இனியும் மோடி வெறுப்பு, மோடி எதிர்ப்பு எடுபடுமா?

இங்கே மதுரை வட்டார மொழியில் சொல்வதானால் இத்துப்போன திராவிட முகநூல் போராளிகள், தமிழேண்டா திருகல் டேனியல்கள் முழங்குவதை எல்லாம் அப்படியே புறந்தள்ளிவிட்டுப் போய்விடலாம்!

Make no mistake - as the Indian Air Force jets returned after destroying the biggest terror training camp of terror group Jaish-e-Mohammed (JeM) in Balakot inside Pakistan, a new strategic security doctrine has been unveiled by the Modi government. India and its security establishment have redrawn our red lines and thrown away so-called strategic restraint. The new assertion is this: Pakistan has been stripped of the sham of "non-state actors". இப்படி சுவாதி சதுர்வேதி எழுதியிருப்பது அச்சு அசலாக காங்கிரசுக்கு விலைபோய்விட்ட NDTV தளத்தில்! 

bt5mjjc8  Indian Air Force fighter jets struck the biggest camp of the Jaish-e-Mohammed, killing over 300 terrorists including Jaish chief Masood Azhar's brother-in-law
இப்படிப் படத்தின்கீழ் குறிப்போடு வெளியாகியிருக்கிற செய்திக்குத் தலைப்பு இது! 

Modi Administration Changes India Handling Of Pak Decisively!

சுவாதி சதுர்வேதி, வெளியுறவுத்துறைச் செயலாளர் விஜய் கோகலே பேசியதை (இதன் வீடியோ, முழு டெக்ஸ்ட்டுக்கான சுட்டி முந்தைய பதிவில் இருக்கிறது) After using the air strike to escalate and deliver the message, Foreign Secretary Vijay Gokhale's statement was a master class in crisp and clear speak while also portraying India as a mature and responsible country determined to protect its own. Gokhale cogently said that India was careful in ensuring no civilian and military casualties. Hence the "non-military strike".என்று சிலாகித்திருப்பதில், காங்கிரசோ அல்லது இதர உதிரி கட்சிகளோ இனி  மோடி வெறுப்பு மோடிஎதிர்ப்பு என்ற ஒற்றைப்புள்ளியில் இனி அரசியல் செய்வது மெத்தக்கடினம் என்பது புலப்படுகிறதோ? வேறு வழியே இல்லாமல், ராவுல் பாபா, அரவிந்த் கேசரிவாலு, மம்தா பானெர்ஜி மற்றும் சந்திரபாபு நாயுடு எல்லாம் விமானப்படையின் இன்றைய சாகசத்தை வரவேற்றுப் பேசவேண்டியதாகி விட்டது.

     
தேசியப்பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் இன்று முற்பகல் பாதுகாப்புக்கான காபினெட் கமிட்டிக்கு (மந்திரிசபைக்குழு) இன்று நடத்தப்பட்ட ஆபரேஷனில் ஜெய்ஷ் ஏ மொகமது தீவீரவாதக்குழுவின் 25 தளபதிகள் கதை முடிக்கப்பட்டதாகத் தகவல் சொல்லியிருக்கிறார்.  

பாகிஸ்தான் ராணுவத்தின் சவடால் இதை போட்ட சிறிது நேரத்திலேயே சாயம் வெளுத்துப்போனது ஒரு பரிதாபம் என்றால், சிலகாலமாக மோடியைக் கிண்டல் செய்தே கார்டூன் வரைந்துகொண்டிருந்த சதீஷ் ஆசார்யா கூடத் தன் கோட்டோவியங்களில் இப்படி!
   
