இன்றைய ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழில் அமித் சதுர்வேதி எழுதியிருக்கிற செய்தித்துணுக்கு ஒருமாதப் பழசுதான் என்றாலும், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 100 வது ஆண்டு நிறைவுவிழாக் கொண்டாட்டத் தம்பட்டம், பெருமிதத்தை ப்பூவென்று ஊதித்தள்ளுகிற மாதிரியே இருப்பதால் இங்கே சுருக்கமாக. இந்த 8 நிமிட வீடியோவைப் பார்த்து விடுங்கள்.
கடந்த ஏப்ரலில் ஒரு தொழிற்சாலையில் பார்த்துவந்த வேலையை உதறிவிட்டு சும்மா இருத்தலே சுகம் என்று blog எழுதி ஆரம்பித்து வைத்தது 31 வயதே ஆன லுவா ஹுவாஜோங் என்கிற இளைஞன். விரைவிலேயே சீன அரசின் மீது, தங்களுடைய எதிர்காலத்தின் மீது நம்பிக்கை இழந்த இளைஞர்களை அணிதிரளச் செய்கிற வாசகமாக tangping Lying Flat ஆகிப்போனது. சீன அரசு உஷாராகி இந்த வார்த்தைகளுடன் கூடிய பகிர்வுகளை, ஆதரவுக்குழுக்களை இணையத்தில் இருந்து நீக்கிவிட்டது.
ஆனாலும் புதிய அடிமைகள் கிடைப்பது வருகிற காலங்களில் குதிரைக்கொம்பாகலாம் என்கிற அச்சம் சீன அரசுக்குப் புதிய தலைவலியாக உருவெடுத்து வருகிறதோ?
மீண்டும் சந்திப்போம்.
No comments:
Post a Comment
ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!