Showing posts with label திராவிட மாயை. Show all posts
Showing posts with label திராவிட மாயை. Show all posts

அண்ணாமலை! இளைய பாரதத்தினாய் வா வா வா!

1960களிலிருந்தே தமிழகம் தேசிய நீரோட்டத்திலிருந்து விலக ஆரம்பித்துவிட்டது. இதற்கு மத்தியில் ஆட்சி செய்து வந்த காங்கிரஸ் கட்சியும் ஒரு முக்கிய காரணம் என்பதை மறந்து விடமுடியுமா என்ன? அதன் விளைவு, காங்கிரஸ் கட்சியே கூட தேசிய அந்தஸ்தையும் தேசியப்பார்வையும் இழந்து சில மாநிலக்கட்சிகளின் தயவில் இறுதிமூச்சை விட்டுக்கொண்டிருக்கிறது. பார்த்தீனியம் களைச்செடி மாதிரி வளர்ந்திருக்கிற திராவிட இயக்கங்களுக்கு ஒரு நல்ல மாற்றாக வளரவேண்டிய பொறுப்பும், வாய்ப்பும்  பாரதீய ஜனதா கட்சிக்கு மட்டுமே இருக்கிறது. இதுநாள் வரை ஏதோ ஒரு திராவிடக் கட்சியுடன் இணக்கமாகப் போகிற ஒன்றை மட்டுமே செய்துவந்த பிஜேபியின் மாநில நிர்வாகிகள் திராவிடப்புரட்டை எதிர்த்து அரசியல் செய்வதில் எந்த விதமான அக்கறையையும் காட்டவில்லை என்பது ஊரறிந்த ரகசியம். இந்த நிலையில் பிஜேபியின் தமிழ் மாநிலத்தலைவராக K அண்ணாமலை ex IPS  நேற்று கட்சித்தலைமையால் நியமிக்கப்பட்டிருக்கிறார்.


வீடியோ 39 வினாடிகள். அண்ணாமலை ஒரு துடிப்பான இளைஞர். தேசியப் பார்வை கொண்ட ஆளுமை. ஆனால் இங்கே தமிழக பிஜேபியைத் தட்டி எழுப்புவது, திராவிடப் பாசம் மிகுந்தவர்களைக் களையெடுப்பது  கடினமான சவாலாக இருக்கும். அண்ணாமலையை சமாளிப்பது இப்போது ஆளும் திமுகவுக்குமே பெரும் சவாலாக இருப்பார், எப்படி?  கரூர் பேருந்து நிலையம் அருகே பிஜேபியினர் இனிப்பு வழங்கி, பட்டாசு வெடித்ததில் கடுப்பான மாவட்ட ஆட்சியர் அனைவரையும் கைது செய்யும்படி உத்தரவு போட்டுப்போய்விட் டார். செந்தில் பாலாஜிக்கு ஒருநியாயம் பிஜேபிக்கு ஒரு நியாயமா என்று பிஜேபியினர் கேள்விக்குப்பதில் சொல்லவும் முடியாமல் கைது செய்யவும் முடியாமல் போலீசார் தடுமாறியதில்  வெளிப்பட்டது. அண்ணாமலை தலைவரான முதல் நாளே கலெக்டர், போலீசை பகைத்துக் கொண்ட பாஜகவினர்! என்ற செய்தியின் பின்னால் அண்ணாமலையின் தலைமைமீது மிகவும் அதீத நம்பிக்கை கொண்ட இளைஞர்கள் மற்றும் கட்சிக் காரர்கள் இருக்கிறார்கள் என்பதும் இருக்கிறது. (கரூரில் பிஜேபியினர் கைதுசெய்யப்பட்டதாகவும் தகவல்கள் வருகின்றன.) 


வீடியோ 41 நிமிடம். கோலாகல ஸ்ரீனிவாஸ் கொஞ்சம் விரிவாக அண்ணாமலை பிஜேபியின் மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டிருப்பதில் ஒரு முக்கியமான கேள்வியை எழுப்பி, விடையைத் தேடவும் முயற்சித்து இருக்கிறார். திமுக சிலவருடங்களாகவே  பிஜேபியை எதிர்த்து அரசியல் என்பதில் தெளிவாகச் செயல்பட்டு வருகிறது. அதேமாதிரி பிஜேபியும் தனது அரசியல் எதிரி திமுகதான் என்று ஒரு உறுதியான நிலை எடுக்குமா?

அண்ணாமலைக்கு முன்னால் இருக்கும் ஆகப்பெரிய சவால் இது தான்! சவாலை வெற்றிகரமாக எதிர்கொள்ள இறைவன் துணையிருப்பானாக. அண்ணாமலைக்கு இதயம் நிறைந்த வாழ்த்துகளுடன்! 

மீண்டும் சந்திப்போம்.

பிரசாந்த் கிஷோருடன் ஒப்பந்தம்! திமுக எதற்காகப் போடுகிறது?

பிரசாந்த் கிஷோருடன் ஒப்பந்தம்! திமுக எதற்காகப் போடுகிறது?  The Great Hawk திரை!ப்படத்தை எனக்கு சிபாரிசு செய்த நண்பர் பந்துவுக்கு இந்தப்பதிவு கொஞ்சம் உதவியாக இருக்கும்!தலைப்புக்கும் இந்த முதல்வரிக்கும் என்ன சம்பந்தம் என்று திகைப்பவர்கள், அந்தவரியில் இருக்கும் சுட்டியில் தொடர்பு என்னவென்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

ரங்கராஜ் பாண்டே இந்த 24 நிமிட வீடியோவில் என்ன சொல்கிறார் என்பதைக் கொஞ்சம் கவனமாகக் கேளுங்கள்!

   
2019 நாடாளுமன்றத் தேர்தலில் அபாரமான வெற்றி பெற்ற ஒரு கட்சி, சின்னச்சின்ன உதிரிகளைக் கூட விடாமல், சேர்த்துக்கொண்டு ஒரு பலமான பெரிய கூட்டணி அமைத்திருக்கிற ஒரு கட்சி, நடந்துமுடிந்த உள்ளாட்சித் தேர்தல்களில் கூட, அதிமுகவை விட அதிக சதவீத வாக்குகளைப் பெற்ற ஒரு கட்சி, இப்படித் திமுகவின் பலத்தைப் பற்றி சொல்லிக்கொண்டிருப்பது உண்மைதானா?  அமைப்பு ரீதியான பலம், கூட்டணி ரீதியான பலம் என்று இருக்கும் ஒரு கட்சி திடீரென்று பிரசாந்த் கிஷோருடன் தேர்தல் உத்திகளுக்காக ஒரு ஒப்பந்தத்தைப் போடுவானேன்? இந்தக் கேள்விதான் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஏற்படுத்தி இருக்கும் அதிர்வலைகளைத் தாண்டியும்  பரபரப்பான செய்தியாக! அப்படியென்னதிமுகவினருக்குத் தெரியாத தேர்தல்நேர அகட விகடங்களை,  பிரசாந்த் கிஷோர் வந்து சொல்லிக் கொடுத்து விடப்போகிறார்? ரங்கராஜ் பாண்டே இந்தக் கேள்விகளுக்கு ஓரளவு விடை சொல்கிறார். அதையும் தாண்டி வேறு பின்னணி எதுவும் இருக்கிறதா? கொஞ்சம் பார்த்துவிடலாமா?

