மாப்பிள்ளை நானில்லை ! ஆனால் அவர் போட்டிருக்கிற ட்ரெஸ் என்னோடது!

மாப்பிள்ளை நானில்லை ஆனால் மாப்பிள்ளை போட்டிருக்கும் ட்ரெஸ் என்னுடையது இப்படி ஒரு காமெடி சீன் ரஜனிகாந்த் செந்தில் காம்பினேஷனில் வந்தது நினைவு இருக்கிறதா? நாலைந்து நாட்களாக ரஜனிகாந்த் பெயரில் உலா வரும் ஒரு அறிக்கையும், ரஜனிகாந்த் ட்வீட்டரில் அது என்னுடைய அறிக்கையல்ல; ஆனால் அதில் உள்ள விஷயங்கள் எல்லாம் உண்மை என்கிற மாதிரி  வெளியிட்ட செய்தியும் சேர்ந்து ரஜனிகாந்த் இனிமேலும்  அரசியலுக்கு வருவார் என்று நம்பிக்கொண்டிருக்கிற ஒரு கும்பலை முட்டாள்களாக ஆக்கியிருக்கிறது. 

இந்தச் செய்தியிலிருந்து தமிழக அரசியல்களம் இவருடைய  அரசியல் பிரவேசமும் சேர்ந்து இன்னமும்  குழப்புவதிலிருந்து விடுபட்டிருக்கிறது என்றே சொல்ல வேண்டும். கடந்த சிலமாதங்களில் ரஜனியுடன் நெருக்கமாக  இருப்பதாகக் காட்டிக் கொண்ட  ரங்கராஜ் பாண்டே நேற்றிரவு வெளியிட்ட வீடியோவில் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.


ரஜனியுடைய ட்வீட்டர் செய்தி இன்று பிற்பகல் 1/05 மணிக்கு வெளிப்படுவதற்கு பலமணி நேரம் முன்னதாகவே ரங்கராஜ் பாண்டே வீடியோ வெளியாகி விட்டது. குட்டியை விட்டு ஆழம் பார்க்கிற கதையாக ரஜனிகாந்த் வெளியிட்ட அறிக்கை மாதிரி ஒன்றைக் கசிய விட்டு, அது நான் வெளியிட்டதல்ல ஆனால் அதில் கண்டிருக்கிற தகவல்கள் உண்மைதான் என்று ஒரு நாடகம் அரங்கேறியிருக்கிற மாதிரியே எனக்குப் படுகிறது. கொரோனாவால் இப்படி ஒரு சில நல்ல விஷயங்களும் நடக்கிறதே! அதிசயம்தான்!  

திமுகவின் இசுடாலினுக்கு இந்தச் செய்தி தேனாக இனிக்கலாம்! துக்ளக் ஆசிரியர் குருமூர்த்திக்குக் கசப்பாக இருக்கலாம்!

உங்களுக்கு எப்படிப் படுகிறது?

 

போகும் திசை மறந்து போச்சு!

2009 ஆம் ஆண்டிலேயே இரண்டு முறை போகும் திசை மறந்து போனதா என்று என்னை நானே விசாரித்துக் கொண்டு பதிவுகள் எழுதினேன். இன்றும் கூட அந்த விசாரணையை என்னிடம் நடத்திக் கொண்டுதான் ஆக வேண்டும் போல இருக்கிறது என்பதனால் இது ஒரு மீள்பதிவு தான்  

போகும் திசை மறந்து போச்சு-இங்கே

பொய்யே வேதமுன்னு ஆச்!சு

வைரமுத்துநீர்த்துப்போய்விடாமல் கவிதையை கவிதையாகவும்லட்சியக் கனவுகளோடும் எழுதின நாட்களில் இளைய ராஜா இசையமைப்பில் உருவான பாடல் இதுகண் சிவந்தால் மண் சிவக்கும் என்ற படத்தில்இடதுசாரிச் சிந்தனைகளில் இருந்த ஸ்ரீதர்ராஜன் என்ற இளம் இயக்குனரின் படைப்புக்காகஇளையராஜாவைரமுத்துவின் வரிகள் வெற்று வரிகளாகவே போய் விடாமல் கவிதை வரிகளுக்கு இசையால் உயிர் கொடுத்த பாடல் இது.

