செவ்வாய் : செய்திகளின் அரசியல் இன்று!

புல்வாமா தாக்குதலுக்கு காரணமான JeM தீவீரவாதக் குழுவின் உள்ளூர்த்தலைமை முற்றிலும் அழிக்கப்பட்ட செய்தியோடு ஆயுதம் எடுக்கிற எவரும் கொல்லப்படுவார் என்கிற உறுதியான செய்தியையும் பிள்ளைகளை வன்முறைப்பாதைக்குள் போகவிடாமல் தடுக்க வேண்டியது காஷ்மீரி தாய்மார்களின் கடமை என்று ஒரு வேண்டுகோளாக வைக்கிற செய்தியைக் கொஞ்சம் கேளுங்களேன்!

இந்த JeM இயக்கத்தின் தலைவனாகச் சொல்லப்படும் மசூத் ஆசாரின் வீரதீரமென்ன? ஒரே அறையில், குடித்த பாலைக் கக்கிய சூரனாம்!
அதனால் தானோ என்னவோ, பாகிஸ்தான் ஒசாமா பின் லேடனைப் பாதுகாத்த அதே பாணியில், மருத்துவ மனை ஒன்றில் பொத்திவைத்துப் பாதுகாக்கிறதோ?
*******
உள்ளூர்க் காமெடி ஒன்றையும் பார்த்துவிடலாமா?
ஒருவழியாக, பாமக  பசையுள்ள பக்கம் போய் ஒட்டிக் கொண்டதில் விசிக தலைவர் திருமாவளவன் நிம்மதிப் பெருமூச்சல்லவா விட வேண்டும்? பாமக ஒட்டிக் கொண்டதால் அந்த அணிக்கு பலமில்லை, பலவீனம் தான் என்று சொல்கிற அதே நேரம் திமுக அணி யில் இவர் ஒட்டிக் கொண்டிருப்பதும் கூட அவர்களுக்கு எந்த வகையிலும் பலம் அல்ல பலவீனம் தான் என்று ஒப்புக் கொள்கிற மாதிரியும் இந்தப்பேட்டி இருக்கிறது!

சாத சாதன என்றே தடுமாறிக் கொண்டிருந்த இசுடாலின், கமல் காசனால் கிழித்துத் தொங்கவிடப் பட்டதை அத்தனை எளிதாக கடந்துபோய்விட முடியவில்லையாம்!

இந்திரா காண்டி வெர்ஷன் 2 என்று வர்ணிக்கப்படுகிற பிரியங்கா தான் சோனி(யா) மகள் மட்டும்தான் என்று ஒப்புக்கொள்கிற ஒரு தருணமும் வந்ததே!

Don’t expect miracle from me, strengthen party at booth level: Priyanka Gandhi to workers

"I cannot do a miracle from above. The workers need to strengthen the party at the booth level," Priyanka Gandhi said during a meeting while addressing workers from the Bundelkhand region என்கிறது எக்ஸ்பிரஸ் செய்தி 

                  
A day before Saudi Crown Prince Mohammed bin Salman lands in Delhi for a bilateral visit, Riyadh signed off on a joint statement with Pakistan Monday where they said there was a need to avoid “politicisation of the UN listing regime” — an apparent reference to India’s efforts to list Jaish-e-Mohammad chief Maulana Masood Azhar as a “global terrorist”  என்கிறது இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி 
வஹாபி அரசியல் எப்படிப்பட்டது என்பதை நண்பர்கள் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டிய தருணம் இது. வஹாபி என்றால் யார்?  a member of a strictly orthodox Sunni Muslim sect from Saudi Arabia; strives to purify Islamic beliefs and rejects any innovation occurring after the 3rd century of Islam. Synonyms: Wahhabi Type of: Moslem, Muslim. a believer in or follower of Islam.இது சுருக்கமான விவரம். வஹாபி அரசியல் எப்படிப்பட்டது என்பதை இதை வைத்துப் புரிந்து கொள்ள முடியாது. சமீபத்தில் துருக்கியில் நடந்தேறிய கஷ்நோகி படுகொலை கொஞ்சம் கூடுதல் பரிமாணங்களைக் காட்டக் கூடும்! இந்தப் படுகொலையில் பெயரைக் கெடுத்துக் கொண்ட  சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் மொகமது பின் சல்மான் பாகிஸ்தானுக்கு ஞாயிறு அன்று விஜயம் செய்து மூழ்கிக் கொண்டிருக்கும் பாகிஸ்தானியப் பொருளாதாரத்துக்கு தற்காலிக சுவாசம் கொடுக்கிற மாதிரி 20 பில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தங்களில் கையெழுத்து இட்டிருக்கிறார். புல்வாமா தாக்குதல்களின் தாக்கமாக, பாகிஸ்தானில் இருந்து அடுத்து இந்தியாவுக்கு விஜயம் செய்வது நெகட்டிவ் பப்ளிசிட்டி ஆகிவிடப் போகிறதே என்ற அச்சம், இளவரசர் ரியாத்துக்குத் திரும்பப் போய் அங்கிருந்தே புறப்பட்டு இந்தியாவுக்கு இன்று செவ்வாய்க்கிழமை வருவதாக செய்திகள் சொல்கின்றன.  

