உள்ளடி வேலைகள்! கான்ஸ்பிரசி தியரி! நம்மூர் ஊடகங்கள்!

இங்கே சிறிதாகவோ பெரிதாகவோ எதுநடந்தாலும் அதன் பின்னணியில் ஏதோ ஒரு கான்ஸ்பிரசி (சதி வேலை) இருக்குமோ என்று கிளப்பிவிடுவது, அந்தநாட்களில் கருணாநிதி குடமுருட்டி குண்டு பற்றிப் பேச ஆரம்பித்த நாட்களில் இருந்தே, தந்தி மாதிரி  ஊடகங்களில் பரபரப்புச் செய்தியாக ஆகிவருவதைக் கவனித்திருக்கிறீர்களா?
அண்மையில் தந்தி டிவியை விட்டு ரங்கராஜ் பாண்டே வெளியேறினார், என்ன காரணமென்று அவரோ , தந்திடிவியோ இதுவரை வெளிப்படையாக எதுவும் சொல்லவில்லை! ஆனாலும் உள்ளடி வேலைகள் இருந்திருக்குமோ என்ற ஐயம் இன்னும் தீரவில்லை.

பாண்டேவை கல்லூரிகளுக்குள் பேச அனுமதித்தால் கடும் எதிர்ப்பை சந்திக்க நேரிடும் #திமுக  ஏன் இந்த பயம் பாண்டேவை பார்த்து?
தமிழகத்தை சேர்ந்த தொலைக்காட்சியில் ரங்கராஜ் பாண்டே நடத்திய விவாதங்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது.
நடிகர் பெயர்கள் எப்படி மக்களுக்கு அதிகம் அறிமுகமானதோ அதுபோல் ரங்கராஜ் பாண்டே பெயரும் மக்களுக்கு நன்கு பரிட்சயமானது இந்நிலையில் தான் பிரபல தொலைக்காட்சியில் இருந்து தான் விலகுவதாக அறிவிப்பினை சமூக வலைத்தளங்களின் மூலமாக வெளியிட்டு வெளியேறினார் பாண்டே.
அன்று முதல் தமிழகத்தில் நிகழும் முக்கிய நிகழ்வுகள் பற்றி youtube சேனலின் மூலம் தனது கருத்துக்களை தெரிவித்து வருகிறார் இதற்கும் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.
ஏன் தந்தி டிவி -ல் இருந்து பாண்டே வெளியேறினார் நிர்வாகத்துடன் மனக்கசப்பா அல்லது வேறு ஏதேனும் நிர்வாக சிக்கல்களா இல்லை அரசியல் அழுத்தங்களா என்ற பல்வேறு கேள்விகள் மக்கள் மனதில் தினமும் எழுந்த வண்ணம் உள்ளன அதற்கு இன்று வரை பதில் இல்லை.
ஆனால் தற்போது ரங்கராஜ் பாண்டே நீக்கத்தின் பின்னணியில் திமுக இருக்கலாம் என்றும் மேலும் பாண்டே தலைமை செய்தியாளராக இருக்கும் வரை அந்த தொலைக்காட்சியில் எங்கள் கட்சியை சேர்ந்தவர்களோ அல்லது கூட்டணி இயக்கங்களோ பங்கு பெற மாட்டார்கள் மேலும் எந்த விளம்பரமும் தரமுடியாது என்று நேரடியாக தெரிவித்துவிட்டார்களாம்.
