மகாகட்பந்தன் யாருக்காக? கூட்டணி என்பது ஊழலுக்கு லைசன்சா?

திரும்பத் திரும்ப மம்தா பானெர்ஜி நடத்திய குழாயடிச் சண்டை பற்றியே பேசவேண்டாமே என்றிருந்தாலும் கூட தீதி வளர்த்துக் கொண்டே போகிற அராஜகம் இங்கே பொதுவெளியில் விவாதத்துக்கு உட்படுத்தப்பட வேண்டியதாக இருக்கிறது.

சாரதா நிதிநிறுவன மோசடியை மம்தா பானெர்ஜி அத்தனை எளிதாகக் கடந்துபோய்விட முடியாதென்று தான் நடப்பு நிகழ்வுகள் சொல்கின்றன. நேரமிருந்தால் இந்த 46 நிமிட வீடியோவைக் கொஞ்சம் பாருங்கள்!

    
நேரமில்லையா? சந்திரபாபு நாயுடு  கொல்கத்தா போய் என்ன வீரவுரை ஆற்றினார் என்பதை இந்த 5 நிமிட வீடியோவில் பாருங்கள்! திமுகவின் கனிமொழி என்ன பேசினார் என்பதைத் தேடி வேறு பார்க்க வேண்டுமா என்ன? சந்தடி சாக்கில் KDbrothers குழுமம் வங்காள மொழியிலும் கால் பதித்திருக்கும்  சேதி ஒன்றே போதாதா?

மம்தா பானெர்ஜி அந்த நாளைய இந்திரா மாதிரியே முதிர்ச்சியில்லாமல் அரசியல் செய்கிறார். அவரிடம் 144 தடையுத்தரவு பிறப்பிக்கிற அதிகாரம் இருக்கிறதாம்! இரண்டுபேருக்குமேல் கூட்டம் கூட அனுமதிக்க மாட்டாராம்! மேலோட்டமாக, யோகி ஆதித்ய நாத்துக்கு விடப்பட்ட எச்சரிக்கை மாதிரித் தோன்றினாலும்  கடந்த ஞாயிறு அன்று கூட்டத்தைக் காண்பித்த இடதுசாரிகளுக்குமே விடப்பட்டதுதான் என்று தோன்றுகிறது 

Uttar Pradesh Chief Minister Yogi Adityanath in Purulia, West Bengal: Nothing can be more shameful for a democracy than a Chief Minister sitting on a dharna.
3:22 AM - 5 Feb 2019  

உத்தரப் பிரதேச முதல்வரை மேற்கு வங்கத்துக்குள் கால் வைக்கவிடாதபடி மம்தா பானெர்ஜி முட்டுக்கட்டை போட்டதையும் மீறி புரூலியா என்ற இடத்தில் பிஜேபி கூட்டத்தை இன்று நடத்திக் காட்டி இருக்கிறது தெருக் குழாயடிச் சண்டையாக நடத்திய தர்ணா போராட்டத்தை மம்தா பானெர்ஜி முடித்துக் கொண்டுவிட்டார்! ஆகினால் வெட்டிவீராப்பு இன்னும் தொடர்கிறது என்கிறது இந்தச் செய்தி.
West Bengal CM Mamata Banerjee: I won't take names, we had got into an agreement with a helicopter company. We had done advance booking, agreement was signed on Jan 15. It is sad that they informed us on Feb 1 that they will not provide us the helicopters, they backed out.
2:45 AM - 5 Feb 2019  
இங்கே மம்தா, சந்திரபாபு நாயுடு பேசுகிற எதுவும், உருவாக்க முனையும் மெகா கூட்டணியும் ஜனங்களுக்கானது இல்லை என்பது தொடர்ந்து வெளிப்பட்டுக்கொண்டே இருக்கிறது!

மெகா சீரியல்கள் வீட்டுக்குக் கேடு! மெகா கூட்டணி நாட்டுக்குக் கேடு! புரிகிறது இல்லையா?

             

1 comment:

  1. ஒண்ணுமே புரியலே, சார்!

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!