பொதுத்துறை! இங்கே யாருக்காக?பொதுத்துறை! இங்கே யாருக்காக? செப்டெம்பர் 2009 இல் எழுதிய இந்தப்பதிவுக்கும் கூட கொஞ்சம் புரிந்து கொண்டு சில பின்னூட்டங்கள் வந்தன:
 1. சங்கர் படம் மூலமாகவோ, சுசீ கணேசன் படம் மூலமாகவோ எல்லா பொது துறையும் திருத்தி சீர் பண்ணி , ஒரு படமாக எடுத்து வேண்டுமென்றால் பார்க்கலாம் . மற்ற படி நடை முறையில் எதுவும் பண்ண இயலாது என்பதே என் கருத்து.
  ReplyDelete
 2. திரைப்படத்தில் அல்ல, நிஜமாகவே சீரழிந்த நிலையில் இருந்த ஒரு பொதுத்துறை வங்கி, அதனுடைய தலைமை நிர்வாகி எடுத்த அதிரடி நடவடிக்கைகளில், இரண்டே ஆண்டுகளில் குணமாகி வளரவும் தொடங்கிய ஒரு அதிசயத்தை நான் அறிவேன். அவரைப் பொறுத்துக் கொள்ள முடியாமல், உள்ளிருந்தே குழி பறிக்கும் வேலைகள் என்னென்ன நடந்தன என்பதும் ஒரு 'த்ரில்லர்' படம் மாதிரித்தான்!

  அவர் செய்த ஒரு அடிப்படையான மாற்றத்தைப்பார்க்கலாம். ஏதாவது கற்றுக்கொள்ள முடிகிறதா என்பதையும் எனக்குச் சொல்லுங்கள்.

  இலக்குகளை நிர்ணயிப்பதோடு நின்று விடுகிற தலைமை அலுவலகத்தில் இருந்து ஆரம்பித்தது அதிரடி. பொது மேலாளர்கள், சாவகாசமாகப் பதினோரு மணிக்கு மேல் தங்களுடைய சீட்டுக்கு வருவார்கள், அதிகபட்சம் இரண்டு மணி நேரம் அல்லது மூன்று மணிநேரம் கூட சீட்டில் இருக்க மாட்டார்கள். அப்படியிருக்கிற நேரம் கூடத் தங்களுடைய வசூல், தனக்கு எதிரியாக இருக்கும் இன்னொரு பொது மேலாளருக்கு எதிராக எவரையாவது கொம்புசீவி விடுகிற வேலை, இதற்காகத் தான்!தங்களுடைய நிறுவனத்திற்காக எந்த வேலையும் செய்யாமல், உண்மையைச் சொல்லப்போனால், உள்ளிருந்தே குழி பறித்துக் கொண்டிருந்த பொது மேலாளர்களை அக்கௌண்டபிலிட்டி என்று சொல்வோமில்லையா, அப்படி பொறுப்பாக்கினார். முதல் ஒரு வருஷம் அப்படி த தலைகளைத் தட்டிக் கொண்டிருந்தது வெளியே தெரியவேயில்லை! அதுவரை, எது எப்படிப்போனாலென்ன என்றிருந்தவர்கள், சுறுசுறுப்பாகக் களத்தில் இறங்கி வேலை செய்ய ஆரம்பித்தபோது தான் தலையில் குட்டியதன் விளைவு தெரியவே ஆரம்பித்தது.

  கீழ்மட்டத்தைத் தொடவே இல்லை, மேலே தட்ட ஆரம்பித்த தட்டு, கச்சிதமாகக் கீழ்வரைக்கும் தானாகவே வந்தது, வேலை நடந்தது.

  அடுத்து, வெறும் புள்ளிவிவரங்கள் சேகரிப்பது மட்டுமே வங்கியின் வேலை என்று நினைத்துக் கொண்டிருந்த வங்கியில், புள்ளி விவரம் என்ன சொல்கிறது, என்ன திசையில் போக வேண்டும் என்று காட்டுகிறது என்பதையும் கற்றுக்கொள்ள ஆரம்பமானது.