  இது IPac அடித்துக் கொள்கிற சுயதம்பட்டம்  

இசுடாலினுக்கு பிரசாந்த் கிஷோருடைய சேவைகளை பயன்படுத்திக் கொள்ளுமாறு சிபாரிசு செய்ததே ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தான் என்பதாக ஒரு செய்தி நீண்ட நாட்களுக்கு முன்னதாகவே இங்கு உலாவிக்கொண்டுதான் இருந்தது. நடுவில் பிரசாந்த் கிஷோருடன், அதிமுக, கமல் காசர், ரஜனிகாந்த் இவர்களுமே கூடப் பேசிக் கொண்டிருப்பதாகவும் செய்திகள் வந்ததில் ஒரே ஒரு விஷயம் நன்றாகப் புலப்பட்டது. ஆந்திராவில் கால் பதித்த பிரசாந்த் கிஷோர் தன்னுடைய கடையை அடுத்து தமிழ்நாட்டிலும் போட முடிவெடுத்து விட்டார் என்பதுதான் அது. கடைசியாக திமுகவுடன் பேரம் படிந்து இசுடாலின் அதைப்  பகிரங்கமாகவும் அறிவித்து விட்டார்! பிரசாந்த் கிஷோர் எப்படிச் செயல்படுகிறார் என்பதை காங்கிரஸ் ஆதரவு ஊடகம் காரவன் செய்திக்கட்டுரை ஒன்றில் பார்க்கலாம்!

Data Science! கிடைக்கிற தகவல்களை வைத்து ஒரு மனிதனுடைய உளவியலை அனுமானிக்க முடியும் என்பது தெரிந்தது தான்! Mindhunter என்று கிரிமினல்களை ஆராய்ந்து ஒரு proile உருவாக்குகிற அமெரிக்க FBI விஞ்ஞானியை மையமாக வைத்து 2 சீசன்கள் வெப் சீரீசாகப் பார்த்ததுமுண்டு!   ஆனால் கிடைக்கிற தகவல்களை வைத்துக் கொஞ்சம்  manipulate செய்து மனிதர்களை ஒரு குறிப்பிட்ட முடிவெடுக்கத் தூண்டவும் செய்யலாம் என்ற மாதிரியான data science கொஞ்சம் விபரீதமாகத்தான் தெரிகிறது. சுஜாதா இதையே தனது சொர்கத்தீவு நாவலில் வேறொரு விதமாகச் சொல்லி இருந்ததும் நினைவுக்கு வருகிறது.இந்திய ஜனங்களையோ இந்திய ஜனநாயகத்தையோ இந்த டேட்டா சயன்டிஸ்டுகளால் புரிந்து கொள்ள முடியுமா manipulate செய்ய முடியுமா என்பது என்னைப்பொறுத்தவரை இன்னமும் ஒரு கேள்விக் குறியாக மட்டுமே இருக்கிறது.இப்படி முந்தைய பதிவில் சொல்லியிருந்ததைக் கொஞ்சம் நினைவு படுத்திக் கொண்டு ....பிரசாந்த் கிஷோர் Cambridge Analytica மாதிரித்தான் செயல்படுகிறாரா?


மதன் ரவிச்சந்திரன் வழக்கம்போல இந்த விஷயத்திலும் சுறுசுறுப்பாக ஒரு விவாதத்தை நடத்தியிருக்கிறார். இதில் 8ஷோர் கே சுவாமி ஒருவர் மட்டும்தான் பிரசாந்த் கிஷோருடைய வேலையென்ன என்பதைக் கொஞ்சம் புரிந்துகொண்டு பேசுகிறார். விவாதம் 58 நிமிடம்  எதுமாதிரியான கேள்விகளை முன்வைத்த்தால் தான் தெளிவான விவாதம் விடைகள் கிடைக்கும் என்பதில் கவனம் வேண்டியிருப்பதைப் புரிந்துகொள்ள உதவியாக இருக்கும் என்பதற்கு மேல் இந்த வீடியோவில் எதுவும் இல்லை.

இந்தப்பக்கங்களில் மம்தா பானெர்ஜி பற்றி எழுதிய பதிவிகளில் பிரசாந்த் கிஷோர் மம்தாவுக்காக என்ன உத்திகள் வகுத்துக் கொடுத்திருக்கிறார் என்பதைக் குறிப்பிட்டு எழுதியிருக்கிறேன். சுருக்கமாக சில விஷயங்களைப் பார்த்துவிடலாம். முதலில்  Image makeover, அடுத்து IPAC கட்சிக்காரர்களோடு சேர்ந்து வேலை செய்வதில்லை. தன்னுடைய டீமுடன் களத்தில் இறங்கி கட்சிக்காரர்கள் வேலைசெய்வதைக் கண்காணித்து வேலைசெய்கிற கட்சித்தலைவர் ஒருவருக்கு  மட்டுமே ரிபோர்ட் செய்வது. ஜனங்கள் மத்தியில் என்ன மாதிரி விஷயங்கள் எடுபடும், என்ன சொன்னால் ஆதரவு பெருகும் என்பதைக் கண்டறிந்து சொல்வது இத்தியாதி.

இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் இதுவிஷயமாக வந்திருக்கும் செய்திக்கட்டுரையில் தினமலர் R வெங்கடேஷ் கொஞ்சம் கூடுதல் காரணிகளாக, கொஞ்சம் யோசிக்க வேண்டிய தகவலைச் சொல்லி இருக்கிறார்.

Venkatesh further added that the aspirations of today’s voters differ from one place to another even within the state. “The urban and the rural voters have different aspirations, it’s not one-dimensional anymore. Earlier there used to be one leader and the public followed whatever he said, and the leader took the opinion of the public if something is not working. But today, with the advent rise of social media and wide-spread debate throughout the state and the emergence of new stakeholders, it has become multi-dimensional. So to save the existing vote bank, and to reach the new generation of voters, the parties think they need external support and hence they hire them,” he added.   

மீண்டும் சந்திப்போம்.       
   

இட்லி வடை பொங்கல்! #59 தமிழருவி! ரவீந்திரன் துரைசாமி! அர்ஜுன் சம்பத்!

எங்கள் பிளாக் ஸ்ரீராமுக்காக முதலில் ஒரு ஸ்பெஷல் காணொளி! 30 நிமிடம்தான், பொறுமையாகப் பார்க்க முடிந்தால் நான் சுவாசிக்கப்போறேங்க தளத்தில் நேற்று எழுதிய பதிவில் சொன்னதைப் புரிந்துகொள்ள அதுவே உதவியாக இருக்கும் என்பதை உறுதியாகச் சொல்வேன்! நீங்களும் பாருங்களேன்!