ஸ்ரீதர் ராஜனுடைய நண்பர்கள் இருவர் எனக்கும் நட்பான நாட்களில்இந்தப் படத்தின் பாடல் ஒலிப்பேழையை சுடச் சுடக் கொண்டுவந்து கொடுத்த நாட்கள்அப்படியே ஸ்ரீதர் ராஜனை ஓரிருதடவை சந்திக்கிற சந்தர்ப்பமும்கிடைத்தது.......இந்தப்பாடலைக் கேட்கும்போதெல்லாம் நினைவுக்கு வரும்ஸ்ரீதர் ராஜன்பின்னாட்களில் ஜெமினி கணேசனுடைய மாப்பிள்ளையாகிப் போனார்அவர் பேசின லட்சியம்கம்யூனிசம் எல்லாம் கனவாய்ப் பழங்கதையாய்ப் போனதும் நினைவுக்கு வரும்போது சிரிப்புத் தான் வருகிறது.ஜெமினிக்கு மாப்பிள்ளை ஜெமினி மாதிரியேபெண்ணுக்கு அடிமையாகத் தானே இருக்க முடியும்இது என்ன புதுக்கதை என்று தோன்றுகிறதா?

ஜெமினி கணேசனைப் பற்றி பேசும்போது வேறொன்றும் வேடிக்கையாக நினைவுக்கு வருகிறதுமனிதனைப் பற்றிப் பெரிய காதல் மன்னன்பெண் பித்தன்இன்னும் என்னென்னவோ நினைத்துக் கொண்டிருக்கிறோம் இல்லையாஉண்மையில்ஜெமினி கணேசன் பெண்ணுக்கு அடிமையாகவே கடைசி வரை வாழ்ந்த ஒரு மனிதன்! ஜெமினியின் சரிதம் எழுத நிறையப்பேர் இருப்பதால், அந்த வேலையை அவர்களே தொடரட்டும்!

இந்த ஒரு தகுதிக்காகவேஜெமினிக்குத் தபால் தலையும் வெளியிட்டுஇந்திய அரசு கவுரவப் படுத்தியது போலிருக்கிறதுபெண்ணடிமைத்தனம் என்று பேசுபவர்கள்பெண்ணுக்கு அடிமைத்தனம் என்று ஒன்று இந்த நாட்டில் இருந்ததையே அறியாதவர்கள்பாவம்!!

காதல் மன்னன் ஜெமினி கணேசனுக்குத் தபால் தலைதமிழ் வளர்த்த சுத்தானந்த பாரதிக்கு இல்லையா என்று ஒருத்தர் குமுறியதையும் இந்தப் பக்கங்களில் ஏற்கெனெவே பேசியிருக்கிறோம்! சுத்தானந்த பாரதியார் என்ற தலைப்பில் தேடுங்கள்கிடைக்கும்!

ஆங்...எதற்காக இப்போது இதைப் பேச ஆரம்பித்தோம்போகும் திசை மறந்து போச்சுபோச்சாஇல்லியான்னு கொஞ்சம் என்னையே விசாரிச்சுக்கத் தான்


கோவி கண்ணன்அவருடைய ஒரு பதிவின் பின்னூட்டங்களில்என்னுடைய ப்ரொபைலைப் பார்த்துவிட்டுவயதுவிவரங்களையும் பார்த்து விட்டுகொடி பிடிப்பதைப் பற்றி எழுதினதில் ஒரு சுய பச்சாதாபம் தெரிந்ததாகச் சொல்லியிருந்தார்அதுவும்...........

இன்னொரு நண்பர் கபீரன்பன் என்ற பெயரில்கபீர்தாசருடைய ஈரடிக் கவிதைகளை எளிய தமிழில்அவருடைய அனுபவத்தில் அறிந்ததையும் சேர்த்து எழுதிக் கொண்டிருக்கிறார்இந்த மாதிரி முயற்சிகளில் தான்சிந்தனை,ஒரு குறுகிய எல்லைகளில் இருந்து விடுபட்டுவிரிந்துபறந்து ஒரு புதிய பரிணாமத்தை அடைகிறதுஎன்னுடைய ஒரு பதிவை ரீடரில் படித்து விட்டுவேறொரு பதிவுக்கு பின்னூட்டம் எழுதினார்எனக்கு ஒரு விஷயத்தை மறைமுகமாகத் தெளிவுபடுத்துகிற மாதிரி எழுதியிருந்ததிலும்.........

போகும் திசை என்ன என்பதைப் பற்றி மறுபடியும் யோசிக்க வேண்டி வந்ததுமுதலில் சொன்ன மாதிரி போகும் திசை நெசமாவே மறந்து போச்சா என்னஅப்படியும் போய்விடுமா என்ன என்ற கேள்வியேஇந்தப் பாடலை நினைவுபடுத்திக் கொள்வதிலிருந்து ஆரம்பித்தது!

