மாற்றுக் கருத்துக்கும் இங்கே மரியாதை உண்டு

சமூக வலைத்தளங்களில், வலைப்பதிவுகளில் ஏன் எழுதுகிறோம்? யாருக்காக எழுதுகிறோம்? இந்தக் கேள்விகளுக்கு, எழுதுகிற அத்தனை பேருக்குமே விடை கிடைத்து விடுகிறதா?

700+ பதிவுகளை பொதுவெளியில் பகிர்ந்த பிறகும் கூட எனக்கு இன்னமும் ஒரு தெளிவான சித்திரம் கிடைத்ததே இல்லை!


எமெர்ஜென்சி நாட்களைக் குறித்து எனக்கு ஒரு அனுபவபூர்வமான கருத்து உண்டென்பதைப் இங்கே பலபதிவுகளில் சொல்லிவந்திருக்கிறேன். ஆரம்ப நாட்களில் கோவையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் (காங்கிரசில் ஒரு பொறுப்பில் இருந்தவரும் கூட) மிகக் கடுமையாக பின்னூட்டங்களில் வாதம் செய்ததுண்டு.

சொல்லப்பட்ட கருத்தில் என்ன பிழை இருந்தது, உண்மையான நிலவரம் என்ன என்றெல்லாம் எடுத்துப் பேசுவதற்குப் பதிலாக ஏசுவது, ஆளில்லாத டீக்கடைல  யாருக்காக ஆத்துறீங்க பாணியில் இருக்கும். ஆனால் அவருடைய பின்னூட்டங்களை நிராகரித்ததில்லை.

இர்விங் வாலஸ் எழுதிய The R Document நாவலைக் குறித்து இங்கே புத்தக அறிமுகமாக மீள்பதிவாக  எழுதிய பதிவில் கூட இந்திரா கொண்டுவந்த 42வது அரசியல் சாசனத் திருத்தம் பற்றிய குறிப்பு இருந்தது. இதைச் சொல்லும் போதே வாசிக்கிறவர்கள் என்னோடு உடன்பட்டே ஆகவேண்டுமென்கிற கட்டாயமில்லை என்பதையும் அறிந்திருக்கிறேன்.

மாற்றுக கருத்து இருந்தால், அதை இங்கே பகிர்ந்து கொள்ளவும் விரும்பினால் Guest Post ஆக வெளியிடத் தயாராகவும் இருக்கிறேன்!

தன்னுடைய சுய விவரத்தைப் பொதுவெளியில் பகிர்ந்துகொள்ளத் தயங்காதவர்கள், கண்ணியமான வார்த்தைகளில் எழுதியனுப்பினால் இங்கே மாற்றுக் கருத்துக்கும் மரியாதையளித்து வெளியிடுகிறேன்.

சரிதானா?

      
      

No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!