இங்கே அரசியல் கலப்பில்லாமல் எதுவுமே இல்லை என்பதை நம்மில் எத்தனை பேர் அறிந்திருக்கிறோம்? எல்லாவற்றிற்கும் பின்னால் ஏதோ ஒரு உள்ளரசியல் இருக்கத்தான் செய்கிறது! எப்படி என்று பார்ப்போமா?
அரசியலே ஒரு வியாபாரம்தான்! அப்படியானால் வியாபாரிகளுக்கு மட்டும் அரசியல் இருக்கக் கூடாதா? வீடியோ 11 நிமிடம்.
நேற்றைக்கு முகநூலில் ஒருசில நண்பர்களிடம் ஒருவித கேலியுடன் கூடிய பரபரப்பு! WIN News தொலைக் காட்சியில் மதன் ரவிச்சந்திரன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அருணன் (எ) கதிரேசன் சிக்கி விட்டதாக! மதன் ரவிச்சந்திரன் வளர்ந்து வருகிற ஒரு ஊடகக்காரர் என்பதைத்தாண்டி இப்படியெல்லாம் பில்டப் கொடுத்துதான் தீரவேண்டுமா? மதன் இப்படி ஒரு பில்டப் வேண்டுமென்று எவரிடமும் கேட்ட மாதிரித் தெரியவில்லை அருணனுக்கு வெளிப்ப்டையாகத் தெரிந்த அரசியல் சார்பு இருக்கிறது! அவரால் கட்சி நிலைபாட்டைத் தாண்டி பேச முடியாதுதான்! கேலிப் பார்வையுடன் முகனூலில் பகிர்ந்தவர்களுக்கும் ஒரு அரசியல் இருக்கத்தான் செய்கிறது. பொதுவாக இந்தியக் கம்யூனிஸ்டுகள், இடதோ வலதோ, நக்சல் குறுங்குழுக்களோ, வர்க்கப் பார்வையை அறவே மறந்து விட்டார்கள். இடதுகளுக்கும் வலதுகளுக்கும் தேர்தலில் ஒன்றிரண்டு சீட் ஜெயிப்பதே முக்கியம் என்றான பிறகு மதன் ரவிச்சந்திரன் இங்கே கேட்ட கேள்விகள் அருணன் சொன்ன பதில்கள் எல்லாமே தேவையில்லாத ஆணிகள் தான்! அருணன் சிக்கி விட்டதாகவும் மதன் அவரை வைத்து செய்துவிட்டதாகவும் நினைப்பதே பெரிய கேலிக்கூத்து! கம்யூனிஸ்ட் கட்சிகளை இது போன்ற 24 நிமிட வீடியோக்களில் எடைபோட முடியாது என்று புரிந்துகொள்வதுமே கூட ஒரு அரசியல்தான்!
திராவிடங்களுடைய அழுத்தத்தில் மதன் ரவிச்சந்திரன் வெளியேற்றப்பட்ட பிறகு காவேரி நியூஸ் சேனல் எப்படி இருக்கிறது? யூட்யூப் சேனலில் இயங்குவது தெரியும், உங்கள் வீடுகளில் டிவியில் பார்க்க முடிகிறதா? ஆசிரியராக கார்த்திக் மாயக்குமார் உள்ளூர் திராவிடங்களோடு மோதல் வராதபடி என்ன என்னமோ செய்து சேனலை இன்னும் உயிரோடு வைத்திருக்கப் படாத பாடுபடுகிறார். ஒரு சாம்பிளுக்கு ஒரு 27 நிமிட வீடியோ. இதில் சொல்லப்படுகிற பெரும் பாலான தகவல்கள் ஊகத்தின் அடிப்படையிலானவை. ஆனாலும் தமிழில் இந்த அளவுக்கு வேறெந்த சேனலும் தகவல் சொல்லியிருக்கிறார்களா? அதுவே ஒரு அரசியல் தான் என்பதைச் சொல்லித்தான் தெரிந்து கொள்ள வேண்டுமா என்ன?
மீண்டும் சந்திப்போம்.