வாய்களை சேதப்படுத்தியது தொடர்பாக நேரில் வந்து விளக்கம் அளிக்குமாறு மத்திய ரசாயனத் துறை அமைச்சர் மு.க.அழகிரி, அவரது மனைவி காந்தி மற்றும் மகன் துரை தயாநிதி ஆகியோருக்கு மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் சகாயம் சம்மன் அனுப்பியுள்ளார்.

மூவரும் வரும் 16ம் தேதி நேரில் வந்து விளக்கம் அளிக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

துரை அருகே சிவரக்கோட்டை என்ற இடத்தில் தயா பொறியியல் கல்லூரியை அழகிரி கட்டி வருகிறார். இதற்காக அப்பகுதியில் விவசாயிகளிடமிருந்து நிலத்தை வாங்கியுள்ளார் அழகிரி.

ந்நிலையில் கல்லூரிக்கு அருகில் உள்ள வயல்களுக்கு செல்லும் பாசன கால்வாய்களை சேதப்படுத்தி இந்தப் பொறியியல் கல்லூரி கட்டப்பட்டு வருவதாக புகார் கூறப்பட்டுள்ளது.

சிவரக்கோட்டையைச் சேர்ந்த விவசாயிகள் நல சங்கத்தின் தலைவர் எம்.ராமலிங்கம், இது தொடர்பாக கலெக்டர் சகாயத்திடம் புகார் ஒன்றை கொடுத்தார். அதில், தயா பொறியியல் கல்லூரி கட்டுமானப் பணிகள் காரணமாக பாசன கால்வாய்கள் சேதமடைந்திருப்பதாக அவர் கூறி உள்ளார்.

தையடுத்து கல்லூரியின் நிறுவனத் தலைவர் மு.க.அழகிரி, அறக் கட்டளையின் உறுப்பினர்கள் காந்தி, துரை தயாநிதி ஆகிய மூவருக்கும் சம்மன் அனுப்பியுள்ளார் கலெக்டர் சகாயம்.

தில், ஏழை விவசாயிகள் இந்த கால்வாய் பாசனத்தை பெரிதும் நம்பி இருக்கிறார்கள். இந்த கால்வாய் சேதப்படுத்தப்பட்டுள்ளதால் அவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மிழ்நாடு நீர்ப்பாசன பணிகள் சட்டம் 1959 பிரிவு 7ன் கீழ் இது குற்றமாகும். மேலும் இந்த பாசன கால்வாய் மேம்பாட்டுக்கு 38.87 லட்ச ரூபாயும், வேலைவாய்ப்பு திட்டத்தின் மூலம் 50.74 லட்ச ரூபாயும் செலவிடப்பட்டுள்ளது. ஏரிகள் கால்வாய்கள் தூர்வாரப் பட்டுள்ளன.

யா அறக்கட்டளை கட்டிய கல்லூரி காரணமாக அரசு செலவழித்த பணம் விரயமாகி உள்ளது. இதனால் அரசுக்கு பெரும் இழப்பு ஏற்படுத்தப் பட்டுள்ளது.

மிழ்நாடு விவசாய பணிகள் சட்டம் 1959 தமிழ்நாடு விவசாயிகள் நீர்ப்பாசன நிர்வாகச் சட்டம் 2000, தமிழ்நாடு ஏரிகள் பாதுகாப்பு மற்றும் ஆக்கிரமிப்பு அகற்றம் சட்டம் 2007 ஆகியவற்றின் கீழ் குற்றங்களை அழகிரி கல்வி அறக்கட்டளை செய்திருக்கிறது.

னவே இது குறித்து விளக்கம் அளிக்க வரும் 16ம் தேதி காலை11 மணிக்கு தன் முன் ஆஜராகவேண்டும் என்று சம்மனில் கூறப் பட்டுள்ளது. இந்த சம்மன் கடந்த 6ம் தேதியே அழகிரிக்கு அனுப்பப் பட்டுவிட்டதாக கலெக்டர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

******


என் இமேஜைக் கெடுத்த குண்டுவெடிப்புகள்: ப.சிதம்பரம்

தான் உள்துறை அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு நடந்த 3 வெடிகுண்டுத் தாக்குதல்கள் தனது  இமேஜை கெடுத்துள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.

