கவனிப்பதற்கு நிறைய செய்திகள், கேள்விகள் இங்கே இருக்கிற போதிலும், ஏதோ ஒன்றோ இரண்டோ மட்டும் பரபரப்புச் செய்திகளாகி விடுகின்றன.
தேர்தல் நேரம் காமெடி டைம் பதிவுக்கு வந்த மொத்தப் பின்னூட்டங்களும் ஒரே ஒரு நண்பரிடம் இருந்துதான் என்பது எனக்கு ஆச்சரியம் தரவில்லை. இவரை விட்டால், வேறெங்கிருந்தோ வெட்டி ஓட்டுகிற இன்னும் ஒரு நபருக்கு மட்டுமே சிறிது ஆர்வத்தைத் தந்திருக்கிறது. இங்கே கடைசியாக இதுபற்றிய தகவல்களுக்கு மேல் வெறெந்தத் தகவலும் இல்லாத நிலையில் என்ன சொல்ல முடியும் என்பது எனக்குப் புரியவில்லை.
நேரு , இந்திரா காலத்தைய வாய்ப்பந்தல் சோஷலிசம் எல்லாம் நரசிம்மராவ் பிரதமராக இருந்த காலத்திலேயே, பொருளாதார சீர்திருத்தங்களில் அடிபட்டுப் போய் விட்டது. பொதுத்துறை பற்றிய பழைய காலத்துக் கண்ணோட்டங்கள் இன்னமும் மாறாமலிருந்தால் எப்படி? நிறையக் கேள்விகள், விவாதக்களத்தில் எழுந்து கொண்டே இருக்கின்றன என்ற முகவுரையோடு உங்கள் பார்வைக்கு.
4ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக பிஎஸ்என்எல் ஊழியர்கள் இன்று முதல் வேலைநிறுத்தம்: ‘எஸ்மா’ சட்டத்தில் நடவடிக்கை எடுக்க மத்திய அரசு உத்தரவு
நேரு , இந்திரா காலத்தைய வாய்ப்பந்தல் சோஷலிசம் எல்லாம் நரசிம்மராவ் பிரதமராக இருந்த காலத்திலேயே, பொருளாதார சீர்திருத்தங்களில் அடிபட்டுப் போய் விட்டது. பொதுத்துறை பற்றிய பழைய காலத்துக் கண்ணோட்டங்கள் இன்னமும் மாறாமலிருந்தால் எப்படி? நிறையக் கேள்விகள், விவாதக்களத்தில் எழுந்து கொண்டே இருக்கின்றன என்ற முகவுரையோடு உங்கள் பார்வைக்கு.
- BSNL yet non-listed company in Stock Market and still it is under the control of Telecom Ministry. In the beginning itself it was in the Posts and Telegraph Department. When bifurcated to BSNL an assurance was given to the existing Telecom Employees that it will not be made into a company status and there is no question listing its shares in the Stock Market. On the basis of assurance given by the then Government only the existing Telcom Department was made to BSNL.ReplyDelete
- அரசு, அரசு அதிகாரத்திற்குட்போட்டே இருக்கும் அமைப்பிடம் கேட்கிறதா? ரொம்ப சரி.ReplyDelete
சொந்த மகனுக்கு சோறு போடாமல், இருக்கறதை ஊரார் குழந்தைகளுக்கு ஊட்டி வளர்த்தாளாம், தாய். அந்தக் கதையாக அல்லவோ இருக்கிறது?
ஓட்டப் போட்டியில் ஒருவனின் காலை மட்டும் கட்டிப் போட்டு ஓட்டப் பந்தயம் போ, என்று சொன்னார்களாம் அந்தக் கதையாக அல்லவோ இருக்கிறது?
