யாத்ரா! மம்மூட்டி படமா? YS ஜெகன் தேர்தல் பிரசாரமா?

பிப்ரவரி 8 அன்று மம்மூட்டி நடித்த யாத்ரா திரைப்படம் தெலுகு,மலையாளம், தமிழ் என மூன்று மொழிகளிலும் வெளியாகியிருக்கிறது. 2003 இல் அன்றைக்கு தெலுகு தேச சந்திரபாபு நாயுடு ஆட்சியை எதிர்த்து YS ராஜசேகர ரெட்டி பாத யாத்திரை நடத்தி, 2004 தேர்தலில் ஆட்சியையும் பிடித்த தருணத்தை, மம்மூட்டி போல ஒரு மகாகலைஞனை வைத்துப் படமாக்கி இருக்கிறார்கள்!
இங்கே மிகச் சமீப காலத்தைய நிகழ்வுகளே எப்படி ஜிகினா வேலைகளில் சரித்திரமாகிவிடுகிறது என்பதற்கு இந்தப்படம் ஒரு ஆகச் சிறந்த உதாரணம்! தெலுகு திரைப்படங்களில் கதாநாயகி நாயகனை ரேய் ரெட்டி என்று ரௌடித்தனமாகக் கூப்பிடுவது சும்மா லுலுலாயிக்குத்தான் என்று நினைத்துக் கொண்டிருந்தவனை, இந்த ராஜசேகர ரெட்டியின் நிஜக்கதையை, இந்தப்படம் மீளவும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது. படத்தில் ஜெகபதி பாபு, ராஜசேகர ரெட்டியின் தந்தை ராஜா ரெட்டியாக நடித்த்திருக்கிறார். சிறிதுநேரமே வரும் அந்தப் பாத்திரம், நாசரிடம் சிறுவனாக ராஜசேகர ரெட்டியை ஒப்படைத்து, படிப்போடு அரசியலையும் சொல்லிக் கொடுங்கள் என்று வேண்டிக்கொள்வது, அரசியலுக்கு வந்தால் தான் ஜனங்களுக்கு சேவை செய்யமுடியும் என்பதாக ஒருகாட்சி! ஆனால், நிஜத்தில் நடந்தது அது தானா?
ராஜசேகர ரெட்டியின் குணாதிசயத்தை மிகச் சரியாகத் திரைமொழியில் சொல்லியிருக்கிறார்களா என்றால் ஒரு அரசியல்வாதியின் வாழ்க்கையில் குறிப்பிட்டு ஒரு தருணத்தை வைத்து மட்டும் படமெடுத்துச் சொல்லிவிட முடியுமா என்ற கேள்வியும் கூடவே எழுகிறது. அங்கே தான், ப்ரீத்திக்கு நான் காரண்டீ விளம்பரம் மாதிரி,  மம்மூட்டி போனற மகாகலைஞன், ஒரு நம்பகத்தன்மையை ஏற்படுத்துகிற மாதிரி ஜிகினாவேலையைச் செய்து, படத்தை தூக்கி நிறுத்திவிட முடிந்திருக்கிறது.  

அப்படியானால் படததில் பொய்சொல்லிவிட்டார்களா? நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை. சொன்னதைவிட சொல்லாமல் விடுபட்டவைதான் அந்த மனிதனுடைய நிஜக்கதையாகவும் இருந்திருக்கிறது. 1949 இல் ஒரு சாதாரண கிறித்தவ ரெட்டி குடும்பத்தில் பிறந்த ராஜசேகர ரெட்டி, 1973 இல் மருத்துவப்படிப்பை முடித்துவிட்டு, சொந்த கிராமத்தில் மருத்துவமனை ஒன்றைத் தொடங்கி நடத்தி நிஜத்திலேயே நல்லபெயரும் எடுக்கிறார். 1978 இல் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து அசெம்பிளிக்கும் தேர்ந்தெடுக்கப் படுகிறார். அஞ்சையா அமைச்சரவையில் ஜுனியர் மினிஸ்டராகவும் ஆகி, ஆந்திர அரசியலில் தனது வேர்களை ஆழமாகப் பதிக்கிறார். நான்குமுறை MPயாகவும் இருந்திருக்கிறார். சஞ்சய் காந்தி, இந்திரா விசுவாசியாக இருந்தாலும் தன்னுடைய ஏரியா செல்வாக்கையும் தொடர்ந்து   தக்கவைத்துக் கொண்ட கடைசி காங்கிரஸ் ஆசாமி என்பது கொஞ்சம் வியப்புத் தருகிற உண்மையை, இந்தத் திரைப்படத்தில் மேலிடத்து விருப்பம், ஆணை என்று பலகாட்சிகளில் பூடகமாகச் சொல்லியிருக்கிறார்கள்! இந்திரா காலத்தில், எந்த ஒரு மாநிலத் தலைவரையும், சொந்தக் செல்வாக்கோடு இருக்கவிட்டதில்லை! மாநிலத்தில் இருந்து, தேசிய அரசியலுக்கு இழுத்து, அங்கேயும்  இங்கேயும் ஜனங்கள் மறந்துபோகிறவரை, வெறும் சக்கைகளாகவே, காலடியில் விழுந்து கிடக்கிற அடிமைகளாக ஆக்கி வைத்திருந்தது  நினைவிருக்கிறதா? இந்த விஷயத்தில் மாமியாரை அப்படியே அச்சு அசலாகப் பின்பற்றுகிற மருமகள் சோனியா என்பதையும் கூடவே நினைவில் வைத்திருங்கள்!