  இங்கே நடப்பதைப் பாருங்கள்! கீழ்மட்டத்தில் அவன் ஆயிரம் ரூபாய் வாங்கும் பொது பிடிபட்டான், இவன் லட்சம் வாங்கும்போது பிடிபட்டான் என்று ஷோ காட்டும் வேலை நடக்கிறதே தவிர, தட்ட வேண்டிய இடம் எது என்பது தெரிந்தும் தட்டாமல் இருக்கும் அவலம்!

  மாற்றம் வரும்! ஒரேயடியாக நம்பிக்கை இழந்து விட வேண்டியதுமில்லை!
  ReplyDelete
 3. //பொதுத்துறையைப் பலப்படுத்த, பொறுப்பை உணர்ந்த ஊழியர்கள், திறமைக்கு முதலிடம் கொடுக்கும் நிர்வாக மேலாண்மை, ஊழலற்ற வெளிப்படையான செயல்பாடு மூன்றும் இணைந்தால் தான் முடியும்.
  //

  இப்படி இருந்தால் நல்லா இருக்கும் என்று நினைக்கிறோம். ஆனால் நிலமைகள் ஒரே நாளில் சீர் அடைவதோ கெடுவதோ கிடையாது. புரட்சி, மாற்றம் எந்த சொல்லைக் கொண்டு பார்த்தாலும் ஒரு 'இசம்' மக்கள் இடையே பரவ அந்த மக்கள் இன்னொரு 'இசத்தால்' பாதிக்கப்பட்டு இருப்பதும் காரணம். காலப் போக்கில் புதிய இசம் முழுமையாக வெற்றி அடையும் முன்னே அதன் தேவைகள் பொய்த்தும், திரிந்தும் போகும். அதன் பிறகு புதிய இசம். அது கம்யூனிசமாக இருந்தாலும் சரி முதலாளித்துவமாக இருந்தாலும் சரி. மக்கள் நெருக்கம், பொருளாதாரத் தேவை இவற்றை சார்ந்தே மக்கள் இடையே சில கொள்கைகள் பிரபலமடைகின்றன, பின்னர் கால ஓட்டத்தில் காணாமல் போய்விடுகின்றன.

  இது தான் சரி என்று சமூக வாழ்வில், உலகவாழ்வில் எதையுமே அறுதி இட்டு வழியுறுத்திவிட முடியாது என்பதையே இசங்களின் தோல்விகள் சொல்லும் பாடம்.

  நாம் நினைக்கும் அளவுக்கு ஒரு கையை இழந்தவர்கள் துன்பப்படமாட்டார்கள், நாளடைவில் ஒரு கையை மிகத் திறமையாகப் பயன்படுத்தி தனது குறையை முற்றிலும் நினைக்காவிட்டாலும் ஓரளவுக்கு ஈடு கொடுத்து தான் வாழ்வார்கள். இது கண்களை இழந்தவர்களுக்கும் பொருந்தும். நான் சொல்ல வந்தது மக்கள் எந்த சூழலுக்கும் வாழப் பழகிக் கொள்வார்கள், அவர்கள் வெறுக்கும் ஒன்றை அழிக்க வரும் வேறொரு கொள்கையை ஆதரிப்பார்கள். மன்னர் ஆட்சி முறையை மக்கள் ஆட்சி என்ற பெயரில் ஒழித்தோம், ஆனால் இன்று வாரிசு அரசியல் அறிவிக்கப்படாத மன்னர் ஆட்சியாக பரிணாமம் பெற்று வளர்ந்துவிட்டதே. ஆக ஒன்றை விலக்குதலின் மையம் வேறொரு மையத்தை சார்ந்திருந்தாலும் எதுவுமே பிழைப்பு வாதம் என்னும் மக்களின் வாழ்வியலால் நிலையற்றதாக தொடரும்.

  நீளமான பின்னூட்டம் பொருத்தருள்க !
  :)
  ReplyDelete
 4. வாருங்கள் கோவி.கண்ணன்!

  நீளமான பின்னூட்டங்கள், பிரச்சினை அல்ல. சொல்ல வந்த கருத்து முழுமையாகச் சொல்லப்பட்டதா என்பதையே முக்கியமாகக் கருதுகிறேன்.

  முக்கியமானதும், மையமானதுமான ஒரு விஷயத்தைத் தொட்டுச் சொல்லியிருக்கிறீர்கள். இந்த பிரபஞ்சத்தைப்பற்றி சொல்லும்போது, அது விரிவடைந்துகொண்டே, மாறிக்கொண்டே இருக்கிறது என்று சொல்கிறார்கள். அதுபோலத் தான் சமுதாய விஞ்ஞானமும்! மாறிக்கொண்டே இருப்பது. அப்படி மாற்றிக்கொண்டே இருப்பது தான் சமுதாய வளர்ச்சியின், பரிணாமத்தின் அடிப்படை இயல்பும் கூட!