இதற்கு காரணம் R. K நகர் இடைதேர்தல் கருத்து கணிப்பு முடிவுகளை தங்களுக்கு சாதகமாக வெளியிட வேண்டும் என்று அழுத்தம் கொடுக்கவே அதை பாண்டே மறுத்ததே இதற்கு முக்கிய காரணமாக சொல்கிறார்கள். தற்போது நாடாளுமன்ற தேர்தல் வருவதால் இதனை தீவிரமாக நிறைவேற்ற வேண்டும் என்று முடிவெடுத்து செய்திருக்கிறார்கள்.
தமிழகத்தை பொறுத்தவரை பெரியாரிஸ்ட்கள்தான் சிந்தனையாளர்கள் அறிவாளிகள் என்று பிம்பத்தை உருவாகியிருந்தவர்களுக்கு பாண்டே வீரமணி, சுபவீ மற்றும் பலருடன் நடத்திய விவாதங்கள் அவர்களின் உண்மை முகத்தை வெளிக்காட்டியது.
வீரமணியுடன் நடத்திய விவாதங்களில் ஏன் நீங்கள் இந்து மதத்தின் கடவுள்களை மட்டும் இல்லை என்கிறீர்கள் ஏன் மற்ற மத கடவுள்களை பற்றி பேச மறுக்கிறீர்கள் என்ற கேள்விதான் வீரமணியை அரசியல் செல்வாக்கில் இருந்தே ஓரம் கட்டியது.
இதற்கெல்லாம் பாண்டே மீது கடும் கோபத்தில் இருந்த திராவிட அமைப்புகள் தக்க நேரம் பார்த்து பாண்டேவை கவிழ்க்க  குழி தோண்டியுள்ளனர்.
எனவே பாண்டே தானாக தொலைக்காட்சி தலைமை செய்தியாசிரியர் பொறுப்பில் இருந்து வெளியேறிவிட்டார். ஆனால் தன் பங்கிற்கு தனது பணியை செய்துகொண்டுதான் உள்ளார். கல்லூரி மற்றும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்று மாணவர்கள் மற்றும் மக்கள் இடையே தனது கருத்துக்களை வெளிப்படையாக எடுத்து வைத்து வருகிறார்.
இதனால் பாண்டே மீது மீண்டும் கோபமடைந்த சில கட்சிகள் அவரை தற்போது எந்த கல்லூரியிலும் பேச அனுமதிக்க கூடாது என்றும் அப்படி அனுமதித்தால் தாங்கள் ஆட்சிக்கு வரும்போது உங்கள் கல்லூரியின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்று மிரட்டியுள்ளனர்.
பாண்டே என்ற ஒற்றை மனிதனை பார்த்து இந்த தலைவர்கள் இப்படி பயப்படுவதற்கு காரணம் என்ன என்று தெரியவில்லை ஆனால் பாண்டே என்ற மனிதனுக்கு மக்கள் மத்தியில் நிச்சயம் ஆதரவு இருக்கும் என்கிறோம் !!

