இட்லி வடை பொங்கல்! #11 இன்று சனிக்கிழமை

நடுத்தர மக்களுக்கு இன்ப அதிர்ச்சி!தனிநபர் வருமான வரி விலக்கு ரூ.5 லட்சமாக உயர்வு!சிறுவிவசாயிகளுக்கு நிவாரணம்! ஏராளமான வரிச்சலுகை அறிவித்து இடைக்கால பட்ஜெட்! இப்படி ஒரே தலைப்பில் ஹிந்து நாளிதழும்,  டைம்ஸ் ஆப் இந்தியாவும் வெளியிட்டிருக்கிற செய்தி இங்கே ஒவ்வொரு அரசியல் கட்சியையும் மிகவும் பாதித்திருக்கும் விஷயம் என்ன என்பதைக் கோடிட்டுக் காட்டுவதாக இருக்கிறதோ?!  


மக்களைக் கவருகிற விதமாக இந்த இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருப்பது என்னென்ன? ஹிந்து செய்தி   ஆனால் காங்கிரசின் மல்லிகார்ஜுன கார்கே இந்த இடைக்கால பட்ஜெட் பாஜகவின் தேர்தல் அறிக்கையாக உள்ளது. வரவிருக்கும் மக்களவை தேர்தலை மனதில் கொண்டு இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது என்று குறைப்பட்டுக் கொண்டிருக்கிறார். இதையேதான் மக்களவைத் தேர்தலை மனதில் கொண்டு மத்திய பாஜக அரசின் இடைக்கால பட்ஜெட்தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக எதிர்க்கட்சித் தலைவர்களும் குற்றம் சாட்டியுள்ளனர். வேறென்ன சொல்ல முடியும்?  

இடைக்கால பட்ஜெட்டில் சலுகைகள், புதிய அறிவிப்புகளை அளிப்பது மரபு மீறும் செயல் எனப் புகார் எழுந்துள்ளது. இதற்கு, முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியிலும் பல உதாரணங்கள் இருக்கிறதே! இதற்குப் பதில் சொல்வாரைக் காணோம்!   

மனோகர் லால் ஷர்மா என்கிற வழக்கறிஞர் யார்?  நாட்டை உலுக்கிய நிர்பயா வழக்கில், கற்பழித்துக் கொலை  செய்த குற்றவாளிகள் தரப்பு வக்கீலாக ஆஜரானபோது சொன்னது என கூகிள் இந்தப் படம் உட்பட சில வீடியோக்களையும் எடுத்துக் கொடுக்கிறது! இடைக்கால பட்ஜெட் அறிவிக்கப்பட்ட சிலமணி நேரங்களிலேயே உச்சநீதிமன்றத்தில், இப்படி இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்வதற்கெல்லாம் அரசியல் சாசனத்தில் இடமில்லை தடைசெய்ய வேண்டுமென்று மனுத்தாக்கல் செய்து அக்கப்போர் ஒன்றை ஆரம்பித்து வைத்திருக்கிறார்  

    
நிகழ்ச்சிக்குத் தலைப்பு புதுப்புது அர்த்தங்கள்! ஆனால் தமிழ் ஊடகங்களில் புதுமைக்கு எப்போதாவது இடம் இருந்திருக்கிறதா? மாற்றங்களுக்குத் தயாராகவோ, மாற்றங்களுக்கான தூண்டுகோலாகவோ எப்போது இருந்திருக்கிறார்கள்? இந்தக் கேள்வி எனக்குள் நீண்ட காலமாகவே இருந்து கொண்டே இருக்கிறது.

பதிவைப் பார்த்ததே பெருசு! இதுல பதில் வேற சொல்லணுமா என்கிறீர்களா? அப்ப ரைட்டு!

       

No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!