  
இது நக்கீரனுக்குத் தமிழருவி மணியன் அளித்த பேட்டி. ரஜனிகாந்த் மீது கழகங்கள் சுமத்துகிற குற்றச்சாட்டு அத்தனைக்கும் பதில் சொல்கிறார். ரஜனி சங்கியோ பிஜேபியோ இல்லை என்றும் சொல்கிறார். அப்படி என்றால் ரஜனிகாந்த் யார்? அதைச் சொன்னாரா? 

தமிழக அரசியல்களம் கொஞ்சம் சுத்தமான காற்றை சுவாசிக்க வேண்டுமானால் திராவிடங்களின் பிடியில் இருந்து முழுமையாக விடுபட்டே ஆகவேண்டும். அதன் முதல் கட்டமாக விசிக, பாமக, இடதுசாரிகள் திருகல் முகன் காந்தி, வேல்முருகன், சுபவீ செட்டியார் போன்ற பலபத்து உதிரிகளைக் கழித்துக் கட்டியே ஆக வேண்டும் என்பதை நீண்டநாட்களாகவே இங்கே எழுதிக் கொண்டிருக்கிறேன்.  


அரசியல் விமரிசகர் ரவீந்திரன் துரைசாமி  இந்த 21 நிமிட வீடியோவில் ரஜனிகாந்தை கிறிஸ்தவ, முஸ்லிம் வெறுப்பில்லாத இந்து என்று அடையாளப்படுத்துகிறார் (இங்கே பெரும்பாலான ஹிந்துக்கள் அப்படிப்பட்ட இயல்புள்ளவர்கள் தானே!) என்பதில் இசுடாலினை சிறுபான்மையினர் ஆதரவுக்காக இந்துவிரோதி என்று அடையாளப்படுத்துகிற அவசரம் தான் தெரிகிறது.

Mதமிழ் சேனலில், அந்தநாட்களில் பொதிகை தொலைக் காட்சியில் பார்த்த நிஜந்தன், பதில்களைக் கேட்டுப்பெறுகிற விதத்தில் அதிகம் குறுக்கிடாமல் கேள்விகளை மட்டும் முன்வைக்கிறார். ரவீந்திரன் துரைசாமி ரஜனியைப்பற்றி பேசுவதை விட  இசுடாலின் பற்றிய மதிப்பீட்டையே அதிகம் வைக்கிறார். திமுக அளவுக்கு அதிமுக, ரஜனியைப் பார்த்து பயப்படவில்லை என்றும் சொல்கிறார் என்பதில் ஏகப்பட்ட ஆனால், லாம் களுடன்!  


தமிழருவி மணியன் பேசியதில் இருந்ததை விட. ஏகப்பட்ட IFs and BUTs ரவீந்திரன் துரைசாமி பேச்சில் இருந்ததை கவனித்திருப்பீர்கள்! IFs and BUTs எதுவும் இல்லாமால் இது இப்படித்தான் என்று ஓங்கியடித்துப் பேசுகிறவர் ஒருவரும் வேண்டாமோ? அர்ஜுன் சம்பத் அந்த இடத்தை நிரப்பியிருக்கிறார். வீடியோ 21 mts.
கேள்விகளைக் கேட்பதோடு நிறுத்திக் கொண்டு இடையிடையே குறுக்கிடாமல் பதிலுக்காகக் காத்திருக்கும் நிஜந்தன் உண்மையிலேயே பாராட்டப் படவேண்டிய ஊடகக்காரர் என்பதை கவனத்தில் வைத்துக் கொள்வோமா?

மீண்டும் சந்திப்போம்.       
               

வெள்ளிக்கிழமைக் கேள்விகள்! #திராவிடமாயை மகா அரசியல்!

நேற்று முழுவதும்  கரு"நாடக" அரசியலைப்பற்றியோ மஹாராஷ்டிரா இழுபறியைப் பற்றியோ எதுவும் எழுதவேண்டாமே என்று பல்லைக் கடித்துக் கொண்டு பதிவு எழுதுவதையே தவிர்த்தேன். ஆனால்  இங்கே திராவிடங்கள், பல்லக்குத்தூக்கும் ஊடகங்கள் வரிசையாக வீடுகட்டி ஐஐடி மாணவி ஃபாத்திமா தற்கொலை செய்துகொண்டதை வைத்து எப்போதும் போல பிணந்தின்னி அரசியல் செய்ய ஆரம்பித்ததைப் பார்த்ததில் வெறுத்துப்போய், இதற்கு மகா இழுபறியோ  கரு"நாடக"  அரசியலோ இவை கொஞ்சம் பரவாயில்லையே என்றெண்ண வைத்து விட்டது.


வீடியோ இரண்டரை நிமிடம்தான்! சிவசேனா, NCP, இரு கட்சிகளும் ஆளுக்கு இரண்டரைவருடம் முதல்வர், காங்கிரசுக்கு சபாநாயகர், மற்றும் துணைமுதல்வர் பதவி முழு 5 வருடத்துக்கு, மூன்று கட்சிகளுக்கும் சமமாக 14 மந்திரி பதவிகள்! சிவசேனா அயோத்தி தீர்ப்பைப் பற்றிப் பேசக்கூடாது இதுதான்  CMP காமன் மினிமம் ப்ரோக்ராம் என்று முடிவுசெய்து விட்டார்களாம்! அடுத்துவரும் நாட்களில் ஜனங்களுக்காக என்று ஜிகினாவேலை செய்து வெளிவரும் அறிக்கை, திட்டம் எல்லாம் லுலுலாயிக்கு! 

வாணலியில் இருந்து எரியும் அடுப்புக்குள்!

ஆஹா! இவ்வளவு சுளுவாகப் பிரச்சினையைத் தீர்த்து விட்டார்களே என்று சந்தோஷப்பட்டுக் கொள்ள முடியாதபடி சிவசேனாவின் பிரசித்தி பெற்ற ஓட்டை வாய் இருக்கிறதே! வாயைத்திறக்காத வரை ஒற்றுமை ஒட்டுவேலை நிற்கும்! வாயைத்திறந்து கூட்டாளிகளைக் குறை சொல்கிற வேலையை ஆரம்பிக்காமல் அமைதி காப்பார்களா என்ற கேள்விக்கு பதில்  9  ரூபாய் நோட்டு மாதிரித் தான்!


சிவசேனாவுக்கு வேறுவிதமான குடைச்சல்கள் ஆரம்பம்! ஆயிரம் உள்நோக்கங்கள் சொன்னாலும் இது மாதிரியான ரெய்டுகளும் அவசியம்தான்! அரசியல் வாதிகளுடைய உண்மையான முகங்களை வேறெப்படி தெரிந்து கொள்வீர்களாம்?

