அரசியலில் ராபர்ட் வாத்ரா! அப்புறம் பானாசீனா!

காங்கிரஸ் ஏன் ஒழிந்துபோகவேண்டும்? பதிபக்தி மிகுந்த பிரியங்காவின் காதல் கணவர் ராபர்ட் வாத்ராவுக்கு அரசியலில் இறங்கும் ஆசை வந்துவிட்ட ஒரே காரணம் போதாதா? எட்டு முறை அமலாக்கத் துறை முன்னால் ஆஜரான பிறகு முகநூலில் தன்னுடைய ஆசையை இப்படிச் சொல்லி இருக்கிறாராம்!

 
சில ஆண்டுகளுக்கு முன்னால் இதே மாதிரி ஆசை மாப்பிள்ளை வாத்ராவுக்கு வந்தபோது ப்ரியங்கா அதை மண்டையில் தட்டி அடக்கி வைத்துவிட்டார். ஆனாலும் கூட  வாத்ராவுக்கு அரசியல் ஆசை வந்து கொண்டே இருக்கிறது போல! 

2014 இலிருந்தே  ராபர்ட் வாத்ரா எப்படி வழக்கு விசாரணைகளிலிருந்து தப்பித்துக் கொண்டே வருகிறார்? யார் அவரைப் பாதுகாக்கிறார்கள்?

சாரதா குழும மோசடி உட்பட ஏராளமான நிதிநிறுவன மோசடிகளைப் பற்றிய புகார்கள் ரிசர்வ் வங்கிக்கு 2007 முதலே வந்துகொண்டிருந்தாலும், 2013 இல் தான் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு, 2014 இல் உச்சநீதி மன்றம் CBI விசாரணைக்கு மாற்றிய பிறகும் கூட, குற்றத்தில் கூட்டாளிகளாக இருந்த அன்றைய ஆளும் கட்சியும், அதிகாரிகளும் பெரும் தடையாக இன்றும் இருப்பதை இந்தப்பக்கங்களில் பார்த்திருக்கிறோம். 


பானாசீனா வில்லனா விக்டிமா? கொஞ்சம் சுவாரசியமான அலசல் கொஞ்சம் பழசுதான்! ஆனாலும் தோண்டத்தோண்ட நிறைய விஷயங்கள் வந்து கொண்டே இருக்கின்றன. ஒரே வரியில் சொல்வதானால் காங்கிரஸ் என்றாலே ஊழல்தான்!    

இந்த வீடியோக்களைவரிசையாகப் பார்த்துக் கொண்டே வந்ததில்  R Com அனில் அம்பானியின் சாம்ராஜ்யத்தை ஒரு நீதிமன்றத் தீர்ப்பு அடியோடு சரித்திருக்கிற செய்தி விவரமும் வீடியோவாக!  . பணத்தைச் சொன்னபடி செலுத்தவில்லை என்பதால் மட்டும் அல்ல! முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், அனில் அம்பானியின் கடன்களுக்குப் பொறுப்பேற்க மறுத்திருப்பது ஒரு முக்கிய காரணம். 

வங்கிகளுக்கு அனில் அம்பானி பட்டிருக்கிற 35000 கோடி ரூபாய் கடன் வசூலாவது குதிரைக்கொம்புதான்! என்ன நடக்கப்போகிறது என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்! 
      

2 comments:

 1. மினிமம் பேலன்ஸ் இல்லாமல் இருக்கும் வங்கிக் கணக்குகளுக்கு அபராதம் மாதிரி வங்கிகள் வசூலிக்கும் தொகை பற்றி ப.சி பேசியிருக்கிறார். அடுத்த நிதியமைச்சர் சார் தான் போலிருக்கு!!

  அப்போ பத்தாயிரத்திற்கு பணமாக வங்கிக் கணக்கிலிருந்து எடுத்தால் 1% தர வேண்டும் என்ற தனது பழைய உத்திரவை தூசி தட்டி எடுத்து விடுவாரோ?

  ReplyDelete
  Replies
  1. அவர் என்ன வேணும்னாலும் சொல்லிட்டுப்போகட்டும்! இன்னொருக்கா பானாசீனா பதவிக்கு வந்தா நாடு தாங்குமா ஜீவி சார்?

   Delete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!