இட்லி வடை பொங்கல்! #14 சனிக்கிழமை ஸ்பெஷல்


முப்பது கோடி முகமுடையாள் , உயிர் மொய்ம்புற வொன்றுடையாள் –இவள் செப்பு மொழி பதினெட்டு உடையாள் எனிற் சிந்தனை ஒன்றுடையாள்! 
இது பாரதி வாக்கு! பாரத தேசத்தின் பன்முகத் தன்மையை இதைவிட அழகாகச் சொல்லிவிட முடியுமா?
பானாசீனா மாதிரி பெரிய ஜமீன் நினைப்பில் இருக்கிற சிக்குலர் வியாதியிடமிருந்து இதையெல்லாம் எதிர்பார்க்க முடியாதுதான்!  ஆனால் விதி, இந்தமாதிரி போலிகளிடமிருந்தெல்லாம், இந்த தேசத்தின் பன்முகத் தன்மை பற்றிக் கேட்டுக் கொள்ளவேண்டியிருக்கிறது!
1996 இல் நம்பிக்கை வாக்கெடுப்பில் ராஜினாமா செய்வதற்கு முன்னால், பிரதமராக இருந்த வாஜ்பாய் பேசியதையும் கொஞ்சம் கேளுங்கள்! பன்முகத்தன்மை என்பது தடியெடுத்தவன் எல்லாம் தண்டல்காரனாகி விடுவதல்ல, செட்டியார் சொல்வது போல ஐக்கிய ஊழல் கூட்டணியாக அவர்கள் ஆண்டதுபோல அல்ல என்பதை அந்தக் கூட்டணிக்குத் தெளிவாகச் சொல்ல வேண்டிய நேரம் விரைவிலேயே தேர்தலாக வருகிறது!  
காஷ்மீரில் தீவிரவாதம் எப்படி சிறுவர்கள் கல்லெறிகிறவர்களாக , அப்படியே படிப்படியாக ஆயுதம் ஏந்திப் போராளிகளாக மாறுகிறார்கள் என்பதை சொல்கிற கார்ட்டூன் இது.  
   
காஷ்மீர் விவகாரம் இவ்வளவு சிக்கலானதற்கு நேரு தான் முழுமுதற் காரணம் என்பதை மறந்துவிட முடியுமா? அடுத்துவந்த வாரிசுகளும் கூட பிரச்சினை தீர எதுவும் செய்யவில்லை. இன்று என்ன நிலை?
காஷ்மீர் முதல்வராக இருந்த மெஹபூபா, பிரிவினை வாதிகளுக்கு வெளிப்படையாகவே வக்காலத்து வாங்குகிறார். இங்கே தமிழகத்தில் காஷ்மீர் சிக்கல் என்னவென்று எந்த அரசியல்வாதியாவது விவரம் தெரிந்து பேசியது உண்டா?
கமல் காசர் மக்கள் நீதி மய்யம் என்றொரு கட்சி நடத்துவதும், சமீபகாலமாக  திமுகவுடன் உரசுவதும் தெரிந்த விஷயம்! கூட இருப்பவர்கள் யார் யார் என்று தெரியாதில்லையா?  
இது ஒருவருடத்துப் பழசு! ஒன்றுமே தெரியாமல் இருப்பதை விட இது கொஞ்சம் பரவாயில்லை தானே!  
         

2 comments:

  1. //காஷ்மீர் முதல்வராக இருந்த திமுகவுடன் மெஹபூபா, பிரிவினை வாதிகளுக்கு வெளிப்படையாகவே...//

    இந்த இடத்தில் ஒரு சின்ன திருத்தம். செய்து விடுங்கள்.

    ReplyDelete
  2. திருத்தம் செய்து விட்டேன்! நன்றி ஜீவி சார்!

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!