  
கரு*நாடக" அரசியலில் எடியூரப்பா கட்சித் தலைமை, அறிவிக்கப்பட்ட கொள்கை இவைகளுக்கு எதிராக 2வது ரவுண்டிலும் ஜெயித்திருக்கிறாரோ? குமாரசாமி அரசைக் கவிழ்க்க உதவிய, தகுதி நீக்கம் செய்யப்பட்ட காங்கிரஸ் மற்றும் JDS  கட்சி MLAக்களில் 16 பேர் பிஜேபியில் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். (பெங்களூரு  IMA PONZI மோசடிப்புகாரில் சிக்கிய ரோஷன் பெய்க் தவிர)         உச்சநீதிமன்றத் தீர்ப்பின் கருணையினால், காலியான தொகுதிகளில் 15 இல்  நடைபெறவிருக்கும் இடைத் தேர்தல்களில் போட்டியிடலாம் என்று ஆனதில், இவர்களில் 13 பேருக்கு சீட் கொடுக்கப் பட்டிருக்கிறது. இவர்களில் சரிபாதியாவது ஜெயித்தால் எடியூரப்பாவுக்கு சிம்பிள் மெஜாரிடி கிடைத்துவிடும் என்று சொல்கிறார்கள். பார்க்கலாம்!  

            
பாவம் சதீஷ் ஆசார்யா! கரு*நாடக" மக்கள் சரியான தீர்ப்பளிப்பார்கள் என்கிற மாதிரி நம்பிக்கையில் இப்படி வரைந்திருக்கிறார். அங்கே அப்படி இருந்ததே இல்லை என்பதை இந்தப்பக்கங்களிலேயே நிறைய எழுதியாகிவிட்டது! குமாரசாமியையே முதல்வராகத் தாங்கிக் கொண்ட கரு*நாடக" மக்கள் எடியூரப்பாவைத் தாங்கி கொள்ள மாட்டார்களா என்ன!?

மீண்டும் சந்திப்போம். 
           

ராதா ரவி! வெற்றிகொண்டான்! தீப்பொறி ஆறுமுகம்!

எத்தனையோ பிரச்சினைகள் இருக்க நேற்று முழுதும் திமுகவின் பெண்ணுரிமை முன்னிறுத்தலில் ராதாரவி கட்சியிலிருந்து தற்காலிக நீக்கம் செய்யப்பட்ட ஒரே விஷயம் தான் தீப்பற்றி எரிந்த பரபரப்புச் செய்தியாக இருந்ததோ? என்ன மாதிரியான ஊடகங்களுடன், என்னமாதிரியான சமூகத்தில் வாழ்கிறோம் நாம் என்று எவரும் கவலைப்பட்ட மாதிரித் தெரியவில்லை. முகநூலில் இன்று காலை பார்த்த ஓர் பகிர்வு தொடர் கேள்விகளாக சிந்தனையில் பழைய நினைவுகளைத் தூண்டிவிட்டது என்றே சொல்ல வேண்டும்.


பெண்ணுரிமை முன்னிறுத்தும் திமுகவாம்! இது எப்போதிலிருந்து என்று யாருக்காவது தெரியுமா? 

பாத்திமாபாபுவுக்கு கிடைக்காத…

சொந்த கட்சி பெண்ணின் இடுப்பை கிள்ளிய பொழுது கிடைக்காத……

பியூட்டிபார்லர் பெண்களுக்கு கிடைக்காத………

பெரியகருப்பன் ஐஸ் புரூட் பெண்ணுக்கு கிடைக்காத…… 

அன்பழகன் மகளின் தோழிக்கு கிடைக்காத……
செந்தாமரை மனைவிக்கு கிடைக்காத……

(SSR) ராஜேந்திரன் மனைவிக்கு கிடைக்காத………

முன்னாள் பெரம்பலூர் திமுக எம்.எல்.ஏ வன்மம் செய்த பெண்ணுக்கு கிடைக்காத…

சாதிக் பாட்ஷா மனைவிக்கு கிடைக்காத…

வைரமுத்துவால் சீரழிக்கபட்டவர்களுக்கு கிடைக்காத…

சட்டப்பேரவையில் துரைமுருகனால் நிகழ்த்தப்பட்ட மானபங்கத்தில் கிடைக்காத……

கருணாநிதியின்  பாவாடை நாடா  பேச்சால் கிடைக்காத……

அண்ணாதுரை முற்றும் துறந்த பேச்சில் கிடைக்காத……

#பெண்ணியம் நியாயம்  தற்பொழுது நயன்தாராவுக்கு மட்டும் கிடைக்கிறதே என்று முகநூலில் ஆச்சரியம் கொள்கிறார் ஒரத்தி அன்பரசு! இதில்  ஆச்சரியம் ஒன்றுமில்லை! தங்கள் மீது திரும்பும் கேள்விகளை திசைதிருப்ப, தங்கள்பக்க ஓட்டைகளை மறைக்கக் கிடைத்த வாய்ப்பைத் திமுகழகம் சரியாகவே பயன் படுத்திக் கொண்டிருக்கிறது என்பதை சமூகம் இப்போதாவது புரிந்துகொண்டால் சரி!

தொடர்புடைய முந்தைய பதிவு ராதாரவி நீக்கம்! திமுக தூய்மையாகிவிட்டதா என்ன?

நடிகவேள் எம் ஆர் ராதா அந்தநாட்களில் எழுப்பிய கலகக்குரல் இன்றைக்கும் கொண்டாடப்படுவதற்கு  தனித்த காரணங்கள் சில உண்டு. சினிமாவில் இருந்து கொண்டே சினிமாக்காரனை நம்பி மயங்காதே என்று சொல்கிற துணிச்சல் அவருக்கு இருந்தது. நடப்பு நிலவரங்களை,  அரசியல் விஷயங்களைப் போகிறபோக்கில் ஒரு கோடிகாட்டிவிட்டு பகடி செய்வதில் அவருக்கிருந்த திறமையில், வக்கீலுக்குப் படித்த மகன் (ராதா)ரவியிடத்தில் நூற்றில் ஒரு பங்குகூட இல்லை. ஆனாலும் ஏட்டிக்குப் போட்டியாக, இரட்டை அர்த்தம் தொனிக்கிற சங்கதிகளாகப் பொதுவெளியில் தொடர்ந்து பேசியே தன்னை லைம் லைட்டில் தக்கவைத்துக் கொண்டார் என்பதில் அவர் சாமர்த்தியம் ஒன்றுமில்லை. திராவிட இயக்கத்தின் வளர்ச்சியே அப்படி  அப்பட்டமான ஆபாசப்பேச்சில் தான் இருந்தது என்பதும் அதற்கிடம் கொடுத்து ஆரவாரம் செய்து ஆதரிக்கவும் ஜனங்களில் ஒருபகுதியினர் தயாராக இருந்ததும்தான் காரணம்! இதை இப்போதாவது புரிந்துகொள்ள முடிந்தால், சமூகத்துக்கு இனி விடிவுகாலம்தான்! ராதாரவியைக் கழற்றி விட்டதும் கூட நயன்தாராவுக்காக மட்டுமே இல்லை, வேறு சில அரசியல் காரணங்களும் இருக்கின்றன என்ற தகவலும் உண்டு.  

