வெள்ளிக்கிழமைக் கேள்விகள்! #திராவிடமாயை மகா அரசியல்!

நேற்று முழுவதும்  கரு"நாடக" அரசியலைப்பற்றியோ மஹாராஷ்டிரா இழுபறியைப் பற்றியோ எதுவும் எழுதவேண்டாமே என்று பல்லைக் கடித்துக் கொண்டு பதிவு எழுதுவதையே தவிர்த்தேன். ஆனால்  இங்கே திராவிடங்கள், பல்லக்குத்தூக்கும் ஊடகங்கள் வரிசையாக வீடுகட்டி ஐஐடி மாணவி ஃபாத்திமா தற்கொலை செய்துகொண்டதை வைத்து எப்போதும் போல பிணந்தின்னி அரசியல் செய்ய ஆரம்பித்ததைப் பார்த்ததில் வெறுத்துப்போய், இதற்கு மகா இழுபறியோ  கரு"நாடக"  அரசியலோ இவை கொஞ்சம் பரவாயில்லையே என்றெண்ண வைத்து விட்டது.


வீடியோ இரண்டரை நிமிடம்தான்! சிவசேனா, NCP, இரு கட்சிகளும் ஆளுக்கு இரண்டரைவருடம் முதல்வர், காங்கிரசுக்கு சபாநாயகர், மற்றும் துணைமுதல்வர் பதவி முழு 5 வருடத்துக்கு, மூன்று கட்சிகளுக்கும் சமமாக 14 மந்திரி பதவிகள்! சிவசேனா அயோத்தி தீர்ப்பைப் பற்றிப் பேசக்கூடாது இதுதான்  CMP காமன் மினிமம் ப்ரோக்ராம் என்று முடிவுசெய்து விட்டார்களாம்! அடுத்துவரும் நாட்களில் ஜனங்களுக்காக என்று ஜிகினாவேலை செய்து வெளிவரும் அறிக்கை, திட்டம் எல்லாம் லுலுலாயிக்கு! 

வாணலியில் இருந்து எரியும் அடுப்புக்குள்!

ஆஹா! இவ்வளவு சுளுவாகப் பிரச்சினையைத் தீர்த்து விட்டார்களே என்று சந்தோஷப்பட்டுக் கொள்ள முடியாதபடி சிவசேனாவின் பிரசித்தி பெற்ற ஓட்டை வாய் இருக்கிறதே! வாயைத்திறக்காத வரை ஒற்றுமை ஒட்டுவேலை நிற்கும்! வாயைத்திறந்து கூட்டாளிகளைக் குறை சொல்கிற வேலையை ஆரம்பிக்காமல் அமைதி காப்பார்களா என்ற கேள்விக்கு பதில்  9  ரூபாய் நோட்டு மாதிரித் தான்!


சிவசேனாவுக்கு வேறுவிதமான குடைச்சல்கள் ஆரம்பம்! ஆயிரம் உள்நோக்கங்கள் சொன்னாலும் இது மாதிரியான ரெய்டுகளும் அவசியம்தான்! அரசியல் வாதிகளுடைய உண்மையான முகங்களை வேறெப்படி தெரிந்து கொள்வீர்களாம்?

  
கரு*நாடக" அரசியலில் எடியூரப்பா கட்சித் தலைமை, அறிவிக்கப்பட்ட கொள்கை இவைகளுக்கு எதிராக 2வது ரவுண்டிலும் ஜெயித்திருக்கிறாரோ? குமாரசாமி அரசைக் கவிழ்க்க உதவிய, தகுதி நீக்கம் செய்யப்பட்ட காங்கிரஸ் மற்றும் JDS  கட்சி MLAக்களில் 16 பேர் பிஜேபியில் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். (பெங்களூரு  IMA PONZI மோசடிப்புகாரில் சிக்கிய ரோஷன் பெய்க் தவிர)         உச்சநீதிமன்றத் தீர்ப்பின் கருணையினால், காலியான தொகுதிகளில் 15 இல்  நடைபெறவிருக்கும் இடைத் தேர்தல்களில் போட்டியிடலாம் என்று ஆனதில், இவர்களில் 13 பேருக்கு சீட் கொடுக்கப் பட்டிருக்கிறது. இவர்களில் சரிபாதியாவது ஜெயித்தால் எடியூரப்பாவுக்கு சிம்பிள் மெஜாரிடி கிடைத்துவிடும் என்று சொல்கிறார்கள். பார்க்கலாம்!  

            
பாவம் சதீஷ் ஆசார்யா! கரு*நாடக" மக்கள் சரியான தீர்ப்பளிப்பார்கள் என்கிற மாதிரி நம்பிக்கையில் இப்படி வரைந்திருக்கிறார். அங்கே அப்படி இருந்ததே இல்லை என்பதை இந்தப்பக்கங்களிலேயே நிறைய எழுதியாகிவிட்டது! குமாரசாமியையே முதல்வராகத் தாங்கிக் கொண்ட கரு*நாடக" மக்கள் எடியூரப்பாவைத் தாங்கி கொள்ள மாட்டார்களா என்ன!?

மீண்டும் சந்திப்போம். 
           

2 comments:

  1. >>> பிணந்தின்னி அரசியல் .. <<<

    சரியாகச் சொன்னீர்கள்..

    இனி திருவள்ளுவரை விட்டு விடுவார்கள்..

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் துரை செல்வராஜூ சார்!

      அப்படியாவது திருவள்ளுவருக்கு விமோசனம் கிடைக்கிறதே! கழக அரசியல் என்றால் இழவு அரசியல் என்பது தெரிந்த விஷயம்தானே!

      Delete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!