அரசியல் கூட்டணிகள் இன்னமும் முடிவாகாமலேயே இங்கே தேர்தல் களம் சூடாகிக் கொண்டு வருகிறதோ?
தமிழிசை இங்கே இப்படியும் வரலாம் அப்படியும் வரலாமென்று பட்டும் படாமல் சொல்வது தோசைக்கல் இன்னும் பதத்துக்கு வரவில்லையென்று சொல்வதாக எடுத்துக் கொள்ளலாமா?
ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாதாமே!
பெரியார் திடலுக்கு பரமக்குடியில் இருந்து தவழ்ந்தே வந்தவருக்கு வந்த சோதனையைப் பாருங்கள்!
தி மு கழகம் கமல் ஹாசன் சொன்னாலும் சொல்லா விட்டாலும், ஊழலில் ஊறித்திளைத்த கட்சிதான்! அதை கமல் சொல்லும்போது ஏன் உறுத்துகிறதாம்? வீரமணி பாணியில் அவருடைய பார்ப்பனவேர்கள் இப்போது முன்னுக்குவந்து உறுத்துவானேன்? இத்தனைக்கும் கமல் ஹாசனைக் காப்பியடித்து, இசுடாலின் ஊர் ஊராகப் போய், கிராமசபை, ஊராட்சி சபை கூட்டம் எல்லாம் நடத்திக் கொண்டிருப்பது கூட மறந்துபோய் விட்டதா என்ன?
இப்படி பல வீடியோக்கள் யூட்யூபிலேயே! இப்போதுதான் கவனத்துக்கு வந்தது
பாட்டாளி மக்கள் கட்சி! மருத்துவர் ராமதாஸ், எதிர்பார்ப்புக்கேற்ற வளர்ச்சி பெறவில்லைதான்! அதற்காகவே அவர்களை ஒதுக்கிவைத்து விடலாமா?
ராஜேஸ்வரி பிரியா! பாமகவில் என்னைக் கவனிக்க வைத்த குரலாக இன்று!
//மதம் சார்ந்த ஸ்டாலினின் செயற்பாடுகள் பற்றிய ராஜேஸ்வரி பிரியாவின் விமர்சனங்கள் பல மிக சரியானதே. மருத்துவர் ராமதாஸ் ஜாதி கட்சி வைத்திருப்பவர்.அதற்காகவே அவர்கள் கட்சியை சமுதாயத்தில் ஒதுக்கிவைத்து விட வேண்டும்//இப்படி ஒரு பின்னூட்டம் வேகநரி என்ற பிளாக்கர் அடையாளத்துடன் வந்திருக்கிறது. தங்களுடையசுயவிவரம் ஒரு அளவுக்காவது வெளிப்படுத்தத் தயங்குவது ஏனென்று எனக்குப் புரியவில்லை!
ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்?
Deleteஅப்படி இருந்ததால் தான் உங்க வலைதளத்தில் எனது கருத்தை பதிவு செய்தேன்.அது தான் நான் செய்த தவறு. உங்களுக்கு பிடித்தமான கருத்தை என்னால் பதிவு செய்ய முடியாது. எனது கருத்தை உங்க தளத்தில் அனுமதிக்க முடியாது,விரும்பவில்லை என்றால் எனது கருத்தை நீங்கி விடுங்கள்.நன்றி.
அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்! என்று அடுத்துச் சொல்லியிருந்ததை சௌகரியமாக மறந்துவிட்டு, இப்போது ஒருவாரம் கழித்து வந்து குதிப்பானேன்?
Delete