வலையெழுத்து, பத்தி எழுத்து இவைகளில் என்னை மிகவும்  கவர்ந்தவர் திரு R P ராஜநாயஹம். முகநூலில் தான் முன்பு ஆபாசப்பேச்சின் வெற்றிகொண்டான் குறித்து  எழுதிய வலைப்பதிவு ஒன்றைச் சுட்டிக் காட்டியிருக்கிறார். அவரிடம்  அனுமதி பெறவில்லை என்றாலும், சொன்னால் ஏற்றுக்கொள்வார் என்கிற நம்பிக்கையில், அவருக்கு நன்றி தெரிவித்து இங்கே பகிர்கிறேன். இது அவருடைய வலைப்பதிவில் 2009 டிசம்பரில் எழுதியது.

வெற்றி கொண்டான்

“LIVE IN SECLUSION. SHOW NO INTEREST IN POLITICS AND THE COMMUNITY.”
- EPICURUS


திருநாவுக்கரசரின் குற்ற உணர்வு இன்னும் தீர்ந்து தெளிந்த பாடில்லை . தவிக்கிறார்...
தத்தளிக்கிறார் ..தக்காளி விக்கிறார்... அவருடைய குலதெய்வம் எம்ஜியார் ஆதியில் இருந்த 
கட்சி காங்கிரஸ் என்று கண்டுபிடித்து,அதில் இணைந்ததில் மிகவும் சந்தோசப் படுவதாக,
பெருமைப்படுவதாக சொல்லிவிட்டார்.

1940களில்எம்ஜியார் கதர் உடுத்தி காங்கிரஸ்காரராக, ருத்ராட்ச மாலை, நெற்றியில் திருமண் 
என்று இருந்தவர் தான் .ஆனால் அவருக்கு பெரிதாய் அரசியல் ஆர்வம் ,ஈடுபாடு,நோக்கம் ஏதும் 
கிடையாது என எம் .ஆர் .ராதா சொல்வார் . அவருக்கு சினிமாவில் எப்படியாவது முன்னுக்கு வர 
ஆர்வம் இருந்தது .உடம்பை மிகவும் கவனமாக பேணுவதில் அக்கறை இருந்தது . மது,சிகரட் 
கிடையாது .அப்போது மராட்டிய சிவாஜியாக எம்ஜியாரை நாடகத்தில் நடிக்க வைக்க வேண்டி 
பெரியார் விரும்பி சொல்லி விட்டாராம் . எம்ஜியாருக்கு அரசியல் சாயம் பூசிக்கொள்ள 
விருப்பமில்லாததால் மறுத்து விட்டார் . பின்னர் ஈ.வி . கே சம்பத் தான் சிவாஜியாக 
நாடகத்தில் நடித்தாராம்.அதன் பின்னர் வி .சி .கணேசன் அந்த நாடகத்தில் சிவாஜியாக நடித்து 
பெரியார் வாயால் சிவாஜி கணேசன் என அழைக்கப்பட்டு பிரபலமாகி திரையுலகிலும் சிவாஜி 
கணேசன் ஆனார். 

எம்ஜியார் முதல் முறையாக முதல்வர் ஆனபோது நடந்த விஷயம் நினைவிற்கு வந்தது. 
எம்ஜியார் தன் அரசியல் பிரக்ஞை ரொம்ப பழைமையானது என வலியுறுத்த வேண்டி ' அன்றைய 
தினம் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது, மகாத்மா காந்தி அவர்கள் 
உண்ணாவிரதம் இருந்த போது, நானும் உண்ணாவிரதம் இருந்தேன் ' என என்னத்தையோ 
உளறினார். உடனே வெற்றிகொண்டான் இதை தன் பாணி தாக்குதலுக்கு பயன்படுத்திக்
கொண்டது இப்படி ! " குல்லாக்காரப்பய வாயத்தொறந்தாலே புழுகித்தள்ளுறான்! காந்தியும் 
நானும் ஒண்ணா ஒரே மேடையிலே உண்ணாவிரதம் இருந்தேன்னு சொல்லுறாய்யா! இவன் 
பொய்யுக்கு அளவே இல்லாம போயிடிச்சே! நான் கூட நம்ம கோடம்பாக்கம் காந்தி கிட்டே 
" ஏலே ! நீயாடா? உன்னோட குல்லாக்காரன் சேர்ந்து ஏதும் உண்ணாவிரதம் இருந்தானாடா?"ன்னு 
கேட்கிறேன் .அவன் பதறிப் போய் " சத்தியமா நான் இல்லே அண்ணே ..." ன்னு புலம்புறான் . 
குல்லாக்காரப்பய மகாத்மா காந்தியாத்தான்யா சொல்றான் !"


(காந்தியார் உண்ணாவிரதம் இருக்கிறபோதெல்லாம் நாடெங்கும் பலரும் அப்போது 
உண்ணாவிரதம் இருப்பார்கள் தான்.)

குல்லாக்காரப்பய.... குல்லாக்காரப்பய என்று எம்ஜியாரை கோமாளியாக சித்தரித்து 
வெற்றி கொண்டான் அப்போது கூட்டத்தை சிரிக்கவைத்து பலருக்கு வயிறே புண்ணாகி விடும் .

எம்ஜியார் திடீரென்று " நான் மன்றாடியார் பரம்பரை " என்றார் .கருணாநிதி தன் பதிலாக " ஆம் . 
டெல்லியில் மன்றாடிய பரம்பரை !"என்றார் .
அப்போது திமுக மேடைகளில் வெற்றி கொண்டான் செய்த கலாட்டா -" நான் பக்தவத்சலத்தை 
பார்க்கப் போயிருந்தேன். அவர் அழுது கொண்டே சொன்னார் .
" இந்த குல்லாக்காரப்பய என்ன நிம்மதியா சாக விடமாட்டான் போல இருக்குப்பா.''
" ஏன்யா இப்படி கவலைப்படுகிறீர்கள் ?" என்று நான் கேட்டேன் .
பெரியவர் பக்தவத்சலம் விம்மிக்கொண்டே சொன்னார் " திடீர்னு குல்லாக்காரன் 'நான் 
முதலியார் . பக்தவத்சலம் தான் எங்க அப்பா' ன்னு சொல்லிட்டா என்ன செய்யறது ?"
தமிழக முதல்வர் ஆக இருந்த காலத்தில் பத்திரிகைகளில் கார்ட்டூனில் பக்தவத்சலத்தை 
குரங்கு போலவே வரைவார்கள் .ஜெயந்தி நடராஜனின் தாத்தா.


