சண்டேன்னா மூணு! இது வேற மாதிரி! #அரசியல் #சினிமா

இங்கே அரசியல் கலப்பில்லாமல் எதுவுமே இல்லை என்பதை நம்மில் எத்தனை பேர் அறிந்திருக்கிறோம்? எல்லாவற்றிற்கும் பின்னால் ஏதோ ஒரு உள்ளரசியல் இருக்கத்தான் செய்கிறது! எப்படி என்று பார்ப்போமா?


அரசியலே ஒரு வியாபாரம்தான்! அப்படியானால் வியாபாரிகளுக்கு மட்டும்  அரசியல் இருக்கக் கூடாதா? வீடியோ 11 நிமிடம். 

    
நேற்றைக்கு முகநூலில் ஒருசில நண்பர்களிடம்  ஒருவித கேலியுடன் கூடிய பரபரப்பு! WIN News தொலைக் காட்சியில் மதன் ரவிச்சந்திரன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அருணன் (எ) கதிரேசன் சிக்கி விட்டதாக! மதன் ரவிச்சந்திரன் வளர்ந்து வருகிற ஒரு ஊடகக்காரர் என்பதைத்தாண்டி இப்படியெல்லாம் பில்டப் கொடுத்துதான் தீரவேண்டுமா? மதன் இப்படி ஒரு பில்டப் வேண்டுமென்று எவரிடமும் கேட்ட மாதிரித் தெரியவில்லை  அருணனுக்கு வெளிப்ப்டையாகத் தெரிந்த அரசியல் சார்பு இருக்கிறது! அவரால் கட்சி நிலைபாட்டைத் தாண்டி  பேச முடியாதுதான்! கேலிப் பார்வையுடன் முகனூலில் பகிர்ந்தவர்களுக்கும் ஒரு அரசியல் இருக்கத்தான் செய்கிறது. பொதுவாக இந்தியக் கம்யூனிஸ்டுகள், இடதோ வலதோ, நக்சல் குறுங்குழுக்களோ, வர்க்கப் பார்வையை அறவே மறந்து விட்டார்கள். இடதுகளுக்கும் வலதுகளுக்கும் தேர்தலில் ஒன்றிரண்டு சீட் ஜெயிப்பதே முக்கியம் என்றான பிறகு மதன் ரவிச்சந்திரன் இங்கே கேட்ட கேள்விகள் அருணன் சொன்ன பதில்கள் எல்லாமே தேவையில்லாத ஆணிகள் தான்! அருணன் சிக்கி விட்டதாகவும் மதன் அவரை வைத்து செய்துவிட்டதாகவும் நினைப்பதே பெரிய கேலிக்கூத்து! கம்யூனிஸ்ட் கட்சிகளை இது போன்ற 24 நிமிட வீடியோக்களில் எடைபோட முடியாது என்று புரிந்துகொள்வதுமே கூட ஒரு அரசியல்தான்!


திராவிடங்களுடைய அழுத்தத்தில் மதன் ரவிச்சந்திரன் வெளியேற்றப்பட்ட பிறகு காவேரி நியூஸ்  சேனல் எப்படி இருக்கிறது? யூட்யூப் சேனலில் இயங்குவது தெரியும், உங்கள் வீடுகளில் டிவியில் பார்க்க முடிகிறதா? ஆசிரியராக கார்த்திக் மாயக்குமார் உள்ளூர் திராவிடங்களோடு மோதல் வராதபடி என்ன என்னமோ செய்து சேனலை இன்னும் உயிரோடு வைத்திருக்கப் படாத பாடுபடுகிறார். ஒரு சாம்பிளுக்கு ஒரு 27 நிமிட வீடியோ. இதில் சொல்லப்படுகிற பெரும் பாலான தகவல்கள் ஊகத்தின் அடிப்படையிலானவை. ஆனாலும் தமிழில் இந்த அளவுக்கு வேறெந்த சேனலும் தகவல் சொல்லியிருக்கிறார்களா? அதுவே ஒரு அரசியல் தான் என்பதைச் சொல்லித்தான் தெரிந்து கொள்ள வேண்டுமா என்ன?

மீண்டும் சந்திப்போம்.     
             

