செவ்வாய் : செய்திகளின் அரசியல் இன்று!

புல்வாமா தாக்குதலுக்கு காரணமான JeM தீவீரவாதக் குழுவின் உள்ளூர்த்தலைமை முற்றிலும் அழிக்கப்பட்ட செய்தியோடு ஆயுதம் எடுக்கிற எவரும் கொல்லப்படுவார் என்கிற உறுதியான செய்தியையும் பிள்ளைகளை வன்முறைப்பாதைக்குள் போகவிடாமல் தடுக்க வேண்டியது காஷ்மீரி தாய்மார்களின் கடமை என்று ஒரு வேண்டுகோளாக வைக்கிற செய்தியைக் கொஞ்சம் கேளுங்களேன்!

இந்த JeM இயக்கத்தின் தலைவனாகச் சொல்லப்படும் மசூத் ஆசாரின் வீரதீரமென்ன? ஒரே அறையில், குடித்த பாலைக் கக்கிய சூரனாம்!
அதனால் தானோ என்னவோ, பாகிஸ்தான் ஒசாமா பின் லேடனைப் பாதுகாத்த அதே பாணியில், மருத்துவ மனை ஒன்றில் பொத்திவைத்துப் பாதுகாக்கிறதோ?
*******
உள்ளூர்க் காமெடி ஒன்றையும் பார்த்துவிடலாமா?
ஒருவழியாக, பாமக  பசையுள்ள பக்கம் போய் ஒட்டிக் கொண்டதில் விசிக தலைவர் திருமாவளவன் நிம்மதிப் பெருமூச்சல்லவா விட வேண்டும்? பாமக ஒட்டிக் கொண்டதால் அந்த அணிக்கு பலமில்லை, பலவீனம் தான் என்று சொல்கிற அதே நேரம் திமுக அணி யில் இவர் ஒட்டிக் கொண்டிருப்பதும் கூட அவர்களுக்கு எந்த வகையிலும் பலம் அல்ல பலவீனம் தான் என்று ஒப்புக் கொள்கிற மாதிரியும் இந்தப்பேட்டி இருக்கிறது!

சாத சாதன என்றே தடுமாறிக் கொண்டிருந்த இசுடாலின், கமல் காசனால் கிழித்துத் தொங்கவிடப் பட்டதை அத்தனை எளிதாக கடந்துபோய்விட முடியவில்லையாம்!

இந்திரா காண்டி வெர்ஷன் 2 என்று வர்ணிக்கப்படுகிற பிரியங்கா தான் சோனி(யா) மகள் மட்டும்தான் என்று ஒப்புக்கொள்கிற ஒரு தருணமும் வந்ததே!

Don’t expect miracle from me, strengthen party at booth level: Priyanka Gandhi to workers

"I cannot do a miracle from above. The workers need to strengthen the party at the booth level," Priyanka Gandhi said during a meeting while addressing workers from the Bundelkhand region என்கிறது எக்ஸ்பிரஸ் செய்தி 

                  
A day before Saudi Crown Prince Mohammed bin Salman lands in Delhi for a bilateral visit, Riyadh signed off on a joint statement with Pakistan Monday where they said there was a need to avoid “politicisation of the UN listing regime” — an apparent reference to India’s efforts to list Jaish-e-Mohammad chief Maulana Masood Azhar as a “global terrorist”  என்கிறது இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி 
வஹாபி அரசியல் எப்படிப்பட்டது என்பதை நண்பர்கள் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டிய தருணம் இது. வஹாபி என்றால் யார்?  a member of a strictly orthodox Sunni Muslim sect from Saudi Arabia; strives to purify Islamic beliefs and rejects any innovation occurring after the 3rd century of Islam. Synonyms: Wahhabi Type of: Moslem, Muslim. a believer in or follower of Islam.இது சுருக்கமான விவரம். வஹாபி அரசியல் எப்படிப்பட்டது என்பதை இதை வைத்துப் புரிந்து கொள்ள முடியாது. சமீபத்தில் துருக்கியில் நடந்தேறிய கஷ்நோகி படுகொலை கொஞ்சம் கூடுதல் பரிமாணங்களைக் காட்டக் கூடும்! இந்தப் படுகொலையில் பெயரைக் கெடுத்துக் கொண்ட  சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் மொகமது பின் சல்மான் பாகிஸ்தானுக்கு ஞாயிறு அன்று விஜயம் செய்து மூழ்கிக் கொண்டிருக்கும் பாகிஸ்தானியப் பொருளாதாரத்துக்கு தற்காலிக சுவாசம் கொடுக்கிற மாதிரி 20 பில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தங்களில் கையெழுத்து இட்டிருக்கிறார். புல்வாமா தாக்குதல்களின் தாக்கமாக, பாகிஸ்தானில் இருந்து அடுத்து இந்தியாவுக்கு விஜயம் செய்வது நெகட்டிவ் பப்ளிசிட்டி ஆகிவிடப் போகிறதே என்ற அச்சம், இளவரசர் ரியாத்துக்குத் திரும்பப் போய் அங்கிருந்தே புறப்பட்டு இந்தியாவுக்கு இன்று செவ்வாய்க்கிழமை வருவதாக செய்திகள் சொல்கின்றன.  

No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!