கூடவே இன்னொரு செய்தியும் ஞாபகத்துக்கு வருகிறது! ஒரு devout கிறித்தவராக பெத்லஹேம் போய் வந்தவர் ராஜசேகர ரெட்டி! அடிக்கடி திருப்பதி திருமலைக்கும் போனவர்! திருப்பதி வெங்கடேசனுக்கு மூன்று மலைகள் போதுமே! மிச்சமிருப்பவைகளில் செகுலர் கொள்கை நிலைநாட்டப்பட இதரமதங்களுக்கும் கொடுத்துவிடலாமென்று சொன்னதாக ஒரு செய்தி கூட உண்டு!        

2003 இல் ராஜசேகர ரெட்டி மேற்கொண்ட பாதயாத்திரை ஒன்றை மட்டும் யாத்ரா திரைப்படம், கதைக்களமாக எடுத்துக் கொண்டு, மக்களுடைய குரலைக் காதுகொடுத்துக் கேட்ட தலைவராக நம்முன்னால் காட்சிப்படுத்துகிறது.

அதற்கு முன்னால், தந்தை ராஜா ரெட்டி!

The Supreme Court verdict upholding the High Court judgement of life sentence to 11 accused in the sensational murder case of Yeduguri Sandinti Raja Reddy, father of Chief Minister Y.S. Rajasekhara Reddy, comes exactly 17 days before Raja Reddy’s 11th death anniversary.Sixteen persons were accused in the brutal murder of Raja Reddy after waylaying him near a culvert in Vemula town in Pulivendula Assembly constituency and hurling a bomb from a close range causing his instant death on May 23, 1998, during Telugu Desam Party rule. என்கிறது மே 2009 செய்தி ஒன்று. 
Quora தளத்தில் இன்னொரு செய்தியும் கிடைக்கிறது.  
I have never seen YSR going to church till he became CM of AP. Probably political rewards made him more a Christian than a reddy under the influence of Madam Sonia. The family was not a well to do family. Mr. Raja Reddy was a contractor doing small railway contracts. இப்படிச் சொல்லிவிட்டு இன்னொரு செய்தியையும்! அப்பா ராஜா ரெட்டி, ஒரு பிராமண ஆசிரியர் வைத்திருந்த கனிமச் சுரங்க லைசன்ஸ், இடத்தில் கூட்டாளியாக சேர்ந்து,  மூத்த மகன் ஜார்ஜ் ரெட்டியோடு நடத்திவந்த நேரம். மூத்தமகனுக்கு அரசியல் நாட்டமில்லை என்பதால் மருத்துவராக சொந்த ஊர், சுற்றுவட்டாரத்தில் நல்லபெயரோடு இருந்த ராஜசேகர ரெட்டியை அரசியலுக்கு அழைத்து வந்தார் என்பதையும் சொல்கிறது. அரசியல் பாதைக்குள் வந்துவிட்டால், மக்கள் நலன் பற்றி மூச்சுக்கு மூச்சு பேச்சு மட்டும் முதலில் வரும்! அடுத்து சம்பாதிக்க என்னென்ன வழி என்பதைத் தேடும்! இந்திய அரசியலின் டெம்ப்ளேட்டாக ஊழல் மட்டுமே இருப்பது, சேராமல் இருக்குமா?
மக்கள் நலத்திட்டங்கள் என்ற பெயரில் ராஜசேகர ரெட்டி அடித்த கொள்ளைகளை அந்த நாட்களில் விக்கி லீக்ஸ் India Cables தலைப்பில் அமெரிக்க தூதரகம் தங்களுடைய அரசோடு பரிமாறிக் கொண்ட தகவல்கள் சொன்னது இப்படி!  
In the name of social programmes targeted at the common man, the YSR government had engaged in corruption which was beyond the norm for India, whistleblower website WikiLeaks said, quoting the cable.The YSR government's flagship programmes - construction of irrigation projects and houses for weaker sections - were beset with corruption even as Mr Reddy used the populist spending programmes to great political effect, the cable said. 
தனக்கிருக்கும் நிலம் எவ்வளவு? சொந்தப்பெயரில் 600 சொச்சம் ஏக்கர்கள் தந்தை ராஜா ரெட்டி வாங்கிய பதிவுசெய்யப்படாத 1000ஏக்கர்கள் இன்னும் கடப்பாவில் உள்ள நிலங்கள் என்று சட்டசபையில் ராஜசேகர ரெட்டி ஒப்புக்கொண்டது இது 
படத்தில் ஒரு ஏழைச் சிறுமி ராஜசேகர ரெட்டியை ஒத்த ரூபா டாக்டராகவே இருந்திடுங்க என்கிறாள்!
என்ன ஒரு நகைமுரண்? !!
   

2 comments:

  1. இவர்களின் சொத்து தமிழ் திரைப்பட உலகில் உள்ள பலரிடமும் (இன்னமும்) இருப்பதை பலர் மூலம் கேள்விப்பட்டுள்ளேன். அள்ள அள்ளக்குறையாத அளவுக்கு அப்பா சேர்த்து வைத்து விட்டு சென்றுள்ளார்.

    ReplyDelete
    Replies
    1. திரைப்பட உலகம் மொத்தமுமே! கறுப்புப் பணத்தில் புழங்குகிற இடம் தானே ஜோதிஜி! நல்லவேளை, இந்த மாதிரி லோகல் தாதாக்களோடு இருந்தால் சரி, மும்பைத் திரைப்பட உலகம் மாதிரி D Company தாவூத் இப்ராஹிம் போல நிழலுலக தாதாக்கள் தென்னிந்திய சினிமாவுக்குள் நுழையவில்லை என்று உறுதியாகச் சொல்லக் கூட முடியவில்லையே!

      Delete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!