  ஓலைக் குடிசையே போதும் என்று இருந்திருந்தால், அங்கே வளர்ச்சி இல்லை. மாறாக, வளர்ச்சி இல்லாத இடம் அழிந்தும் போகும். அதே மாதிரி, இங்கே நாம் பார்க்கிற ஒவ்வொரு விஷயமும், ஒவ்வொரு முயற்சியும், எல்லையற்ற சாத்தியக் கூறுகளை நமக்கு அளிக்கிறது. எப்படி நமக்கு முன்னாள் இருக்கும் வாய்ப்புக்களைப் பயன்படுத்திக் கொள்ளப்போகிறோம் என்பதே நமக்கு முன்னால் இருக்கும் கேள்வி.

  உள்ளூர் அக்கப்போர்களைப் பார்த்துப் படித்துச் சலித்து விட்ட நிலையில், பொருளாதாரத்தைத் தொட்டுப் பேசலாமே என்று ஒரு சின்ன ஆரம்பம்! அவ்வளவுதான்!
  ReplyDelete
 5. சுந்தர் சொல்றா மாதிரி இந்த விசயத்தை வச்சு ஷங்கரை படம் எடுக்க சொன்னா மக்களுக்கு மூணு மணி நேரம் நல்லா பொழுது போகும்!
  ReplyDelete
 6. சங்கர் எடுப்பதை விட, தெலுங்கு சினிமா எதை வேண்டுமானாலும் பாருங்கள்! இதை விட அதிகப் பந்தாடல் ரசிக்கிற மாதிரி இருக்கும்! இங்கே போத்திக் கொண்டு நடிக்கிற நடிகைகள் அங்கே கொஞ்சம் காத்தாடவும் இருப்பார்கள்!

  நிழலை ரசிப்போம், கைதட்டுவோம், போணியாகாத ஹீரோ அரசியலுக்கு வரும்போது அவனையும் தூக்கிச் சுமப்போம், அதுவரை, நிஜத்தில் என்ன நடந்தால் என்ன என்கிறீர்களா?

காலத்தோடு ஒட்டிய ஒரு பொதுத்துறை நிறுவனத்தை கட்டமைப்பது எப்படி என்று இங்கே ஒரு ஒன்பது வழிகளில் கொஞ்சம் சொல்வது கேட்கிறதா? 

இங்கே நம்முடைய அனுபவம் என்ன? 

எதற்கெடுத்தாலும் வழிமறிக்கிற நந்திகளாக அதிகார வர்க்கம், தொழிற்சங்கங்கள், இப்படித் தொட்டால் ஒரு அரசியல், அப்படிச் செய்தால் அதற்கொரு அரசியல் என்றே போய்க்கொண்டிருக்கிற அவலம் புரிகிறதா?


பல்வேறு கோரிக்கைகளை  முன்வைத்து BSNL ஊழியர்கள் மூன்று நாட்கள் வேலைநிறுத்தம்! காலச் சூழலை எப்படிப் புரிந்துகொண்டிருக்கிறார்கள்?

கள யதார்த்தத்தை மூன்றுநாட்களுக்குப் பிறகாவது புரிந்து கொள்கிறார்களா என்று பொறுத்திருந்து பார்ப்போம்!  


  

BSNL விவகாரம்! தொடரும் விவாதங்கள்!

கவனிப்பதற்கு நிறைய செய்திகள், கேள்விகள் இங்கே இருக்கிற போதிலும், ஏதோ ஒன்றோ இரண்டோ மட்டும் பரபரப்புச் செய்திகளாகி விடுகின்றன.

    

தேர்தல் நேரம் காமெடி டைம் பதிவுக்கு வந்த மொத்தப் பின்னூட்டங்களும்  ஒரே ஒரு நண்பரிடம் இருந்துதான் என்பது எனக்கு ஆச்சரியம் தரவில்லை. இவரை விட்டால், வேறெங்கிருந்தோ வெட்டி ஓட்டுகிற இன்னும் ஒரு நபருக்கு மட்டுமே  சிறிது ஆர்வத்தைத் தந்திருக்கிறது.  இங்கே கடைசியாக இதுபற்றிய     தகவல்களுக்கு மேல் வெறெந்தத் தகவலும் இல்லாத நிலையில் என்ன சொல்ல முடியும் என்பது எனக்குப் புரியவில்லை.

4ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக பிஎஸ்என்எல் ஊழியர்கள் இன்று முதல் வேலைநிறுத்தம்: ‘எஸ்மா’ சட்டத்தில் நடவடிக்கை எடுக்க மத்திய அரசு உத்தரவு


நேரு , இந்திரா காலத்தைய வாய்ப்பந்தல் சோஷலிசம் எல்லாம் நரசிம்மராவ் பிரதமராக இருந்த காலத்திலேயே, பொருளாதார சீர்திருத்தங்களில் அடிபட்டுப் போய் விட்டது. பொதுத்துறை பற்றிய பழைய காலத்துக் கண்ணோட்டங்கள் இன்னமும் மாறாமலிருந்தால் எப்படி?  நிறையக்  கேள்விகள், விவாதக்களத்தில் எழுந்து கொண்டே இருக்கின்றன என்ற முகவுரையோடு உங்கள் பார்வைக்கு.  


 1. BSNL yet non-listed company in Stock Market and still it is under the control of Telecom Ministry. In the beginning itself it was in the Posts and Telegraph Department. When bifurcated to BSNL an assurance was given to the existing Telecom Employees that it will not be made into a company status and there is no question listing its shares in the Stock Market. On the basis of assurance given by the then Government only the existing Telcom Department was made to BSNL.
  ReplyDelete
  Replies


  1. perestroika glasnost இந்த இரண்டு வார்த்தைகள் தான் சோவியத் சோஷலிசத்தைக் கலைத்தவை என்பது நினைவிருக்கிறதா ஜீவி சார்? BSNL நிர்வாகத்திடம் அரசு கேட்டிருப்பது restructure, disinvestment, ஓர் closure இப்படி தெளிவானவிவரங்களோடு ஆப்ஷன்களை! 31000 கோடிக்குமேல், acumlated losses உள்ள வெள்ளையானையைக் கட்டித் தீனி போட்டே ஆக வேண்டுமா? ஒரு பொதுத்துறை நிறுவனத்தில் தொழிற்சங்கத்தில் பணியாற்றிய எனக்கே கேள்விப்படுகிற விஷயங்கள் தலைசுற்ற வைக்கிறது.

   https://swarajyamag.com/insta/bsnls-future-hangs-in-the-balance-government-asks-telecom-psu-to-consider-revival-scheme-disinvestment-or-closure
   Delete
 2. அரசு, அரசு அதிகாரத்திற்குட்போட்டே இருக்கும் அமைப்பிடம் கேட்கிறதா? ரொம்ப சரி.

  சொந்த மகனுக்கு சோறு போடாமல், இருக்கறதை ஊரார் குழந்தைகளுக்கு ஊட்டி வளர்த்தாளாம், தாய். அந்தக் கதையாக அல்லவோ இருக்கிறது?

  ஓட்டப் போட்டியில் ஒருவனின் காலை மட்டும் கட்டிப் போட்டு ஓட்டப் பந்தயம் போ, என்று சொன்னார்களாம் அந்தக் கதையாக அல்லவோ இருக்கிறது?


  ReplyDelete
  Replies


  1. அரசுத்துறையிடம் அரசுகேட்பது எப்படித்தவறாகும் ஜீவி சார்?
   பொதுத்துறை bsnl லை நாசமாக்கியது தயாநிதி காலத்திலிருந்தே ஆரம்பமாகிவிட்டது என்பதையும் சேர்த்துப் பாருங்கள். இப்போது தீர்வு என்ன என்று ஆராய்வது கூடத் தப்பாகத் தெரிகிறதா?
   Delete
 3. இந்த நிலைக்குக் காரணம் ஊழியர்கள் அல்ல. நாள் தோறும் வளர்ந்து வரும் தொழில்நுட்பம் சார்ந்த இலாகா இது. அந்த தொழில் நுட்ப வளர்ச்சியை சவாலாய் ஏற்றுக் கொண்டு, தனியார்களில் கவர்ச்சிகர திட்ட்டங்களை மீறி செயல்பட்டுக் கொண்டிருக்கும் இலாகா.
  ஒரு காலத்தில் சாதாரண மக்களின் தேவைகளுக்கான இலாகாவாக இருந்த தபால் துறையின் நஷ்டங்கள் தொலைத்தொடர்புத் துறையின் லாபத்தால் ஈடுகட்டப் பட்டன.

  சுருக்கமாகச் சொன்னால் தொலைப்பேசித் துறை என்பது வருமானம் கொழிக்க வைக்கும் கொழுத்த இலாகா. இதன் மேல் தனியார் நிறுவனங்களுக்கு ஒரு கண் என்ன இரண்டு கண்ணுமே இருப்பது இயல்பு.
  அரசியல்வாதிகளின் நாசப்படுத்தலுக்காகப் போராடி ஊழியர்களுக்கு மிஞ்சியது ஏமாற்றமே.
  செல்லக் குழந்தைகளாய் இருக்கும் தனியார் தொலைத் தொடர்பு
  கம்பெனிகளுக்கு தரப்பட்டிருக்கும் 4G அலைக்கற்றை உபயோகத்தைக் கூட இன்னும் அரசு சார்ந்த இலாகாவுக்கு வழங்கப்படவில்லை.