The buck stop here! 

க்சலைட் பிரச்சினையைத் தீர்க்கத் தவறியதாக, அன்றைய மேற்கு வங்க முதலமைச்சர் புத்ததேவ் பட்டாசார்யாவிடம், பானா சீனா திமிராகப் பேசிய வார்த்தைகள் இவை!

தீவீரவாதத்துக்கு மாநில அரசுதான் பொறுப்பேற்க வேண்டும் என்பது அவருடைய கட்டளையாக அல்லது வாய்க் கொழுப்பாக வெளிப்பட்ட தருணம் அது.மாநிலக் காவல்துறையைக் கலந்துகொள்ளாமல், மத்திய ரிசர்வ் போலீசார் மாவோயிஸ்டுகளை வேட்டையாடப் போனபோது கண்ணி வெடியில் சிக்கி, எழுபத்தாறு போலீசார் மரணமடைந்த போது, பானா சீனாவுக்குத் தெரிந்ததெல்லாம் ராஜினாமா நாடகம் ஒன்றுதான்!
ன்னுடைய வாய்ச் சொல் வீரம் அம்பலப்பட்டுப் போனதை பானாசீனா இன்றுவரை உணர்ந்ததாகத் தெரியவில்லை.

ண்டனூர்  பானாசீனாவின் வாய்க் கொழுப்பும், திமிரும் அரசியலைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருப்பவர்களுக்கு நன்றாகவே தெரிந்தது தான்!

தான் உள்துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, ஒன்றரை ஆண்டுகளில் தலை நகரில் எந்த குண்டு வெடிப்பும் ஏற்படவில்லை என்று எந்த நேரத்தில் பெருமிதப் பட்டுக் கொண்டாரோ தெரியவில்லை   அதற்கு ஆப்பு வைக்கிற மாதிரி, குண்டு வெடிப்புகளும், அரசின் கையாலாகாத் தனமும் கைகோர்த்துக் கொண்டு உலவ ஆரம்பித்தன.

ப்போது கூட டில்லி குண்டு வெடிப்பு சம்பவத்தில், பொறுப்போடு செயல் படவேண்டும் என்று மனிதருக்குத் தோன்றவில்லை! தான் உள்துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு நடந்த மூன்று குண்டு வெடிப்பு சம்பவங்களில் தன்னுடைய இமேஜ் அடிபட்டு விட்டதாக அங்கலாய்த்துக் கொண்டிருக்கிறார்!

க்க மாட்டாதவன் இடுப்பில் அம்பத்தெட்டு கருக்கருவா என்பார்களே, அது மாதிரி ஆளத்தெரியாத காங்கிரஸ்காரனுக்கு இத்தனை வாய்க் கொழுப்பு எதற்கு?

******


காங்கிரஸ் கட்சியின் கோழைத்தனம் அம்பலப்பட்டு ஈயென்று இளித்துக் கொண்டிருப்பதனாலோ என்னவோ , வாய்க் கொழுப்புடன் காங்கிரசை மிரட்டுபவர்கள் பட்டியலும் ஆ.ஆசா, கனிமொழி,கருணாநிதி, ஸ்பெக்ட்ரம் வழக்கில் குற்றம் சாட்டப் பட்டிருக்கும் நபர்கள் என்று நீண்டு கொண்டே போய்க் கொண்டிருக்கிறது! இன்றைக்குப் புதிதாகப் பட்டியலில் சேர்ந்து கொண்டிருப்பவர், நடிகை ஜெயப்ரதா! தரகு வேலை பார்ப்பதில் கில்லாடியான அமசிங்கின் தயவினால், முலாயம் சிங் யாதவின் சமாஜ்வாடி கட்சி சார்பில் போட்டியிட்டு எம்பியாகவும் ஆனவர்.

