அரசியல் களம் இன்று! கவனத்தில் கொள்ள செய்திகள்!

முந்தைய மூன்று பதிவுகளில் காங்கிரஸ் பற்றிப் பேசும் போது எமெர்ஜென்சியைத் தொட்டும் எழுதியதில், சில மாற்றுக்கருத்துக்கள் பின்னூட்டத்தில் ஒரு பயனுள்ள  உரையாடலைத் தொடக்கி வைத்திருக்கின்றன. (சு)வாசிக்கப்போறேங்க தளத்திலும் இந்த உரையாடல் நடந்து கொண்டிருப்பதை  நண்பர்கள் கவனித்திருக்கலாம். இந்த உரையாடலில் வேறு யாராவது பங்கு கொள்ள முன்வருகிறார்களா என்று காத்திருக்கிறேன். கொஞ்சம் நீளமாக இருக்குமே என்று தயக்கமே வேண்டாம்! Guest Post ஆக வெளியிடவும் தயாராக இருக்கிறேன்!
இது மலைவிழுங்கி மம்தா பானெர்ஜி சாரதா குழும மோசடியைச் செய்தபிறகும், என்னமா பில்டப் கொடுக்கிறார் என்று வியந்து ஹிந்துநாளிதழில் பிப்ரவரி 6 ஆம் தேதி சுரேந்திரா வரைந்திருப்பது. இந்திரா காங்கிரஸ்  இவரைமாதிரி இன்னும் எத்தனை மழைவிழுங்கிகளை உருவாக்கி வைத்திருக்கிறது என்கிற ஒரு அம்சமே இந்திரா legacy என்னவென்பதை இன்றைய இளம்தலைமுறை புரிந்துகொள்ளப் போதுமானது என்றுதான் நான் நினைக்கிறேன்.நேரு பாரம்பரியம் இந்திரா ராஜீவ் சோனியா ராகுல் என்று குறுக்கிக் கொண்டே வந்து இன்றைக்கு பிரியங்கா என்றாகியிருப்பதில், ஒருமரத்தின் தன்மை இன்னது என்பது அதுகொடுக்கும் கனிகளால் அறியப்படும் என்கிற வசனமே மெய்ப்பிப்பதாக இருக்கிறது. 
இந்த தொலைக்காட்சி விவாதம், அரசியல்களம் எப்படி இன்றைக்கு தேர்தல்களத்தில் இன்னும் ஒரு தெளிவான நிலைக்கு வரவில்லை என்பதை வெளிப்படுத்துகிறது. 
தமிழ்நாட்டில் மட்டும்தான் இப்படி என்றில்லாமல் ஒவ்வொரு மாநிலத்திலும் கிட்டத்தட்ட இதேமாதிரித் தான் என்கிற மாதிரி சொல்கிற  ஒரு செய்தி,

அனைத்து விவசாயிகளுக்கும் ரூ.10 ஆயிரம்; மகளிர் சுயஉதவி குழுவினருக்கு ஸ்மார்ட்போன்: அரசே 3 ஆண்டுகளுக்கு ரீசார்ஜ் செய்யும்! ஆந்திர அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு என்கிறது ஹிந்து செய்தி 


நாடு முழுவதும் 5 ஏக்கருக்கும் குறைவாக நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ. 6 ஆயிரம் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆந்திராவில் இந்தத் தொகை ரூ.10 ஆயிரமாக உயர்த்தி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதேநேரம் 5 ஏக்கருக்கு மேல் உள்ள விவசாயிகளுக்கும் மாநில அரசு சார்பில் ரூ.10 ஆயிரம் வழங்கப்படும். இதுபோல மாநிலத்தில் உள்ள 94 லட்சம் மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள ஸ்மார்ட் போன் இலவசமாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.இந்த ஸ்மார்ட் போன்களுக்கு 3 ஆண்டுகள் வரை அரசே ரீ சார்ஜ் செய்யும். மேலும், மாநில விவசாய மண்டலி ஏற்பாடு செய்யப்படும்.

இப்போது நம் முன்னால் இருக்கிற முக்கியமான கேள்வி இதுதான்! இலவசங்கள் என்கிற மாயையில் தொடர்ந்து ஏமாந்து கொண்டே இருக்கப்போகிறோமா?

அல்லது விழித்துக் கொள்ளப்போகிறோமா?     
      

3 comments:

  1. மாற்ற முடியாத சோகம் இலவசம்!

    ReplyDelete
  2. கொடுத்தல்-- வாங்கல் எல்லாம் மலையேறிப் போன காலம் இது.

    கொடுப்பவன் தொடர்ந்து ஏமாளியாகிப் போவது ஒன்றே கொடுப்பதைத்த் தடுக்கும்.

    ReplyDelete
  3. வேறொரு கொடுத்தல்-- வாங்கலைப் பற்றி எழுதியிருக்கிறீர்களோ என்று பார்த்தால்.....

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!