  நாட்டின் பிரச்னைக்குரிய இடங்களில் BSNL மற்ற கொழுத்த வருமானம் உள்ள இடங்களில் தனியார்களின் செயல்பாடு என்ற ஏற்பாடு வெற்றிகரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
  ReplyDelete
 4. தொலைபேசி இலாகா தேசம் பூராவும் நிறைந்திருக்கும் அதன் சொந்த கட்டிடங்களுக்குப் பெயர் பெற்றது. வானளாவிய டவர்கள், செயற்கோள் விண்ணில் நிலைநிறுத்திய செலவுகள், தேசம் பூராவுக்குமான நெட் ஒர்க் இதெற்கெல்லாம் அரசின் பணம் எவ்வளவு செலவாகியிருக்கும்?.. அரசின் பணம் என்றால் மக்களின் பணம்.

  இதை வெகு சுளுவாக தனியார் வசம் இந்தக் கையிலிருந்து அந்தக் கைக்கு மாற்றி விடுவது போல ஒப்படைத்து விடுவதற்கான ஏற்பாடு என்றால் நெஞ்சம் பதறுகிறது, சார்!
  ReplyDelete
 5. சரி, தீர்வு தான் என்ன?..

  உங்களுக்கு சரித்திரம் தெரியும். இந்தியன் வங்கியை மீட்டெடுத்தது எப்படி என்ற சரித்திரம் உங்களுக்குத் தெரியும். ஆவதும் அரசியலவாதியாலே, அழிவதும் அரசியல்வாதியாலே என்ற விநோதமான சூத்திரம் இது.

  குறைந்தபட்சம் அரசியல்வாதிகளினால் நாசமாக்கப்பட்டவை களையாவது அரசு முன்வந்து சீர்படுத்தக் கூடாதா? வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகிற மாதிரி டிஸ் இன்வெஸ்ட்மெண்ட்டா, மூடிவிடுவதா என்றால் என்ன சொலவது, ஐயா?..
  டிஸ் இன்வெஸ்ட்மெண்ட் என்பது மெல்ல மெல்ல கொல்லப்போகும் நஞ்சு. மூடிவிடுவது என்பது ஒரேடியாக சாகடிக்கும் நஞ்சு. அவ்வளவு தான் வித்தியாசம்.
  பொன் முட்டையிடும் வாத்தை கீறிப்பார்க்க யார் தான் ஒப்புக்கொள்வார்கள்?.. ஒப்புக்கொள்ளும் நிகழ்வு கண்முன்னால் நடைபெறும் பொழுது சகித்துக் கொள்ள முடியவில்லை. அவ்வளவு தான்.
 6. தொடர்ந்து விவாதிப்பதற்கு, நிறையக் கேள்விகள் இருக்கின்றன! வாருங்கள், விவாதிக்கலாம்! 
 7. மாற்றுக் கருத்தோடு  எனக்கு எந்தப்பிரச்சினையும் இல்லை! அதற்கு கட் அண்ட் பேஸ்ட் செய்வதைத் தவிர, சுயமாகச் சிந்தித்து நாலுவரி எழுதத்  தெரியாத நபர்கள், வெட்டி விளம்பரப் போஸ்டர் ஒட்டுகிறவர்கள் இவர்களை இங்கே அனுமதிப்பது என்று அர்த்தமில்லை. கமெண்ட் பெட்டிக்கு மேல் என்ன சொல்லப் பட்டிருக்கிறது என்பதைக் கொஞ்சம் கவனித்துவிட்டு, கமெண்டலாம்! 
 8.            

சண்டேன்னா மூணு! வாயுசக்தி2019! இடது ஒற்றுமை! கமல் காசன்

நேற்று ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் இந்திய விமானப்படை வாயுசக்தி 2019 என்ற தீமுடன் தனது வலிமையை பொதுமக்கள் முன்பு நடத்திக் காட்டி இருக்கிறது. இந்த மாதிரி நிகழ்ச்சிகளை ஏதோ ஒருநாள் ஒருவாரம் முன்னால் திட்டமிட்டு நடத்திவிட முடியாது..

.
நிகழ்ச்சியை வடிவமைத்து, என்னென்ன ஷோ கேசில் வைப்பதென்று திட்டமிடுவதும், பங்குபெறும் விமானங்கள் போர்வீரர்கள் ஆயுதங்கள் எல்லாவற்றையும் ஓருங்கிணைப்பதும் மாதங்கள் ஆகும் என்பதும் காமன் சென்ஸ்! விகடன் மாதிரி ஊடகத்துக்கு காமன் சென்ஸ் அவசியமா என்ன? புதிய தலைமுறை சேனலில் கூட இப்படி ஒரு தலைப்புடன் ஆறுநிமிட வீடியோ செய்தி ஒன்றையும் பார்த்தேன். அவசியம் பார்க்க வேண்டிய, சுமார் இரண்டே கால் மணிநேர வீடியோ இது!   