- இந்த நிலைக்குக் காரணம் ஊழியர்கள் அல்ல. நாள் தோறும் வளர்ந்து வரும் தொழில்நுட்பம் சார்ந்த இலாகா இது. அந்த தொழில் நுட்ப வளர்ச்சியை சவாலாய் ஏற்றுக் கொண்டு, தனியார்களில் கவர்ச்சிகர திட்ட்டங்களை மீறி செயல்பட்டுக் கொண்டிருக்கும் இலாகா.ReplyDelete
ஒரு காலத்தில் சாதாரண மக்களின் தேவைகளுக்கான இலாகாவாக இருந்த தபால் துறையின் நஷ்டங்கள் தொலைத்தொடர்புத் துறையின் லாபத்தால் ஈடுகட்டப் பட்டன.
சுருக்கமாகச் சொன்னால் தொலைப்பேசித் துறை என்பது வருமானம் கொழிக்க வைக்கும் கொழுத்த இலாகா. இதன் மேல் தனியார் நிறுவனங்களுக்கு ஒரு கண் என்ன இரண்டு கண்ணுமே இருப்பது இயல்பு.
அரசியல்வாதிகளின் நாசப்படுத்தலுக்காகப் போராடி ஊழியர்களுக்கு மிஞ்சியது ஏமாற்றமே.
செல்லக் குழந்தைகளாய் இருக்கும் தனியார் தொலைத் தொடர்பு
கம்பெனிகளுக்கு தரப்பட்டிருக்கும் 4G அலைக்கற்றை உபயோகத்தைக் கூட இன்னும் அரசு சார்ந்த இலாகாவுக்கு வழங்கப்படவில்லை.
நாட்டின் பிரச்னைக்குரிய இடங்களில் BSNL மற்ற கொழுத்த வருமானம் உள்ள இடங்களில் தனியார்களின் செயல்பாடு என்ற ஏற்பாடு வெற்றிகரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. - தொலைபேசி இலாகா தேசம் பூராவும் நிறைந்திருக்கும் அதன் சொந்த கட்டிடங்களுக்குப் பெயர் பெற்றது. வானளாவிய டவர்கள், செயற்கோள் விண்ணில் நிலைநிறுத்திய செலவுகள், தேசம் பூராவுக்குமான நெட் ஒர்க் இதெற்கெல்லாம் அரசின் பணம் எவ்வளவு செலவாகியிருக்கும்?.. அரசின் பணம் என்றால் மக்களின் பணம்.ReplyDelete
இதை வெகு சுளுவாக தனியார் வசம் இந்தக் கையிலிருந்து அந்தக் கைக்கு மாற்றி விடுவது போல ஒப்படைத்து விடுவதற்கான ஏற்பாடு என்றால் நெஞ்சம் பதறுகிறது, சார்! - சரி, தீர்வு தான் என்ன?..
உங்களுக்கு சரித்திரம் தெரியும். இந்தியன் வங்கியை மீட்டெடுத்தது எப்படி என்ற சரித்திரம் உங்களுக்குத் தெரியும். ஆவதும் அரசியலவாதியாலே, அழிவதும் அரசியல்வாதியாலே என்ற விநோதமான சூத்திரம் இது.
குறைந்தபட்சம் அரசியல்வாதிகளினால் நாசமாக்கப்பட்டவை களையாவது அரசு முன்வந்து சீர்படுத்தக் கூடாதா? வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகிற மாதிரி டிஸ் இன்வெஸ்ட்மெண்ட்டா, மூடிவிடுவதா என்றால் என்ன சொலவது, ஐயா?..
டிஸ் இன்வெஸ்ட்மெண்ட் என்பது மெல்ல மெல்ல கொல்லப்போகும் நஞ்சு. மூடிவிடுவது என்பது ஒரேடியாக சாகடிக்கும் நஞ்சு. அவ்வளவு தான் வித்தியாசம்.பொன் முட்டையிடும் வாத்தை கீறிப்பார்க்க யார் தான் ஒப்புக்கொள்வார்கள்?.. ஒப்புக்கொள்ளும் நிகழ்வு கண்முன்னால் நடைபெறும் பொழுது சகித்துக் கொள்ள முடியவில்லை. அவ்வளவு தான். - தொடர்ந்து விவாதிப்பதற்கு, நிறையக் கேள்விகள் இருக்கின்றன! வாருங்கள், விவாதிக்கலாம்!
