விங் கமாண்டர் அபிநந்தன்! இன்னும் சில செய்திகள்!

விங் கமாண்டர் அபிநந்தன் நாளை விடுவிக்கப் படுவதாக ஒரு நல்ல செய்தி வந்திருக்கிறது! ஒவ்வொரு இந்தியனுடைய பிரார்த்தனையிலும் இருந்த நம்முடைய விமானி நாடுதிரும்புகிறார் என்பதில் மிக்க மகிழ்ச்சியே!

பாகிஸ்தானுக்கும் கூட இப்படி  திடீரென்று நல்லெண்ணம் வந்திருப்பது கொஞ்சம் ஆச்சரியமாக இருக்கிறதே!  முகநூலில்  ஸ்டேன்லி ராஜன் முதலில் இப்படிக் கலாய்த்தார்!

இந்த இம்ரான்கானின் முன்னோர்கள் பற்றி விசாரிக்க வேண்டியிருக்கின்றது
அவர்கள் நீதிகட்சியில் இருந்து, ரெட்டைமலை சீனிவாசன், பெரியாரோடு பழகி அப்படியே அண்ணா, கலைஞர் என சுற்றி தேசபிரிவினையில் சமூக நீதி காக்க பாகிஸ்தான் சென்றிருக்கலாம்
அந்த தலித் குடும்பம் அங்கே இஸ்லாமினை தழுவியிருக்கலாம், அங்கே இம்ரான்கான் பிறந்து வளர்ந்திருக்கலாம்
இந்த திக, திமுக தலித் அரசியல் இம்சைகள் கதறுவதை பார்த்தால் அப்படித்தான் தோன்றுகின்றது  
*******
இன்றைய முப்படைத் தளபதிகளின் செய்தியாளர் சந்திப்பில் 🇮🇳
ஒரு பெண் செய்தியாளர் கேள்வி
"பாகிஸ்தான் பைலட்டை விடுவித்ததை நல்லெண்ண அடிப்படையில் பார்க்கிறீர்களா? இதில் நல்ல நம்பிக்கை ஏற்படுத்துகிறதா?"
மேஜர் ஜெனரல் : "ஜெனிவா தீர்மானம் பின்பற்றப் படுகிறது அவ்வளவு தான்."
முப்படை அதிகாரிகள் கூட்டாக அளித்த பேட்டியில் சில உண்மைகளை உடைத்துச் சொல்லியிருக்கிறார்கள்! முப்படைகள் தயார் நிலையில் இருப்பதாகவும் சொல்லி இருக்கிறார்கள்! விங் கமாண்டர் அபிநந்தன் தாயகம் திரும்புவதற்காகக் காத்திருப்போம்! 

No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!