மதுரையில் நேற்று நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில மாநாட்டில் கலந்து கொண்டு ஸ்டாலின் சில நாட்களுக்கு முன்னால் திருமாவளவன் நடத்திய திருச்சி மாநாட்டில் பேசும்போது, இந்தியாவுக்கு ஆபத்து வந்திருக்கிறது. யாரால்? எதிரி நாட்டால் வரவில்லை, இங்கே ஆட்சியில் இருப்பவர்களால் தான் வந்திருக்கிறது, வரப்போகிறது என்று நான் குறிப்பிட்டுச் சொன்னேன்நாளைக்கே சிலர் சொல்லுவார்கள், பார்த்தாயா முஸ்லீம் லீக் மாநாட்டில் போய் மோடியைத் தாக்குகிறார் மு.க.ஸ்டாலின் என்று குற்றம் சாட்டுவார்கள். ஏன், இந்து மதத்தின் விரோதி என்று என்னைப் பார்த்துச் சொல்வார்கள். அவர்களுக்குச் சொல்லிக் கொள்கிறேன். பா.ஜ.கவை எதிர்ப்பது என்பது வேறு, இந்து மதத்தை எதிர்ப்பது என்பது வேறு என்று பேசியிருப்பதாக விகடன் தளம் சொல்கிறது. உண்மைதான்! பிஜேபி எதிர்ப்பு, மோடி எதிர்ப்பெல்லாம் இப்போது வந்தது. இந்துமத எதிர்ப்பு,விரோதமெல்லாம் தி க வாக இருந்து திமுகவாய் ஆன நாளிலிருந்தே இருப்பதுதானே! படத்தைப் பாருங்கள்! CPI இன் மாநிலச்  செயலாளர் முத்தரசன் சமீபகாலங்களில் திருமாவாளவனுடனேயே ஒட்டிக் கொண்டு திரிவது, இங்கே இடதுசாரி ஒற்றுமை என்பது வீண்கனவு என்பதைச் சொல்கிறதோ?  
       
கமல் காசனுக்கெல்லாம் இப்படி ஓசி வெளம்பரமா? இசுடாலின் தான் அதுக்கும் காரணம்! நம்புங்க! 
  
அமைச்சர் ma foi பாண்டியராஜன் சிரிக்கச் சிரிக்க ஹரிஹரனுடைய கேள்விகளை எதிர்கொள்கிறார்.
       

தேர்தல் நேரம்! காமெடி டைம்! இன்று

வானிலை அறிக்கை மாறுவதைப்போல, தேர்தல் காமெடிகளும் மாறிக்கொண்டிருப்பவை என்பது தெரிந்த விஷயம் தானே?

தொடரும் இழுபறி! இது திமுக அணியில் தானுங்கோ!
breaking என்பதற்கு இழுபறி, முறிவு என்றெல்லாம் புதுப்புது அர்த்தங்கள் சேர்ந்து கொள்கின்றனவோ?  
நடந்தாலே மூச்சு வாங்குதுன்ற ஒத்தை டயலாகுக்காக இந்தப்பாட்டு! அவ்வளவுதான்!
எழவு வீட்டிலும் அரசியல் செய்வது திராவிடங்களின் வாடிக்கை என்ற தெரிந்தவிஷயத்துக்காக இல்லை இந்த வீடியோ! BSNL பற்றி பரப்பப்படும் செய்திகளில் உண்மையில்லை என்ற செய்தியோடு ஆரம்பமாகிறது பாருங்கள், அதற்காக!மூடுவிழா இல்லை! பங்குகளை ஓரளவு விற்று மூலதனம் திரட்டப்போகிறார்களாம்!

வினவு சாயம் வெளுத்துப்போச்சு என்பதா? கேழ்வரகில் நெய் வடிகிறது என்று சொன்னால் அப்படியே நம்பி விடுவீர்களா ? அதுவும் உள்நோக்கத்தோடு செய்தி பரப்புகிற நக்சல் குறுங்குழுக்கள் சொல்வதை அப்படி நம்பிவிடலாமா?

     
புது வன்னியர் சங்கம் தொடக்கம்! அப்படியானால் பழைய வன்னியர் சங்கம் என்னானதாம்? இருக்கிறது! அதுபாட்டுக்கு ஒரு ஓரத்தில்! பழைய வீரியத்துடன் இருக்கிறதா என்ற கேள்விக்கு மருத்துவர் ராமதாசு பதில் சொல்வாரா என்ன?  