இப்படி ஒரு பகிர்வை முரளிராம் என்பவர் முகநூலில் ஒரு க்ரூப்பில் பகிர்ந்திருக்கிறார். என்ன நடந்திருக்கும் என்று ஊகம் செய்வதற்கு அவருக்கு மட்டும் உரிமை இல்லையா என்ன? உங்களுடைய ஊகங்களைக் கூட இங்கே பின்னூட்டத்தில் சொல்லலாம்! தடையில்லை! கண்ணியமான வார்த்தைகளில், தங்கள் அடையாளத்தை மறைத்துக் கொள்ளாதவர்கள் சொல்லலாம் என்பது மட்டும்தான்  இங்கே சிம்பிள் கண்டிஷன்!  

தேர்தல் நெருங்க நெருங்க ஊடகங்கள் என்னென்ன செய்யும் என்பதை ஊகிப்பது அத்தனை கடினமில்லை! செய்திகள் சொல்லப்படும் விதம், ஊடக முதலாளி யார் என்பதைக் கொஞ்சம் புரிந்துகொண்டாலே, பரப்புரை எப்படிப்பட்டது என்பதைக் கண்டுகொள்ள முடியும்!

இங்கே கூட ஒருபக்கச் சார்போடு ஒரு ஒருமணிநேர விவாதம்! என்னதென்று தெரிந்துகொள்ளப் பார்த்துத் தான் தீரவேண்டும்! சோம்பேறிகளாக இருந்துவிடும் தருணங்களில்தான், தொடையில் கயிறு திரிக்கிற வேலையும், கனஜோராக நடக்கும்! 

அது புரிந்தால், உண்மையைத் தேடுவது என்பதுமே தானாகவே நடக்கும்!
            

7 comments:

 1. முழுவதும் படித்தேன். பணம் பத்தும் செய்யும். அவ்வப்போது வெறுப்பு அலை பணத்தையும் தூக்கி சாப்பிட்டுவிடும். அந்த மாதிரி நேரத்தில் ஏதாவது நல்லது நடந்தால் உண்டு. என்.டி.ஆர், எம்.ஜி,ஆர், ஜெயலலிதா போன்றவர்களுக்கு ஜனங்களிடமிருந்த அமோக ஆதரவுக்கு எவ்வளவோ நல்லது செய்து முன்னேற்றம் காட்டியிருக்கலாம். ஆனால் அவர்களுக்கு தந்நலமற்ற உழைப்பு என்ன என்பது தெரியாததாலும் பதவி பற்றும் சேர்ந்து மீண்டும் நிதி வலைக்குள் சிக்கினர். மீண்டும் ஒரு அலை ஜனிக்குமாம். அதன் விளைவு என்ன என்பதையும் பொருத்துப் பார்ப்போம். :)

  ReplyDelete
  Replies
  1. பணம் மட்டுமே எல்லாவற்றையும் செய்துவிடும் என்று சொல்லிவிட முடியுமா உமேஷ் சார்?

   தினத்தந்தி ஆதித்தன்களிடம், சர்குலேஷன் விளம்பரவருமானம் அரசியல் செல்வாக்கு என்று எல்லாமே இருந்தது! ஆனால் நம்பகத்தன்மை? ப்ராண்ட் இமேஜ்? இதெல்லாம் கேள்விக்குறியாகவே இருந்தது. காலத்தோடு ஒட்டிப்போக வேண்டியகட்டாயம் வந்தபோது, அதையும் ஆதாயமாக மாற்றிக் கொள்கிற நிறுவனபலம் அவர்களிடம் இருந்தது என்பதுதான் சொல்லவந்த விஷயமே!

   அப்பறம் மீண்டும் ஜனிக்கவிருக்கிற அந்த அலை? அது என்ன? புதிய செயதியாக இருக்கிறதே!

   Delete
  2. என்.டி.ஆர், எம்.ஜி,ஆர், ஜெயலலிதா போன்றவர்களுக்கு ஜனங்களிடமிருந்த அமோக ஆதரவுக்கு எவ்வளவோ நல்லது செய்து முன்னேற்றம் காட்டியிருக்கலாம். ஆனால் அவர்களுக்கு தந்நலமற்ற உழைப்பு என்ன என்பது தெரியாததாலும் பதவி பற்றும் சேர்ந்து மீண்டும் நிதி வலைக்குள் சிக்கினர்.............. இதற்கு உங்கள் பதில் என்ன?

   Delete
  3. ஜோதிஜி! விடை எல்லோருக்குமே தெரிந்ததுதான்! எம்ஜியார் ஆட்சிக்கு வந்த புதிதில் மிகவும் நெருப்பாகத் தான் தூய்மையாக இருந்தார், எப்படி சூழ்நிலை அவரைச் சமரசம் செய்து கொள்ள வைத்தது என்பதிலேயே உங்கள் கேள்விக்கான விடை இருக்கிறது.

   Delete
 2. ஊடகத்தைப் பொருத்துத்தான் விவாத மேடை. இது எல்லாமே அரசியல்தான். இவர்கள் யாருக்கும் உண்மையைத் தெளிவு படுத்தணும் என்ற எண்ணம் கிடையாது.

