சாந்தியும் சமாதானமும் ஒருவழிப் பாதையல்ல!

இந்தியர்களாகிய நாம் அண்டை நாடுகளோடு சமாதானமாகவே வாழ விரும்புகிறோம்! ஆனால், சாந்தியும் சமாதானமும் ஓருவழிப்பாதையல்ல என்று அவ்வப்போது நம்மைச் சீண்டுகிறவர்களுக்குப் புரிகிற மாதிரி பாடம் கற்பிக்கவும்  வேண்டியிருக்கிறது!

புல்வாமா பயங்கரவாதத்தாக்குதலுக்கு இந்தியா எப்படி பதிலடி கொடுக்கப் போகிறது என்ற கேள்வியும், போர் வருமா என்ற ஊகங்களும் தொடர்ந்து எழுப்பப்பட்டு வந்ததற்கு இந்திய விமானப்படை இன்று அதிகாலை தெளிவான விடை அளித்திருக்கிறது. பாகிஸ்தான் அணு ஆயுத மிரட்டல்கள் எல்லாம் செல்லுபடியாகாது என்று முன்னாள் பாகிஸ்தான் அதிபர் முஷாரப்பே ஒப்புதல் வாக்குமூலமாகச் சொல்லிவிட்டார் என்பதும் இங்கே நினைவுக்கு வருகிறது.

நம்முடைய முப்படைகளுக்கும் குறிப்பாக விமானப் படைக்கு இந்தத்தருணத்தில் வணக்கங்களையும் வாழ்த்துகளையும் தெரிவிக்க வேண்டியது ஒவ்வொரு இந்தியக்குடிமகனுடைய கடமையும் கூட!

 
The Indian Air Force on Tuesday "struck the biggest training camp of Jaish-e-Mohammed (JeM) in Balakot" in Pakistan's Khyber Pakhtunkhwa province, and in this intelligence-led operation, "a very large number of JeM terrorists, trainers, senior commanders and jihadis were eliminated", said Foreign Secretary Vijay Gokhale என்கிறது FirstPost. விஜய் கோகலே பேசியது மேலே காணொளியாகவும்!  

வழக்கம்போல பாகிஸ்தான் கொஞ்சம் மழுப்பலான மறுப்பைத் தெரிவித்தாலும், தாக்குதல் நடத்தப்பட்ட இடம் Balakot, LOC தாண்டி பாகிஸ்தானில் உள்ள கைபர் பஃடூன்க்வா பிரதேசமா அல்லது Bala Kote என்று அதே பெயரில் ஜம்முகாஷ்மீர் பூஞ்ச் பிரதேசத்தில் LOC அருகாமையில் உள்ள இடமா என்பதைத்  தெளிவு படுத்தவில்லை.

விஜய் கோகலே அதையும் மிகத்தெளிவாகச் சொல்லி இருக்கிறார் Gokhale, in his briefing, has confirmed that the IAF targeted JeM camps in Khyber Pakhtunkhwa. Now, the exact location of the main strike has been pinpointed as the Jaba Top (also known as the Jabba Top), located in the province's Mansehra district. Jaba is believed to have housed a JeM stronghold, with as many as 200 fidayeens at the time of the IAF operation. It is a 40-minute drive from both Mansehra and Balakot towns in the Mansehra district.According to defence sources, IAF fighter jets not only targeted the JeM camp, but also Lashkar-e-Taiba and Hizbul Mujahideen camps near Muzaffarabad, which lies between the LoC and Jaba Top. என்கிறது அதே தளத்தின் இன்னொரு செய்தி. 

இது இந்திய ராணுவத்தின் ட்வீட்டர் பக்க முகப்பு!

தேசமே முதலில்! என்பது ராணுவத்துக்கு மட்டுமல்ல ஒவ்வொரு குடிமகனுக்கும் இருக்கவேண்டிய உணர்வு!  


1 comment:

  1. பெருமைப்படவேண்டிய தருணம்.

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!