வரவிருக்கும் தேர்தல்! மாற்றத்தை நோக்கியா?

ஒவ்வொரு தேர்தலுமே ஒருவகையில் முக்கியமானது தான்! என்றாலும் 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பே எத்தனை கூக்குரல்கள்? இல்லாத பூச்சாண்டி காட்டி மாநிலக் கட்சிகள் ஜனங்களிடம் சொல்லும் தொடர்ச்சியான பொய்கள் தான் எத்தனை?

மோடி மீதான பயமே மோடி எதிர்ப்பு, மோடி வெறுப்பு என்றாகிக் கொண்டிருப்பதை முந்தைய பதிவுகளில் கொஞ்சம் பார்த்து வந்திருக்கிறோம். இந்தத்தேர்தல் எந்தவகையில் வித்தியாசமானது? அல்லது இல்லை?

இங்கே  நான்குபேர் விவாதம் செய்கிற விதம்,  என்ன சொல்ல வருகிறார்கள்? சுப வீ செய்தி சொல்கிறேன் என்று வீண் புரளி மட்டுமே கிளப்புவது புரிகிறதா?
மார்க்சிஸ்டுகளுக்கு திடீரென்று காந்தி மீது காதல், அகிம்சை மீது அபிமானம் வந்திருப்பதைக் கவனிக்க முடிகிறதா? அந்த திடீர்க் கரிசனம், மோடி மீது வெறுப்பை உமிழ்வதற்காக மட்டுமே என்பதை என்ன என்று சொல்வீர்கள்?  
இங்கே CPI கட்சியின் ஆர் நல்லகண்ணுவைப் பற்றி என்ன சொல்கிறார்கள், நல்லகண்ணு என்ன சொல்கிறார் என்பதைக் கொஞ்சம் கவனியுங்கள்! ஒரே ஒரு நல்லகண்ணு மட்டும் நல்ல கண்ணுவாக     இருந்தால் போதுமா? போதுமானதாக இருந்திருக்குமேயானால் வலது கம்யூனிஸ்டுகள் எங்கோ போயிருக்க மாட்டார்களா? ஏன் ஆகவில்லை என்பதையும் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்! இடதுசாரிகளுடைய போதாமை, இங்கே திராவிடக் கூத்தாடிகளுடைய ஆதிக்கத்துக்கு வித்திட்டு, இன்று திராவிடங்களுடன் மாறிமாறி ஒன்றிரண்டு சீட்டுக்காக ஒட்டிக் கொண்டு அலைகிற அளவிற்கு கொண்டுவந்து விட்டிருக்கிறது.  

ஆக, மாற்றம் வந்துவிடுமா என்று கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் மாற்றம் என்பது ஜனங்கள் அதற்குத் தயாராவதில் மட்டுமே சாத்தியமாகக் கூடியது! ஒரு நல்ல தலைவன் மாற்றத்துக்கான உந்துசக்தியாக இருக்கிறான் என்பது புரிந்தால் இங்கே நல்ல தலைமைக்கான வெற்றிடம் முழுமையாக நிரப்பப்படாமல் இருப்பதையும் நன்றாகப் புரிந்து கொள்ள முடியும்! 

இப்போதுள்ள தேர்தல் முறைகளில் நல்லதொரு மாற்றத்தை எதிர்பார்க்க முடியாதுதான்! மாற்றம் என்பது ஜனங்களாகிய நம்மிடமிருந்து தொடங்குகிற விஷயம்!    
இங்கே ஒவ்வொரு ஈயமும் பித்தளையும் ஒன்றை ஒன்று பழிசொல்லிக் கொண்டிருப்பதில் ஒவ்வொருவர் சாயமும் வெளுத்துப்போன பிறகும்கூட ......

இவர்களைக் கட்டிக்கொண்டு இன்னும் எத்தனை நாளைக்கு  அழப்போகிறோம்? சொல்லுங்களேன்!

                

2 comments:

  1. இது போன்ற விவாதங்கள் ஓட்டுப் போடும் மக்களிடம் எந்த தாக்கத்தையும் உருவாக்குகின்றதா? என்பதே என் கேள்வி. காரணம் மக்களின் மனோநிலை என்பது தேர்தலுக்கு முந்திய மூன்று நாட்களில் அப்போது நிலவும் தட்பவெட்ப நிலையைப் பொறுத்தே மாறுபடும். இதில் சாதி தற்போது மதமும் இடம்பிடித்துள்ளது. பாராளுமன்றத் தேர்தல் மூலம் இங்கே வெற்றி பெற்றவர்கள் எந்தக்கட்சியாக இருந்தாலும் இங்கே என்ன சாதித்துள்ளார்கள் என்பதனை அடுத்த பதிவாக எழுத வேண்டுகின்றேன்.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் ஜோதிஜி!

      மயிர் பிளக்கும் விவாதங்கள் என்று அவர்கள் நினைக்கலாம்! ஆனால் கள யதார்த்தம் என்னவென்பதைச் சொல்வதற்காகத் தான் நல்லகண்ணு பற்றிய வீடியோவையும் கொடுத்திருந்தேன்! இந்த மாதிரி விவாதங்கள். இணையதள திமுக அலப்பறைகள் எல்லாவற்றையும் ஜனங்கள் பொழுதுபோக்குக்காகத் தான் பார்க்கிறார்கள்.

      கருத்தை உருவாக்க இதுமாதிரி விவாதங்கள் முழுக்க உதவுவதில்லைதான்! ஆனாலும் ஏதோ ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதும் உண்மை.

      அப்புறம் சாதிப்பதற்காகவா மக்கள் பிரதிநிதிகள் சட்டசபைக்கும் நாடாளுமன்றத்துக்கும் போகிறார்கள்?

      மூன்று நான்கு தலைமுறைக்கு சம்பாதிப்பதற்காகத்தான் என்பது இங்கே சிறுபிள்ளைகளுக்குக் கூடத் தெரியுமே! .

      Delete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!