- மாற்றுக் கருத்தோடு எனக்கு எந்தப்பிரச்சினையும் இல்லை! அதற்கு கட் அண்ட் பேஸ்ட் செய்வதைத் தவிர, சுயமாகச் சிந்தித்து நாலுவரி எழுதத் தெரியாத நபர்கள், வெட்டி விளம்பரப் போஸ்டர் ஒட்டுகிறவர்கள் இவர்களை இங்கே அனுமதிப்பது என்று அர்த்தமில்லை. கமெண்ட் பெட்டிக்கு மேல் என்ன சொல்லப் பட்டிருக்கிறது என்பதைக் கொஞ்சம் கவனித்துவிட்டு, கமெண்டலாம்!
அந்த இரண்டு ஆப்ஷன்களால் ஆகப்போவது ஒன்றுமில்லை.
ReplyDeleteபிரச்னைகளுக்கு யாரேனும் தீர்வு சொன்னால் நல்லது.
இந்தியன் வங்கியில் நடந்த கூத்துக்களை நான் அறிவேன் ஜீவி சார்! அதை மீண்டெழச் செய்ததில் நிர்வாகம், அரசியல்வாதிகள் இரண்டுதரப்புடைய பங்கென்று குறிப்பிட்டுச் சொல்ல எதுவுமில்லை. இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அப்படி மீண்டெழாமல் இருப்பதற்கு காரணம் என்னவென்று கொஞ்சம் விசாரித்துப் பாருங்கள்! விடை தெரிய வரலாம்.
Deleteபொதுத்துறை என்ற காரணத்துக்காக இன்னும் எத்தனைகாலத்துக்கு திறமையின்மை, ஊழல், மிராசிதார்களை வளர்த்துக் கொண்டே போக வேண்டும்?
இந்தியன் வங்கியில் கோபாலகிருஷ்ணன் தலையீடு காலத்தை நான் குறிப்பிடவில்லை.
DeleteBSNL பொறுத்தவரை திறமையான ஊழியர் தொழிற்நுட்ப
பங்களிப்பை நான் அறிவேன். இந்த மொபைல் உலகத்தை
(No outside recruitment for the past several years)
அவர்கள் சமாளித்துக் கொண்டிருக்கும் சமர்த்தியமே அலாதி.
அதையெல்லாவற்றையும் தாண்டி--
தொலைதொடர்பு, பாதுக்கப்பு, இராணுவம், ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பு, நிதி, இரயில்வே, -- இவையெல்லாம் மட்டுமாவது அரசின் வசம் இருக்க வேண்டும் என்பது புத்திசாலித்தனம.
பரிட்சார்த்த ரீதியில் நமக்கு அரை சுதந்திரம் கொடுத்த பொழுது கூட பிரிட்டிஷார் தம் கையில் என்னன்ன துறைகளை வைத்திருந்தார்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள்.
தொலைதொடர்பின் முக்கியம் கருதியே மொபைலுடன் ஆதார் அட்டை இணைப்பு விஷயத்தை முக்கியப்படுத்தினார் பிரதமர்.
Deleteநீங்களே ஆரம்பித்து வையுங்கள், சார். நாம் தொடரலாம்.
ReplyDeleteஜீவி உங்களின் ஆக்கப்பூர்வமான உரையாடலுக்கு நன்றி.
ReplyDeleteநன்றி, ஜோதிஜி! நீங்களும் நாலு வரிகள் எழுதுங்களேன். இந்தப் பகுதியை முடித்து வைக்கலாம்.
ReplyDeleteகிருஷ்ணமூர்த்தி சாரின் மனம் எனக்குத் தெரியும். அதை அசைத்துப் பார்க்க முயற்சிக்கிறேன்.