மோகன் குமாரமங்கலம் விமான விபத்தில் மறைந்த மறு நாள் மதுரை ஆரப்பாளயத்தில் நடந்த 
திமுக கூட்டத்தில் வெற்றி கொண்டான் பேசியது :
கடவுள் மோகன் குமாரமங்கலத்திடம் கேட்டார் " மோகன்! நீ கலைஞரை ரொம்ப திட்டுற .
மோகன் குமாரமங்கலம் பதில் : ஆமா கடவுளே . அது தான என் வேலை . திமுக வை எம்ஜியாரை 
வைத்து உடைத்ததே என் வேலை தான் . இந்திராகாந்தி இந்த மாதிரி வேலை செய்யறதுக்காகவே 
என்ன மத்திய மந்திரியாக்கி வச்சிருக்கு கடவுளே !
கடவுள் : மோகன் !நீ இந்த மாதிரி வேலையை நிறுத்து . கலைஞரை திட்டாதே .
மோகன் : முடியாது கடவுளே !
கடவுள் : அப்ப நீ கலைஞரை திட்டுவே ?
மோகன் : ஆமா கடவுளே !
கடவுள் : திட்டுவ நீ ?
மோகன் : ஆமா திட்டுவேன் .
கடவுள் : சரி நீ ஏறு ப்ளேன்னுலே !!

எம்ஜியார் ஆட்சியில் முதல் முறையாக கருணாநிதி கைது செய்யப்பட்ட நிகழ்வைப் பற்றி 
வெற்றி கொண்டான் : மாஜிஸ்ட்ரேட் சொன்னார் ' கருணாநிதியை கைது செய்ய 
உத்தரவிடுகிறேன் '. அப்படி சொன்னது தான் தாமதம் . அந்த கோர்ட்டுக்கு எதிரே
 ஒரு ஓட்டல் .நல்ல பெரிய ஓட்டல் . நீங்க ஓட்டல்காரன் கிட்டே இப்ப கேளுங்க . இன்னைக்குப் 
போயி கேளுங்களேன் . அவன் சொல்வான் ." இந்த இடத்திலே தான் என் ஓட்டல் இருந்துச்சி " 
ஓட்டல் இருந்த இடத்த கை நீட்டி காட்டி இன்னைக்கும் சொல்றான் .
" இந்த இடத்திலே தான் என் ஓட்டல் இருந்துச்சி "

( கருணாநிதி கைது உத்தரவைக் கேட்டவுடன் கொதித்துப்போய் ஆவேசத்தில், உடனே ,உடனே 
உடன் பிறப்புகள் ஓட்டலை அடித்து நொறுக்கி விட்டார்களாம்..இப்போ வெறும் பொட்டல் தான்.
ஓட்டல் கட்டிடம் தூள் தூளாகி விட்டது என்று அர்த்தம் !)

நாவலர் நெடுஞ்செழியன் பற்றி வெற்றி கொண்டான் : அது ஒன்னு இருந்துச்சுய்யா எங்க கிட்டே . 
நல்லா நெடு ,நெடுன்னு , கொழு ,கொழுன்னு .. அடிச்சி பிரியாணி பண்ணியிருந்தா அம்பது 
பேர் சாப்பிட்டிருக்கலாம்.விட்டுப்புட்டோம்.
திருச்சி திமுக கூட்டமொன்றில் சில வருடங்களுக்கு முன் ஜெயலலிதாவின் வீடு பற்றி வெற்றி கொண்டான் : டே! உன் தலைவி ஜெயலலிதா வீட்டுக்கு வேதா நிலையம்னு பேர் எப்படி வந்துச்சி தெரியுமா. வேதாசலம் முதலியார்னு மதுராந்தகத்துலே ஒர்த்தன். அவன் தான் ஜெயலலிதா அம்மா சந்தியாவை கொஞ்ச நாள் அந்த காலத்திலே ஓட்டிக்கிட்டு இருந்தான். அவன் கிட்ட இருந்து புடுங்குன வீடு தான்  உன் தலைவியோட ' வேதா நிலையம் '!


எழுத்தில் கொண்டுவர முடிந்த ஆபாசப்பேச்சு கொஞ்சம் தான்! மேடையில் வெற்றிகொண்டானும் தீப்பொறி ஆறுமுகமும் செய்கிற கொனஷ்டைகளோடு சேர்த்துக் கேட்டால் ஆபாசம் உச்சத்தைத் தொடும். 

எஸ் எஸ் சந்திரன் என்ற  நகைச்சுவை நடிகனை நினைவிருக்கிறதா?
வெற்றிகொண்டான் தீப்பொறி ஆறுமுகங்களின் கொஞ்சம் மென்மையான சினிமா வெர்ஷன் (சென்சார் இருந்ததால்!)

திராவிடமாயையில்  கொள்கை கோட்பாடெல்லாம் வெறும் சொல் அலங்காரம் மட்டும் தான்! ஆபாசப் பேச்சு முழக்கத்திலேயே முன்னுக்கு வந்தவை  திராவிட கழகம், திமு கழகம் எல்லாம்! 
      

திராவிட மாயை! தெரிகிறதா? புரிகிறதா?

திராவிட மாயை என்றால் என்ன? புரிந்துகொள்வது வெகு எளிது!
இலங்கை கடற்படையினரால் #மீனவர்கள் தாக்கப்படும் சம்பவங்கள் எல்லா காலத்திலும் நடந்துதான் இருக்கிறது. 'சில பேராசை கொண்ட மீனவ மக்கள் கடல் எல்லையை தாண்டி செல்லும்போது உயிரை இழக்கும் நிலை ஏற்படுகிறது- முன்னாள் முதல்வர் #கருணாநிதி₹#.

இப்படி முகநூலில் படம்போட்டு விளக்கியிருக்கிறார் சுரேஷ் குமார் ராஜபாண்டியன்! அதை இலக்கண சுத்தமாக விவரிப்பதென்றால், வசதிப்படுகிற ஓரிரு இடங்களில் மட்டும் உண்மையையும், மீதிநேரங்களில் பொய்புனை சுருட்டையும் அள்ளிவிடுகிற கலைக்குப் பெயர் திராவிடம்,  திராவிடமாயை!  

