சண்டேன்னா மூணு! மம்மூட்டி!ரங்கராஜ் பாண்டே! பொருமும் ஆசிரியர்கள்

ம்மூட்டி நடித்து அண்மையில் வெளியாகி இருக்கிற பேரன்பு திரைப்படம் மீதான பாசிட்டிவ் விமரிசனங்கள், படத்தைப் பார்க்கும் ஆவலைத் தூண்டியிருக்கின்றன. இந்தப்படத்தின் அறிமுக நிகழ்ச்சியில் நடிகர் சத்தியராஜ் தனக்கு பெரியார் ஆதர்சமாக இருந்ததுபோல, மம்மூட்டிக்கு யார் என்று கேட்டதற்கு, அப்படியெல்லாம் எவருமில்லை என்று பதிலளித்ததாகவும் ஒரு செய்தி வந்துபோனது! 

    
மம்மூட்டி நடிக்க வந்து ஐம்பது ஆண்டுகளாகி விட்டதா?
******* 
தேர்தல் வருகிற சமயங்களில் எல்லாம், EVM எனும் மின்னணு வாக்கு இயந்திரங்கள் மீது சந்தேகத்தைக் கிளப்புகிற மாதிரி, செய்திகளும் வந்துபோகும்! இந்த முறை அமெரிக்காவில் தஞ்சம் புகுந்த ஒருவரை வைத்து லண்டனில் EVM களை ஹேக் செய்துதான் 2014 தேர்தலில் பிஜேபி ஜெயித்தது அதை நேரடியாக ப்ரூவ் செய்து காட்டப்போவதாக புரளிகள் கிளம்பின. அந்த ஆசாமி நேரில் வராமல் ஸ்கைப் மூலமாகவே முகத்தை மறைத்துக் கொண்டு பேசியதில் பொய்கள் அம்பலம் ஆனதை முன்பே இங்கே பேசியிருக்கிறோம்.
இந்தக்காணொளியில் ரங்கராஜ் பாண்டே, இந்தப் புரளிகளைப் பற்றி விரிவாகவே பேசியிருக்கிறார்!
*******
ஜாக்டோ ஜியோ போராட்டம் ஒன்பது கோரிக்கைகள் மீதானது என்று சொல்லப்பட்டாலும், பின்னணியில் திமுகவின் அஜெண்டா மட்டுமே இருந்ததால், ஒன்பது நாட்களுக்கு மேல் தாக்குப்பிடிக்க முடியாமல் ஜகா வாங்க வேண்டியதாகிப் போனது. விவாதங்களும் பொருமல்களும் இன்னமும் ஓயவில்லை.

இந்த ஆசிரியை பொருமுவதில், ஏதாவது நியாயம் இருக்கிறதா? 

        

3 comments:

 1. இந்த மூன்றுக்கு மேல் வேறு எந்த மூன்றையாவது தேர்ந்தெடுத்திருக்க கூடாதா?

  ReplyDelete
 2. இந்த மூன்றுக்கு பதில் -- என்று திருத்தி வாசிக்கவும்.

  ReplyDelete
  Replies
  1. திருத்தி, மாற்றி என்று அலையவேண்டாமே என்று வேறு சப்ஜெக்ட்டுக்குப் போயாச்சு ஜீவி சார்! இன்றைக்கு காலையில் செய்திகளை பார்த்துக் கொண்டே வந்ததில் the riddle of sphinx கதை ஞாபகத்துக்கு வரவே , அதையே ஒரு பதிவாக! எத்தனைபேர் புதிரைப் புரிந்துகொள்வார்கள், விடை காண முயல்வார்கள் என்பது வழக்கம்போல கேள்வியாக மட்டும் ....!

   Delete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!