சண்டேன்னா மூணு! வாயுசக்தி2019! இடது ஒற்றுமை! கமல் காசன்

நேற்று ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் இந்திய விமானப்படை வாயுசக்தி 2019 என்ற தீமுடன் தனது வலிமையை பொதுமக்கள் முன்பு நடத்திக் காட்டி இருக்கிறது. இந்த மாதிரி நிகழ்ச்சிகளை ஏதோ ஒருநாள் ஒருவாரம் முன்னால் திட்டமிட்டு நடத்திவிட முடியாது..

.
நிகழ்ச்சியை வடிவமைத்து, என்னென்ன ஷோ கேசில் வைப்பதென்று திட்டமிடுவதும், பங்குபெறும் விமானங்கள் போர்வீரர்கள் ஆயுதங்கள் எல்லாவற்றையும் ஓருங்கிணைப்பதும் மாதங்கள் ஆகும் என்பதும் காமன் சென்ஸ்! விகடன் மாதிரி ஊடகத்துக்கு காமன் சென்ஸ் அவசியமா என்ன? புதிய தலைமுறை சேனலில் கூட இப்படி ஒரு தலைப்புடன் ஆறுநிமிட வீடியோ செய்தி ஒன்றையும் பார்த்தேன். அவசியம் பார்க்க வேண்டிய, சுமார் இரண்டே கால் மணிநேர வீடியோ இது!   

மதுரையில் நேற்று நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில மாநாட்டில் கலந்து கொண்டு ஸ்டாலின் சில நாட்களுக்கு முன்னால் திருமாவளவன் நடத்திய திருச்சி மாநாட்டில் பேசும்போது, இந்தியாவுக்கு ஆபத்து வந்திருக்கிறது. யாரால்? எதிரி நாட்டால் வரவில்லை, இங்கே ஆட்சியில் இருப்பவர்களால் தான் வந்திருக்கிறது, வரப்போகிறது என்று நான் குறிப்பிட்டுச் சொன்னேன்நாளைக்கே சிலர் சொல்லுவார்கள், பார்த்தாயா முஸ்லீம் லீக் மாநாட்டில் போய் மோடியைத் தாக்குகிறார் மு.க.ஸ்டாலின் என்று குற்றம் சாட்டுவார்கள். ஏன், இந்து மதத்தின் விரோதி என்று என்னைப் பார்த்துச் சொல்வார்கள். அவர்களுக்குச் சொல்லிக் கொள்கிறேன். பா.ஜ.கவை எதிர்ப்பது என்பது வேறு, இந்து மதத்தை எதிர்ப்பது என்பது வேறு என்று பேசியிருப்பதாக விகடன் தளம் சொல்கிறது. உண்மைதான்! பிஜேபி எதிர்ப்பு, மோடி எதிர்ப்பெல்லாம் இப்போது வந்தது. இந்துமத எதிர்ப்பு,விரோதமெல்லாம் தி க வாக இருந்து திமுகவாய் ஆன நாளிலிருந்தே இருப்பதுதானே! படத்தைப் பாருங்கள்! CPI இன் மாநிலச்  செயலாளர் முத்தரசன் சமீபகாலங்களில் திருமாவாளவனுடனேயே ஒட்டிக் கொண்டு திரிவது, இங்கே இடதுசாரி ஒற்றுமை என்பது வீண்கனவு என்பதைச் சொல்கிறதோ?  
       
கமல் காசனுக்கெல்லாம் இப்படி ஓசி வெளம்பரமா? இசுடாலின் தான் அதுக்கும் காரணம்! நம்புங்க! 
  
அமைச்சர் ma foi பாண்டியராஜன் சிரிக்கச் சிரிக்க ஹரிஹரனுடைய கேள்விகளை எதிர்கொள்கிறார்.
       

7 comments:

 1. ராஜ்தீப் சர்தேசாய்க்கு அமெரிக்காவில் நிகழ்ந்த அனுபவம் ஒன்று காணொளியாக வாட்ஸாப்பில் வந்தது. பார்த்தேன். நீங்களும் பார்த்தீர்களா? இசுடாலினுக்கு அதுவே பதிலாக இருக்கலாம்.

  ReplyDelete
  Replies
  1. இல்லை ஸ்ரீராம்! வாட்சப் பார்ப்பதில்லை. இங்கே யூட்யூப் அல்லது பிளஸ்சில் உங்கள் முகநூல் பக்கத்தில் எங்காவது பகிர முடிந்தால் பார்க்கிறேன்

   Delete
  2. யு டியூபில் தேடி எடுத்து விட்டேன்.

   https://www.youtube.com/watch?v=IALR6r-7mOY

   Delete
  3. இது 2014 இல் எடுக்கப்பட்ட வீடியோ என்று யு டியூபில் பார்க்கும்போது தெரிகிறது! வாட்ஸாப்பில் தெரியவில்லை.

   Delete
  4. வீடியோ பார்த்தேன் ஸ்ரீராம்! நன்றி!

   Delete
 2. கமல்ஹாசனும் பாவம் ஏதேதோ பேசுகிறார், சுற்றுகிறார்... அவருக்கு என்ன வரவேற்பு இருக்கும் என்று தெரிந்து கொள்ள நானும் ஆவலாய் இருக்கிறேன். ஐந்து சதவிகிதம் கூடக் கிடைக்காது என்பது என் எண்ணம்.

  ReplyDelete
  Replies
  1. இங்கே இருக்கிற குழப்பங்களில் ஒன்றாக கமல் காசனும் வரட்டுமே! 5% என்பதெல்லாம் அதிகம் , ஆனாலும் வாய்ப்பிருக்கிறது. விடைதெரியாத கேள்வி, யாருடைய வாக்குகளை இவர் பிரிப்பார் என்பதுதான்!

   Delete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!