payback என்றவுடன் இன்னொரு கார்டூன்!
அணுகுண்டுப் பூச்சாண்டி! பாகிஸ்தான் 1965 போரிலேயே மிகநவீன சாபர் ஜெட்டுகளை வைத்துக் கொண்டு வயல்வெளிகளில் குண்டு வீசிவிட்டுப்போனதும், பேட்டன் டாங்குகளை சகதியில் சிக்கவைத்து இந்திய ராணுவம் தண்ணிகாட்டியதும் இந்தப் பக்கங்களில் லால் பகதூர் சாஸ்திரி என்ற குறியீட்டுச் சொல்லை வைத்து வாசிக்கலாம்! பழைய கதைதான்! என்றாலும் பாகிஸ்தான் போட்ட தப்புக்கணக்குகள் என்னென்னவென்று பார்க்கலாமே! அபுதாபியில் சுகமாக வசிக்கும் முன்னாள் ராணுவத் தளபதியும் அதிபருமான பர்வேஸ் முஷாரஃப், நியூக்ளியர் ஆப்ஷனெல்லாம் கதைக்கு ஆகாதென்று பகிரங்கமாகப் போட்டுடைத்திருக்கிறார்! 
சுவனத்தில் 72 கன்னிகைகள் எல்லாம் கிடைப்பார்களா? சதீஷ் ஆசார்யாவின் இன்னொரு கார்டூன் நக்கலடிக்கிறது! தத்கல் புக்கிங்காம்!

Heavy firing by Pakistan along LoC, Army strongly retaliates

என்கிறது தற்போதைய நிலவரச் செய்தி!
 
         

7 comments:

  1. தட்கல் புக்கிங் கார்ட்டூனை ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. அந்த ஒரு கார்டூனைத் தவிர பதிவில் ரசிக்கிற விஷயமே இல்லையா ஸ்ரீராம்?

      Delete
  2. மிதவாத முஸ்லீம் ஒருவர் எழுதியிருந்தார். பாகிஸ்தான் மேல் கொண்ட தீவிரவாத ஆதரவு இமேஜ் இப்போது மோடியின் மூலம் அழித்து ஒழிக்கப்பட்டு உள்ளது. இதற்கான செலவு பாகிஸ்தான் தற்போதைய சூழலில் செய்ய முடியாமல் இருந்தது. மோடி இந்திய அரசின் சார்பாக செய்து விடடார். இந்தப் பணத்தை இந்தியாவிற்கு விரைவில் பாகிஸ்தான்கொடுக்க வேண்டும் என்று எழுதி உள்ளார். கடினமாக உழைத்துக் கொண்டு இருப்பது தெரியுது. நான் ஏற்கனவே கேட்ட பிஎஸ்என்எல் விவகாரத்தில் ஏன் மோடி இப்படி இருக்கின்றார்? என்பதற்கு பதில் வரவேஇல்லையே?

    ReplyDelete
    Replies
    1. https://economictimes.indiatimes.com/industry/telecom/telecom-news/dot-says-referred-bsnl-4g-spectrum-allocation-issue-to-trai-calls-on-staff-not-to-strike-work/articleshow/68038373.cms இங்கே BSNL ஊழியர்கள் 2 நாள் வேலைஇருத்தம் செய்த போது, பதட்டப்படவேண்டாம் என்று DoT சொன்ன செய்தி! எது எதற்கெல்லாம் பிரதமர் வந்து பேசவேண்டும் என்று யார் முடிவு செய்வது ஜோதிஜி?

      நீங்களே சொல்லுங்களேன்?

      Delete
    2. ஜோதிஜி அந்தப் பகுதியில் BSNL விஷயத்தை நீங்கள் தொடர்வீர்கள் என்று எதிர்பார்த்தேன். நாடு இப்பொழுது இருக்கும் பதட்ட நிலையில் வேறு எது பற்றியும் பேசுவதற்கு இது தருணமில்லை.

      Delete
  3. Well said.. In Tamilmanam, most of the posts are against Modi and culture.. Nice to see this

    ReplyDelete
    Replies
    1. பங்குச்சந்தை பற்றிக் கொஞ்சம் பதிவுகள் எழுதியதை இப்போது நிறுத்திவிட்டீர்களா? தமிழ்மணம் இப்போது யார் கையில் இருக்கிறதென்பதோ, பழைய வேகத்துடன் செயல்படுகிறார்களா என்பதோ எனக்கு முழுவிவரம் தெரியாத நிலையில், அதைப்பற்றிக் கருத்து சொல்வது சரியாக இருக்காது.

      ஆனால் தமிழ்வலைப்பதிவுகளில் திராவிட வலைப்பதிவர்கள் குழு என்று ஆரம்பநாட்களில் நாட்டாமை செய்து கொண்டிருந்தது போல, இன்றைக்குச் செய்ய முடிவதில்லை என்பதில் கொஞ்சம் சுத்தமான காற்று வர ஆரம்பித்திருக்கிறது,

      Delete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!