காஷ்மீர் அவந்திபோரா பகுதியில் நேற்று முன்தினம் பாகிஸ்தானிய ISIயால் ஊக்குவிக்கப்படும் JeM அமைப்பு ஒரு கோரத்தாக்குதலை நடத்தி 44 CRPF வீரர்கள் பலியான சம்பவம் நாடுமுழுவதும் அதிர்வை உண்டாக்கியிருக்கிறது.ஆனால் இங்கே தந்தி டிவிக்கு வேறு கவலை! பாகிஸ்தானுடன் போர்வருமா? வராதா?
கிருஷ்ண மூர்த்தி S
கிருஷ்ண மூர்த்தி S
ப்ரம்ம செலானி சொல்வதில் முழுநியாயம் இருக்கிறது. அவந்திபோரா தாக்குதலுக்குப் பின்னாலும் முழு அளவிலான தூதரக உறவுகள் நீடிக்கத்தான் வேண்டுமா?
1:22 PM - 16 Feb 2019
பிரிவினைக்கு முந்தைய காலத்திலும் சரி, பிந்தைய 72 ஆண்டுகளிலும் சரி, பாகிஸ்தான் ரத்தவெறி பிடித்தலையும் ஒரு மனநிலையோடுதான் இருந்து வருகிறது. இதுபோல வெறுப்பில் எரியும் மனங்களுடன் சாந்தி சமாதானம் எதுவுமே சாத்தியமில்லைதான்! ஆனால் போர்?
ப்ரம்ம செலானி ஹிந்துஸ்தான் டைம்சில் நேற்றைக்கு எழுதிய இந்தப் பகிர்வு, வேறு சில முக்கியமான விஷயங்களையும் சொல்கிறது. முந்தைய காங்கிரஸ் ஆட்சிக்காலம் வரை நம்முடைய கவனம், வெளியுறவுக்கொள்கை என்பதெல்லாம் மேற்கே பாகிஸ்தான் ஒன்றை மட்டும் மையப்படுத்தியே இருந்ததும், இப்போது அது கொஞ்சம் மாறி, இந்திய வெளியுறவுக் கொள்கை விரிவடைந்து வருகிற ஒரு நல்லவிஷயம் நடந்து கொண்டிருப்பதும் தெரிந்து வைத்துக் கொள்ளவேண்டிய செய்திகள்.
As Indian national elections approach, China has stepped up its influence operations in India. China has been emboldened by its remarkable success in Nepal, which has tilted toward Beijing, despite an open border underscoring its symbiotic relationship with India. On the first anniversary of Nepal’s communist government this weekend, it is important to remember that China played no mean role in the communists’ democratic ascension to power there.
India, with its fragmented polity and fractious political divides, has become an important target of China’s efforts to buy access and influence and sway politics. These efforts have been aided by New Delhi’s feckless approach to Beijing, especially since the Wuhan summit
Moreover, by more than doubling its trade surplus with India to over $66 billion a year on the National Democratic Alliance government’s watch, Beijing has acquired deeper pockets for influence operations, which aim to help instil greater Indian caution and reluctance to openly challenge China. At a time when India is engrossed in electoral politics, including increasingly petty and bitter feuding, Beijing’s conduct is underlining its master plan for this country: It wants a weak and unwieldy Indian government to emerge from the elections.
இப்படி ப்ரம்ம செலானியின் கருத்தைப் புறந்தள்ளிவிட முடியாதென்றே நினைக்கிறேன். அவர் சொல்லியிருப்பதை முழுதுமாக இணைப்பில் படித்து என்ன தோன்றுகிறது என்று சொல்லுங்களேன்.
முகேஷ் அம்பானியின் சேனல் இது. சென்ற நாடாளு மன்றத் தேர்தல்களை ஒட்டிக் கைமாறிய ஊடகம். இங்கே ஒவ்வொரு ஊடகத்துக்குமே ஒரு தனி அரசியல் இருக்கிறது என்பதை மனதில் வைத்துக் கொண்டால் செய்திகள் விவாதங்கள் போகும் விதத்தையும் புரிந்து கொள்வது கடினமாக இருக்காது.
வேணாம் சாமிகளா! வெண்ணெய்வெட்டி சிப்பாய்கள், முகநூல் போராளிகளாகவே இருந்துவிட்டுப் போகட்டும்!
இந்தக் கோமாளிகளை என்ன செய்யப்போகிறோம்?
இந்த ஸோ கால்டு முகநூல் போராளிகள் குறைந்த பட்சம் 100 ரூபாயாவது நிவாரண நிதிக்கு அளித்திருப்பார்களா?
ReplyDeleteசீனாவுக்கு இப்போது இலங்கையில் கை இறக்கம் ஆவதுபோல இருக்கும் நிலையில் மசூத் அசார் விஷயத்தில் சீனா தலையிடாதுதான்! நம்மூர் நவ்ஜோத் சிந்துவின் கருத்தே அப்படிதானே இருக்கிறது?
பாகிஸ்தான் பத்திரிகையில் அடில் அஹமது சுதந்திரப் போராட்ட தியாகி ஆகிவிட்டான்.
இல்லை ஸ்ரீராம்! சீனா இந்த விஷயத்தில் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு முட்டுக்கு கொடுத்தே வருகிறது
Deletehttps://economictimes.indiatimes.com/news/defence/china-again-says-no-to-back-indias-bid-to-list-jem-chief-azhar-as-global-terrorist-by-un/articleshow/68006847.cms
//மசூத் அசார் விஷயத்தில் சீனா தலையிடாதுதான்! நம்மூர் நவ்ஜோத் சிந்துவின் கருத்தே அப்படிதானே இருக்கிறது?//
Delete//இல்லை ஸ்ரீராம்! சீனா இந்த விஷயத்தில் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு முட்டுக்கு கொடுத்தே வருகிறது //
நானும் அதையேதான் சொல்ல முயன்றிருக்கிறேன்!
இந்திய வெளியுறவுக் கொள்கைகளுக்கும் உலக அரங்கில் இந்தியாவின் பெருமையும் மதிப்பும் மரியாதையும் கூடுவதற்கான செயல்பாட்டில் பிரதமர் மோடியின் பங்களிப்பு மகத்தானது.
ReplyDeleteஇந்திய வெளியுறவுக்கொள்கை முதிர்ச்சியடைந்து வருவது தொடர வேண்டுமானால் இங்கே உள்ளூர் அரசியல் களம் வாகாக அமைய வேண்டுமே ஜீவி சார்!
Delete