நியாயமான வாதங்களிலிருந்து வீம்புக்கானும் அவர் விலகிப் போக முயற்சிக்க மாட்டார் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது.
மனம் என்பதே அசைந்து கொண்டிருப்பதுதானே ஜீவி சார்! இதில் என் மனத்தை மட்டும் தனியாக அசைத்துப் பார்ப்பானேன்? :))
Deleteவாதங்களினால் எதையும் நிறுவிவிட முடியாதென்பது என்னுடைய அனுபவம்.
கிருஷ்ணமூர்த்தி சார்! நீங்கள் முன்னாளைய வங்கி ஊழியர் என்பதினால் உங்களிடம் இந்தக் கேள்வி. நலிவடைந்த வங்கிகளை மீட்டெடுப்பதற்காக கடந்த ஆட்சி காலத்தில் சில முயற்சிகள் நடைபெற்றன்னவே, அப்படியான முயற்சிகள் வங்கிகளுக்கு மட்டும் தான் என்ற அளவில் குறுகிப் போன ஒன்றா?.. அல்லது சென்ற ஆட்சியின் ஸ்பெஷாலிட்டியான சிறப்புகளா அவை?
ReplyDeleteஉங்கள் கேள்விக்கான விடை இங்கே இருக்கிறது https://www.indiatoday.in/magazine/economy/story/20041108-merger-not-privatisation-seems-to-be-upa-government-way-to-strengthen-psus-789419-2004-11-08
Deleteஐமுகூட்டணிக் குழப்ப ஆட்சியில் எந்தவொரு முயற்சியும் solid, concrete ஆக இருந்ததில்லை! என்னமோ வங்கிகளை மட்டும் நிமிர்த்திவிட்டார்கள் என்று சொல்வதும் கூட ஹம்பக்! அவர்களுடைய கவனமெல்லாம் புதுப்புது ஊழல்களிலும், அம்பலமான ஊழல்களிலிருந்து தங்களைக் காத்துக் கொள்வதிலும் தான் இருந்தது.
சுட்டியை வாசித்தேன். எல்லாவற்றையும் விரல் நுனியில் வைத்திருப்பதற்கு நன்றி.
ReplyDeleteவிரல்நுனியில் என்று நான் பெருமைப்பட்டுக்கொள்வதற்குத் தனியாக எதுவுமில்லை ஜீவி சார்! ஒரு விஷயத்தைப் பற்றி எழுதுவதற்கு முன்னால் தகவல்களை சரிபார்த்துக் கொள்வதற்கு கூகிள் தேடல்கள் மிகவும் உதவியாக இருக்கிறது. என்ன தேடுவது எங்கே தேடுவது என்பதில் தெளிவு இருந்தால் போதும்!.
Deletehttps://www.maalaimalar.com/News/National/2018/02/09104709/1144938/BSNL-starts-4G-services-in-Kerala.vpf
ReplyDeleteகேரள மாநிலம் இடுக்கியில் 4 ஜி. சென்னை--காஞ்சீபுரம் இடையில் 4ஜிக்கான ஆரம்பப்பணிகள் நடப்பதாகத் தெரிகிறது.
துண்டு துண்டாக அங்கங்கே 4G சேவைகள் BSNL--லில்
துவங்குவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன்.
bsnl தளத்தில் 4G மட்டுமல்ல 5G சேவைகளும் கிடைக்கவிருப்பதாகத் தகவல் இருக்கிறது. ஆனால் பெரும்பாலான ஊழியர்கள் இன்னமும் பழைய மனோபாவத்திலிருந்து விடுபடவில்லை என்பது கவனிக்கப்படவேண்டிய முக்கியமான தகவல்.
Deleteஇதுமாதிரி நீங்களும் நானும் பரிமாறிக்கொள்கிற தகவல்கள் எப்படி process ஆகி என்ன திசைக்குப்போகும் என்பது தனி அலசல் ஜீவி சார்!
