கூட்டணிகள் வலிமைக்கான அடையாளமா? பலவீனமா?

இங்கே தேர்தல் களத்தில் வலிமையான கூட்டணி எது என்று தேடிக்கொண்டிருக்கிற அதேநேரம் கூட்டணிகள் வலிமையின் அடையாளமா? அல்லது பலவீனமா என்ற கேள்வியும் இயல்பாகவே எழுவதுதான்!
இது நேற்றைய அலசல். நாளைய தினம் செல்லுபடி ஆகுமா என்பது யாருக்கும் தெரியாது! வானிலை அறிக்கை மாதிரி சட்டென்று மாறக்கூடியதுதான்!  
ட்வீட்டர், முகநூல் அலப்பறைகளுக்கெல்லாம் அந்த நேரத்தைய ஆகா ஓகோ லைக், பின்னூட்டங்களோடு முடிந்து விடுகிற, கோப்பைக்குள் சுனாமி வருகிற கதைதான்! வலைப்பதிவுகள் வேறு ரகம்! யார்வந்து பார்த்தார்கள் என்ன நினைத்தார்கள் என்பது பெரிய மனதுவைத்து அவர்களே சொன்னால் தான் உண்டு!  
கொதிக்கும் சூரியன், கூர்மையிழந்த பம்பரம், துண்டிக்கப்பட்ட கை என்று திமுக கூட்டணியை நன்றாகக் கலாய்க்கிறார்! வறட்சியான அரசியலில் அவ்வப்போது இந்தமாதிரி நகைச்சுவை உணர்வு அவசியம்தான்!  

உள்ளூர் அரசியலோடு உத்தர பிரதேச அரசியல் காமெடியையும் கொஞ்சம் பார்க்கலாமா? காங்கிரசை ஒதுக்கிவைத்துவிட்டு சமாஜ்வாதி கட்சியும் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும் தொகுதிப் பங்கீட்டை முடிவு செய்துவிட்டன. மூன்று இடங்களில் அஜித் சிங்கின் ராஷ்ட்ரீய லோக் தளத்துக்கு ஒதுக்கி இருக்கிறார்களாம்! தமிழ்நாடு தவிர அநேகமாக எல்லா மாநிலங்களிலும் காங்கிரஸ் தனிமைப் படுத்தப் பட்டிருக்கிறது!     

 
இன்றைக்கு இது போதுமா?

5 comments:

 1. நிச்சயம் பலவீனம் தான். தனித்துப் போட்டியிட தில்லுள்ளவர்களுக்குத் தான் பெரிய கட்சி இமேஜூம் தலைமை தாங்கும் திறமையும் கைவரப் பெறும்.

  கூட்டணி கட்சிகளுடனான தேன்நிலவு தேர்தலோடு முடிந்து போனால் கவலையில்லை. தொடர்ந்து எக்ஸ்ட்ரா லோடுகளை சுமக்கக் கூடிய தார்மீகக் கடமை வந்து சேரும்.

  கூட்டணிகள் ஏதாவது கொள்கை அடிப்படையில் உருவாகுமென்றால் உத்தமமான காரியம். அது ஒன்று சேர்ந்தவர்களின் இலட்சியக் கனவாகும். அந்த நல்ல கனவை நனவாக்க ஒன்று சேர்ந்த அர்ப்பணிப்பு திகைக்கும். இலட்சியம் இருப்பின் நான் பெரியவன், நீ சிறியவன் என்ற எண்ணமே ஏற்படாத ஒற்றுமை பலப்பட்டும். எண்ணியவர் எண்ணியாங்கு எய்துவதற்கான திண்மை ஏற்படும்.

  இந்தத் தருணத்தில் அப்படியான தியாகங்கள் எதிர்ப்பார்ப்பதற்கு இல்லையாயினும் அதவற்கான உந்து சக்தி எங்கேயிருந்தாவது கிடைத்தால் நல்லது. அது தேசத்தின் அதுவே ஆகப்பெரிய உத்திரவாதமாக அமையும்.

  ReplyDelete
 2. அது தேசத்தின் எதிர்கால வளர்ச்சிக்கான ஆகப்பெரிய உத்திரவாதமாக அமையும் --- என்று கடைசி வரியைத் திருத்தி வாசிக்க வேண்டுகிறேன்.

  ReplyDelete
 3. கூட்டணிகளை, ஒரு சரியானகோணத்தில் பார்க்க முடிந்தால், ஒரு பொதுவான அம்சத்தின் பேரில் ஒன்றுபட முடிந்தால், நிச்சயம் வலிமையானதுதான் ஜீவி சார்! ரஷ்யப் புரட்சியின் போது டிராட்ஸ்கியால் முதலில் சொல்லப்பட்டு பின்னாட்களில் ஸ்டாலின் ஆதரவாளரான ஜார்ஜ் டிமிட்ரோவ் கொஞ்சம் விவரித்துச் சொன்ன ஐக்கிய முன்னணித் தந்திரம் இந்த விஷயத்தின் முன்னோடி.

  இங்கே மேற்குவங்கத்தில் ப்ரொமோத் தாஸ் குப்தா முதலில் இடதுசாரிக் கருத்துடைய கட்சிகளை ஒருங்கிணைத்து இடது முன்னணி அமைத்தார். காங்கிரசை வீழ்த்தி ஒரு இடதுசாரி அரசு அமைவதில் அது முக்கியமான பங்கை வகித்தது. ஆனால் இன்றைய நிலைமை என்ன? CPIM வழியில் ஒத்தியங்கிய CPI கூட இப்போது விறைத்துக்கொண்டு .. இங்கே தமிழ்நாட்டில் விடுதலைச் சிறுத்தைகள், வைகோவுடன் கை கோர்த்துக் கொண்டு தனிவழியில்! இடதுகளின் லட்சணமே இப்படியென்றால், இங்கே இந்தக் கொள்கைப் பிடிப்பும் இல்லாத மாநிலக் கட்சிகளின் ஒற்றுமை எந்த அளவு நீடிக்கக் கூடியது?

  இந்த ஒரு காரணமே இவர்களை ஏன் நிராகரிக்கவேண்டும் என்பதற்குப் போதுமானதாக!

  ReplyDelete
 4. நீங்கள் குறிப்பிடும் வலிமையைத் தான் நானே சொல்லி விட்டேனே?

  ReplyDelete
  Replies
  1. ஜீவி சார்! நான் குறிப்பிட்டுச் சொல்லியிருப்பது, இப்போது எந்தக் கூட்டணியும், கொள்கை சார்ந்ததாகவோ , பொதுநலனில் அக்கறை உள்ளதாகவோ இல்லை என்பதைத்தான்! ஏன் இதுமாதிரியான சுயநலக் கூட்டணிகளை நிராகரிக்கவேண்டும் என்பதற்கான காரணமாகவும் தெளிவாகச் சொன்னேன், அவ்வளவுதான்!

   Delete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!