"தற்போது தான் (2009இல்) உங்கள் புரொபைல் பார்த்தேன்வயது 55 என்றிருந்ததுஇளையர்கள் பொறுப்பு இல்லாமல் இருக்கிறார்கள் என்று கோபம் வரக் கூடிய வயதுவயதின் காரணமாகவே தமக்கு எல்லாம் தெரிந்திருக்கும் என்றே நினைக்கக் கூடிய வயது."

//கொடி பிடித்த காலம் எல்லாம் எப்பவோ!அது செங்கொடிஅதுகூட லட்சிய வெறியோடு மட்டுமே இருந்ததுநபர்களின் மீது அல்ல.//

அதையும் படித்தேன்சுய பட்சாதாபம் ஓங்கி இருந்தது. 50 வயதுக்கு மேல் சில தீவிர நாத்திகர்கள் கூட தீவிர ஆத்திகர்கள் ஆகிவிடுங்கஅப்போது தான் உலகம் நிலையல்லஉடல் நிலையல்ல என்கிற உண்மை புரியும் போல :)

இது கோவி கண்ணன் சொன்னதுகாயமே இது பொய்யடா-வெறும் காற்றடைத்த பையடா இப்படி நான் பாடிக் கொண்டிருப்பது போலஉலகே மாயம்-வாழ்வே மாயம் என்று ஐம்பதுக்கு மேல்தான் தெரியவரும் என்பது போலஅவர் சொல்கிற மாதிரி இல்லை?!கபீரன்பன் சொல்லாமல் சொன்னது வேறு மாதிரி இருக்கிறது!

ரொம்ப போரடிக்கிறது-என்ன செய்யலாம்? என்ற பதிவில் ஸ்ரீ அரவிந்த அன்னையின் உரையாடல்களிலிருந்து ஒரு பகுதியை எடுத்து இப்படிச் சொல்லியிருந்தேன்:

இப்படிப் பட்ட சூழ்நிலையை எப்படி எதிர்கொள்வது என்பதைப் பற்றி ஸ்ரீ அரவிந்த அன்னை சொல்கிறார்:

"இப்படிக் கொஞ்சம் நேரம் கிடைக்கும் போதுஅது சிலநிமிடங்களோசில மணி நேரமோ,உனக்குள்ளேயே சொல்லிக் கொள்: " ஒருமுகப்படுத்திக் கொள்ளவும்ஒன்று சேர்த்துக் கொள்ளவும்என்னுடைய வாழ்க்கையின் பொருளை வாழ்ந்து பார்ப்பதிலும்உண்மையும் பரம சத்தியமாகவும் இருக்கும் ஒன்றிடம் என்னை சமர்ப்பிப்பதற்கும்ஒரு வழியாக எனக்குக் கொஞ்சம் நேரம் கிடைத்திருக்கிறது."


கபீரன்பன் said...
August 17, 2009 9:09 AM

//உண்மையும் பரம சத்தியமாகவும் இருக்கும் ஒன்றிடம் என்னை சமர்ப்பிப்பதற்கும்ஒரு வழியாக எனக்குக் கொஞ்சம் நேரம் கிடைத்திருக்கிறது //

மிகவும் பொருள் பொதிந்த சத்தியம்அதை உணர்வதற்கான விவேகம் அவனருளாலேதான் கிடைக்கும்.

சிந்திக்க வேண்டிய அன்னையின் கருத்துகளை எடுத்துக் காட்டியதற்கு நன்றி

கிருஷ்ணமூர்த்தி said...
August 17, 2009 9:19 AM

ஒரு சராசரி மனிதனாக இருந்துஇதைஉணர்வதும் கடைப்பிடிப்பதும் எவ்வளவு கடினமான காரியம் என்பதை சொந்த அனுபவத்திலேயேஅதுவும் கடந்த சில நாட்களிலேயே கண்டுகொண்டேன்.

"அப்போதைக்கிப்போதே சொல்லி வைத்தேன்என்று ஆழ்வார்கள் சொன்னது ஏன் என்றும் தெரிய வர ஆரம்பித்திருக்கிறது!

வருகைக்கும்என்னுடைய இப்போதைய மனநிலையை எனக்கே காட்டி அருளியதற்கும் மிகவும் நன்றி!

கபீரன்பன் சொல்லாமல் சொன்னதென்ன என்பதை அவரவர்கள் அனுபவம்அறிவுக்குத் தகுந்தபடி தாங்களே தெரிந்துகொள்ளட்டும் என்பதைமுதலில் ஒரு தனிப்பதிவாக அன்றைக்கு எழுத ஆரம்பித்துஅப்படியே நிறுத்திக் கொண்டேன்.

