ஒவ்வொரு தடைக்கல்லும் தாண்டிச் செல்வதற்காகவே!



சில நேரங்களில் நாம் சந்திக்கும் பிரச்சினைகள்நம்மை உன்மத்தம் பிடித்தவர்கள் மாதிரி ஆக்கிஒன்றுமே செய்ய இயலாதவர்களாகக் கட்டிப் போட்டு விடுகிற மாதிரித் தான் தோன்றும்.சந்தர்ப்பச் சூழ்நிலைகள்  நாம் என்னசொன்னாலும்எது செய்தாலும் நமக்கெதிராகவே திரும்பி,ஒருவிதமான மனச்சோர்வையும்சலிப்பையும் உண்டு பண்ணுவதாகவே இருக்கும். 

ஆனால் இது உண்மையானதுதானாமீள்வதற்கு வழியே இல்லையாஎத்தைத் தின்றால் பித்தம் தெளியும்?ஜோசியனிடம் போய்ப் பரிகாரம் கேட்டு மஞ்சள்துண்டு அல்லது வெள்ளைகருப்புத்துண்டு,வேட்டிவிரதம்ராசிக்கல் மோதிரம்,வசதி இருந்தால் கோவில் கோவிலாகப் படியேறி யாகங்கள் தானங்கள் என்று செய்தால் சரியாகிவிடுமா?அல்லது  இதுதான் விதிஇதிலிருந்து மீளவே முடியாது என்று முடங்கிக் கிடந்து விடவேண்டுமாஇல்லை என்கிறார் ஸ்ரீ அரவிந்த அன்னை.நாம் சந்திக்கும் ஒவ்வொரு தடையும்,பிரச்சினையும்நம்மைப் பக்குவப் படுத்துவதற்காகவேநாம்எதை சாதிப்பதற்காக இங்கே பிறந்திருக்கிறோமோஅதை செய்து முடிப்பதற்கு உதவியாகவே  நமக்கு அளிக்கப்படுவதாக ஸ்ரீ அன்னை சொல்கிறார். 

உள்முகமாகப் பார்க்கப்பழகினால்நமக்குள்ளேயே இருளும்,ஒளியும் சமமாக இருப்பதைப் பார்க்க முடியும். இருட்டை மட்டுமே பார்க்கும் போது,அதன்பின்னால் பெரும் ஒளி இருப்பதைப் பார்க்க முடிவதில்லை. ஒரு பெரிய பலவீனமாக,பெரிய தடைக்கல்லாகசோதனையாக ஒன்றைப் பார்க்கும்போது கவலைப்படவேண்டாம்விரக்தியடையவும் வேண்டாம் அப்படி மேலோட்டமாகத் தெரிவதே மிகப்பெரிய தெய்வீக அருளாகவும் இருக்கக் கூடும் என்கிறார் ஸ்ரீ அன்னை.



இது இன்றைய தரிசன நாள் செய்தி!
ஸ்ரீஅரவிந்த அன்னை அவதார தினம் இன்று!

அன்னையிடத்தில் ஒருவர் திருவுருமாற்றம் [Transformation] பற்றி அறிய விரும்பினார். ஸ்ரீ அரவிந்த அன்னை அவருக்குச் சொன்னார்: "அது மிகவும் சுலபம். நீ இப்போது அப்படி இருக்கிறாயோ அதற்கு நேர் எதிராக ஆவது தான்."
அன்னையின் பதில் கொஞ்சம் விசித்திரமாக இருக்கிறது என்று எண்ணுகிறீர்களாகொஞ்சம் ஸ்ரீ அரவிந்த அன்னை சொல்வதைக் கவனமாகக் யோசித்துப்பாருங்கள். அரைகுறையாக மொழி பெயர்ப்பதற்குப் பதிலாகஸ்ரீ அன்னை சொல்வதென்ன என்பதை  நேரடியாகவே கொஞ்சம் பார்த்து விடலாமே! 

"If you look at yourself carefully, you will see that one always carries in oneself the opposite of the virtue one has to realise (I use "virtue" in its widest and highest sense). You have a special aim, a special mission, a special realisation which is your very own, each one individually, and you carry in yourself all the obstacles necessary to make your realisation perfect. Always you will see that within you the shadow and the light are equal: you have an ability, you have also the negation of this ability. But if you discover a very black hole, a thick shadow, be sure there is somewhere in you a great light. It is up to you to know how to use the one to realise the other.

This is a fact very little spoken about, but one of capital importance. And if you observe carefully you will see that it is always thus with everyone. This leads us to statements which are paradoxical but absolutely true; for instance, that the greatest thief can be the most honest man (this is not to encourage you to steal, of course!) and the greatest liar can be the most truthful person. So, do not despair if you find in yourself the greatest weakness, for perhaps it is the sign of the greatest divine strength.

Do not say, "I am like that, I can't be otherwise." It is not true. You are "like that" because, precisely, you ought to be the opposite. And all your difficulties are there just so that you may learn to transform them into the truth they are hiding.

Once you have understood this, many worries come to an end and you are very happy, very happy. If one finds one has very black holes, one says, "This shows I can rise very high", if the abyss is very deep, "I can climb very high."


- The Mother 
Col. Works Vol. 4: pp 117

ஸ்ரீ அரவிந்த அன்னையே! உன் திருவடிகளைச் சரணடைகிறேன்.
உன்னுடைய பெயர்சொல்லிக் காத்திருப்பதைத் தவிர வேறு புகல் இல்லாத இவனையும் நயந்து உனது பிரியத்துக்குகந்த குழந்தை என்றாகிற தகுதியை அருள்வாய்!

ஓம் ஆனந்தமயி சைதன்யமயி சத்யமயி பரமே!

     
  

3 comments:

  1. நான் நாம் கஷ்டப்படுகின்றேன், துயரப்படுகின்றோம் என்று தான் நினைக்கின்றோம். ஆனால் அதனை எப்படி எதிர்கொள்கிறோம் என்பதனை 2018 உணர்த்தியது. நான் வலிமையானவன் என்பதனை அதன் அளவுகோலை நாம் கையாளும் விதமே நாம் யார் என்று நமக்கு புரியவைத்து விடுகின்றது. சிறப்பான வார்த்தைகள். நன்றி.

    ReplyDelete
  2. Thanks for sharing a wonderful message of Mother.

    ReplyDelete
  3. அன்னையின் தரிசனநாள் செய்தியாகச் சொல்லப்பட்டிருப்பதைக் கவனியுங்கள் ஜோதிஜி! கடைசி வரை, சளைக்காமல், பின்வாங்காமல் விளையாட்டில் தொடர்வது மிக முக்கியம்! என்னுடைய சொந்த அனுபவத்தில் நான் தோற்ற விதமும், சூழ்நிலைகளில் சலித்து,ஒதுங்கியதில்தான் இருந்தது.

    திருமதி பானுமதி வெங்கடேஸ்வரன்! ஸ்ரீ அரவிந்த அன்னையைப் பற்றி பேசுவதும் எழுதுவதும் ஒரு நிறைவான அனுபவமாகத்தான் எப்போதும் இருந்துவருகிறது.

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!