மாப்பிள்ளை நானில்லை ஆனால் மாப்பிள்ளை போட்டிருக்கும் ட்ரெஸ் என்னுடையது இப்படி ஒரு காமெடி சீன் ரஜனிகாந்த் செந்தில் காம்பினேஷனில் வந்தது நினைவு இருக்கிறதா?
நாலைந்து நாட்களாக ரஜனிகாந்த் பெயரில் உலா வரும் ஒரு அறிக்கையும், ரஜனிகாந்த் ட்வீட்டரில் அது என்னுடைய அறிக்கையல்ல; ஆனால் அதில் உள்ள விஷயங்கள் எல்லாம் உண்மை என்கிற மாதிரி வெளியிட்ட செய்தியும் சேர்ந்து ரஜனிகாந்த் இனிமேலும் அரசியலுக்கு வருவார் என்று நம்பிக்கொண்டிருக்கிற ஒரு கும்பலை முட்டாள்களாக ஆக்கியிருக்கிறது.
இந்தச் செய்தியிலிருந்து தமிழக அரசியல்களம் இவருடைய அரசியல் பிரவேசமும் சேர்ந்து இன்னமும் குழப்புவதிலிருந்து விடுபட்டிருக்கிறது என்றே சொல்ல வேண்டும். கடந்த சிலமாதங்களில் ரஜனியுடன் நெருக்கமாக இருப்பதாகக் காட்டிக் கொண்ட ரங்கராஜ் பாண்டே நேற்றிரவு வெளியிட்ட வீடியோவில் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.
ரஜனியுடைய ட்வீட்டர் செய்தி இன்று பிற்பகல் 1/05 மணிக்கு வெளிப்படுவதற்கு பலமணி நேரம் முன்னதாகவே ரங்கராஜ் பாண்டே வீடியோ வெளியாகி விட்டது. குட்டியை விட்டு ஆழம் பார்க்கிற கதையாக ரஜனிகாந்த் வெளியிட்ட அறிக்கை மாதிரி ஒன்றைக் கசிய விட்டு, அது நான் வெளியிட்டதல்ல ஆனால் அதில் கண்டிருக்கிற தகவல்கள் உண்மைதான் என்று ஒரு நாடகம் அரங்கேறியிருக்கிற மாதிரியே எனக்குப் படுகிறது. கொரோனாவால் இப்படி ஒரு சில நல்ல விஷயங்களும் நடக்கிறதே! அதிசயம்தான்!
திமுகவின் இசுடாலினுக்கு இந்தச் செய்தி தேனாக இனிக்கலாம்! துக்ளக் ஆசிரியர் குருமூர்த்திக்குக் கசப்பாக இருக்கலாம்!
உங்களுக்கு எப்படிப் படுகிறது?
அரசியல் என்று வந்தாலே எல்லோரும் குழப்பவாதிகள் ஆகிவிடுவார்கள் போல... அதிலும் இவரும் உலக நாயகனும் ஏற்கெனவே சொல்லவே வேண்டாம்!
ReplyDeleteவாருங்கள் ஸ்ரீராம்!
Deleteகொரோனா வந்து நிறைய விஷயங்களைத் தலைகீழாகப் புரட்டிப் போட்டிருப்பதில் ரஜனி காமெடியும் ஒன்று கமல்காசர் விஷயம் வேறு ரகம்! பிக்பாசில் மட்டும் அரசியல் பேசுகிற அளவுக்கு சுருங்கிப்போய்க் கிடக்கிறது. இந்த இரண்டு சீனியர்களுடைய தடுமாற்றத்தைப் பார்த்துக்கொண்டே நடிகர் விஜய் இன்னமும் மதில்மேல் பூனையாகவே இருக்கிறார்! ஆக அரிதாரம் பூசுகிறவர்கள் அரசியலில் குதித்து அடுத்த நாளே முதல்வராகி விடுகிற கனவு சினிமா ரீல் போல அறுந்து தொங்குவதைப் புரிந்துகொள்ள முடிகிறதா?