4 comments:

  1. இதில் ஒவ்வொன்றும் மிக முக்கியமான நிகழ் கால நடப்புகளை பேசக் கூடியவை. காணொலிக் காட்சியை மதியம் பார்க்கிறேன். நீங்கள் தொடக்கத்தில் தீவிர கம்யூ ஆதரவாளராக (உண்மையான) கம்யூ சார்பாளராக இருந்தவர் என்பதனை அறிந்தவன் என்ற முறையில் கம்யூ குறித்து உங்களின் மென்மையான அணுகுமுறை எனக்கு ஆச்சரியமளிக்கவில்லை. ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தொடக்க காலத்தில் கம்யூ மக்கள் புதுக்கோட்டை பகுதியில் ட்ராக்டர் வந்த போது இவர்கள் எதிர்த்து எப்படி எல்லாம் ஆர்ப்பாட்டம் செய்தார்கள் என்று சிரித்துக் கொண்டே சொன்னது இப்போது ஞாபகத்தில் வருகிறது. ஒரு நாட்டில் வாழ்ந்து கொண்டு சீனா ரஷ்யா தான் எங்கள் நாடு கொள்கை என்று இவர்கள் சொல்வதைப்பார்க்கும் போது உங்களுக்கு என்ன தோன்றும்?

    ReplyDelete
    Replies
    1. கம்யூனிஸ்ட் கட்சி மீது எனக்கு மிகக்கடுமையான விமரிசனம், பார்வை இருக்கிறது ஜோதிஜி! நீங்கள் நினைப்பதுபோல் மென்மையான அணுகுமுறை அல்ல. இங்கே சொல்ல வந்த விஷயம் ஏதோ ஒரு நேர்காணலில் சீமான் அருணனை லூசு என்று சொன்னதனாலேயே அவரை லூசு என்று முத்திரை குத்திவிட வேண்டாம். கம்யூனிஸ்ட் கட்சியையும் அதுபோலவே கிள்ளுக்கீரையாக எடைபோட்டுவிட முடியாது என்பது மட்டும் தான்!
      இதே பக்கங்களில் ராமசந்திர குகா என்று தேடிப்பார்த்தால், கம்யூனிஸ்ட் கட்சிக்கு மட்டும்தான் வலதுசாரி பிஜேபிக்கு வலிமையான மாற்றாக வரக்கூடிய வாய்ப்பு இருக்கிறது என்ற அவருடைய கருத்துடன் எந்தெந்த விஷயங்களில் உடன்பாடு எதில் எதில் மாறுபாடு அல்லது ஏமாற்றம் என்பதை மே மாத நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து பலபதிவுகளில் சொல்லியிருக்கிறேன்.
      ரஷ்யா அல்லது சீனாதான் எங்களுடைய சோஷலிசக்கனவின் தாயகம் என்ற நிலையிலிருந்து காம்ரேடுகள் விலகி வெகுதூரம் வந்துவிட்டார்கள். இந்தக்கழகம் அல்லது அந்தக்கழக வீட்டு வாசலில் காத்துக் கிடந்து இரண்டு சீட் வாங்குவதே லட்சியம் என்றிருந்த நிலை, இப்போது திமுகவிடமிருந்து பெட்டி வாங்குகிற அளவுக்குக் கீழிறங்கிய பிறகு எனக்கு என்ன தோன்றும்? #கர்ர்த்தூ

      Delete
    2. எனக்குத் தெரிந்து இந்த கேடு கெட்ட கலாச்சாரத்தை தொடங்கி வைத்த நபர் தா.பாண்டியன்.

      Delete
    3. வலது கம்யூனிஸ்டுகள் சீரழிந்ததற்கு அகில இந்திய அளவிலேயே நிறையாக காரணிகள் இருந்தன. இங்கே தமிழகத்தில் தா பாண்டியன் கொஞ்சம் சம்பாதித்தார் என்பதற்குமேல் சீரழிவை அவர்தான் ஆரம்பித்து வைத்தார் என்று முழுப்பெருமையையும் அவருக்கே கொடுத்துவிட முடியுமா?

      ஆனால் நான் CPI அல்ல. CPIM

      Delete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!