Narain Rajagopalan ஆழ்ந்த சிந்தனையிலிருப்பதாக உணர்கிறார்.1 மணி நேரம்
தமிழ்நாட்டில் ஒரு எம்.பி தொகுதி = 6 எம்.எல்.ஏ தொகுதி.
2014-இல் தர்மபுரி, கன்னியாகுமரி தவிர்த்து அவ்விரு கட்சிகளும் சட்டமன்ற தொகுதிகளை வெல்லவில்லை. மற்ற கட்சிகளின் நிலைமை அதை விட பரிதாபம். 1% கீழே ஓட்டு வாங்கிய, எங்கே நின்றாலும் டெபாசிட்டை கூட வாங்க முடியாத கட்சிகள் தான் இங்கே ஏராளம்.
2014 to 2016 to 2019ல் குறைந்த பட்சம் அதிகாரத்தினை கைப்பற்றிய கட்சிகள் அதிமுக, திமுக, காங்கிரஸ், பாஜக, பாமக, முஸ்லீம் லீக் மட்டுமே. கருணாஸ், தனியரசு, தமிமூன் அன்சாரி கதைகள் தனி.
ஆனால், இரண்டு கூட்டணியிலும், வலுக்கட்டாயமாக முரண்டு பிடித்து, சீட் வாங்கி இருக்கும் பெரும்பாலான கட்சிகள் ஒரே ஒரு சட்டமன்ற தொகுதி கூட சமீபத்தில் வென்று இருக்கவில்லை என்பதும், மொத்தமாய் கூட்டினாலும் 10% மேல் இரண்டு பக்கங்களின் கூட்டணி கட்சிகளின் வாக்கு வங்கி தேறாது என்பதும் தான் ஆகப் பெரிய நகைமுரண். மக்கள் நிராகரித்த, ஒரங்கட்டிய, கண்டு கொள்ளாத ஆட்களை எல்லாம் இரண்டு அணிகளும் தத்தமது தேவைகளுக்கு ஏற்ப திரட்டி, வலிமை காட்டுகின்றன. இது இரண்டு விதமான செய்திகளை சொல்கிறது.
1 ) திமுகவோ, அதிமுகவோ அடிக்கிற பேரலையில் கூட சேர்ந்து ஒட்டிக் கொண்டால், தாங்களும் கரை சேரலாம் என்று சிறிய கட்சிகள் நினைக்கலாம்.
2 ) திராவிட அரசியல் கட்சிகளுக்கோ, தங்கள் இருவருக்குமான வேறுபாடு என்பது 2016-இல் 1% என்பதும், அந்த ஒரு விழுக்காடு இந்த மாதிரி சிறிய கட்சிகளின் வழியாக வந்தால் கோலோச்சலாம் என்று நினைக்கலாம்.
கூட்டணி கணக்குகள், பேரங்கள், இலாப நட்டங்கள், குழிப் பறித்தல், ஒரங்கட்டல், வேலை செய்யாமல் இருத்தல், மாற்றி குத்துதல் என சகல செளபாக்கியங்களோடும் அணிகள் திரண்டு கொண்டு இருக்கின்றன.
மக்கள், தாங்கள் நிராகரித்தவர்கள் எல்லோரையும், எந்தெந்த அணியில் யார் யார், யார் யாரை வசை பாடினார்கள் என்பதையும், மேடையில் வாய் மணக்க பேசினாலும், களத்தில் எதிர் எதிராக நிற்கும் கட்சிகள் என்பதையும் வழக்கம் போல பார்த்துக் கொண்டு உள்ளுக்குள்ளேயே தங்களுக்கான கணக்கினைப் போட்டுக் கொண்டு, நமுட்டு சிரிப்பு சிரித்துக் கொண்டு, தங்களுடைய வேலையை பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். இந்திய வாக்காளனை எடை போடுவது அவ்வளவு எளிதல்ல.
PS: உடனே நண்பர் அப்துல்லா எழுதிய நினைவோடையான கலைஞர் “கம்யூனிஸ்டுகள் இல்லாத சட்டமன்றம்” என்று கலங்கினார் என்பதை தூக்கிக் கொண்டு வராதீர்கள். மக்களுடைய நிராகரிப்பினை எந்த மட்டையடியினை கொண்டும் ஜஸ்டிஃபை செய்ய முடியாது. மக்கள் தான் எஜமானர்கள், அவர்கள் சொல்கிற தீர்ப்பு தான் இறுதியானது.    

இதை எழுதியிருப்பவர் திமு கழக ஆதரவாளர் அல்லது முழுக்க நனைந்த உபி! எதுவென்று எனக்குத்தெரியாது! தெரிந்துகொள்ள விருப்பமுமில்லை.

முழுக்க நனைந்த உபியோ. முக்காடு உபியோ, பல  சமயங்களில் திராவிட மாயை விலகி கள யதார்த்தம் புரியவருகிறபோது, இப்படியும் வரும்! நிலைக்காது என்பது அரசியலில் நான் பார்த்துக் கொண்டிருக்கிற ஆகப்பெரிய பரிதாபம்!
      


காங்கிரஸ், கழகங்களின் கலாசாரம் பிஜேபிக்கும் கொஞ்சம் தொற்றிக்கொண்டு வருகிறதோ?  

கொஞ்சம் கவலையோடு இந்த அரசியல் அநாகரீகங்களைக் கவனிக்க வேண்டியிருக்கிறது.



மண்டேன்னா ஒண்ணு! தேர்தல் அரசியல்!

தமிழக தேர்தல்களம் தயாராகி வருவதில் நிறைய வேடிக்கைகளும், குழப்பங்களும் இருப்பது வெளிப் பட்டுக் கொண்டிருக்கிறது. விசிகவுக்கு 2 தொகுதிகள் என்று திமுக கூட்டணியில் உறுதியாகி விட்டதாக செய்திகள் வந்தாலும் ஜெயலலிதா பாணியில் விசிக திமுக சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும் என்ற  நிபந்தனையை விசிக தாண்டிவருமா என்பது இன்னமும் தெளிவாகவில்லை என்கிறார்கள் இங்கே மதிமுக இன்னமும் முறுக்கிக் கொண்டுதான் இருக்கிறது போல! புஸ்வாணம் ஆகிப்போன பின்னாலும் எதற்கு இந்தக் கோமாளித்தனம்?

அதுதானையா தமிழ்நாடு அரசியல்!   
திமுக அதிமுக இரண்டு தரப்பிலுமே யார் பலமான கூட்டணி அமைப்பது என்பதில் நிலவிய போட்டியில் ஆரம்பத்தில் இருந்த வலுவான மெகா கூட்டணி என்ற இமேஜ் திமுகவுக்கு இருந்ததைக் கோட்டை விட்டு விட்டார்கள்!  கூட்டணி வேறு தொகுதிப்பங்கீடு வேறு என்று சப்பைக்கட்டு ரெடியாக இருக்கவே இருக்கிறது!  

வைகோ / திருமாவளவன் உதயகுமார்/டேனியல் காந்தி/
பியூஸ் மணுஷ்/மனுஷ்யபுத்திரன் பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜன்/
P.R. பாண்டியன்/அய்யாக்கண்ணு மதிமாறன் /தியாகு/ கௌதமன்
தூத்துக்குடி பாத்திமா /சுந்தரவள்ளி தோழி புவனேஸ்வரி/ தோழி ரோகிணி
சைமன் செபாஸ்டியன்/ வேல்முருகன் சுப.வீரபாண்டியன் / வீரமணி/ வைரமுத்துதாமஸ் பாண்டியன் / அருணன் / வளர்மதி பாரதிராஜா /அமீர்/ மக்கள் அதிகாரம் இடது & வலதுகள் மசூதிகள் & சர்ச்சுகள் 
நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இவர்களின் ஆதரவுடன்தானே திமுக காங்கிரஸ் கூட்டணி,நாடாளுமன்றத் தேர்தலைச்சந்திக்கப் போகிறது? எந்தக் கொள்கையும் இல்லை!எந்த புண்ணாக்கும் இல்லை!.நாட்டின் வளர்ச்சியின் மீது எந்த அக்கறையும் இல்லை!