அது அரசும் அரசு சார்ந்த ஊழியர்களும் என்ற மனோபாவம் சார். ஒருகாலத்தில் தங்களுக்கான தனிப்பட்ட கோரிக்கைகளை ஒருபுறம் வைத்து விட்டு தேச நலனுக்காக சிந்தனைகளை முன்னெடுத்துச் சென்றதில் தபால், தந்தி, இரயில்வே ஊழியர்களுக்கு பெரும் பங்கு இருந்திருக்கிறது.
ReplyDeleteதபாலும், தொலைபேசியும் சேர்ந்து இருந்த பொழுது இரு பகுதி ஊழியர்களுக்கும் சொந்தமான NFPTE (தேசிய தபால் தந்தி ஊழியர்கள் சம்மேளனம்) இருந்தது. தமிழக தபால் பகுதியில் இருந்த பிரமநாதன், தொலைபேசி பகுதியில் இருந்த ஜெகன் போன்றவர்கள்
தொழிற்சங்க வேலைகளையே தங்கள் வாழ்க்கையாக்கிக் கொண்டவர்கள். ஜெகனுடன் உரையாடுவதும், பழகுவதுமே புதிய தோர் வாழ்வுக்கல்வியைக் கற்றுக் கொண்ட அனுபவமாக இருக்கும்.
இப்படியாக NFPTE was vanguard of all trade unions. 19-9-1960-ல் நேரு காலத்தில் நடைபெற்ற அகில இந்திய வேலை நிறுத்தமும், 19-9-68-ல் இந்திரா காலத்தில் நடைபெற்ற ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தமும் இந்த இயக்கத்தின் விழுப்புண்கள். ஒரு நாள் அடியாள வேலை நிறுத்தத்திற்கு குறைந்தபட்ச ஊதியம் பொதுவான கோரிக்கையாக இருந்தது. அடையாள ஒரு நாள் வேலைநிறுத்தத்திற்கு கைது, பிடி வாரண்ட், கோர்ட் கேஸ், அடுத்த நாள் அலுவலத்திற்குள் நுழைய அனுமதி இல்லை -- என்று ஏக கெடுபிடிகள். இப்பொழுது நினைத்துப் பார்த்தாலும் பிரமிப்பாக இருக்கிறது. அந்நாளைய தொழிற்சங்க செயல்பாடுகள் அந்நாட்களுக்குரிய அரசியலின் பால பாடத்தைக் கற்றுக் கொள்ளவும், முற்போக்கு சிந்தனைகளை இளம் வயதிலேயே நெஞ்சில் பதித்துக் கொள்ளவும், முக்கியமாக திராவிட கட்சிகளிலிருந்து விடுபட்ட சித்தாந்தங்களை பயில பயற்சி கேந்திரமாகவும் இருந்தன.
NFPTE இன் ஆரம்பகாலப் போராட்டங்களைக் குறித்து AS Iyer எழுதிய புத்தகம் ஒன்று அந்தநாட்களில் என்னுடைய சேகரத்தில் இருந்தது ஜீவிசார்! பின்னாட்களில் அவர் CPI யில் இருந்தார்! இன்றைக்கிருப்பவர்களிடம் அந்தப் பழையகதையைப் பேசிப் பயனில்லை.
DeleteNJ Iyer ஆக இருக்கலாமோ? இவர் RMS-ல் இருந்தவர். RMS-ம் அன்நாட்களில் NFPTE-யின் ஒரு சிறகாகத் தான் இருந்தது. K.G.Bose-க்கு அப்புறம் மத்திய தலைமைக்கு NJ Iyer வந்தார் என்று நினைவு.
ReplyDeleteஓம் பிரகாஷ் குப்தா NFPTE-யின் யதார்த்த போராட்ட உணர்வு கொண்டவர். சிக்கல்களைக் களைவதில் அசராத கில்லாடி. இவர் தலைமை ஏற்றிருந்த காலத்தில் தான் BSNL உருவானது. 1968 ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தமும் இவர் காலத்தில் தான்.