மீண்டும் மீண்டும் கலகக் குரல்கள்! அரசியல் களம் இன்று!

மம்தா பானெர்ஜி தான் ஒரு குழாயடிச் சண்டைக்காரி (street fighter என்பதைத் தமிழில் வேறெப்படிச் சொல்வது?) என்பதை மீண்டும் நேற்று கொல்கத்தா வீதிகளில் நிரூபித்திருக்கிறார். மாநில ஆட்சியைக் கலைத்துப் பார்க்கட்டுமே! முடிந்தால்! என்ற வாய்ச் சவடால் வேறு!


2019 நாடாளுமன்றத் தேர்தல்கள் நெருங்கும் நேரத்தில் மம்தா பானெர்ஜியின் இந்த ஸ்டண்ட் இப்போது எதற்காக? எதிர்க் கட்சிகள் எல்லாம் இதில் ஒன்றுகூடிக் கும்மி அடிப்பதற்கு என்ன காரணம், நியாயம் இருக்கிறது?

மம்தா பானெர்ஜி, 35 வருட இடதுசாரிகள் ஆட்சியைக் காலி செய்துவிட்டு, கடந்த எட்டு வருடங்களாக மேற்கு வங்கத்தில் தனிக்காட்டு தர்பார் நடத்தி வருகிறார் என்பதற்கு மேல், அங்கு அவரோ, திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் உள்ளூர் ஆசாமிகளோ செய்து வரும் அடாவடிகள், ஊழல்கள் என்னவென்றாவது நமக்குத் தெரியுமா?

10:36 AM - 3 Feb 2019  
மம்தா வீதியில் நடத்திய தர்ணாவில் இடதுபுறம் உள்ள இந்த 53 வயது ஐபிஎஸ் அதிகாரி, ராஜீவ்குமார் தான் மம்தா நேற்று நடத்திய வீதிதர்பாரின் கதாநாயகன்! 2013 இல் சாரதா சிட் ஊழலை விசாரிக்க அமைக்கப்பட்ட SIT சிறப்புப் புலனாய்வுக் குழுவின் தலைவர். திரிணமுல் ஆதரவாளர் சுதிப்தா சென் நடத்தி வந்த சாரதா குழுமம் Ponzi scheme நடத்தி ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களை மோசடி செய்ததை விசாரிக்க அமைக்கப் பட்ட SIT அது. இடதுசாரிகள் ஆண்டபோது இதே ராஜீவ் குமாரை, தன் மீது வேவுபார்த்ததாகக் குற்றம் சாட்டியவர் தான் மம்தா! இப்போது அவருக்கே அணுக்கமான நபராக ஆனதும்கூட  ஒன்றும் விசித்திரமில்லை! இங்கே கழகங்கள் அரசியலில் அம்மா போலீஸ் அய்யா போலீஸ் என்றானதைப் பார்த்ததில்லையா என்ன?     

“We returned money to those [who lost it during the] chit fund scam. After five years, now the CBI is acting right before the polls. BJP is torturing Bengal. They are forcibly trying to destroy Bengal just because I did the Brigade rally" என்று மம்தா சொன்னதாக The Wire தளம் சொல்வது மம்தாவின் ஒப்புதல் வாக்குமூலமாகவே இருக்கிறது என்பதற்கு மேல், எதிர்க்கட்சிகள் கூக்குரல் எழுப்புவதில் என்ன நியாயம் இருக்கிறது?

According to the CBI, the evidence collected by the Special Investigation Team (SIT) that was formed by the state in April 2013 to probe the Saradha chit fund scam, and headed by Kumar, includes a laptop, five cellphones and documents, including a diary purportedly of Saradha Group promoter Sudipta Sen.

The case was taken up by the CBI in 2014 on the Supreme Court’s orders. “During the interrogation of those arrested in the Saradha scam and other chit fund scams, we found that crucial evidence seized by the SIT was not handed over to us. This included a diary, pen drives and documents that were seized from Sen’s offices. We learnt that they had the names of influential people and records of payment,” claimed a CBI officer linked to the probe. என்கிறது இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி.

இப்படி 2014இலேயே உச்சநீதிமன்றத்தால் சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்ட ஒரு ஊழல்வழக்கு, அதை விசாரித்த SIT தலைவர் சிபிஐயிடம் கைப்பற்றப் பட்டஆவணங்கள் சாட்சியங்களை ஒப்படைக்கவில்லை. குற்றவாளிகளைத் தப்புவிக்கிற விதத்தில் அவை அழிக்கப்பட்டிருக்கலாம் என்கிற சந்தேகத்தில், அந்த  அதிகாரியை விசாரிப்பதில் மம்தா பானெர்ஜிக்கோ, ஆதரவுக் குரல் எழுப்புகிற உதிரிக் கட்சிகளுக்கோ என்ன நியாயமான காரணம் இருக்கிறது?

உச்சநீதிமன்றம் இன்று அவசர வழக்காக இந்த விவகாரத்தை எடுத்துக் கொள்ள மறுத்து நாளைவிசாரிக்கவிருப்பதாக செய்திகள் சொல்கின்றன!

மக்களவையில் இந்த விவகாரம், அவையை இரண்டுமுறை ஒத்திவைக்கிற மாதிரி அமளிதுமளியாகியிருக்கிறது. மாநிலங்களவையைப் பற்றிச் சொல்லவே வேண்டாம் !
  
மோடி வெறுப்பு என்கிற ஒற்றைப்புள்ளியில் மட்டுமே ஒன்றுகூடும் மாநிலக்கட்சிகள் தங்கள் ஊழலை மறைத்துக் கொள்ளச் செய்யும் முயற்சி என்பதற்குமேல், இந்தக்கலகக் குரல்களில்  வேறென்ன காரணம் இருக்கிறதென்று நீங்களே சொல்லுங்கள்!  

இங்கே மூச்சுக்கு மூச்சு பாசிச பிஜேபி என்றே இசுடாலின் சொல்லிக் கொண்டிருக்கிறாரே, அராஜகச் செயல்களில் ஈடுபடுவது யார்? நாடாளுமன்ற நடவடிக்கைகளிலுமே கூட ஜனநாயகம் காப்போம் என்று வாய்ச்சவடால் பேசுகிற இந்த உதிரிக் கட்சிகள் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதையும் பார்த்து விட்டே சொல்லுங்கள்!  

   

No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!