Evolution என்ற குறியீட்டுச் சொல்லுடன் தேடினால்,இந்தப் பதிவில் ஆறு இடுகைகளில்மேலே சொன்ன முரண்பட்ட இரண்டு கருத்துக்களைப் பற்றி முன்னமேயே பேசியிருப்பது தான் என்பது தெரியும்.

என்னுடைய சொந்த அனுபவங்களைப்பற்றி ஓரடி முன்னால் ஈரடி பின்னால் என்ற தலைப்பில் கொஞ்சம் பேசியிருக்கிறேன்.

நடைமுறை வாழ்க்கையில்பழக்கங்களின் அடிமையாகவே இருந்து விடுவதான'பன்றியோடு சேர்ந்த கன்றுக்குட்டியாக' ஆகி விடாமல் இருப்பதற்குகொஞ்சம் சிரமப் பட்டுத் தான்வெளியே வர வேண்டியிருக்கிறதுஇந்த முயற்சி கூட இல்லை என்றால், 'பகுத்தறிவுஎன்ற சொல் எப்படி இன்றைக்குஅதன் உண்மையான பொருளில் இல்லாமல்வேறு விதமான அசட்டுத்தனமாக இருக்கிறதோஅது மாதிரி ஆகி விடும்நடைமுறை வாழ்க்கையில்இப்படி ஒன்றை எதிர்ப்பது என்பது ஏன் என்று தெரியாமலேயே அதன் பின்னால் கூட்டமாக ஓடுவதுசேரிடம் அறியாமலேயே சேர்ந்துஅதிலேயே சிக்கிக் கொள்வதுதான்ஒரு சிக்கலில் இருந்து விடுபடுகிறேன் என்று இன்னொரு புதைகுழிக்குள் விழுந்து விடுவது மாதிரித்தான்.

அடுத்துகற்றல் என்பது தொடர்ந்து நிகழ்வதுஒரு தடவை குடத்தை நிரப்பியதும் முடிந்து போவதில்லை.நெருப்பு இன்னும் இன்னும் என்று கேட்பது போலசாப்பிட்ட நான்கு அல்லது ஐந்து மணி நேரத்திற்குப் பிறகு மறுபடியும் பசி எடுப்பது போல தொடர்ந்து கொண்டே இருப்பதுஉயிர்மையின் ஒரு அடையாளமேஇந்த 'இன்னும்இன்னும்' தான்!

“For the Divine is Freedom and any interference with the freedom of choice, freedom of action, of the evolving soul is against the Truth and Purpose of the manifestation.”

பகுத்தறிவுபகுத்தறிவு என்று சொல்கிறார்களே அது இது தான்இந்த உண்மையைப் புரிந்து கொள்வது தான்.

இறைநிலை நம்முடைய போக்கில் ஒருபோதும் தலையிடுவது இல்லைஒவ்வொரு முக்கியமான தருணத்திலும் நேர் எதிரான பாதைகள் பிரிவதைஅதில் எதைத் தேர்ந்தெடுப்பது என்று தேர்ந்தெடுக்கிற சுதந்திரத்தை இறையருள் நமக்கு வழங்கியிருக்கிறதுதேர்ந்தெடுத்தது எதுவோ அதற்குரிய வகையில் அடுத்தடுத்த அனுபவங்கள்படிப்பினைகள் என்று நம்மைநமக்குத் தெரிந்தோ அல்லது தெரியாமலோ வழிநடத்திக் கொண்டே இருக்கிறதுவிளையாட்டில் மும்முரமாக இருக்கிற குழந்தையைஅதன் போக்கிலேயே அம்மாக்காரி விட்டு விடுவதைப் போலத் தான் இது.

அன்று பார்த்த சாரதியாக வந்தவனேநமக்கும் ஆத்ம சாரதியாக இருந்து கொண்டு நம்மையும்நமக்குத் தெரிந்தோதெரியாமலோநம்முடைய சம்மதத்துடனோஇல்லாமலோவழிநடத்திக் கொண்டிருக்கிறான்.

அவனையே பற்றிக் கொள்கிற தருணமும் வரும்காலைப் பற்றிக் கொள்கிற குழந்தையை அள்ளி அணைத்துக் கொள்கிற தாயைப்போல அவன் நமக்காகக் காத்திருக்கிறான்!

அப்புறம் வேறென்ன வேண்டும்!