மம்தா பானெர்ஜி நடத்திய வீதி நாடகத்துக்கு, உச்சநீதி மன்றம் இன்று முற்றுப்பள்ளி வைத்திருப்பதாகத்தான் தோன்றுகிறது. மத்திய அரசின் வழக்கறிஞர் நளின் கோஹ்லி, உச்சநீதிமன்றம், மம்தா வெர்சஸ் மோடி என்றாக்கப்பட்ட சாரதா நிதிநிறுவன மோசடி விவகாரத்தின் மீது பேசுகிற ஒரு சிறு காணொளி.
உச்சநீதிமன்றம், கொல்கத்தா போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமார், சிபிஐ முன் ஆஜராகவேண்டுமென்றும் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்கவேண்டுமென்றும் தெரிவித்திருப்பதை, மம்தா பானெர்ஜி தனக்குக் கிடைத்த வெற்றியாகப் பறைசாற்றிக் கொண்டிருப்பது இந்திய அரசியல்களம் எவ்வளவு கேவலமாகப் போய்க் கொண்டிருக்கிறதென்பதற்கு சிறந்த உதாரணம்.
சாரதா குழுமம் லட்சக்கணக்கானவர்களை மோசடி செய்ததில் மம்தாவின் திரிணமுல் காங்கிரஸ் பிரமுகர்கள் சம்பந்தப்பட்டிருப்பது மறைக்க முடியாமல் போன தருணங்களில், மம்தா பானெர்ஜி இதே ராஜீவ்குமார் தலைமையில் சிறப்பு விசாரணைக் குழு அமைத்தது ஒருபுறமென்றால், 40000 கோடி ரூபாய் அளவு மோசடி நடந்திருக்கலாம் என்ற சூழலில் வெறும் 500 கோடிரூபாய் மட்டும் மீட்கப்பட்டதாக, எல்லோருக்கும் பணம் திருப்பிக் கொடுக்கப்பட்டதாக ஒரு நாடகத்தை அரங்கேற்றியதும் இதே மம்தா தான்!
இந்தக் குழாயடிச் சண்டைக்கு யார் யாரெல்லாம் ஆதரவு எதற்காக ஆதரவு என்பது ஜனங்களுக்குத் தெரிந்தே இருக்கிறது! ANI செய்தி ட்வீட்டுக்கு வந்த பின்னூட்டங்களே, ஒரு சோறு பதமாக! மோடிக்கு எதிரான மெகாகூட்டணி என்பது பிரதேசங்களால் பிரிக்கப் பட்டிருந்தாலும் ஊழலால் ஒன்று சேர்ந்து கூடியிருப்பது என்று மனிதவளத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் சொன்னதில் பொய்யில்லை!
7:07 AM - 4 Feb 2019
The CBI’s contribution to this opposition unity is huge as India heads to the 17th general election. These parties have buried mutual animosities for another day; for, if Mr. Modi retains power, they may not survive to fight another battle.
Mr. Modi’s ‘take-no-prisoners’ politics has united all his opponents. And Ms. Banerjee is using the same strategy as Mr. Modi when he was Gujarat Chief Minister for 12 years இது ஹிந்து நாளிதழின் கண்டுபிடிப்பு
தன்னுடைய கட்சிக்காரர்கள் கைது செய்யப்பட்ட போது கூடப் பொங்காத, தெருவில் இறங்கிக் குழாயடிச்சண்டைபோடாத மம்தா பானெர்ஜி.ராஜீவ் குமார் சிபிஐ விசாரணைக்கு அழைக்கப் பட்டபோதுமட்டும் பொங்குவானேன்? மம்தா பானெர்ஜி அதற்கும் ஒரு ரெடிமேட் பதில் வைத்திருப்பதாக இந்தச் செய்தி சொல்கிறது!
திருடன் முந்திக்கொண்டு திருடன்! திருடன்!என்று கூட்டத்தில் கூவிக்கொண்டே தப்பிக்கிற மாதிரி, இங்கே ஊழலில் திளைத்துக் கொண்டிருக்கும் ஒரு கூட்டம் மெகா கூட்டணி அமைத்துக் கும்மாளம் போட்டுக் கொண்டிருக்கிறதே!
கவனிக்கிறோமா?
இன்னுமொருமுறை இவர்களிடம் ஏமாறமாட்டோம் என்பதில் உறுதியாக இருக்கப்போகிறோமா?
மாற்று அவசியம் தான்! ஆனால் எப்படிப்பட்ட மாற்று என்பது தான் இங்கே மிக முக்கியமான கேள்வி!
முத்தாய்ப்பு அருமை! அவரவர் கட்டுப்பாட்டுடன் ஊழல் அரசியல்வாதிகளை புறக்கணிக்க முடிவெடுத்தால் சிறு துளிகள் பெரும் வெள்ளமாவது நிச்சயம்!.. மனம் சோர வேண்டும். நடக்க வேண்டிய நல்லவைகள் நடந்தே தீரும்!
ReplyDelete