  எந்த ஒரு செயலையுமே நமக்கு விருப்பமான கோணத்தில் பார்க்கலாம். அதனால்தான் கழகக் கண்மணிகள் (எந்தக் கட்சியாக இருந்தாலும் சரி, கம்யூனிஸ்டுகளோ, தேதிமுகவோ நாம் தமிழரோ எதுவும் விலக்கல்ல) தங்கள் தலைவர்/கட்சி செய்யும் அபத்தங்களை ஜஸ்டிஃபை செய்யும் அபத்தங்கள் நிகழ்கிறது.

  ரங்கராஜ் பாண்டே முடிந்தவரை நியாயமாகவே விவாத மேடை, நேர்காணலை நடத்திவந்திருக்கிறார் என்றே நான் அவதானிக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. வாருங்கள் நெல்லைத்தமிழன்! வலைப்பதிவுகளுமே கூட இங்கே ஒருவிதத்தில் சமுக ஊடகம்தான்! இங்கே ஒருதலைப்பட்சமாக எதையாவது justify செய்து எழுதியிருக்கிறேனா? :))

   ரங்கராஜ் பாண்டே நேர்மையோடுதான் தன்னுடைய ஊடகப்பணிகளைச்செய்து வருகிறார் என்று நானும் நம்புகிறேன்! அதைவிட பணபலம் அரசியல் பலம் சாதிப்பின்னணி எல்லாம் ஆதித்தன் வகையறாக்களுக்கு இருந்தாலும் தினத்தந்தி நாளிதழ் சென்னை சுற்றுவட்டாரப்பகுதிகளில் டீக்கடைகளில் போண்டா பஜ்ஜி வித்திக் கொடுப்பதற்கான ஒரே உபயோகத்தில், சர்குலேஷன் ம ற்ற மாவட்டங்களில் எல்லாம் 2.நல்லது 3 ஆம் இடத்தில் இருந்தாலும்,numero uno என்று உதலிடத்தைப் பிடித்திருக்கிறது.

   தந்திடிவி வந்தபிறகு, ரங்கராஜ் பாண்டேவுக்கு முழுசுதந்திரமும் அளித்ததில் தான் தினத்தந்தி நாளிதழ் எழுபத்தேழு ஆண்டுகளில் சம்பாதிக்காத நல்ல பெயரை, ப்ராண்ட் வால்யூவாக மாற்றமுடிந்தது என்பது நம் கண் முன்னாலேயே நடந்தவொரு அதிசயம்!

   Delete
  2. இன்னும் ஆழமாகப் பார்த்திருக்கலாம்.

   வெகுஜன பத்திரிகைகளும் இன்றைய அரசியல்வாதிகளும் ஒரே நோக்கம் கொண்டவர்கள். இரு பகுதியிலும் அவர்களின் செல்வாக்கும் வளர்ச்சியையும் தான் குறி. எந்த நேரத்திற்கு எது தேவையோ அதைச் செய்வார்கள்.

   இன்றைக்கு எப்படியோ அப்படி இன்று. நாளைக்கு எப்படியோ அப்படி அன்று.

   அதனால் தான் இருபக்கமும் இத்தனை செளஜன்யம் நிலவுகிறது. யாருக்கும் யார் மீதும் எந்த வெறுப்பும் இல்லை, விருப்பும் இல்லை. ஒருத்தரை ஒருத்தர் தங்கள் செளகரியங்களுக்கு ஏற்ப எப்படி உபயோகப்படுத்திக் கொள்கிறார்களோ அப்படி.

   எந்த நேரத்து வேலைக்கு யார் தேவையோ அவர்களை தேர்ந்து உபயோகப்படுத்திக் கொள்கிறார்கள்.

   இதுக்குப் போய் இவ்வளவு அலட்டிக்கலாமா?

   தினத்தந்தியின் நாளைய வளர்ச்சிக்கு பாண்டே தேவை என்றால் மீண்டும் வருவார். அவ்வளவு தான்.

   Delete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!