இப்படி முகநூலில் மகேந்திரன் மகி என்பவர் தமிழக அரசியலின் பரிதாபங்களை புட்டுப் புட்டுவைக்கிறார்! 
இல்லாத பூச்சாண்டி ஒன்றைக் கற்பனை செய்து பூதாகாரமாக்குவது! ஒயிக! ஒயிப்போம்! என்று கூக்குரல் எழுப்பவேண்டியது! இதுதானே திராவிடங்கள் ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக, கட்டிக் காப்பாற்றிவரும் திராவிட மாயை! 

இவர்களோடு சேர்ந்து சனாதன வேரறுப்போம் என்று விசிக  கூவியே ஒரு இரண்டு சீட்டைப் பிடித்தாயிற்று! நரேந்திர மோடியை பூதமாக்கி ஒயிக! மோடியே ஓடிப்போ! எங்க ஏரியா உள்ளே வராதே என்று கூவுகிறவர்கள் எல்லோரும் இன்று ஒரே அணியில் என்பதற்குமேல், இவர்களிடம் ஆதரிக்கக் கூடிய, ஆதரிக்க வேண்டிய ஒரு நல்ல விஷயமாவது இருக்கிறதா?  

கும்பலாகச் சேர்ந்து நரேந்திர மோடியை இவர்கள் எதிர்ப்பது ஏன்? பரப்புரை செய்கிற விஷயங்களை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால், இவர்கள் ஒவ்வொருவரும் மோடியால் ஏதோ ஒரு வகையில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள், அல்லது மோடியை முன்னிறுத்தி பிஜேபி வளர்வது தங்களுடைய இருப்புக்கே உலைவைத்துவிடும் என்ற அச்சத்தைத் தவிர வேறு என்ன இருக்கிறது?

இந்தக் கும்பல் எதிர்ப்பதாலேயே நரேந்திர மோடியை  ஆதரிப்பது ஒன்றுதான் சரியான முடிவு என்று சொன்னால் சரியா? தவறா? 

கொஞ்சம் சொல்லுங்களேன்!

                    

தேர்தல் சடுகுடு! வீரமணி கதைப்பு! ஆக ஆக ஆக!

இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்ட போது மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் இன்னும் பல ’சிக்ஸர்கள்’ உள்ளதாக சூசக அறிவிப்பளித்திருந்தார். இது உண்மை என நிரூபிக்கும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி அரசு சமர்பித்த இடைக்காலப் பட்ஜெட்டில் பல புதிய அறிவிப்புகளும், சலுகைகளும் சிக்ஸர்களாக அடிக்கப்பட்டுள்ளன.
இடைக்காலப் பட்ஜெட் தாக்கல் செய்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பல புதிய அறிவிப்புகளும், சலூகைகளையும் அளித்துள்ளார். குறிப்பாக வருமான வரி வரம்பு ரூ. 2.5 லட்சம் முதல் ஐந்து லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது என்று ஹிந்து நாளிதழில் ஷபிமுன்னா ஆரம்பிக்கும்போதே கிரிக்கெட் மேட்ச் பரபரப்பு அரசியல் தளத்திலும் பற்றிக் கொண்டு தேர்தல் களம் ரெடியாகிறவிதம் இங்கே நம்மூரு சேனல்களில் விவாதம் செய்கிறவர்களுக்குப் புரியுமோ என்னவோ?  
அரசியல் கிரிக்கெட்டை விட அதிவேகமான அதிரடித் திருப்பங்கள், சஸ்பென்ஸ் நிறைந்த விளையாட்டாக்கும்!  
ஐந்து நாட்களுக்கு முன்னால் டாக்டர் சுப்ரமணியன் சுவாமி பிரியங்கா வாத்ரா பற்றி சில விஷயங்களைக் கொளுத்திப் போட்டிருக்கிறார். இந்த வீடியோ ஹிந்தி, ஆங்கிலம் இருமொழிகளிலும் விஷயம் இன்னதென்று சொல்லி விடுகிறது. 

திராவிடர் கழக வீரமணிகளுக்கோ வேறுவிதமான கவலை பதைப்பு!இந்தச் செய்தியைக் கொஞ்சம் பாருங்கள்! கேட்கிறவன் கேணையனாக இருந்தால் திராவிடங்கள், பகுத்தறிவு இந்த மாதிரி டகால்டி வேலையைத்தான் செய்யுமோ?
பாபர் மசூதி இடித்ததின் விளைவுதான் உலகில் பயங்கரவாதம் பற்பல நாடுகளிலும் மற்ற மதங்களிலும் தீவிரவாதிகளான பின்லேடன் போன்றவைகளைத் தோற்றுவிக்க அமைந்த காரணங்களாகும். விதை இங்கே போடப்பட்டது; வன்முறை பயங்கரவாதம் உலகமயமானது - அமெரிக்க 'இரட்டை கோபுர' இடிப்புக்குப் பின்!  
சீரியசாகவே பேசிக்கொண்டிருந்தால் எப்படி? கொஞ்சம் சிரிக்க பொன் மாலை பொழுது மாணிக்கம் ஆக ஆக வைத்து  ஒரு கிச்சுகிச்சு மூட்டுகிறார்!
நாமெல்லாம் கண்ணால வீட்டிலேயே கட்டிக்கொண்டு அழும் கூட்டம், துக்கவீட்டைக்கண்டால் சும்மா இருக்க முடியுமா...?
.............. வெச்சு செஞ்சாவுது. யாரோ ஒரு புண்ணியவானின் கமெண்ட் - VKR dhaan Durai Murugan.... :-))))
ஆக க்கும் ஒரு சோர்ஸ் இருந்துருக்கு...
#ஆக_அக்கப்போருகள்
முகநூலில் இருந்து வீடியோ லிங்கை எடுத்து கூகிள் பிளஸ்சில் பகிர்ந்திருக்கிறார். அதை இங்கே பகிர்வது எப்படி என்று எனக்குத்தெரியவில்லை!

#துண்டுச்சீட்டு #இல்லாமல் #ஸ்டாலின் #உச்சரிக்கும் #ஒரே #வாசகம்... ஆக... ஆக... #STalin #MKStalin #dmk
திமுக., தலைவரும் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் மகனுமான மு.க.ஸ்டாலின், துண்டுச்சீட்டு வைத்துக் கொண்டே, தப்பும் தவறுமாக பேசுவதில் கெட்டிக் காரராகத் திகழ்ந்து வருகிறார். பழமொழிகள் சொல்வதில் ‘கைதேர்ந்தவர்’ என்று பெயர் பெற்றிருக்கும் மு.க.ஸ்டாலினை…

கற்றுக்கொள்ளவேண்டியது எத்தனை இருக்கிறது?