மிதாப் பச்சனுக்கு கஷ்டக்காலத்தில் உதவிய அமர் சிங் சிறையில் உள்ளார். ஆனால் அமிதாப் கொஞ்சம் கூட நன்றி உணர்வே இல்லாமல் கண்டு கொள்ளாமல் இருக்கிறார். அவர் மட்டும் வாயைத் திறந்தால் பலர் மாட்டுவார்கள் என்று அமர்சிங்கின் தீவிர ஆதரவாளரான நடிகை ஜெயப்பிரதா தெரிவித்துள்ளார்.ஓட்டுப் போட எம்.பி.களுக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் கைதாகி முன்னாள் சமாஜ்வாடி உறுப்பினர் அமர் சிங் திஹார் சிறையில் உள்ளார். அவருக்கு இதுவரை ஜாமீன் கிடைக்கவில்லை.

ந்நிலையில் அமர்சிங்கின் தீவிர ஆதரவாளரான ஜெயப்பிரதா கூறுகையில், "அமர் சிங் மட்டும் வாயைத் திறந்தால் பெரும் புள்ளிகள் எல்லாம் சிக்குவார்கள். ஆனால் அவர் பொறுமையாகவும், அமைதியாகவும் இருக்கிறார். அது தான் அவர் குணம்!"

வாங்கின காசுக்கு நல்லாவே கூவுராங்கப்பா!

2 comments:

  1. உங்களைப்பற்றி நீங்கள் சொல்லியிருப்பதை பார்க்கும்பொழுது
    ஒரு நல்ல மனிதரின் blog ஐ படிக்கிறோம் என்ற உணர்வு ஏற்படுகிறது
    சமீப காலமாக உங்களை வாசித்து வருகிறேன்.காங்கிரசை
    தொடர்ந்து வாரி வரும் நீங்கள் ஏன் பிஜேபி பற்றி எழுதுவதில்லை?
    அவ்வளவு பரிசுத்தமானதா அந்த கட்சி?
    கர்நாடகாவே நாறும்போதும்?
    எந்த பாசம் உங்கள் கைகளை கட்டி போடுகிறது?

    ReplyDelete
  2. திரு.பஷீர்!

    காங்கிரஸ் கட்சியை, இந்த தேசத்தின் ஜனநாயக நெறிகளைத் தொடர்ந்து குழிதோண்டிப் புதைத்துக் கொண்டிருக்கும் நாசகார சக்தி என்ற வகையில் விமரிசித்து வருகிறேன். அதே மாதிரி, இங்கே தமிழகத்தில் திமுகவையும்! இன்னும் ஒரு பொருட்டாக எடுத்துக் கொண்டு பேசவேண்டிய இடத்தில் இந்த இரண்டும் இருப்பதால், பெரும்பாலான பதிவுகள் இவர்களைப் பற்றி மட்டுமே.

    கர்நாடகா, ஊழலில் ஊறிய மாநிலமாக இன்றைக்குத் தான் உங்களுக்குத் தெரிகிறது, ஆரம்ப முதலே அப்படித்தான்! காங்கிரஸ், தேவ கவுடா, குமாரசாமி வகையறாக்களைப் பற்றிக் கொஞ்சம் இணையத்திலேயே தகவல்களைத் தேடிப் பாருங்கள். ஆந்திரா, கேரளா இரண்டும் கர்நாடகாவுக்குக் குறைந்தது அல்ல!

    அதற்காக, பிஜேபி,இங்கே அதிமுக, தேதிமுக என்று வரிசையாக ஒவ்வொரு கட்சியாகப் பார்த்து எதிர்த்துப் பதிவுகள் எழுதிக் கொண்டிருக்க முடியுமா? அதற்கான அவசியம், நேரம் வரும்போது அவர்களைப் பற்றியும் எழுதலாம்! இந்திய ஜனநாயகத்தில் ஆகக் குறைந்த தீமையை மட்டுமே தேர்ந்தெடுக்க உரிமை இருக்கும் நிலையில் உங்களுடைய கேள்வியே கொஞ்சம் பொருந்தாமல் போகிறதே!



    ஒரு தகவலுக்காக! இன்றைக்கு வெளியாகியிருக்கும் ஒரு செய்தியின்படி, இன்றைக்கு உடனடியாகத் தேர்தல் வந்தால் பிஜேபி முன்னிலைக்கு வருகிற வாய்ப்புத்தான் அதிகமாம்! அவர்களை அந்த அளவுக்குப் பரிசுத்தவான்களாக்கிய காங்கிரசை, அதற்காகவே நீங்கள் சாடவேண்டுமே!

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!