    
வன்னியர் ஓட்டு அந்நியருக்கு இல்லை என்கிற வசனம் கொஞ்சம் பூமராங் மாதிரி வன்னியர் ஓட்டு அன்புமணிக்கு இல்லை என்று திரும்பியிருக்கிறது!
இன்றைக்கு இது செகன்ட் டோஸ்! எப்படியிருக்கிறது?  
    

இட்லி வடை பொங்கல்! #13 சனிக்கிழமை ஸ்பெஷல்

காஷ்மீர் அவந்திபோரா பகுதியில் நேற்று முன்தினம் பாகிஸ்தானிய ISIயால் ஊக்குவிக்கப்படும் JeM அமைப்பு ஒரு கோரத்தாக்குதலை நடத்தி 44 CRPF வீரர்கள் பலியான சம்பவம் நாடுமுழுவதும் அதிர்வை உண்டாக்கியிருக்கிறது.ஆனால்  இங்கே  தந்தி டிவிக்கு வேறு கவலை! பாகிஸ்தானுடன் போர்வருமா? வராதா?

ப்ரம்ம செலானி சொல்வதில் முழுநியாயம் இருக்கிறது. அவந்திபோரா தாக்குதலுக்குப் பின்னாலும் முழு அளவிலான தூதரக உறவுகள் நீடிக்கத்தான் வேண்டுமா?
1:22 PM - 16 Feb 2019


பிரிவினைக்கு முந்தைய காலத்திலும் சரி, பிந்தைய 72 ஆண்டுகளிலும் சரி, பாகிஸ்தான் ரத்தவெறி பிடித்தலையும் ஒரு மனநிலையோடுதான் இருந்து வருகிறது. இதுபோல வெறுப்பில் எரியும் மனங்களுடன் சாந்தி சமாதானம் எதுவுமே சாத்தியமில்லைதான்! ஆனால் போர்?

ப்ரம்ம செலானி ஹிந்துஸ்தான் டைம்சில் நேற்றைக்கு எழுதிய இந்தப் பகிர்வு, வேறு சில முக்கியமான விஷயங்களையும் சொல்கிறது. முந்தைய காங்கிரஸ் ஆட்சிக்காலம் வரை நம்முடைய கவனம், வெளியுறவுக்கொள்கை என்பதெல்லாம் மேற்கே பாகிஸ்தான் ஒன்றை மட்டும் மையப்படுத்தியே இருந்ததும், இப்போது அது கொஞ்சம் மாறி, இந்திய வெளியுறவுக் கொள்கை  விரிவடைந்து வருகிற ஒரு நல்லவிஷயம் நடந்து கொண்டிருப்பதும் தெரிந்து வைத்துக் கொள்ளவேண்டிய செய்திகள்.

As Indian national elections approach, China has stepped up its influence operations in India. China has been emboldened by its remarkable success in Nepal, which has tilted toward Beijing, despite an open border underscoring its symbiotic relationship with India. On the first anniversary of Nepal’s communist government this weekend, it is important to remember that China played no mean role in the communists’ democratic ascension to power there.
India, with its fragmented polity and fractious political divides, has become an important target of China’s efforts to buy access and influence and sway politics. These efforts have been aided by New Delhi’s feckless approach to Beijing, especially since the Wuhan summit 

Moreover, by more than doubling its trade surplus with India to over $66 billion a year on the National Democratic Alliance government’s watch, Beijing has acquired deeper pockets for influence operations, which aim to help instil greater Indian caution and reluctance to openly challenge China. At a time when India is engrossed in electoral politics, including increasingly petty and bitter feuding, Beijing’s conduct is underlining its master plan for this country: It wants a weak and unwieldy Indian government to emerge from the elections.

இப்படி ப்ரம்ம செலானியின் கருத்தைப் புறந்தள்ளிவிட முடியாதென்றே நினைக்கிறேன். அவர் சொல்லியிருப்பதை முழுதுமாக இணைப்பில் படித்து என்ன தோன்றுகிறது என்று சொல்லுங்களேன்.

                    
முகேஷ் அம்பானியின் சேனல் இது. சென்ற நாடாளு மன்றத் தேர்தல்களை ஒட்டிக் கைமாறிய ஊடகம். இங்கே ஒவ்வொரு ஊடகத்துக்குமே ஒரு தனி அரசியல் இருக்கிறது என்பதை மனதில் வைத்துக் கொண்டால் செய்திகள் விவாதங்கள் போகும் விதத்தையும் புரிந்து கொள்வது கடினமாக இருக்காது.

வேணாம் சாமிகளா! வெண்ணெய்வெட்டி சிப்பாய்கள், முகநூல் போராளிகளாகவே இருந்துவிட்டுப் போகட்டும்! 
     
 இந்தக் கோமாளிகளை என்ன செய்யப்போகிறோம்?